Ennai Mayakum Mayavaney -2

Advertisement

Thulasik

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 2
தோழிகள் மூவரும் அவரவர் வீடு இருக்கும் தெருவை நோக்கி நகர முற்பட்டனர்... பிரிந்து செல்லவும் மனமில்லை ஆனால் இது இப்போதே முடிந்து விடாது என்ற எண்ணம் மட்டும் வலுவாக இருந்தது அவரவர் மனதில்... தற்செயலாக சம்பூ ராதையின் முகம் பார்த்தாள் அவளது கவனம் முழுமையாக எதில் இருக்கிறது என்று அவளால் உணர முடிந்தது...
இதை எதுவும் அறியாத ரம்யா அவளது சிந்தனையில் இருந்தாள்... உடனே சம்பூ ரம்யாவிடம் திரும்பி நீ வீட்டுக்கு போ ரம்யா நான் இவளை அவ வீட்ல விட்டுட்டு வரும் போது உங்க வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போறேன் என்று பார்வையில் அர்த்தம் பொதிய ராதாவை பார்த்து நின்றாள் சம்பூ...
தோழி வீட்டிற்கு வருகிறாள் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க இந்த மாமா என்ன சொல்லுவானோ அந்த பயம் அதிகமாகவே இருந்தது... அவளது எண்ணப்போக்கை அறிந்த சம்பூ அவளை புன்சிரிப்புடன் ஏறிட்டாள்..
அந்த பயத்திற்கு காரணம் இருந்தது இந்த மாமாவிற்கும் சம்பூ விற்கும் அடிக்கடி தகராறு வந்திருக்கிறது அதற்கு மைய காரணமே ராதா தான்... சும்மா வீட்ல இருக்கிற பொண்ணை கூட்டிட்டு அந்த போலிஸ் காரர் மக ஊர சுத்துறா கேட்ட இத அவங்க அப்பா அம்மாவே கேக்கிறது இல்லை நீங்க ஏன் சும்மா கத்துறீங்க என்று கேட்கும் சம்பூரணம் மேல் அவனுக்கு கொலைவெறி அளவிற்கு கோபம் உண்டு...
அதற்கு காரணமும் இருக்கிறது... நமது ராதையின் அப்பாவின் தங்கை மகன் தான் இந்த ரகு மாமா...
தீவிரமாக போலிஸ் ஆக வேண்டும் என்று ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் அதட்டி உருட்டுபவன்... சிலர் பயப்படுகிறார்கள் சிலர் போட நீ எல்லாம் ஒரு கணக்கா என்ற பார்வையை பார்க்கிறார்கள்...
இது எதும் அவனுக்கு தெரிந்த மாதிரி இல்லை ஆனால் தான் போலிஸ் ஆகி விட்டது போல் எல்லாரையும் அதட்டி கொண்டே இருப்பான்... அதும் நம் ராதை இவனிடம் மாட்டினாலே அவளை தலையில் கொட்டி அழ வைப்பதும் மிரட்டுவதுமே அவனது தலையான கொள்கையாக இருந்தது....
அவளை காப்பாற்ற தான் சம்பூவும் அவளுடனே வந்தாள்... அதோ அங்கே அந்த முக்கு தின்னையிலேயே உட்காந்திருக்கிறான்... இன்னைக்கு இவன ஒரு வழி பண்ணாம எடத்த காலி பண்ண கூடாது எது வந்தாலும் பரவாயில்லை அப்பா கிட்ட சொல்லி சரி பண்ணிகலாம் என்ற முடிவோடு சம்பூ ராதாவின் கை இழுத்து நடந்தாள்...
சம்பூரணத்தின் கையை ராதாவினால் தட்டி விடவும் முடியவில்லை அதை விட இவளை அவள் இழுத்து கொண்டல்லவா நடக்கிறாள்... அவனை நெருங்க நெருங்க இவளுக்கு மயக்கம் வரும் போலவே சம்பூ உனர்ந்தாள்..
தோழியை பார்க்க பாவமாகவும் இருந்தது அதே நேரத்தில் கோபமும் வந்தது... இந்த அளவிற்கு பயப்பபட இவன் என்ன பெரிய அப்பாடக்கர் நாலு வாங்கு வாங்குறத விட்டுட்டு இப்படி பய படுறாளே என்ற கோபமும் இவள எப்படி தனியா சென்னைக்கு போய் படிக்கிறது என்ற எண்ணமும் வந்து உள்ளத்தை சோர்வடைய செய்தது..
சரி என்ன தான் நடக்கும்னு பார்ப்போம் பக்கத்துல வரட்டும் மவனே நீ இன்னைக்கு தீந்த என்ற தோரணையில் ரகுவை ஏறிட்டாள் சம்பூ...
அவனும் இதற்காகவே காத்திருந்தது போல சம்பூவை உடன் அழைத்து வந்த ராதாவை முறைத்தான்
ராதா அவன் பார்வைக்கு திரும்பி கொண்டாலும் சம்பூ அவனை நேர்க்கொண்ட பார்வையிலே பார்த்து என்ன என்பது போல் கேட்டாள்...
அவன் கவனமாக ராதாவின் புறம் திரும்பி இவ்ளோ நேரம் எங்க போன அம்மா உங்க வீட்டுக்கு போனாங்களாம் நீ இல்லைனு வந்து சொன்னாங்க இது கூட ஊர் சுத்த போணியா என்று கேட்டான்...
சம்பூவிற்கு வந்ததே கோபம் அது என்ன இது நான் என்ன ஆடா மாடா அப்படி சொல்றீங்க நானும் அப்படி உங்கள கூப்பிடட்டுமா என்று ஆத்திரத்தை அடக்கிய குரலில் கேட்டாள்...
ராதாவை மறந்து இப்போது சம்பூவை ஏறிட்டான் ரகு... நீ தான் இவள கூட்டிட்டு போணியா உனக்கு உன் வேலைய பார்க்க முடியாத உனக்கு எத்தனை தடவ சொல்றது அவள தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்... நீ. அவளை ஊர சுத்த வைக்கிற என்றான்...
சம்பூ ஆத்திரத்தை கை விட்டாள்... ஆமா அப்படி தான் பண்ணுவேன் என்ன பண்ணுவ போய் யார் கிட்ட வேணும்னாலும் சொல்லு போ நாங்க சுத்துவோம் என்ன வேணா பண்ணுவோம் அதை கேக்குறதுக்கு நீ யாரு?... இவள கல்யாணம் பண்ணிக்க போறவன் தன கல்யாணம்னு நடந்தா அதுவும் உன் கூட நடந்தா அப்ப பார்க்கலாம் இப்ப வழிய விடு என்று சொல்லி தோழியை கையோடு இழுத்து நடந்தாள்...
பின்னாடி திரும்பி பார்த்த ராதாவிற்கு பகீர் என்று இருந்தது ஏனெனில் அவர் பார்வையில் இவளை அடித்து துவம்சம் செய்யும் எண்ணம் இருந்தது... போடி போ பின்னாடியே வரேன்... ஆளாயா கூட்டிட்டு வந்து மிரட்டுற வரேன் இரு என்று ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து கொண்டு நின்றான்...
சம்பூவிற்கு ராதிவிற்கு தன் கையாலையே நாலு அடி போட்டால் என்ன என்ற வெறியும் வந்தது...
ஆனால் சும்மாவே தன் பிரிவை நினைத்து பயப்படும் இவளுக்கு இப்போது எது செய்தும் ஒரு பயனில்லை என்ற எண்ணம் வந்தது.... கூடவே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்த தோழி மேல் கழிவிறக்கமே மேலோங்கி நின்றது...
இன்னும் இவனை டைம் கிடைக்கும்போது வெச்சு வாங்கனும் என்னை யாருன்னு நெனச்சிட்டு இருக்கான் இவனுக்கு சரியா ஒரு நாளைக்கு வெச்சு வாங்கனும் முடிஞ்சா காலையாவது ஒடச்சி விடனும்னு என்று நினைத்து கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்....
கால் கழுவிட்டு உள்ளே செல்லும் போதே அடுத்த டார்ச்சர் உள்ளேயே இருந்தது... அது அந்த ரகுவின் அம்மா கோதை...
சம்பூவிற்கு அடேயப்பா வென்று இருந்தது இந்தம்மாவை கோதைன்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா கோவேரி கழுதைன்னு வெச்சிருக்கலாம்...
பாரு பேசுறது பார்த்தாலே கழுதை கத்துற மாதிரியே இருக்கு என்ற சம்பூவின் வாயை அவசரமாக பொத்தினாள் ராதை..
சும்மா கூட சொல்லாதடி அதுக்கு பாம்பு காது சைலன்டா வா என்ற ராதையின் துப்பட்டாவை இழுத்தால் சம்பூ...
அடியேய் அநதம்மா உன் அத்தைடி நான் ஏன் பயப்படனும் நான் என் அப்பாவுக்கே பயந்தது இல்லை நீ வா என்று உள்ளே போக முயன்றனர்... உள்ளிருந்து வந்த பேச்சு தோழிகள் இருவரையும் தூக்கி வாரி போட வைத்தது....
அவ்வளவு நேரம் சளசள வென்று வாயடித்த சம்பூவே ஒரு நிமிடம் அசைவற்று நின்றாள்.....
நாமும் மயவனை கண்டு மயங்குவோம்.....
 
அழகான எழுத்து நடை துளசி ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி இருந்தா நல்லா இருக்கும்..
கதையின் நாயகனுக்காக காத்திருக்கிறோம்..
வாழ்த்துக்கள்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top