murugesanlaxmi
Well-Known Member
சில நேரங்களில் சில குழப்பம் வரும் [பல நேரங்களில் அது தான் வேலை]. இம்முறை இதிகாசங்களில் இருந்து. இராமாயனத்தில் ஒரு இடம், ராமன் வில்லேல்லாம் உடைத்து பெண் கேட்கும் போது, ஜனகன் மகாராஜா, ராமனின் தந்தை குறித்து கேள்வி எழுப்புவார். “இவர் தந்தைக்கு ஆயிரம் மனைவிகள், இவருக்கு நான் எப்படி பெண் கொடுக்க முடியும், இவரும் இவர் தந்தை போல் இருந்தால் என்ன செய்வது,” என கேள்வி எழுப்புவார். அப்போது அவரின் குலக்குரு, “மன்னா, ராமனை பெற்றவர் வேண்டுமாயின் தசரதன், ஆனால் அவனை வளர்ந்தவர், வசிட்டர், அவர் ஏகபத்தினி விரதர். அதனால் நீ நம்பி சீதையை திருமணம் செய்து வைக்கலாம், {அவரின் மனக்குரல் “அவன், அவன் அப்பனை போல் ஏகபட்டபத்தினிகள் விரதன் இல்லை”} குழந்தைகள் வளரும் இடம் தான் முக்கியம், பிறப்பு முக்கியம் இல்லை. அவன் வளர்ந்த இடமும், வாழ்ந்த முறையும் முக்கியம்” என்று கூறி முடித்து வைப்பார் திருமணத்தை.
இதேபோல் மகாபாரதத்தில் ஒரு இடம், கர்ணனுக்கு பெண் கேட்கும் போது முதலில் மன்னன் என்று சம்மதம் சொன்ன சல்லியன், பின் கர்ணன் தேரோட்டியின் மகன் என்று கேள்வி பட்டவுடன் பெண் தர மறுப்பன். காரணம் கேட்கும் போது, “ஒருவருக்கு பிறப்பு முக்கியம், எங்கு வளர்ந்தாலும் பிறப்பே பெருமை, இன்று நீ சத்திரியன், ஆனால் நீ பிறந்தது ஒரு தேரோட்டியின் மகனாக, அதனால் பெண் தரமாட்டேன்” என்று கூறி நிறுத்தி வைப்பான் திருமணத்தை.
இங்குதான் என் குழப்பம் ஆரம்பித்தது. இரண்டுமே மிக முக்கியமான இதிகாசங்கள். ஒன்று வளரும் முறை, வாழும் முறை சிறந்தது என்று கூறுகிறது. மற்றோன்று பிறப்பே சிறந்தது என்று கூறுகிறது. இதில் எது சிறந்தது. என்று என் மனம் கேள்வி கேட்டது.
எனக்கு தோன்றியது, ஆயிரம் தான் இருந்தாலும் சல்லியன் ஒரு சல்லி பையன், சிற்றரசன், பேரரசனுக்கு கூஜா தூக்குபவன். மருமகனை நட்டாற்றில் விட்டு விட்டு வந்தவன். ஆனால் குலக்குரு ஒரு சிறந்த குரு அவர் சொல்வதே வேதம். மேன்மக்கள் மேன் மக்களே {பணத்தில் இல்லை, குணத்தில்} என்று அவரின் முடிவே, அதாவது ஒருவர் வாழும் முறையும், வாழும் வாழ்கையும் பிறப்பை விட சிறந்தது என்று எடுத்துக்கொண்டேன்.அதற்கு இன்றைய ஆய்வும் உதவி புரிந்தது அதாவது ஒரு குழந்தை யாரிடம் அதிகம் இருக்கோ, இரவினில் யாருடன் தூங்குகிறதோ அவரிடமே பாசம் அதிகம் வைக்கும், அவரின் குணமே வரும் என்று. இன்றைய நாகரிகவுலகில் குழந்தையை தனியாக, அல்லது வேலைக்காரபெண்மணியிடம் வளர்க்கிறர்கள். பின்னாளில் பாசம் கேள்விகுறியே. இப்போதே அவர்கள் முதியோர் இல்லத்திற்கு புக் செய்ய வேண்டியவர்கள்.