murugesanlaxmi
Well-Known Member
என் குழப்பம் 2
இராமயணத்தை சும்மா கிழி,கிழி என்று அனைவரும் கிழித்துவிட்டதால், சில தொடதபக்கங்களில் எனக்கு குழப்பம் ஏற்படும். அதில் ஒன்று ராமன், ஏன்? தன் தம்பிகளில் லெட்சுமணக்கு முன்னுரிமை தருவது போல் நடக்க வேண்டும். குகன், விபீஷணன் என்று பலரையும் தன் தம்பி என்று எற்றுக்கொள்ளும் அவதாரபுருஷனுக்கு ஏன் இந்த பாகுபாடு? என்ற குழப்பம் எனக்கு ஏற்ப்பட்டது.
அதற்கு விடை எனக்கு கம்பரிடம் கிடைத்தது. எனக்கு கம்பர் மேல் கடுப்பு இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் கம்பரை பிடிக்கும். { கம்பர் மேல் கடுப்புக்கு காரணம், இன்று இராமயணத்தை வைத்துக்கொண்டு நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் கம்பர். சாதாரணமாக செவிவழி கதையாக இருந்த இராமயணத்தை முதல் முதலில் எழுத்தில் வடித்தவர் வால்மீகி. அதனை பலரும் மொழிப்பெயர்ப்பு செய்த போது பெருமாளின் பக்தர் ஆன கம்பர், அதனை ஒரு பக்தி காவியமாகவே ஆக்கிவிட்டர். சாதாரணமாக மன்னன், மக்கள் என்று இருந்தவர்களை திருமால் – இராமன், ஆதிசேஷன் – லெட்சுமணன், சங்கு, சக்கரம் – சத்ருக்கன்,பரதன், சிவன் – அனுமன், இந்திரன் – வாலி, சரஸ்வதி – கூனி என்று இன்னும் இன்னும் தெய்வவடிவங்களக மாற்றியவர் கம்பர். இன்று நடக்கும் அனைத்து கூத்துக்கும் அன்றே பிள்ளையார் சுழி போட்டுவிட்டர். சரி அதை விடுவோம், எப்படி கம்பர் உதவி செய்தார் என்று பார்ப்போம்}. தசரதனுக்கு, பிள்ளை செல்வங்கள் இல்லாத காரணத்தால் புத்திரயாகம் செய்தார். அதில் வந்த பாயசத்தை தன் மனைவிகளுக்கு தந்தார். முதல் பாதி கெளசல்யாதேவிக்கு, பின் அதில் பாதி சுமத்திரைக்கு, மீண்டும் அதில் பாதி கைகேயிக்கு, மீதி இருந்த பாயசத்தை திருப்ப சுமத்திரை தேவியார் குடித்து முடித்தார். இதனால் முதல் பாதி திருமாலின் பாதி அம்சம் ராமன், ராமனின் பாதி லெட்சுமணன், அவனின் பாதி பரதன், அவனின் பாதி சத்ருக்கன் என்று பிறந்தார்கள். இவர்கள் அனைவரும் திருமாலின் அம்சம். இயற்கையாக தன்னில் பாதியான லெட்சுமணன் மீது ராமனுக்கு பாசம் கூடியது, மற்றும் பரதன் தன்னில் பாதியான சத்ருக்கன் மீது பாசம் அதிகம் என்று எனக்கு தோன்றியது.