E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
MM .வர்ஷின் characterisation throughout the episodes .outstanding.ஒரு full violin concert கேட்ட அனுபவம். Violin music அது எவ்வளவு ஆரவாரமாக இருந்தாலும் கூட ஒரு மெல்லிய சோகம் அதில் இழையோடி இருக்கும். நம் ஆழ் மன உணர்வுகளை அசைத்து பார்க்கும். அது போல் அவள் மன உணர்வுகள்.அதில் ஒரு ஏக்கம் அதிலும் ஈஷ்வரின் நிராகரிப்பு தந்த வலி .ஒரு பக்கம் அவன் வேண்டவே வேண்டாம்.இன்னொரு பக்கம் அவன் மட்டுமே வேண்டும். அதீத வெறுப்பிற்கும் அதீத விருப்பிற்கும் அவள் ஊஞ்சல் ஆடிய விதம் அதை ஒரு தருணத்தில் balance செய்து ஈஷ்வருடன் சேர்த்து ஆட வைத்த விதம்.malliக்கு இணை malli மட்டுமே.
அருமை சகோதரி
 

krish

Member
மல்லி சகோதரி,
தங்களின் 22 வது நாவலான சங்கீதஜாதிமூல்லை மிக நீண்ட நெடிய நாவல். நீங்கள் மெல்லிய உணர்வுக்கொண்டு மிக நுணுக்கமாக எழுதிய நாவல். அதாவது பட்டு சேலை செய்யும் நெசவாளி போன்று நெசவு செய்த நாவல்.

இருமனம்{ஈஸ்வர்-வர்ஷ்னி} லயித்து சுருதியுடன் சேர்த்த சங்கீதம் போன்றது இந்த சங்கீதஜாதிமுல்லைநாவல். எனக்கு தெரிந்து அல்லது நான் படித்தவரை வரலாற்று கதை தவிர முதல் மூன்று பாகம் வந்த நாவல் இதுதான். அதுவும்கூட வரிசையாக படிக்கும் படி அமைத்துயிருக்கிறிர்கள். ஒன்றை தவிர்த்து ஒன்று படிக்கமுடியாது.

உங்களுக்கு அதிக வாசகர்களை பெற்று தந்த நாவல்.
உங்களின் கடினஉழைப்பை யாருக்கும் விமர்ச்சிக்க தகுதியில்லை. எனவே இது விமர்சனகடிதம் இல்லை.ஒரு பாராட்டு கடிதம் அல்லது அருமையான கதை தந்ததுக்கு ஒரு நன்றி நவிதல். இந்நாவல் வாசகர்களால் அதிக விமர்சனம், பாராட்டும் பெற்றுவிட்டது. அதனை மீறி கூற ஒன்றுமேயில்லை. இருந்தாலும் சில வரிகள்.

சில நாவலில் தேவையில்லாமல் சில பாத்திரம் வரும். முன் கதையில் கூட வந்தது. ஆனால் இந்நாவலில் ஒரு பாத்திரம் கூட தேவையில்லை என கூறமுடியாது .{முரளி குழந்தை முதல் கொண்டு} அத்தனையும்மிக அருமையாக பொருந்திவிட்டனர். அதேபோல் இக்கதை ஆரம்பித்து மாதங்கள் கடந்து நம் தளமும் விரிந்து, வாசகரும் பரந்து விரிந்து, சில கதைகள் முடிந்து, சமூகசூழ்நிலைகூட மாறிய பிறகும் அருமையாக முடித்த அதிசயம் இங்குதான் காணமுடியும்.

உங்கள் இலக்கணங்களை நீங்களே விரும்பி உடைத்துள்ளீர்
, உதாரணமாக உங்கள் நாவலில் ஒருவர் நல்லவர் ஒருவர் தவறானவராகயிருப்பார், சென்ற கதைவரை கூட. ஆனால் இதில் இருவருமே தவறானவராக காட்டி நம்மைபோல் சகமனிதராக காட்டியது அருமை. நேர்மறை கருத்தோ, அல்லது எதிர் மறை கருத்தோ எதுவாகினும் சங்கீதஜாதிமுல்லை உங்களின் ஒரு மைல்கல் நாவல்.

கிரகங்களின் தோல்வியே கிரககோவில். அதுபோல் உங்களை சிறு தடுமாற்றம் செய்த இந்நாவல் உங்களின் ஒரு மைல்கல் நாவல். மற்றோன்று சொல்லவேண்டும் சகோதரி. ஒரு நாவல் படிக்கும்போது அதில் மூழ்கி உலகிலே அந்த ஹீரோ-ஹீரோயின் மட்டும் இருப்பது போல் ஒரு பிரமை தோன்றும் சகோதரி.

ஆனால் நீங்கள் ஒரு பகுதியில் தலைவியின் நாயகன் நடக்கும் போது, மறு பகுதியில் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நடப்பது போலும் வேறு ஒரு பகுதியில் சங்கீதஜாதிமுல்லை நடப்பது போல் எழுதியிருப்பது, இந்த உலகில் ஒருவர் மட்டும் ஹீரோ-ஹீரோயின் கிடையாது, அவர்அவர் வாழ்வில் அவர்அவர் ஹீரோ-ஹீரோயின் என்று கூறுவது போல் எனக்கு தெரிகிறது சகோதரி.

ஒரு நாவலில் புகழ் பெற்ற ஹீரோவை நடப்பு நாவலில் கொண்டுவந்தால் நடப்பு நாவலின் ஹீரோவின் புகழ் குறையும் என்று தெரிந்தும் பயன்படுத்துவது தன் படைப்புகளின் ஆழம்
, உயரம் தெரிந்த படைப்பாளியால் மட்டுமே முடியும் சகோதரி அந்தவகையில் உங்கள் துணிவுக்கு ஒரு வாழ்த்துகள் சகோதரி.

ஒரு புதிய பாத்திரம் அந்த வசனம் பேசினால் கவனம் கிடைக்காது என்று புகழ் பெற்ற நாவல்ஹீரோவை விட்டு அந்த உரையாடல் பேசியது அங்கு உங்கள் புத்திசாலிதனமும் தெரிகிறது சகோதரி. அதனால் தான் அந்த இடம் சிறப்பு பெற்றது. இரண்டு சூப்பர் ஸ்டார் பார்பது போல்இருந்தது. விசில் அடிக்கும் எண்ணம் இருந்தது. இரவை நினைத்து அடக்கிகொண்டேன் சகோதரி.

காதலில்லா காமத்தில் செய்த தவறுகளை
உணர்ந்து காமமில்லாத காதலில்லை என்பதை அவளுக்கு உணர்த்தி, தன்னை திருத்திக்கொண்டு, தன்னவளையும் திருந்த வைத்து, அவளை மகிழவைத்து தானும் அவளுள் மயங்கி மகிழ்ந்து அடங்கினான் இந்த கள்ளமில்லா காதல்கள்ளன். தான் அவனை அதிகம் தேடியதால் தன்னை தவறான
பெண், தப்பானவள் என்று தன்னை நினைத்துவிட்டனோ என்று அவளின் சந்தேகத்தை அழகாக போக்கி,இனி நீ வேறு, நான் வேறு என நினைக்கவிடாமால், நாம் இருவரும் சேர்வதே இனிய சங்கீதம் என உணர்த்தினான் இந்த சங்கீதஜாதிமுல்லை கள்ளன்.
காதலைச் செதுக்குவதாய்
நினைத்து
ஈஸ்வர் செய்த
உளிப்பிரயோகங்களில்
காதல்
அவனைச் செதுக்கி முடித்தது


உண்மைக் காதல்
என்னும்
உத்தரவாதத்துடன் தான்
துவங்குகின்றன
அத்தனைப்
பொய்க் காதல்களும் என வருத்திய வர்ஷ்னியை


என்னோடு
நீ இருக்கிறாய் என்பது
தேக நிலை.
நானாகவே
நீ இருக்கிறாய் என்பதோ
தேவ நிலை என்று உணர்த்தி



காதல்
ஓர் புல்லாங்குழல்.
சரியான அளவு காற்றைச்
செலுத்துவதில்
இருக்கிறது
வெற்றியும் தோல்வியும் என்று தானும் உணர்ந்துகொண்டான்
{ர்கள்}

இவ்வளவு நாள்கள் ஒரு புயலின் கைபிடித்து நடந்தது போல் இருக்கிறது சகோதரி. நான் புயல் என்று சொன்னதுக்கு காரணம் புயல் வீசும் போது புயலின் மையபுள்ளி அமைதியாக இருக்குமாம். அதுபோல் விமர்ச்சனபுயல் அடித்த போதும் மையமான நீங்கள் அமைதியாக இருந்து நாவலை சிறப்பான முறையில் முடித்தீர்கள் சகோதரி. வாழ்த்துகள் சகோதரி

உங்கள் வாசகர்கள் இரு பிரிவு இருப்பார் போல் உள்ளது. ஒரு பிரிவினர் மிதவாதி அதாவது உங்களின் முதல் நாவல் என் வாழ்வு உன்னோடுதான் தொடங்கி இறுதி சங்கீதஜாதிமுல்லை வரை படித்து வாசகர் ஆனவர்கள். மற்றவர்கள் சங்கீதஜாதிமுல்லை படித்து அதில் லயித்து பின் சென்று உங்களின் அனைத்து நாவலையும் படித்து வாசகர் ஆனவார். அவர்கள் தீவிரவாசகர்கள்.


அப்படிபட்ட வாசகருக்கு பயந்துக்கொண்டு அடக்கதுடன் வாசிக்க வேண்டியதாகிறது. அதனாலே நாவல் உள்செல்லாமல் வெளியே சுற்றிக்கொண்டு இருகிறேன். இருப்பினும் சில சந்தேகங்கள், குந்தவை நாச்சி என நான் நினைக்கும் ரஞ்சனி ஏன் பத்துவை தேர்ந்தெடுத்தாள், அழகான பெண்ணுக்கு ஆயிரம் ஆப்ஷன் வரும், அதில் உடனே பத்துவை ஏன் தேர்ந்து எடுக்கவேண்டும். ஏன்ஏன்றால் ஈஸ்வருக்கு மந்திரி போன்றவள் ரஞ்சனி. அப்படிபட்ட ரஞ்சனி_பத்து காதல் இன்னும் சற்று விரிவாக இருக்கலாம் என தோன்றுகிறது.


பொதுவாக ரசிகனையும்,வாசகனையும் சில காலம் கழித்து என வந்தால் கதை முடிவை நோக்கி போகிறது என திரையுலகமும், நாவலுலகமும் டியூன் செய்துள்ளது. நீங்கள் இரு முறை கூறியிருபீர். பின் நாவலை தொடர்வீர், அங்கு முடிக்கும் எண்ணம் இருந்ததா பின் மாறியதா சகோதரி. அதன் விளக்கத்தை நான் கவனிக்கவில்லையா? அல்லது என்னை கவனிக்க செய்யவில்லையா. இவை என் சில சந்தேகங்கள் சகோதரி.

மற்றபடி கடைசி சில பல பதிவுகளில் அனைத்தையும் உடைத்து நான் மல்லிகாமணிவண்ணன் என நிறுபீத்தீர்கள் சகோதரி .மற்றபடி யார் மனதையும் புண் செய்யமால் விமர்ச்சிக்கும் என் எழுத்தாளர்சகோதரி, கவிதைகளால் விமர்ச்சிக்கும் என் சகோதரிகள், திரைப்பாடல் மூலம் விமர்ச்சிக்கும் என் சகோதரிகள், அனைத்தையும் ரசிக்கும் என் செல்லம் சகோதரி, நேர்மையாக விமர்ச்சிக்கும் என் சகோதரிகள், கோபமாக விமர்ச்சிக்கும் என் சகோதரிகள், அழகாக விமர்ச்சிக்கும் என் சகோதரிகள் என இவர்களை விட நான் ஒன்றும் புதிதாக எதுவும் கூறிவிடமுடியாது.

ஏன்எனில் சில சகோதரிகள் SJM வாசிப்பவர் மட்டும் இல்லை அதனுடன் வசிப்பவர், அதனையே சுவாசிப்பவர்கள். அவர்கள் அனைவர்சார்பாகவும்.மற்றும் இதுவரை எழுதிய நாவலில் இது மைல்கல் நாவல் என்று கூறினேன், ஆனால் நீண்ட நெடுசாலையில் மைல்கல்கள் அதிகம் சகோதரி. எனவே உங்கள்வாழ்க்கை பாதையில் மைல்கல்கள் வைரகல்நாவலாக வர வாழ்த்தும் வாசகசகோதரன் V.முருகேசன்.

சகோதரி, நாங்கள் உங்களுக்கு நன்றி கூறமாட்டோம், ஏன்என்றால் சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவரை சந்தோஷப்படுத்திப்பார்ப்பது, என பாக்யாவில் பாக்கியராஜ் கூறியிருந்தார். எனவே எங்களை சந்தோஷப்படுத்தியது மூலம் எங்களை விட உங்களுக்கு தான் அதிக சந்தோஷம். எனவே நாங்கள் ஏன் உங்களுக்கு நன்றி கூறவேண்டும். { கொழுப்பு என்பது தானே உங்களின் மனகுரல் } அன்புடன் V.முருகேசன்
nice comment
 

krish

Member
நிஜம் தான்.....

நான் எப்படி இந்த கதையை படித்தேன் என்பதை என் பசங்க தான் கடுப்புல சொல்லுவாங்க........

Mummy PC and tabல எப்பவும் செய்யுற ஒரே வேலை நாவல் படிப்பது தான்......

ஞாபக மறதி கூட அதிகம் தான்......

தன்னையே மறக்க செய்யும் ஒரு நிலை என்று கூட சொல்லலாம்......
same feelings ingayum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top