Dr.vinotha's... முதலும் நீ, முடிவும் நீ

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
பரந்து விரிந்து உயர்ந்து நின்ற, அந்த வெற்றிகரமான கம்பெனி, லீடிங் பிஸ்னஸ் மேன், என அனைவராலும் புகழப்பட்ட, செல்வ நாராயணனின் உழைப்பால் உருவானது.

வேளை பளுவினாலும், உடல்நலக் குறைவாலும், வேறு பல காரணங்களினாலும், அந்த கம்பெனியின் முழு பொறுப்பை, தனது தோழன் ஈஸ்வரனுடைய, கெட்டிக்கார மகன்... ஜெகனிடம் கொடுத்துவிட்டு யூ.எஸ் சென்றுவிட்டார்.

அவர் சென்று நான்கு வருடங்கள் கடந்தன. வருடத்திற்கு ஒருமுறை, என மொத்தம் நான்கு முறை மட்டுமே வந்து, மேற்பார்வையிட்டு சென்றார்.

அனைத்து சுமைகளையும், ஒருவனாய் சுமந்து, கம்பெனிக்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தான், ஜெகன் என்னும் அந்த இளைஞன்.

அன்றும் அப்படித்தான், பற்பல வேலைகளை லாவகமாக, அவன் ஒரே நேரத்தில் கையாண்டு கொண்டிருக்க, திடீரென ஒரு தகவல் வந்து, அனைத்து வேலைகளையும் அப்படியே நிறுத்தியது.

"செல்வ நாராயணனின், ஒரே செல்ல மகள், சங்க மித்ரா, இன்னும் அரை மணி நேரத்தில் கம்பெனிக்கு வந்து விடுவாள்" என்ற தகவல் தான், அதற்கு காரணம்.

'எவரை இனி காணவே கூடாது, என எண்ணினானோ, அவராகவே முன்வருகிறார்'. தலையில் கைவைத்து அமர்ந்தான்.

பணியாட்கள் அனைவரும், பம்பரமாய் சுழன்று, சங்கமித்ராவின், வருகைக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

அரைமணி நேரம், ஒரு நொடி போல் பிறந்து விட, கருப்பு ஜாகுவார் கார் கம்பெனி முன் வந்து நின்றது.

வேறுவழியின்றி அவளை வரவேற்க வெளியே வந்தான் ஜெகன்... அவனது இதய துடிப்பு அதிகரிக்க, முகம் வெளுத்தது.

ஓடி சென்று கார் கதவை செக்யூரிட்டி திறக்க, தனது நிமிர்ந்த பார்வையை, அவனை அறியாமலேயே அவன் தாழ்த்தினான்.

எவ்வளவோ உயரத்துக்கு சென்றவன்!!! துணிச்சலாய் பல சவால்களை எதிர்கொண்டவன்!!! ஆனால் இன்று... தன் முன் நிற்கும் பெண்ணை, காண சற்றும் தைரியமில்லாமல் நிலை குழைந்து போனான்.

இளம் வயது பெண்மணி அவள், 26 வயது இருக்கும். சங்க மித்ரா, காரை விட்டு இறங்க, அவள் பின் அவளது கணவன், குழந்தைகள் , வருகிறார்களா என கம்பெனியின் பழைய முதிர்ந்த ஊழியர்கள் பார்த்திருந்தனர்.

ஓர் மயில் கழுத்து வண்ண சாப்ட் சில்க் சாரியில், சிறிய வைர நெக்லஸ் அணிந்து, தேவதை போல காட்சியளித்தவள், கம்பீரமாய் நடந்து வர, அனைவரும் "வெல்கம் மேடம்", என விஷ் செய்தனர்.

அந்த முதிர்ந்த ஊழியர்கள் மட்டும், "வாங்க பாப்பா" என உரிமையுடன் அழைத்து, வரவேற்றனர்.

அத்தனை சொத்துக்கும் சொந்தக்காரி, அழகிலும், அறிவிலும், ஃபர்ஸ்ட் கிளாஸ், ஆயினும்... முகத்தில் எவ்வளவு தேடியும், கர்வமொ, திமிரோ, துளியும் இல்லை. அனைவரிடமும் சிநேகமாக புன்னகைத்தாள்.

அவள் அனைவரையும் கடந்து, அவன் அருகில் வர, ஜெகனின் இதயம், பந்தய குதிரை போல் ஒடியது!!! அவனது இதய துடிப்பு, அவனுடைய செவிகளுக்கே எட்டியது!!!...

'மற்றோர் அவனைவரும், சந்தேகிக்க கூடும்' என உணர்ந்தவன், "வெல்கம் மேடம்" என, இயன்றவரை இயல்பான குரலில் கூறினான்.

அந்த ஒரு நொடி அவளின் முகத்தை, அவன் பார்த்துவிட,

அதில் தெரிந்தது... ஆழ்ந்த துக்கம், குற்றம்சாட்டும் பார்வை, 'ஏன் இப்படி செய்தாய்' என்ற கேள்வியை தாங்கிய பார்வை. அதில் தனது மனதிடம் முழுவதுமாய் இழந்துவிட்டான் ஜெகன்.

"அப்பா எப்படி இருக்காங்க பாப்பா?", என அந்த முதிர்ந்த ஊழியர் மாணிக்கம் வினவ,

"பைன் அங்கிள்", எனக் கூறியவள், அவரது குடும்பத்தை பற்றியும் விசாரித்தாள்.

"உங்க கணவர், குழந்தைகள் வரலையா பாப்பா?", என அவர் மேலும் விசாரிக்க, அதர்க்கு அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஓர் சிறிய புன்னகையை மட்டும் விடைையாக தந்துவிட்டு, தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் சங்கமித்ரா.

'தப்பா கேட்டுட்டோமோ!!' என அவர் சிந்திக்க,

இவள் கம்பெனி பற்றி பேசத் தொடங்கிவிட்டாள்.

'மித்ரா எப்ப இருந்து கம்பெனி பற்றிலா அறிய தொடங்கினா', என்று எண்ணியவனாய் ஜகன் நிற்க, மற்றோர் அனைவரும் சென்றுவிட்டனர்.

அதுதான் வழக்கம், செல்வநாராயணனிடம் கம்பெனி பற்றி, ஜெகன் பேச துவங்கினால் அனைவரும் சென்றுவிட வேண்டும். அதையே இப்போதும் பின்பற்றினர்.

வேறு வழியின்றி, அவள் முன் அமர்ந்தவன், "எதில் தொடங்கலாம் மித்ரா, சாரி!! சாரி!!!.... மேடம்" என்றான்.

"பிராபிட்ஸ்", என அவள் உத்திரவிட,
அதைப் பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதே, அவளையும் கவனித்தான்.

நெற்றியில் குங்குமம் இல்லை, கழுத்தில் ஒரு சிறிய அழகான வைர அட்டிகை மட்டுமே, கொடியில்லை, அதில் அவன் கவனம் சிதற,

"எனக்கு திருமணம் ஆகல, சொல்றதை சரியா சொல்லுங்க", என்றாள் கடுகடுத்த குரலில்.

"ஏன்!!!... ஏன் செய்யல?" என அவன் அதிர்ந்து வினவினான்.

ஒரு நிமிடம் இதயமே துடிக்க மறந்தது போல் உணர்ந்தான் ஜெகன்.

'அது உனக்கு தேவையில்லாதது!!' என்று எண்ணியவள், "மைண்ட் யுவர் பிசினஸ்" என்று முடித்து விட்டாள்.

'இவளுக்கு நான்கு வருடம் முன்பே,
திருமணமாகி, இப்போது இரு குழந்தைகள் என கூறினார்களே!!!, அனைத்தும் பொய்யா!!!... ஏன்? எதற்கு இந்த நாடகம்? ஏன்?'...என எண்ண, எண்ண, கத்தியை வைத்து, அவனது இதயத்தை யாரோ கிழிப்பது போல உணர்ந்தான்.

பிசினஸ் பற்றி கஷ்டப்பட்டு பேசினாலும், அவனது கண்கள் மீண்டும் சங்கமித்ராவையே ஆராய்ந்தது.

அதே அழகு, அதே அமைதியான, அடக்கமான, அதேசமயம் நிமிர்ந்த முகபாவனை. எதுவும் மாறவில்லை...

அவள் கண்களில் மின்னும் காதல், இவன் மட்டுமே அறிந்தது, இவனுக்கானது, அதுகூட மாறவில்லை....

மாறியது ஒன்றுதான், அந்த காதல் பார்வையில் மற்ற பாவனைகளும் சேர்ந்து கொண்டது. அதில் துக்கமும், கோபமும், வெளிப்பட்டது.

'இதுக்க மேல இங்கிருக்க முடியாது' என அவன் எண்ண, அவனை காப்பாற்ற வந்தான், அவனது பி.ஏ சரத்.

"சார், உங்க பொண்ணுக்கு பிளே ஸ்கூல் முடியும் நேரம், அழைத்துவர", என அவன் துவங்க,

"நானே போறேன், மத்தவங்களோட அவ வரமாட்டாள", என்று கூறி எழுந்தான்.

"மேடம்... நாம அனைத்தையும் டிஸ்கஸ் செய்துட்டோம், நீங்க ரெஸ்ட் எடுங்க", எனக்கூறி வெளியில் ஓடியே விட்டான் ஜகன்.

'குழந்தையா!!!!!.....நான் கேட்டது நிஜம்தானா!!!!....' என, அமர்ந்திருந்தவள் முகத்தில், ஓரு உணர்ச்சியும் இல்லை.

பழைய நினைவுகளில் மூழ்கினாள் அவள், 'முதல் நாள் பள்ளிக்கு, அழாமல் ஜெகனின் கையை பிடித்துக்கொண்டு சென்றது முதல், சூழ்ச்சியால் தனது தந்தை, தன்னை யூ.எஸ் அழைத்த வந்தது வரை', மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள்.

தந்தை மீது கோபித்துக் கொண்டு, பேசாமல் இருந்த மித்ரா, ஜெகனை பிரிந்து முதன்முதலாய் தனிமையை உணர்ந்தாள்.

'தன்னை அழைத்து செல்ல, அவன் வருவான்', என நம்பிக்கையோடு அவள் காத்திருக்க, அவன் வரவில்லை.

பல மாதங்கள் கழித்து, அவனிடமிருந்து போன் கால் தான் வந்தது.

ஆனந்தமாக அவள் போனை எடுத்து பேசினாள், "ஏன் இவ்வளவு நாட்கள்..... ஏன் எனது அழைப்பை ஏற்கவில்லை...." என கதறி அழுதாள்.

அதை இன்றளவும் இருவராலும் மறக்க இயலாது.

ஜெகன், அவள் அழுகையை சட்டை செய்யாதவன் போல, பேச துவங்கினான்.

"என்ன மறந்துடு மித்ரா, நாம கல்யாணம் செஞ்சுக்க முடியாது", என்ற அவனின் வார்த்தையை, நம்ப இயலாதவளாய்,

"ஏன்", என்ற ஒற்றைக் கேள்வியை கேட்டாள்.

அதற்கு பதில் அளிக்காமல் சென்றவன் தான், அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை.

சில வருடங்களுக்கு பின், "மத்ராவுக்கு, திருமணமாகி குழந்தை உள்ளது", என்று செல்வ நாராயணன் கூற,

ஜெகன் முட்டாள்தனமாய் நம்பி விட்டான்....

ஆனால் அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது, என்று கூறியபோது... மித்ரா நம்பவே இல்லை.

திருமணம் செய்து கொள்ள மறுத்து, பிடிவாதமாய் இருந்த மித்ரா, கடந்த நான்கு வருடமும் சொந்தத் தொழில் ஒன்றை யு.எஸில் செய்து வந்தாள்.

செல்வ நாராயணனின் உடல்நலம் குன்ற, அப்போதும் அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பொறுத்து, பொறுத்து, பார்த்தவர்...

ஒருநாள் மித்ராவை அழைத்து, "சென்னை சென்று, கம்பெனியை பார்த்து வா மா", என்றார்.

அதன் பொருள், 'ஜெகனை பார்த்து வா' என்பதாகும்.

'இதற்காகத்தான் காத்திருந்தேன்' என கிளம்பியவளின், ஒரே குறிக்கோள்...

'அவனது சட்டையை பிடித்து கேட்க வேண்டும், "ஏன் எனக்கு துரோகம் செய்த" என வினவ வேண்டும்', என்பதுதான்.

இப்படியாக நினைவலைகளில், சிக்கி இருந்த அவளை, ஓர் போன்கால் நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது.

அது ஜெகனின் போன், அவசரத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தான், அதை எடுத்து பார்க்கவும்..ஹோம் என இருந்தது.

அட்டென்ட் செய்தாள்...

மறுமுனையில்... "அப்பா .. சரத் அங்கிள், என்ன வீட்டுக்கு கூட்டீட்டு வந்தாங்க, பாட்டி எனக்காக காலி ப்ளவர் சில்லி செய்றாங்க", என்றது அந்த மழலையின் கொஞ்சும் குரல்.

"சரிமா... நான் அப்பாட்ட சொல்றேன்", என்றாள், தயங்கியவாறே.

"ஓகே ஆண்ட்டி", என்றது அந்த பெண் குழந்தையின் குரல்.

நீங்கள் யார் என்றெல்லாம் விசாரிக்கவில்லை, ஜெகன் வேலையில் இருக்கும்போது சக ஊழியர்களுடன் பாப்பா பேசுவதுண்டு.

"அம்மா எங்க", என அவள் கேட்டுவிட...

"வெளியூர்ல.... நா பாப்பாவா இருக்கும் போதே போய்தாங்க. இன்னும் வரல. எங்களுக்காக தான் போனாங்களாம், அப்பா அடிக்கடி சொல்லுவாங்க", என்றது அந்த மழலை குரல்.

அன்னையைப் பற்றி அவளிடம் எவரும் பேச மாட்டார்கள். புதிதாக ஒருவர் பேசவும், தெரிந்ததை எல்லாம் கூறினாள் அந்த குழந்தை.

"நீ உன் அம்மாவ பாத்ததே இல்லையா!!!...", என்று அவள் ஆச்சரியமாய் வினவ,

"என்னால தான், யாரையுமே பாக்க முடியதே, உங்களுக்கு தெரியாதா", என்று அக்குழந்தை வெகு இயல்பாய் கேட்டது.

நெஞ்சம் அடைத்தது சங்கமித்ராவிற்கு.... 'தெரியாம இப்படி கேட்டுட்டோமே', என தோன்ற,

வருத்தத்தை மறைத்துக் கொண்டு, "உன் பேர் என்ன பாப்பா" என்றாள் கொஞ்சலாய்.

"அதுவும் தெரியாதா... என் பெயர் ஜானகி..." என்று அக்குழந்தை கூறய கணம்,

மித்ராவின் முகம் வெளுக்க, கண்கள் கலங்கின.

"உன் அம்மா பேரென்ன", என்று வினவினாள்.

"மித்ரா", என்றது அந்த குழந்தை...

அவ்வளவுதான், தனது கையில் இருந்த போன் நழுவி கீழே விழுந்தது.

கலங்கிய கண்களிலிருந்து, நீர் அருவியாய் கொட்ட, முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழத்தொடங்கினாள்.

இவள் இங்கு அழுது கொண்டிருக்க...

அங்கு அவன், பாரில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்....

'எவ்வளவு பெரிய தப்பு செய்துட்டேன், இவளுக்கு திருமணம் ஆனது, என்ற செய்தியை சற்றும் யோசிக்காமல் நம்பி, முட்டாள்தனம் செய்து விட்டேன்', என அவன், தன்னை தானே நொந்து கொண்டிருந்தான்.


'ஒரு பெண்ண யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துட்டேன்னும், அவளுடன் பிறந்த குழந்தை ஜானகினும், அவ குழந்தை பிறந்தவுடன் இறந்துட்டானும், ஊரை ஏமாத்தி. என் மித்ராவையும் ஏமாத்திட்டேனே'....

'நாலு வருடம் தனியா எப்படி இருந்திருப்பாளோ. நான்தான அவளுக்கு எல்லாமுமே'.

'நா எப்படி என் மித்ராவ புரிஞ்சிகாம போனேன். அவ என்ன தவர வேற யாரையு திருமணம் செய்துக்க மாட்டானு, நினைக்காம, இப்படி செய்துட்டேனே. இப்டி ஒரு கதியற்ற நிலைக்கு அவள தள்ளி விட்டுட்டேனே'.....

'நான் வாழ்ந்து என்ன பயன், என் மித்ராவை நானே கொல்லாமல் கொன்று விட்டேனே'. என மனதளவில் நொந்து கொண்டிருந்தான் ஜெகன்.....

மித்ராவோ...ஜெகனின் முகவரியை அறிந்து கொண்டு, காரில் கிளம்பினாள்.....

*******
செல்வ நாராயணனும், ஈஸ்வரனும், நெருங்கிய நண்பர்கள்.

மித்ராவின் தந்தையான, செல்வ நாராயணனிடம்... செல்வமும், நல்ல குணமும் இருக்க, ஜெகனின் தந்தையான, ஈஸ்வரனிடம்... அதிகப்படியான அறிவு இருந்தது.

இருவருமாய் இணைந்து பிசினஸ் செய்ய துவங்கினர். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சிறப்பாய் செயலாற்றி... பல லட்சங்கள் குவித்தனர்.

தனது இரண்டடுக்கு மாடிவீட்டை, மாளிகையாய் நாராயணன் மாற்ற...

ஈஸ்வரன்... குடிசை வீட்டிலிருந்து ஒரு நல்ல வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

இருவரின் வீட்டிற்கும் இடையில், ஒரேயொரு காம்பவுண்ட் சுவர் தான்.

பிசினஸில்... இருவரும் இணைந்து பல உச்சிகளை அடைய, வாழ்க்கையையும், ஒரே நாளிலிருந்து தொடங்கினர்.

ஒரே நாளில் திருமணம் செய்தனர். குழந்தைகளையும் ஒரே மாதத்தில் தான் பெற்றெடுத்தனர்.

"இவ்வளவு ஒற்றுமையான நண்பர்களா!!", என அனைவரும் வியக்க, ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

அதற்கேற்ப... அவர்களின் மனைவியும், குழந்தைகளும் ஒன்றாக தான் இருந்தனர்...

திடீரென ஒருநாள்... மித்ரா மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க, அவளது அன்னை ஜானகி உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.

அதன்பிறகு... அவளை வளர்த்தியது, அவள் அத்தை என்று அழைக்கும், ஜெகனின் அன்னை தான்.

அவள் எப்போதும் ஜெகன் வீட்டில் இருக்க, ஜெகனின் உலகமே மித்ரா என்றானது....

இருவருமே உயிருக்கு, உயிராக பழகி வந்தனர்...

பிறந்தது முதல், அவர்கள் இறுதியாக பிரிந்தது வரை, தினந்தோறும் ஒன்றாக தான் இருந்தனர்.

மித்ரா தனது அன்னையை, ஜானு... ஜானகி.. என்று அழைத்து பழகியிருந்தாள். பெரியவளானதும், தன் அன்னையின் நினைவு வரும்போதெல்லாம் கூறுவாள்...

"என் மகளுக்கு ஜானகி', என பெயர் சூட்டுவேன் என்று,

அதை இன்றளவும் மறவாமல் இருந்தான் ஜகன்.

ஜெகனை பொருத்தவரை, மித்ரா தான் ஆதியும் அந்தமும். எங்கும் மித்ரா, எதிலும் மித்ரா தான் அவனுக்கு.

அவளைத் தவிர வேறு சிந்தனையே அவனுக்கு வராது, இப்படியாக இருவரின் நட்பு வளர்ந்து கொண்டிருக்க,

இதில் எந்நிலையில், நட்பு.... காதலானதென்று, இருவருக்குமே தெரியாது.

*******
என்ன தான் நெருங்கிய நண்பர்கள் என்றாலும்... செல்வ நாராயணனின், அதிகப்படியான செல்வமும், உயர் ஜாதியும்.... ஈஸ்வரனை, ஒரு படி தள்ளியே நிருத்தியது.

செல்வ நாராயணனின்.... பணக்கார வட்டாரமும், சொந்தங்களும், ஈஸ்வரனை சமமாக மதிக்க தயங்கினர்...

மனைவி இறந்த பின், சொந்தங்களை அதிகம் நேசித்த செல்வ நாராயணனும், தனது நண்பனை... இரண்டாம் பச்சமாக தான் பார்த்தார்.

ஆனால், இது எதுவும் அவர்களின் நட்பை சிதைக்கவில்லை...

இருவரும், அவரவர் கருத்துக்களை... புரிந்து, மதித்து... ஒற்றுமையாக தான் இருந்தனர்...

ஆனால்... இவர்களின் இந்த, புரிதலும்... ஒற்றுமையும்... அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையை சிதைத்தது.

*****
கல்லூரி முதலாண்டில்.. ஜெகன் தனது காதலை, மித்ராவிடம் கூற, அதன்பின் இருவரும் காதல் ஜோடிகள் தான்.

இவர்களின் இந்த மாற்றத்தை, பெற்றோர்கள் எளிதில் அறிந்துகொண்டனர்.

அதற்கு காரணம்,... ஜெகனும், மித்ராவும், இதனை அவர்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை.

பெற்றோர் இருவருக்குமே, இந்த கலப்பு திருமணத்தில் விருப்பமில்லை தான்...

நெருங்கிய நட்பாயினும்...., இப்படி ஓர் திருமணம் செய்தால், நாளை சொந்த பந்தம் இல்லாமல் போய்விடும், என இருவருமே எண்ணினர்.

அதனால் இருவருமாக சேர்த்து திட்டமிட்டு, "செல்வ நாராயணனுக்கு... உடல் நலம் மோசமாக உள்ளது" என, ஓர் பெரும் நாடகத்தை அரங்கேற்றி, மித்ராவை அவனிடமிருந்து பிரித்தனர்.

அவர்களுக்கு அப்போது தெரியவில்லை, இவர்களது காதலின் தூய்மை பற்றியும்... பிரிக்க இயலா சக்தி பற்றியும்...

இவர்களை இவ்வாறு பிரித்ததற்கு முன்தினம் தான்.

மித்ரா ஜெகனிடம் வினவினாள், "ஜெகன்... ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே, நான் இறந்துட்டேன்னா, நீ என்ன செய்வ", என்று கேட்டாள்.

ஆத்திரமடைந்தாளும் அவளுக்காக விடையளித்தான்....

"ஒரு பெண் குழந்தைய தத்தெடுத்து, உன்னோட ஆசைய நிறைவேற்ற, அவளுக்கு ஜானகினு பெயர் வெச்சு. அவளுடைய அம்மா மித்ரானு கூறி வளத்துவேன்....", என்றான்.

சொன்னதை செய்திருந்தான் அவன்.....

அதுவே, அவனது காதலை அவளுக்கு தெளிவாக காட்டியது ... "இருப்பினும் நான்கு வருடம் என்னை தவிக்க வைத்தது தவறே", என கருதினாள் மித்ரா...

"மித்ரா கண்ணு", என ஓடி வந்து அனைத்த ஜெகனின் தாயை ...ஆரத் தழுவியவள்.

கண்ணீருடன் "பாப்பா எங்கே", என வினவ..

வீட்டினுள் அழைத்துச் சென்றார்...

பார்வையற்ற அந்த குழந்தை, பொம்மை போல் அழகாய் நடந்துவர...

தனது ஜானகியை தூக்கி அணைத்து, "அம்மா வந்துட்டேன்", என அவள் கூறய அந்த நிமிடம், அங்கு வந்த ஜெகன்.

அப்படியே பார்த்து நின்றான்.....

தாயென, ஒருவரை முதல் முதலாய் ஸ்பரிசித்த குழந்தை... மித்ராவை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டு முத்தமிட்டு,

"இனி என்ன விட்டு போகாத மா" என ஏக்கத்துடன் அழ....,

"போக மாட்டேன் டா ஜானு", என அழுகையும், ஆனந்தமுமாய் முத்தமிட்டு ஜெகனை பார்த்தாள்...

குழந்தையை இறக்கிவிட்டு, அவன் முன் அவள் வர... குழந்தையை தூக்கிச் சென்றார் ஜெகனின் தாய்.

ஓங்கி ஓர் அறை விட்டவள், அடுத்த நொடியே அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.....

"சாரி மித்ரா", என கலக்கத்துடன் கூறியவன், அவளை இறுக அணைத்துக்கொண்டு...

"இனி உன்ன விட்டு, எங்கும் போக மாட்டேன். உன்னையும் போக விடமாட்டேன்", என, அவளது நெற்றியில் முத்தமிட்டான்....

மனதிலுள்ள... கோபம், துக்கம், எல்லாம் நீங்கி....காதல் உணர்வில் இருவரும் திளைத்தனர்..அந்த நொடி இவ்வுலகையே மறந்தனர்....

முற்றும்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
வினோதா திருமூர்த்தி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top