Balakandam 8 & 9

Advertisement

Pashy2k

Well-Known Member
திதியுடைய கர்ப்பத்திலிருந்து வந்த துண்டுகள் யார் laxu. Andha story new to me. Details sollunga pa
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
திதியுடைய கர்ப்பத்திலிருந்து வந்த துண்டுகள் யார் laxu. Andha story new to me. Details sollunga pa

திதியின் கர்ப்பதிலிருந்து வந்த துண்டுகள் ஏழு மருத்துக்கள் ஆக ஏழு வாத ஸ்கந்தங்களுக்கு பாலகர்களானது. கனன் சத்யலோகத்திற்கும், ஸ்பர்சனன் இந்திரலோகத்திற்கும், வாயு புவர்லோகத்திற்கும், அனிலன், பிராணன், ப்ராணேஸ்வரன், ஜீவன் முதலிய நான்கு பெயர்களைக் கொண்ட துண்டங்களும் பூமில நான்கு திக்குகளும் சஞ்சரிக்கிறார்கள்.

இவங்க இறவா வரம் பெற்றதா இருக்கு நித்யூ. இதுக்கு மேல இவங்களை பத்தி எந்த விபரமும் தெரியல. மாருதி (அழாதே - ன்னு அர்த்தம்), ன்னு சொல்லிட்டே இந்திரன் அவங்களைக் துண்டம் பண்ணினதால, அவங்க மாருதின்னே சொல்லப்படுவாங்கனு திதி, இந்திரன் கிட்ட சொல்றா. இதை சேர்க்கலாம் னு இருந்தேன். ஆனா டீடெயில்ஸ் இல்லாததால குறைச்சிட்டேன்.

நீங்க கரெக்ட்டா கேட்டுடீங்க. ஹ ஹ ஹ.. தெரிஞ்சதை சொல்லி இருக்கேன்.
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அருமை சிஸ், க்ருதயுகம்ன்னா என்ன சிஸ்
யுகங்கள்ங்கிறது ஒரு கால அளவு கரோலின்.

yugangal.JPG

ஒரு வட்டம் - 60 ஆண்டுகள். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பேர் இருக்கு. இப்போ நடக்கிற ஆண்டு சார்வரி . இது இப்போ நெட் ல தேடி எடுத்தது.

யுகங்களும் காலக் கணக்குகளும்..

மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.

கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம் (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம் (308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும்.

12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.

திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.

துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.

கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள். (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள் மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின் வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும். அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

கல்பங்களின் விவரம் :

1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.

கடகம் ராமசாமி

மேற்குறியது மாலைமலர் பதிப்பு.
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
ஜெய் ஸ்ரீ ராம்,
அருமையோ அருமை, நிறைய புது விஷயம் தெரிந்து கொள்கிறேன் சகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top