Athai Petha Poonguyilae Wedding Teaser

swetha97

Writers Team
Tamil Novel Writer
#1
wedding-photography-da717-008.jpg 58315926.jpg tamil-wedding.jpg


"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்று ஐயர் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கு கூடியிருந்த அத்தனை நல்ல உள்ளங்களும் அர்ச்சதை தூவி ஆசிர்வதிக்க, "உன்னை என்னில் சரிபாதியா முழுமனசோட சம்மதிச்சு இனிமேல் உன்னோட சுக துக்கங்களில் பங்கெடுத்து உறுதுணையா நிற்பேன்னும், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பிரிய மட்டேன்னும் ,இவனை ஏன் கல்யாணம் பண்ணேன்னு உன் வாழ்க்கைல ஒரு நொடி கூட சிந்திக்க விடாத அளவு உன்ன பார்த்துப்பேன்னும் அந்த இறைவன் சாட்சியாவும் இங்க இருக்குற அத்தனை பேர் சாட்சியாவும் உனக்கு வாக்கு தரேன்" என்று குனிந்து ஸ்ரீயின் காதிற்கு அருகில் கூறியவன் நிமிர்ந்து அவள் கண்களோடு தன் கண்களை கலந்து தாலியை கட்டவா?? என அவள் சம்மதத்திற்காக காத்திருந்தான்.

அவன் பேசியதில் கண்கள் கலங்க கட்டுமாறு கண்களை மூடித் திறந்து சம்மதம் தெரிவித்தவளின் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் உருண்டு கன்னத்தில் வழிந்தோடியது. அதை துடைத்து விட்டவன் ,அழக்கூடாது என தலையை இடமும் வலமுமாக ஆட்டியவன் குனிந்து அந்த மங்கள நாணை அவள் சங்கு கழுத்தில் பூட்டினான்.நாத்தனார் முடிச்சு போட வந்த ஆதிராவை தடுத்து விட்டு மூன்று முச்சுகளையும் தானே இட்டு பின் அவள் பிறை நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு ஒரு சின்ன இதழொற்றலை பரிசாக அளித்தவன், தன் இத்தனை வருட காதலியை இன்று தன் மனைவியாக்கி கொண்டான்.(yayyyyyy!!!! கல்யாணம் முடிஞ்சிருச்சு)


இருவரின் முகத்திலும் அப்படி ஒரு பேரானந்தம். அனைவரின் ஆசியுடனும் தங்கள் காதல் கைகூடியதில் இருவரின் முகமும் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.சுற்றி இருந்த அனைத்து சொந்தங்கள் நண்பர்கள் என அனைவரும் கைதட்டி சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மெதுவாக எழுந்து அக்னியை மூன்று முறை சுத்தி வந்தவர்கள்..நாரயணசாமி ரெங்கநாயகி தம்பதியரிடம் சென்று ஆசி வாங்க அவர்கள் காலில் விழுந்தனர் ..அப்போது " எங்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா பாட்டி" என்று கேட்ட குரலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் திகைத்து சிலையாக நின்றனர்!!!!!!!!
 

Advertisement

New Profile Posts

Mallika mam ud irruka?
இதோ அடுத்த யூடி உங்களுக்காக.. Much love and God bless you all :-D
viji mam ud or any replay please
Hi friends... Enaiku night ud undu... Ipave kuduthu irupen... Aana parunga vairu konjam kathuthu... So dinner ready pannitu apadiye konjam vaithuku thalitu... Unga comments Ku reply pannitu update poduren chellams...
Inaiku Kani kuzhali Ada pora dance Ku nengalum Ada ready ah irunga dears...