Aparnaவின் அழகான வரிகளில் E01-E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
This was in FB. Aparna Sankar had posted it.
padichitu ennala apadiyae poga mudiyala... manasa thotta varaigal.
I enjoyed every line... ungallukum pidikkumnu, with her permission, I am sharing it here...

Enjoy Reading it :)

இவ்வளவு உணர்ச்சி குவியலாய் , அதில் உள்ளார்ந்து நான் படித்த கதைகள் வெகு சில.. அதில் சுதாவின் சுவடுகள் நிச்சயம் இருக்கும்.. முடிவு எப்படியோ? அந்த கெட்டிமேளத்தின் ஓசை யாருக்கோ? கண்ணனா? ஜீவனா தெரியாது.. ஆனால் வலிக்க வலிக்க சொன்னாலும் காதல் காதல் தானே.. முடிவை நெருங்கும் நேரத்தில் , இதோ உனக்காக சுதா, உனை தொடர்ந்த ஒருத்தியின் வாக்குமூலம் உன் சார்பில்..

சுதா:
--------

சுதந்திர காற்றை தேடி
சுயமாக முடிவெடுத்து..
சேரனை தவரித்து
சேர்ந்தேன் சென்னைபட்டினம்..
பாட்டியை காணும்
பாவை அவனையும் காணும் என்று தெரிந்திருந்தால்
பறந்திருப்பேனோ திசை மாறி?!!

பக்கத்து வீட்டு கண்ணனாம்
பாசுரங்கள் பாடி கொண்டாடினர்
பார்போம் ஒருமுறையென பதுமை நான்
புதைகுழியில் விழுந்தேன் ஆம் கண்டேன் அவனை..

யாரவன் அறியேன்..
உதயமானான் விரிந்த விழிகளுக்குள்..
லட்டு என விளித்தான்..
தோட்டகாரன் செதுக்கிவிட்டான் இதயத்தை புற்களுடன் சேர்த்து..

செண்பக மலருக்கு தூது சென்றதோ காற்று?
இதோ அவனுடன் அதனருகில்
காதல் உணர ரோஜா தான் வேண்டுமோ?
செண்பகமும் மணம் வீசியது எங்களுக்குள்

புயலுக்கு முன் அமைதி வாக்கியமல்ல
வாழ்வியல்..
அகப்பட்டேன் அசுரனிடம்
அதிர்ந்து நின்றான் என் தேவனுமே..
விலகினேன் விலக்கினேன்..
புயலாய் புலன் விசாரணை செய்தான்..
புதையலிடம் சரண் புகுந்தேன்
புதையலை காக்கும்‌ பூதம் பற்றி உணரவில்லை..

ஆடுபுலி ஆட்டமாய் ஆட வந்த விதி..
ஆட்டவிக்க தொடங்கியது..
ஆட்டமும் தொடங்கியது..

திரௌபதியென கண்ணா என கூவினேன் மானம் காக்க...
அருள் புரிந்தான் என் வாழ்வும் காத்து..
அகத்திணை அறிய ஆவல் கொண்டோம்..
அகமகிழ அன்று சுகித்திருந்தோம்..
வெட்கம் விற்று வேட்டை வாங்கி
ஆடை விற்று ஆலிங்கனமாகி
அர்தநாரியாய் அவதரித்தோம்..
கணங்களுக்குத்தான் கனத்தனவோ
கணநேரத்தில் நடக்க போகும் கனத்தினை தாங்க?!!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
அன்றிலே!!! அன்றே கேட்டான்..
உறைத்தேனா ?!! உறைந்தேன்..

அதோ என்னவன் குருதி சேற்றில்..
அய்யோ என் ஓலம் கேட்கவில்லையா?
கண்ணா கண்ணா கண்....ணா
கண்கள் தழுவ..
இதயத்திடம் வேண்டினேன்..
அவனுக்காக நான் உயிர்மெய் தழுவ...

விழிப்பு என்றும் புது பிறப்பு
எனக்கு மட்டும் ஏனோ தவிப்பு..
என்னவன் என்னுடன்
இறைவா என்னே உன் கருணை..
இறைவனின் எள்ளல் அறியவில்லை
இனியவனுக்கு என்னைத் தெரியவில்லை..

இதயத்துடிப்பு நின்றதா?
இல்லையே கண்ணிர் கரிகின்றதே..
யாரவள் என்னவனுடன்..
ஏன் இந்த தவிப்பு அவனுக்கு..

என்னை காண சகிக்கவில்லையாம்
கரைந்து போனானாம் பாட்டியின் கதை..
யாம் அறிவோம் காதலில் ஆழத்தை
மீண்டும் வானில் வெண்ணிலா..
கண்ணா...
நா...ன்
முடிக்கவில்லை முடிந்தது என் கதை..

வலியோடு சுழுலுகிறான்
புதியவளோ அவனுக்காக க
கதறுகிறாள்..
அப்போது நான்?? நான் யாரங்கே?
நான் யாரவனுக்கு??
ஊமையாய் கதறுகிறேன்
ஊமைக்கு மொழிபெயர்பாளர் உண்டா?

பழையதை கழிக்க வேண்டுமாம்
அவன் உயிர்வாழ...
கழிக்க போவது எங்கள் களிப்பை என‌‌ யார் சொல்வது?
பிரிந்தால் மட்டுமே பிழைப்பா?

போகிறேன் கண்ணா
நீ தந்த காதலுடன்..

போகிறேன் கண்ணா
உன் உயிர் வலி போக்க..

வலிக்கிறது, அழுகை தான் என் உறவானதோ..
தெரியுமா கண்ணா கர்ணனும் நானும் ஒன்றென?!!..

இந்த திருமண மேடை என்னை கொல்லும்‌ முன் ஆருவரால் உயிர் பிரிந்தேன்..

பரசுராமராய் தக்க நேரத்தில் உன் நினைவழித்து, உன்னால் நான் கற்ற காதலை பயன்படுத்தாமல் செய்த விதி.

பசுங்கன்றுக்காக சக்கரம் புதைய சாபமிட்ட முனிவர் போல் கண்முன்னே என் வாழ்க்கை புதையவதை உன் உடல் நிலை காரணம் சொல்லி கூறிய மருத்துவம்..

இந்திரன் பரித்த கவசம் போல அன்றே பரித்தாள் நான் விரும்பியதை பிருந்தா..கூறி இருக்க வேண்டுமோ? ஆஆ வீண் வேலை..

குந்தியாய் வந்தார் கூனியாய் வேடமிட்டு..
என் பாட்டி..
உன் உயிருக்கு விலையாய் என் விலகல் வரம் வேண்டி..

சல்லியனாய் எல்லோரும் பிரிந்தனர் எனக்காக பேச யாருமின்றி..

இறுதியில் !!!
கண்ணன் வந்தான்
கண்கள் கண்டான்..
காதல் கேட்டான்..
தந்துவிட்டேன் மொத்தமும் ..

உயிரற்ற சடமாக..
இதோ சவ ஊர்வலம் யாருமில்லா சவ ஊர்வலம்..

கண்ணின் ராதை நானே எனத் திரிந்தேன்..
கண்ணின் ராதை தான்,
கண்ணனின் ருக்மணியாக பாக்கியமில்லை..

பரவாயில்லை அனைவரும் அறிந்தது
ராதை-கண்ணன், கண்ணன்
-ராதை என்ற இணைபிரியா பந்தமன்றோ?

நீ வாழவே என் காதல் விதைக்கிறேன்..
நீ சிதறிய நினைவுகளை சேர்த்து..என்னுள் புதைக்கிறேன்..
நினைவே நீ திரும்பாதே, என்னவனுக்கு வலிக்கும்..
இதயமே நீ இயம்பாதே..இரவுமே அவனை எரிக்கும்...

காண்பேனா தெரியாது..
காணகாண தெகிட்டாது..
நன்றி கண்ணா உன் காதலுக்கு
நன்றி பனைமரமே அழகான நாட்களுக்கு..
சிதிறிது உன் லட்டு ...

பி.கு: பாட்டி ஒரு நாள் எனக்கு‌முன்னோ பின்னோ நீங்கள் வானவீதி வந்தால்..
நீங்கள் ஈன்றவள் உரைப்பாள்
நான் தூயவளென..
நான் கண்ணனின் காதலியென..
அடுத்த பிறப்பிலாவது தடைபோடாமல்
தலைவனை சேர தயை செய்வீரா?

இப்படிக்கு

சிதறிய நினைவுகளிலும் உன் பிம்பம் காணும்
சுதா...

Shoba Kumaran this is for your stupendous writing, especially for the third part...

By
Aparna Sankar @Itsmeappu
 
Nachu

Well-Known Member
Very lovely.
Nice wordings.
மீண்டும் ஒரு முறை சுதாக்காக கண்ணீர் வருகிறது.........
 
Minimini

Really superb Aparna
 
kayalmuthu

Well-Known Member
செம்ம செம்ம
இன்னும் nan ஸ்டோரி படிக்கல..
Fb ல கமெண்ட்மட்டும் பார்ப்பேன்..
Buthttps://www.facebook.com/aparnaganap அபர்ணா sis.. உங்கள் வரிகளை படிக்கும் போது சுதாவின் உணர்வுகள் என்னுள்ளே...
வேணாம் சுதாவின் கண்ணனை சுதவிடம் சேர்த்து விடுங்கள்...
மிக மிக கனமான பதிவு..
Miga அருமை..
 
Riy

Writers Team
Tamil Novel Writer
அப்பு உன் வரிகளை படிக்கும் போது சுதாவின் வலி உள்ளத்தில் எழுகிறது... உன் எழுத்தின் மூலம் அழகாய் வெளிப்பட்ட உள்ளத்து உணர்வுக்கு நன்றி..... அருமை.... அற்புதம் ..
 
Janavi

Well-Known Member
Dear Aparna sis....ரொம்பவே அழுத்தமாக உள்வாங்கி இருக்கிறீர்கள்.... உங்களை போல சுதா வை நினைத்து மனம் கனக்கும் ஒருத்தி தான் நானும்..... இதற்கு காரணம் நம் ஷோபா சிஸ் உணர்வுகரமான எழுதாழுமை தான்... Hats off shoba sis.....(y)(y)(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top