AMP - 17

Gayus

Writers Team
Tamil Novel Writer
#1
Hii.. Frds & siss... AMP 17 epi pottachu.. Padithuvittu comments kodukka marakkadhinga... Happy Reading:):):)


அத்தியாயம் - 17

சின்ன சின்ன கண்ணசைவில்...
உன் அடிமையாகவா...
செல்ல செல்ல முத்தங்களில்...
உன் உயிரை வாங்கவா...
மெல்ல மெல்ல உன் உயிரில்...
என் உயிரும் அசையுதே...
துள்ள துள்ள என் இதயம்...
நம் உயிரில் நிறையுதே...

ஆதியும் இளாவுயும்.. அடுத்த இரண்டு நாட்கள் சொந்தபந்தங்களின் வீட்டிற்கு போவதும் வருவதுமாக இருந்தனர்.. இன்று இருவரும் ஊருக்கு செல்கின்றனர்... இளாவின் வீட்டினர் ரோஹித் மற்றும் ரேஷ்மியின் திருமண விஷயமாக அங்கேயே தங்கிவிட்டனர்.. விஷ்வாவும், ஹரிஷும் கல்யாணம் முடிந்த அடுத்த நாளே வேலை காரணமாக கிளம்பிவிட்டனர்... குடும்பமே இரயில்வே ஸ்டேஷன் வரைவந்து ஆதியையும் இளாவையும் வழியனுப்பிவைத்தனர்...

தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்த இளா ஆதியை பார்க்க... "என்னாச்சி இவருக்கு ரெண்டு நாளாவே ஏதோ யோசனையாவே இருக்காரே.." என்று நினைத்தவள் அவனின் கையோடு தன் கையை சேர்த்து அவன் தோலில் சாய்ந்துக்கொண்டாள் "எதாவது ப்ராப்ளமா.. எதுவா இருந்தாலும் சீக்கிரம் சரியாயிடும்.." என்று சொல்ல.. அவள் கையில் முத்தம் ஒன்று வைத்தவன் "எனக்கு ப்ராபளம் வந்தா நான் பாத்துப்பேன்.. ஆனா உனக்கு எதாவது ஆச்சினா.. என்னால தாங்கமுடியாதுடி.. லாலீபாப்..." என்று மனதில் நினைத்துக்கொண்டே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்... காலை ஏழு மணியளவில் வீடு வந்து சேர்ந்தனர்.. கதவை திறக்கும் முன் பாட்டி, விஷ்வா, ஹரிஷ் மூவரும் அங்கே வர... பாட்டி இருவருக்கும் ஆரத்திசுற்ற... சந்தோஷமாக இருவரும் வீட்டினுள்ளே சென்றனர்...

இவர்கள் வருவதை பார்க்கிங் ஏரியாவில் இருந்து கண்டுவிட்ட தாஸ்.. சிரித்துக்கொண்டான்...

ஆதி விஷ்வாவிடம் "விஷ்வா... எதாவது இன்பர்மேஷன் கிடச்சுதா.." என்று கேட்க... "இல்லடா... இன்னும் ரெண்டு டெக்ஸ்டைல்ஸ்தான் இருக்கு.. அங்கேயும் செக் பன்னிட்டா தெரியும்..." என்று விஷ்வா சொல்ல... இளா காஃபியுடன் வந்தவள் எல்லோருக்கும் கொடுக்க... முதலில் விஷ்வா எடுத்து குடிக்க.. அவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது... "அண்ணா.. காஃபி எப்படி இருக்கு.. இப்போதான் ரெண்டு நாளா அம்மாட்ட திட்டுவாங்கி கத்துகிட்டேன்.." என்று இளா சொல்ல.. விஷ்வாவோ ஆதியின் முகத்தை பார்க்க.. "ஏண்டா.. என்ன பார்க்குற சொல்லு.. காஃபி.. எப்படியிருக்குன்னு..." என்று காஃபியில் அழுத்தம் கொடுத்து ஆதி சொல்ல... "சூப்பரா இருக்கு தங்கச்சி... எனக்கு முக்கியமான வேல இருக்கு.. நான் அப்பறமா வர்றேன்.." என்று சொல்ல.. ஹரிஷும் "எனக்கும் வேல இருக்கு.." என்று இருவரும் கிளம்ப... "இளா.. காஃபி ரொம்ப நல்லாருக்குடா.. என்பேத்திக்கூட இப்படி தான் போடுவா... உனக்கு ப்ரீடைம்ல க்ளாஸ் எடுக்கணும்.." என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியே சென்றனர்...

இளா "என்ன சொல்றாங்க இந்த பாட்டி... காஃபி நல்லாருக்குன்னு சொல்றாங்களா... இல்ல நல்லாலன்னு சொல்றாங்களா..." என்று யோசித்துக்கொண்டே கப்புகளை உள்ளே எடுத்துசென்றாள்.. ஆதி அவளின் செய்கையில் சிரித்துக்கெண்டான்.. காஃபியை சொட்டு மிச்சம் வைக்காமல் குடித்தவன்... சமயலறைக்கு செல்ல.. அங்கே தான் போட்ட காஃபியை "குடிக்கலாமா வேண்டாமா.." என்று ஒத்திகை பார்த்தவள் பிறகு ஒருவாய் குடிக்க.. அப்படியே வாஷ்பேஷனில் துப்பிவிட்டாள்... "அச்சோ... சக்கரை போட மறந்துட்டோமே... காஃபி தூள்வேற அதிகமா இருக்கு..." என்று தனக்கு தனே சொல்லிக்கொண்டவளை கண்டு வாய்விட்டு சிரித்த ஆதி... அவளை நோக்கி சென்றான்.. "ஏய் லாலீபாப்.. வீட்டுக்கு வந்தவங்களா காஃபி கொடுத்து ஓடவச்சிட்டியேடி.." என்று அவன் மீண்டும் சிரிக்க... "ம்கும்.." என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்... அவளை பின்னாடி நின்று அப்படியே அணைத்தவன் "ஏய்.. என்ன கோவமா.. காஃபி சூப்பரா இருந்துச்சிடி..." என்று அவள் கழுத்துவளைவில் முத்தம் வைக்க.. "பொய் சொல்லாதடா.." என்று அவளும் கிரக்கமாக சொல்ல.. அவளை அப்படியே திருப்பியவன் "ஒரே ஒரு லாலீபாப் சாப்பிடலாமா.." என்று அவள் இதழின் சுவையை களவாடினான்...

ஆதி குளித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்ப... "லாலீபாப்.. கொஞ்ச நாளைக்கு நீ ஹாஸ்பிட்டல் போகாத.. ஏன் எதுக்குன்னு கேட்காத.. நான் அப்புறமா சொல்றேன்..." என்றவன்.. அவள் இருகன்னங்களிலும் கைவைத்தவன் "பத்திரமா இரு.. போயிட்டு சீக்கிரமா வந்துடுவேன்.. பாட்டி வருவாங்க.. இரண்டு பேருக்கும் சாப்பாடு சொல்லிடறேன்..." என்று சொல்ல.. இளா "வேண்டாம்.. நானே சமைக்கிறேனே.." என்று சொன்னவளை கண்டு லேசாக சிரித்தவன்.. "ம்ம்ம்.. ஓகேடி லாலீபாப் பொண்டாட்டி..." என்று சொல்லிவிட்டு சென்றான்...

ஆதியும் விஷ்வாவும் தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.. தாஸை பற்றி விஷ்வாவிடம் ஆதி சொல்ல.. "ம்ம்ம்.. இளாவா கவனமா பாத்துக்கோடா.. கன்பார்மா அவன்தான் அக்யூஸ்ட்டான்னு நாளைக்கு தெருஞ்சிடும்.." என்று சொல்ல.. "எவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ முடிக்கிறோமோ அவ்வளவு நல்லதுடா..." என்று ஆதி இறுகிய குரலில் சொன்னான்... ராஜனிடம் விவரத்தை சொல்ல "குட்.. ஆதி அண்ட் விஷ்வா.. ஆனா இது ஜஸ்ட் சந்தேகம்தான்.. சப்போஸ் அவன் அக்யூஸ்ட்டா இல்லனா..." என்று கேட்க... "அப்போ பாத்துக்கலாம் சார்.." என்று ஆதியும் விஷ்வாவும் சொல்லிவிட்டு சென்றனர்...

பாட்டி தூங்கிவிட.. போரடித்தது இளாவுக்கு.. மாலை மணி நான்கு இருக்கும்... டெரஸ் செல்ல அங்கே யாரும் இல்லை.. அப்படியே சுற்றி பார்த்தவள்.. நடக்க யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்ற திரும்பியவள் அங்கே யாரும் இல்லை.. ஏனோ ஒருவித பயம் ஆக்கிரமிக்க கீழே சென்றவள்.. கதவை திறந்து உள்ளே வந்தவள் அதே வேகத்துடன் கதவை அடைத்தாள்... அறைக்கு சென்று ஆதிக்கு போன் செய்ய.. அட்டண்ட் செய்தவனிடம் "ஆது.. எப்ப வருவீங்க.." என்று கேட்க... "பைவ் மினிட்ஸ்சாகும்.." ஆதி என்று சொல்ல.. "ம்ம்ம்.. ஓகே.." என்று வைத்தவள் ப்ரெஷாக சென்றாள்... காலிங்பெல் அடிக்க வேகமாக கதவை திறந்தவள் அங்கே யாரும் இல்லாததை கண்டு குழப்பம் அடைந்தவள் வெளியே இரண்டு பக்கமும் எட்டி பார்த்தவள் "குழந்தைங்க யாராவது அடிச்சிருப்பாங்க.." என்று நினைத்துக்கொண்டே மீண்டும் கதவை அடைத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தவள் "இவருக்கு இதே வேலையாபோச்சு அஞ்சு நிமிஷத்துல வர்றேன்னு சொல்லிட்டு அரமணி நேரம் கழிச்சிதான் வர்றார்..." என்று புலம்பிக்கொண்டே அமர்ந்திருந்தாள்..

ஆனால் கதவை தட்டியவன் தாஸ்தான்... தட்டிவிட்டு ஒளிந்துகொண்டான்... டெரசில் அமர்ந்து அபின் அடித்துக்கொண்டிருந்தான்.. அப்போது யாரோ வரும் அரவம் கேட்க எழுந்து எட்டிபார்த்தவன் இளா என்றதும் மொத்த போதையும் இறங்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்... அவள் திரும்பி பார்க்கவும் ஒளிந்துகொண்டான்...

ஆதியும் விஷ்வாவும், அப்பார்ட்மெண்ட் லிப்ட் வொர்க் செய்யாததால் படியில் ஏறிவந்தவர்கள் கொஞ்சம் தள்ளாடியபடி கீழே இறங்கிவந்த தாஸை கண்ட ஆதி... முறைக்கவும் அவன் ஆதியை கண்டு சிரித்துக்கொண்டே "வணக்கம் சார்.. சூப்பர்.." என்று குழைந்த குரலில் சொல்லிவிட்டு செல்ல.. ஆதிக்கு பயம் வந்துவிட்டது வேகமாக சென்று காலிங்பெல்லை அடிக்க.. கதவு திறக்கவில்லை என்றதும்... விஷ்வா வேகமாக கதவை உடைக்கப்போக.. இளா கரக்டாக கதவை திறந்தாள்.. நல்லவேளை ஆதி விஷ்வாவை பிடித்துவிட்டான்... இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்...

"ஏய்... கதவதிறக்க இவ்வளவு நேரமா.." என்று ஆதி கோவமாக கேட்க... "ம்ம்ம்.. நீங்க மட்டும் என்னவாம்... அஞ்சு நிமிஷத்துல வர்றேன்னு சொல்லிட்டு அரமணி நேரம் கழிச்சிவர்றீங்க... அந்த மாதிரிதான் இதுவும்..." என்று வாயடித்தாள் இளா... கோவமாக ஆதி உள்ளே செல்ல.. விஷ்வாவிடம் "அண்ணா உள்ள வாங்க.. சாப்ட்டுப்போங்க.. உங்களுக்கும் சேர்த்துதான் சமைச்சிருக்கேன்..." என்று இளா கூப்பிட... கலவரத்தோடு "நான் போய் ப்ரெஷாகிட்டு வரேன்மா.." என்று சொல்லிவிட்டு சென்றான்...

ஆதியை சாப்பிடுவதற்கு அழைக்க உள்ளே சென்றவள்.. அங்க மேஜை மீது இருந்த லாலீபாப் சாக்லேட்டை எடுக்கப்போனவளின் கையை பிடித்து ஆதி தன் பக்கமாக திருப்பியவன் "என்னடி போலீஸ்காரனையே கலாய்க்கிறியா.. இரு உன்ன உள்ள தூக்கிப்போர்றேன்.." என்று சொன்னவனிடம்.. "அதான்.. ஆல்ரெடி உள்ளதான இருக்கேன்.." என்று இளா சொல்ல... "ம்ம்ம்.. இதெல்லாம் நல்லாபேசு... பசிக்குது சாப்டப்போலாமா.." என்று ஆதி கேட்க... "ம்ம்ம்.. போலாம் வாங்க.. விஷ்வா அண்ணனும் வரேன்னு சொன்னார்..." என்று இளா சொல்ல.. ஆதி சிரித்தவன் "காலையிலேயே காஃபி கொடுத்து அவன ஓடவச்சிட்ட.." என்று மீண்டும் சிரித்தான்... "ம்ம்ம்.. உங்கள... நான் மட்டும் சமைக்கல பாட்டி கூட இருந்து சொல்லிக்கொடுத்தாங்க..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்...

அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. விஷ்வா வீட்டிற்கு கிளம்பினான்... பாட்டியை ஹரிஷ் வந்தவுடன் அனுப்பிவைத்தனர்... இரவு தூங்கப்போகும் நேரத்தில் "என்னங்க சாப்பாடு எப்படி இருந்ததுன்னு சொல்லவேயில்ல..." என்று இளா கேட்க... "ம்ம்ம்.. பரவால.. ஆனா நீயா சமைக்கற வரைக்கும் என்னோட பதில் இதுதான்..." என்று ஆதி சொல்ல... "ம்ம்ம்... ஓகே சீக்கிரமா கத்துக்குவேன்..." என்று சொல்லிவிட்டு அவனை கட்டிக்கொண்டு தூங்கிவிட்டாள்.. அவளை மெதுவாக தலையணையில் படுக்கவைத்தவன்... எழுந்து பால்கனி சென்று விஷ்வாவுக்கு போன் செய்ய... அதற்காகவே காத்திருந்ததுப்போல் அட்டண்ட் செய்தான் விஷ்வா... "ஆதி டிடெக்டிவ் ஏஜென்சில இருந்து அருண்.. அவனோட மொத்த டீடெய்ல்ஸும் அனுப்பிட்டான்.. அவன் ஒரு ட்ரக்ஸ் சப்ளையர்... இதுக்கு முன்னாடி தற்கொலை நடந்த அப்பார்ட்மெண்ட்லயும் வேற வேற நேம்ல ப்ளாட் ரிஜிஸ்டர் பண்ணி தங்கியிருக்கான்.. இப்போ இங்க.. சோ கன்பார்மா இவன்தான் கொலைகாரனா இருக்கனும்..." என்று விஷ்வா சொல்ல... "ம்ம்ம்... ஆனா அவன்தான் கொலைகாரன்னு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் நமக்கு வேணும்... அதுவரைக்கும் பொறுமையா இருக்கலாம்.. சரிடா நீ தூங்கு.. குட்நைட்..." என்று இருவரும் தூங்க சென்றனர்... ஆம் ஆதிக்கு என்று அவன்மேல் சந்தேகம் வர ஆரம்பித்ததோ அன்றே அவன் நண்பன் அருணிடம் சொல்லி விசாரிக்க சொன்னான்...

காலை அழகாக விடிய, ஆனால் ஆதிக்கும் இளாவுக்கும் அது அழகாக விடியவில்லை என்பதே உண்மை...


- தொடரும்...
 

Advertisement

New Episodes