Akila Mugilan's Oru Kural Polae Nee Enakullae 6

Advertisement

n.palaniappan

Well-Known Member
"தெரியலை மிதுன், லைஃப் ல எதுவுமே இல்லாம வெறுத்து போய் தனியா நின்னப்போ அவங்க தான் கூடவே இருந்தாங்க ..இனிமேல் எதுவென்றாலும் அவங்க தான் முடிவு எடுக்கணும் "என்று சொல்லி விட்டாள் .

வந்ததும் இவள் அண்ணன் பயங்கரமாக கோபப் படுவான் என்று தெரியும் அதற்குள் இன்னொரு விஷயத்தை அனைவரிடமும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தாள்.

மாதங்கி மற்றும் ராகவன் அருகில் சென்று "என் அண்ணன் வேறு யாரும் இல்லை உங்கள் மகள் ரோஷ்னி யின் கணவன் தான்" என்று சொன்னதும் அவர்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி ...

அவர்களும் எத்தனை அதிர்ச்சி தான் தாங்குவார்கள் இரண்டு நாட்களுக்குள் .

இது அவங்களுக்கு தெரியுமா பாப்பா என்று சரண் தான் முதலில் கேட்டான் .

தெரியாது ..சொல்லியிருந்தா அண்ணா கண்டிப்பா அந்த கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாரு.என்னால ஒரு லவ் பிரியுறதுல எனக்கு விருப்பம் இல்லை அதான் சொல்லல.

அப்ப தான் அரு பேபி பிறந்து 3 மாதம் நான் டெலிவரி மட்டும் என் வீட்டுக்கு போயிட்டேன்.

அங்க ராதா அம்மா பார்த்துக்கிகிட்டாங்க.அதையே ரீசனாக வைத்து நான் எந்த சடங்குலையும் கலந்துக் கொள்ள வில்லை .

அதுக்கு அப்பறம் நான் ரோஷ்ணி ஐ ஒரு தடவை தான் மீட் பண்ணேன் அப்பறம் அவங்க ஆஸ்திரேலியா போய்ட்டாங்க என்று அனைத்தையும் கூறினாள்.

பேபி ஐ உறங்க வைத்து விட்டு வெளியே வந்த அர்ஜுன் யும் இவை அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தான் ..

மாதங்கி மற்றும் ராகவன் க்கு இன்னும் கவலை ஆகி போயிற்று ..அந்த வீட்டு பெண் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் ..

அந்த உண்மை தெரிந்தால் அவர்கள் பெண்ணுக்கு அங்கு என்ன நடக்குமோ என்று பயம் வந்து விட்டது .

விக்ரம் மற்றும் ரோஷ்னியின் திருமணம் காதல் திருமணம் என்பதால்..பெரிதாக மாப்பிள்ளையின் சொந்தங்கள் பற்றி விசாரிக்க வில்லை .குடும்பம் பிடித்ததால் எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டனர்..

"ஷ்ரத்தா விக்ரம் அம்மாவின் தங்கை மகள்"..இப்படி எல்லாம் அமையும் என்று அவர்கள் மட்டும் நினைத்தார்களா ?இன்னும் என்ன என்ன பிரச்சனை வருமோ என்று சோர்ந்து விட்டனர் .

அவர்களின் முகத்தில் இருந்து அவர்களின் பயத்தை படித்த ஷ்ரத்தா ..

"கவலைப்படாதீங்க... எங்க குடும்பத்துக்கு நம்பி வந்த பெண்ணை கஷ்டபடுத்துற புத்தி இல்லை" என்று சொல்லி விட்டு அர்ஜுன் ஐ நோக்கி அழுத்தமான பார்வை இட்டாள்.

வைஷ்ணவி தான் ஷ்ரத்தாவிடம்.."பாப்பா இப்படிலாம் பேசக்கூடாது யார் சொல்லி குடுத்தா உனக்கு இப்படிலாம் பேச எங்க வீட்டு பொண்ணு இப்படிலாம் பேச மாட்டாள்" என்று அதட்டினாள்.

"நான் தான் உங்க வீட்டு பொண்ணே இல்லையே "..என்று ஒரு மாதிரியான வெறுத்து போன குரலில் சொன்னாள்.

"இப்படிலாம் பேசக் கூடாது.. நாங்க அப்ப தப்பு பண்ணிட்டோம் எங்களை மன்னிச்சிடு" என்று சரண் கேட்டான்.

உங்களை மன்னிப்பு கேட்க வைக்கணும்னு எனக்கு இன்டென்ஷன் இல்லை .

எனக்கு உண்மையாவே ரொம்ப வெறுப்பாக இருக்கு வாழ்க்கையை நினைத்து ..

உங்க யாரையும் பார்க்க கூடாதுன்னு எல்லாத்தையும் விட்டுட்டு ஓடினேன் ..

இப்ப பாருங்க திரும்ப உங்க கிட்ட தான் வந்து நிக்குறேன்.

இங்க நிக்கிறான் பாருங்க என்று அர்ஜுன் ஐ கை காட்டி இவன் என்னை அவன் கையில் விளையாட கொடுத்த பொம்மை மாதிரி யூஸ் பண்ணிட்டான் .

இவனால என் ஆசை, கனவு ,இலட்சியம் எல்லாம் போயிடுச்சி.

ஆனால் என்னால இவனை ஒன்னும் பண்ண முடியலை . .இதுக்கு மேலயும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டு கையை முகத்தில் புதைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்.

மாதங்கி தான் அருகில் சென்று "எங்களை மன்னித்து விடு மா..என் பையன் செய்தது தப்பு தான் அதுக்கு எந்த விளக்கமும் கொடுக்க முடியாது.ஆன நீயும் பேபி யும் எங்களுக்கு வேண்டும் எங்க கூட வந்துவிடு .உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன் ..அப்பறம் இன்னொரு தடவை எங்களால் அருந்ததியை பிரிய முடியாது" என்று கூறினார்.

"இப்போ கூட நீங்க அருந்ததி க்காக தான் என்னை வீட்டுக்கு கூப்பிடுறிங்க "என்று ஒரு வருத்தத்துடன் புன்னகைத்தாள் .

இனிமேல் நான் எங்க இருக்கணும்னு வரவங்க தான் முடிவு பண்ணனும் என்று சொல்லி விட்டு அமைதி ஆகி விட்டாள்.

இப்பொழுது யார் என்ன பேசினாலும் சரி வராது என்று அமைதியாக இருந்தனர் .

அடிக்கடி ரூமிற்குள் சென்று பேபி ஐ பார்த்து விட்டு வந்தனர்.

சிறிது நேரத்தில் பெரியம்மா ,பெரியப்பா அண்ணன் கூடவே ரோஷினி யும்.
..வந்தவன் நேராக வந்து ஷ்ரத்தா வின் கன்னத்தில் ஒரு அறை விட்டான் .


சரணும்,கார்த்திக்கும் தடுக்க வந்தனர் .."பிளீஸ் விக்ரம் பொறுமையாக கேளு" என்றனர்.

ஆனால் அவனின் ஆத்திரம் அடங்கவில்லை ..இன்னொரு கன்னத்திலும் அறை விட்டான்..அதிர்ச்சியில் இருந்த பெரியம்மா தான் வந்து அவளை அணைவாக பிடித்து கொண்டார் .அப்பொழுதும் அவன் முகத்தில் கோவம் குறையவே இல்லை.

ரோஷ்ணி நேராக சென்று அவள் அம்மா பக்கத்தில் நின்று கொண்டாள் .அதை பார்த்து விக்ரம் ஒரு முறை முறைத்தான் .
உடனே நகர்ந்து நின்று கொண்டாள் .


ராகவன் தான் ஒரு பிள்ளையின் வாழ்க்கை பிரச்சனை இப்பொழுது இரண்டு பிள்ளை பிரச்சனையாக மாறி விட்டதே என்று சோர்ந்து விட்டார் .

அர்ஜுன் க்கும் விக்ரம் க்கும் நல்ல பழக்கம் உண்டு ஆனால் இப்பொழுது அர்ஜுன் முகத்தை கூட பார்க்க வில்லை .

ஷ்ரத்தா பெரியம்மாவின் மேல் சாய்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள் .

விக்ரமை சமாதானம் செய்ய மற்ற இரண்டு அண்ணங்களும் வந்தனர் .

விக்ரம் என்று கூப்பிட்டதும்ம் எங்கு இருந்து தான் அவனுக்கு அப்படி ஒரு கோவம் வந்ததோ ..

"நீங்க இரண்டு பேரும் தயவு செய்து பேசாதீங்க ...உங்களை நம்பி தான் அவளை சென்னைக்கு அனுப்பினோம் ஆனா அவ திரும்ப எப்படி வந்தா தெரியுமா?"

சித்தி இறந்த பொழுதே அவளை நாங்க கூப்பிட்டு போறோம்னு தான் கேட்டோம்... ஆனா உங்களுக்கு தான் அதிக உரிமை இருக்குன்னு உங்க கூட அனுப்பி விட்டோம் ..

நீங்களாம் இப்போ தான் பணக்காரவங்க ஆனா நானும் அவளும் அப்படி கிடையாது ..எங்க கிட்ட எல்லாம் இருந்தும் உங்க கிட்ட ஏன் அனுப்பினோம்? அவளோட அப்பா கிட்ட இருந்து அவளை பிரிக்க கூடாதுன்னு நினைத்தோம் .

அப்படி அவ எதாவது தப்பே செய்து இருந்தாலும் நீங்க அவ கூட நின்று இருக்க வேண்டும் ஏன் நிற்கலை?

ஏனென்றால் அவள் உங்க அம்மா வயிற்றில் பிறந்த மகள் இல்லை அதானே என்று கோவமாக கத்தி விட்டான் .


"அண்ணா பிளீஸ்.. என் மேல தான் தப்பு, அவங்களை எதுவும் சொல்லாத அவங்க என்னை ரொம்ப பாசமாக தான் பார்த்து கொண்டார்கள் நான் தான் தப்பு பண்ணிட்டேன்" என்று விக்ரமிடம் கூறினாள்.

பெரியப்பா தான் விக்ரமை சமாதானம் படுத்தினார் ..

நடந்து முடிந்த விஷயத்தை விட்ரு விக்ரம் அடுத்து என்னனு பார்ப்போம் என்று சொல்லி விட்டு குழந்தையை பார்க்க சென்றனர் .

விக்ரம் வந்து ஷ்ரத்தா வையும் அழைத்து கொண்டு குழந்தையை பார்க்க சென்றான் ..

உள்ளே சென்று குழந்தையை பார்த்து விட்டு வெளியே வந்ததும் .. நீ போய் உன் தங்கச்சியை பாரு என்று ரோஷ்ணியை அனுப்பி விட்டான் .

ராகவனின் சோர்ந்த முகத்தை பார்த்து "பயப்படாதீங்க மாமா உங்க பொண்ணை நாங்க எப்பொழுதும் ஒரே மாதிரி தான் பார்த்துப்போம்" என்றான்.

பெரியம்மா ,பெரியப்பா இருவருக்கும் இவளை அர்ஜுன் வீட்டிற்கு அனுப்ப தான் ஆசை .

என்ன தான் பணம் ,சொத்து இருந்தாலும் எல்லா அம்மாக்கும் அவர்களின் மகள் புகுந்த வீட்டில் இருந்தால் தான் நிம்மதி அதே கவலை தான் இவர்களுக்கும் ..

விக்ரம் ஏதோ யோசித்து கொண்டே இருந்தான் .."ஷ்ரத்தா விடம் ஈவ்னிங் டிஸ்சார்ஜ் எங்க போறதா இருக்க" என்று கேட்டான்..அர்ஜுன் ஆவலாக இவள் முகத்தை பார்த்தான் ..

"தெரியலை அண்ணா நீ தான் சொல்லணும்" என்று முடித்து விட்டாள்.

அதற்குள் குழந்தை முழித்து விட்டது என்று நர்ஸ் வந்து சொன்னதும் அனைவரும் உள்ளே சென்றனர் ...பாட்டி ,தாத்தா ,மாமா எல்லோரையும் பார்த்ததும் அதற்கு இன்னும் குஷி ..ஆனால் எல்லாரையும் பார்த்து விட்டு கடைசியாக "பப்பா எங்க காதும்? "என்றது..

அர்ஜுன் வெளியே தான் நின்று கொண்டு இருந்தான்..என்னவோ மனதுக்குள் மிகவும் தோற்று போன உணர்வு வந்தது ..அவன் ஒருவனின் தவறால் எல்லாரும் கஷ்டபடுவதை பார்த்து மிகவும் கீழாக உணர்ந்தான் .

குழந்தை அப்படி கேட்டதும் ஷ்ரத்தா வெளியே வந்து விட்டாள்..

அவள் அழுது கொண்டே வெளியே வருவதில் அவளை திரும்பி பார்த்த அர்ஜுன் என்னவோ என்று அவளின் அருகில் செல்ல போகும் பொழுது வைஷ்ணவி வெளியே வந்து "நீ உள்ளே போ அர்ஜுன்" என்று சொல்லி விட்டு ஷ்ரத்தா அருகில் சென்றாள்.

அர்ஜுன் உள்ளே செல்லாமல் இவளையே பார்த்தான் அதில் கோவம் வந்து "அவனை உள்ளே போக சொல்லுங்க ..நான் அவளை இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்தேன் அவ கண் முழிச்சதும் இவனை கேட்குறா" என்று கத்தினாள் ..

அதற்கு பிறகு தான் காரணம் புரிந்து அர்ஜுன் உள்ளே சென்றான் ஆனால் மனதிற்கு ஒரு தெம்பு வந்தது ..

உள்ளே சென்றால் குழந்தை விக்ரம் மடியினில் அமர்ந்து இருந்தது ..இவன் சென்றதும் இவனிடம் கொடுத்து விட்டு விக்ரமும் வெளியே வந்தான் ..

அவன் வந்ததும் ஒவ்வொருவராக அனைவரும் வந்தனர் ..

வெளியே வந்தவன் ஷ்ரத்தா அருகில் அமர்ந்து நீ அர்ஜுன் வீட்டிற்கு போ இனிமேல் நீ அங்க தான் இருக்கணும் என்றான்.

கேட்டிருந்த எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி ..

ஆனால் விக்ரம் அதை சந்தோசமாக சொல்ல வில்லை என்று அவனின் முகம் சொன்னது .

"குழந்தை க்கு அப்பாவை காட்டிட்ட இனிமேல் அவங்களை பிரிக்க வேணாம் நீ அங்கேயே போ "என்று சொன்னான் ..

ஷ்ரத்தா எதுவுமே பதில் பேச வில்லை ..அவளும் குழந்தைக்காக அந்த முடிவை தான் எடுத்து இருந்தாள்.

விக்ரம் எழுந்து சரண் மற்றும் கார்த்திக் அருகில் சென்று மன்னிப்பு கேட்டு விட்டு "நான் அர்ஜுன் வீட்டில் விட்டாலும் உங்களை தான் நம்பி விடுறேன்' என்றான் ..

என்னவோ அவர்களை மரியாதை இல்லாமல் பேசி விட்டதாக ஒரு உணர்வு அதை சரி செய்தான் .

'ஒரு தடவை தப்பு நடந்து விட்டது நம்புங்க இனிமேல் அப்படி நடக்காது" என்று வாக்கு கொடுத்தனர்.

யாரிடமும் எதுவும் பேச தோனாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.அதற்குள் ரோஷ்ணி வந்து விட்டாள் அவளும் வந்து விக்ரம் அருகில் அமர்ந்து விட்டாள் ..

விக்ரமின் அம்மாவும் அப்பாவும் ராகவன் மற்றும் மாதாங்கியிடம் பேசி கொண்டு இருந்தனர். அவர்கள் தான் சம்மந்தி ஆயிற்றே பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது அவர்களுக்கு ..

மிதுன் அங்கு இருப்பது அப்பொழுது தான் நியாபாகம் வந்து விக்ரம் , ரோஷ்ணி இருவரும் அவனிடம் பேசி கொண்டு இருந்தனர் .

மாலை டிஸ்சார்ஜ் செய்யும் நேரம் வந்ததும் "ஷ்ரத்தா விக்ரமிடம் நான் கொச்சின் க்கே வரேன் இங்க எனக்கு பயமா இருக்கு" என்று அழ ஆரம்பித்து விட்டாள் ..

பெரியப்பா தான் வெகுவாக சமாதானம் செய்தார்.

அவர்களும் இரண்டு நாள் அர்ஜுன் வீட்டில் தான் தங்க போகின்றனர் அதை சொல்லி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார் .

மிதுன் ஹாஸ்டல் கிளம்புவதற்கு இவர்களிடம் சொல்லி விட்டு செல்ல வந்தான் ..

ஷ்ரத்தா நிறைய பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தாள்.கூடவே இனிமேல் எல்லா விடுமுறைக்கு இங்கு வந்து விடு என்று சொல்லி அனுப்பினாள்.

அனைவரும் வீட்டிற்கு ஒவ்வொருவராக கிளம்பி சென்றனர் .

ரோஹிணி க்கும் நார்மல் டெலிவரி என்பதால் இன்றே டிஸ்சார்ஜ் செய்தனர்.

ராகவன் காரில் மாதங்கி மற்றும் விக்ரம் குடும்பUOTE]
பாவம்ல்ல ஷ்ரத்தா
எல்லா அம்மாவுமே இதை face பண்ணிருப்பாங்க.
இந்த சமயத்தில் என் வணக்கம் எல்லா அம்மைகளுக்கும்
 

priya raghavan

Well-Known Member
So...mithungaradhu yaaru..avanum Periamma, Periappanu solran..vikramoda brother illaiya..Vikram Amma side cousin brother...saranum, karthikum shraddhakku own brothersa...illa step brothersa...Arjun rendu sistersum shraddhavoda rendu brothersa kalyanam panniirukkukanga...varu, varshavandu common friends..okay..konjam confusinga irundhadhu relationship puriya..
 

Akila Mugilan

Writers Team
Tamil Novel Writer
So...mithungaradhu yaaru..avanum Periamma, Periappanu solran..vikramoda brother illaiya..Vikram Amma side cousin brother...saranum, karthikum shraddhakku own brothersa...illa step brothersa...Arjun rendu sistersum shraddhavoda rendu brothersa kalyanam panniirukkukanga...varu, varshavandu common friends..okay..konjam confusinga irundhadhu relationship puriya..
Yes ...your understanding is correct .yella characterum important adhan konjam confused ah irundhurukum..next time innum clear ah yezhudha try panren..thanks for your comments:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top