Vidya Venkatesh
Well-Known Member
ஓம் சாய்ராம்.
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,
ஆமாம்! மறுபடியும் நானே
கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக இத்தளத்தில் கதைகள் எழுதி வருகிறேன் என்றாலும், மூன்று முழு நாவல்களும், ஒரு சில சிறுகதைகள் மட்டுமே பதிவிட்டிருக்கிறேன். நான் மெதுவாக எழுதும் காரணத்தால், உங்களில் பலருக்கு என் கதைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.
அதனால் தான் இப்பதிவு. என் மூன்று கதைகளின் லிங்க் மற்றும் கதைகளின் சாராம்சத்தையும் இங்கு பகிர்கிறேன்.
இத்தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்து, சலைக்காமல் என் சந்தேகங்களை உடனுக்கு உடன் தீர்த்துவைத்து ஒவ்வொரு படியிலும் தட்டிக்கொடுத்து என்னை எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகம் செய்துவைத்த திருமதி.மல்லிகா மணிவண்ணன் @mallika அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
புதுமுகம் என்று பாராமல், நான் மெதுவாகப் பதிவிடுவதையும் பொருட்படுத்தாமல் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த வாசக தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
1. கோதையின் பிரேமை (சமீபத்தில் நிறைவடைந்த நாவல்) :
கண் கண்ட காதலன் கைகோர்த்து கண்ணூஞ்சல் ஆடும் நாளிற்காகக் காத்திருக்கும் கதாநாயகி “கோதை”.
முதல் பார்வையிலேயே நெஞ்சம் நிறைந்தவளை சரிபாதியாக்கிக் கொள்ள தவம் கிடக்கும் கதாநாயகன் “பிரேம்”.
கனவுகள் கோடி நெஞ்சில் சுமந்து காத்திருக்க, தான் பணிபுரிந்து வரும் காப்பகத்தில் வளரும் ஒரு குழந்தையின் செயலில் தன் இல்லற ஆசைகளைப் புறம்தள்ள துணிகிறாள் கோதை.
சுகமும் துக்கமும் உன்னோடு மட்டும்தான் என்று அவளை விட்டு விலக மறுக்கும் பிரேம்.
பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வரை புரிதலோடு பிரிந்திருக்க தீர்மானிக்கும் இந்த அன்யோன்யமான தம்பதிகள் தங்கள் தவத்தில் வெற்றி கண்டார்களா இல்லையா என்பதே கதையின் நகர்வு.
2. பாசமென்னும் பள்ளத்தாக்கில்:
ஆன்ட்டி ஹீரோ போட்டிக்காக எழுதிய கதை.எழுத்தாளர் திருமதி. சஷி முரளி அவர்களின் பாராட்டுகள் பெற்ற கதை. இத்தளத்தில் ரீரன் செய்தேன்.
மன இறுக்கம் கொண்ட இரண்டு வயது பெண் குழந்தையை தனி ஆளாக, தாயுமானவனாக வளர்க்கும் ஒரு ஆண்மகன் பற்றிய கதை. அக்குழந்தை மேல் அதீத பாசம் கொண்ட காரணத்தினாலேயே அவன் உலகத்தின் பார்வையில் ஆன்ட்டி ஹீரோ ஆகிறான்.
அவன் உள்ளத்து ரகசியங்கள் கண்டறிந்து, அவன் மேல் தீரா காதல் கொண்ட காரணத்தினாலேயே கதாநாயகி ஆன்ட்டி ஹீரோயின் ஆகிறாள்.
3. அன்பின் ஆழம்:
இதுதான் என் முதல் கதை.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கனவுகளுக்கும் கடமைகளுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் ஒரு எழுத்தாளரின் கதை.
அவன் கனவுகளை நனவாக்க உறுதுணையாய் நிற்கும் நண்பர்கள் பற்றிய கதை.
Special thanks to Mallika Mam for giving me lot of information about the difficulties faced by authors in the late 1990s.
இதைத் தவிர “நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்” என்ற ஒரு போட்டிக் கதை எழுதிருக்கிறேன். அது புத்தகமாக வெளிவந்த காரணத்தினால் இணைய தளத்தில் இல்லை.
நேர்மறையான கதைகள் எழுத வேண்டும் என்பது என் எண்ணம். என் அனைத்து கதைகளுமே நற்சிந்தனைகள் நிரம்பிய 100% குட் ஃபீல் குடும்ப கதைகள்.
கதைக்கு ஏற்றார்ப்போல், ஆங்காங்கே சமூக தகவல்களையும் இணைத்துள்ளேன். அனைத்து கதைகளிலும் குடும்ப உறவுகளுக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் தந்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் கதையின் நிறைகுறைகளைப் பகிருங்கள்.
உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே என் எழுத்துப் பயணம் மேம்பட பேருவகையாக இருக்கும் என்பதை மறவாதீர்கள் தோழமைகளே!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

Attachments
Last edited by a moderator: