Aathiraiyan 28 c

#1
அங்கே யாழி தேசத்து கப்பல் மாலுமிகள் கடலில் மிதந்து கொண்டிருந்தார்கள் பிணமாக, அதை பார்த்து ஒரு கணம் திகைத்த கப்பல் தலைவன் "உனக்கு .....என்ன வேண்டும் ,இது ஒன்றும் வணிக கப்பல் இல்லை " என்று முயன்று தனது குரலில் கடுமையை வரவழைத்து கொண்டு அவன் கூற, இடும்பன் அதை கேட்டு பேய் நகைப்பதை போல நகைத்தான் .

இடும்பன் " ஆச்சரியம் கொண்டேன்! என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாய் " என்று தனது குரலில் மிகுந்த ஆச்சரியத்தை தேக்கி அவன் கூற, அந்த கப்பல் தலைவன்," சிறை பிடியுங்கள் அவனை " என்று கடுமையாக கட்டளையிட்டான்.
தீடிரென்று இடும்பன் வந்ததும் அங்கிருப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, இடும்பன் எவ்வாறு வந்திருப்பான் என்று யோசித்து பார்த்தவர்களுக்கு ஏதும் புரிவது போல இல்லை ,அந்த சமையத்தில் தான் கப்பல் தலைவன் கட்டளையிட்டான்.
வீரர்கள் அனைவரும் இடும்பனை நேரடியாக எதிர்கொள்ள தங்களது வாளை வீசிக்கொண்டு சென்றார்கள். ஒரு கணம் தான் அந்த கப்பலில் நுழைந்ததை எண்ணி பார்த்தான் இடுமபன்.
கற்களின் சாரல் அந்த கப்பலின் மீது வீசிய கணம் , நீண்ட கொக்கிகளும், கயிறுகளும் அந்த கப்பலின் மீது வீச பட்டது. அதை வீசியது இடும்பன் என்பது கூறாமல் தெரிந்து விடும் அல்லவா?. அந்த கணத்தில் தான் இடும்பனும் சிம்ம படை வீரர்களும் யாழி தேசத்து கப்பலுக்குள் நுழைந்தார்கள்.
ரகசியமாக நுழைந்தவர்கள் முதலில் அங்கிருந்த மாலுமிகளை கொன்று கடலில் வீசினார்கள், அன்று இடும்பன் மீண்டும் பழைய இடும்பனை போல உணர்ந்தான் இருந்தும், மாலுமிகளை கொள்ள அவனுக்கு தயக்கமாக இருந்தது , ஆனால் விஜயன் பார்த்த நம்பிக்கை பார்வை , அது அவனுக்கு செய்யும் துரோகம் அல்லவா என்று எண்ணிப்பார்க்க , 'அரசர்கள் சண்டையிடுவதால் பாதிக்க படுவது சாமானியனே ' என்று நினைத்து கொண்டான்.
அந்த கப்பல் தலைவன் கட்டளையிட அங்கே பெரிய யுத்தம் மூண்டது, பேரிகை முழக்கங்கள் போல வாட்களும், வேல்களும் சப்திக்க அங்கே இடும்பனே முன்னிலை வகித்தான் , எதிர்பாராமல் நடந்த தாக்குதலில் யாழி தேசத்துவீரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
சிம்ம தேசத்து வீரர்கள் ஆதிரையானால் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்க பட்ட சிறந்த வீரர்கள் அவர்களின் வாள் வீச்சிற்கு யாழி தேசத்து வீரர்கள் சற்று தடுமாறித்தான் போனார்கள்.
இடும்பன் தனது வாளை சுழற்றி கொண்டே அந்த கப்பல் தலைவன் அருகில் வர அவனும் இடும்பனை நெருங்கினான், இடும்பன் "உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது " என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவன் கூற ,தனது வாளை சுழற்றிக்கொண்டே வந்த கப்பல் தலைவன் "புரியவில்லை '' என்று கூறி தனது வாள் சுழற்சியை தொடர்ந்தான்.
இடும்பன் "இத்தனை வருடங்களில் நீ மட்டும் தான் என்னை நினைவில் வைத்திருக்கிறாய் எனவே உன்னை கொல்லும் துர்பாக்கிய நிலையை எனக்கு அளித்துவிடாதே !!!" என்று கூற அந்த கொடூர குரலில் கப்பல் தலைவன் சிறிது ஆடித்தான் போனான்.
தலைவன் "முடியாது என்று கூறினால் " என்று தனது வாளை சுழற்றி கொண்டே அவன் வினவ ,இடும்பனின் வாள் வேகம் பெற்றது , 'சிறை வாசம் அனுபவித்துவிட்டு இத்தனை துரிதமாக ஒருவனால் வாள் சுழற்ற முடியுமா ?' என்ற கேள்விக்கு 'முடியும் ' என்பது போல இருந்தது அவனது தாக்குதல்.
இடது பக்கம் இடும்பன் வாளை சுழற்ற வலது பக்கத்தில் அதனை தடுத்து நிறுத்தினான்,பிறகு அவன் தனது வாளை சுழற்ற இடும்பன் அதனை ஒரே அடியாக அடிக்க வாள் வானை நோக்கி சென்றது .
கப்பல் தலைவன் அப்படியே நிற்க இடும்பன் தனது வாளை அவன் கழுத்திற்கு அருகில் வைத்து "போரை நிறுத்து " என்று மட்டும் தான் கூறினான், போர் அப்படியே நின்றது அனைவரின் பார்வையும் கப்பல் தலைவன் தனது தோல்வியை ஏற்க முடியாமல் நிலத்தை நோக்கி கொண்டிருக்க அங்கே இடும்பன் வாகை சூடினான், வெகுநாட்களுக்கு பிறகு.
கோட்டை மதிலை உடைத்து பின்பு அந்த கோட்டையை தன் வசப்படுத்திய விஜயனின் படை கோட்டையை தாண்டி காட்டிற்குள் சென்றது ,அங்கே ஒரு குறிப்பிட பட்ட இடம் வந்ததும் விஜயன் தனது நடையை நிறுத்தினான், அவன் நிறுத்தியதை பார்த்த வளவன் அவனை கேள்வியாக பார்க்க விஜயன் "நான் கேள்வியுற்றவரையில் இங்கே தான் அந்த புதைமணல் பொறியும் செல்வசுரங்கமும் இருக்க வேண்டும் " என்று கூறி நிறுத்த வளவன் அவன் கூறியதை புரிந்து கொண்டான் .
அந்த கைதான வீரர்களை பிடித்து வளவன் "அந்த சுரங்கத்திற்கு எப்படி செல்ல வேண்டும் " என்று கடுமையாக வினவ அவன் "எங்களுக்கு தெரியாது .....அது அரசரும் ..அமைச்சரும் மட்டுமே அறிந்த மர்மனான ஒன்று ....நானல்ல யாழி தேசத்தில் எவருக்குமே அந்த விடயம் தெரியாது " என்று தடுமாறி அவன் கூறி முடிக்க வளவனுக்கு அவன் கூறியது உண்மையாகவே தோன்றியது எனவே மேலும் அவனை விசாரிக்காமல் வளவன் யோசனைக்கு சென்றான்.
வளவன் "விஜயா இங்கே நிச்சயமாக வழி இல்லை நாம் வேறு எங்கோ தேடவேண்டும் " என்று கூற விஜயன் வளவனை கேள்வியாக பார்த்தான் விஜயன் .
வளவன் தொடர்ந்தான் " நான் உறுதியாக கூறுகிறேன் சுரங்கம் இவ்வழியில் இல்லை '' என்று கூற விஜயன் "எவ்வாறு கூறுகிறாய் வளவா ?" என்று குழப்பம் நீங்காமல் வினவ.
வளவன் "உள்ளே செல்வதற்கு வழி இருந்தால் அல்லவா மீண்டும் அவர்கள் திரும்ப முடியும் " என்று கூறி நிறுத்த விஜயனுக்கு ஏதோ புரிவதை போல இருந்தாலும் வளவனிடம் விஜயன் "அப்படியென்றால் இங்கே சுரங்கத்திற்க்கான வழி இல்லை என்று கூறுகிறாயா ?" என்று வினவ வளவன் ஆமாம் என்பது போல தனது தலையை ஆட்டினான் விஜயனுக்கு தலையே சுற்றுவதை போல இருந்தது அனைத்து வழிகளும் முடியாது போல உணர்ந்தான் , ஆதிரையனுக்கு கொடுத்த வாக்கு என்ன ஆவது இதையெல்லாம் நினைத்து குழம்பினான்.
வளவனுக்கு அவனது நிலை புரிந்தது எனவே அவனது தோளை ஆதரவாக பற்றினான், நேரம் மதியம் முதல் நாழிகையை தொட்டிருக்க அவர்களுக்கு வழி புலப்படவில்லை , அப்போது தான் வளவன் கண்களுக்கு அது தென்பட்டது , அது புலிகள் கால் தடையம் அது ஒரு திசையை நோக்கி சென்றது வளவன் மதியில் மணியடித்தது 'அப்படியென்றால் தனது இரையை தேடி ஒரு வேங்கை இவ்வழியே சென்றிருக்கிறது, நிச்சயம் யானை பாதை இங்கே தான் இருக்கவேண்டும் ,அதன் ஒரு பகுதியில் தான் சுரங்கத்திற்கான நுழைவுவாயில் இருக்கவேண்டும் ' என்று மனதில் எண்ணினான் அதனை வார்தைகளாக அவன் கூறவும் செய்தான்.
வளவன் "விஜயா !!,வழியை கண்டறிந்துவிட்டேன் " என்று ஆட்பறித்தான் வளவன் விஜயன் அவன் அருகே வந்து "என்ன வழி ....எவ்வாறு கண்டறிந்தாய் " என்று வினவினான்.
வளவன் "கூறுகிறேன் ...."என்று அருகில் இருந்த நிலத்தை காட்டினான் ,முதலில் விஜயன் கவனிக்கவில்லை மெதுவாக அந்த தடத்தை அவன் கவனிக்க விஜயனுக்கு அனைத்தும் விளங்கியது 'ஏன் சமர் தீவு வைரத்தை எடுக்க வந்த அனைத்து அரசர்களும் அழிந்தார்கள் என்று ,ஏன் எவராலும் ருத்ர பைரவ லிங்கத்தை எடுக்க முடியவில்லை என்று ' யாழி தேசத்து முன்னோர்களை அந்த கணத்தில் அவன் மெச்சினான் .
காவலையும் படையையும் ஒரு திசையில் போட்டுவிட்டு அங்கு புதை மணல் பொறியை செய்து அவர்களை வீழ்த்த ,வேறொரு திசையில் லிங்கத்தை வைத்து இருந்தார்கள்.
விஜயன் "அப்படி என்றால் யானைகள் செல்லும் பாதை இங்கே இந்த திசையில் இருக்கிறது ,நாம் செல்ல வேண்டிய திசையும் அதுதான் அல்லவா .....ஏனென்றால் சுற்றி இருக்கும் மற்ற இடங்களில் புதை மணல் இருக்கிறது ........அருமை வளவா " என்று பாராட்டி வளவனை ஒரு முறை அணைத்து விடுவித்தான்.
படை வளவன் காட்டிய திசையில் நகர துவங்கியது, அடிமைப்பட்டிருக்கும் வீரர்களும், காயம் பட்டிருக்கும் சிம்ம வீரர்களும் துவண்டு போனார்கள் எனவே விஜயன் ,"நீங்கள் அனைவரும் களைப்பாக இருப்பது போல தெரிகிறது எனவே நாம் சென்று எடுத்துவரலாம் என்று எண்ணுகிறேன் வளவா " என்று வளவனை பார்க்க வளவனுக்கு அதுவே சரி என்று பட்டது எனவே வேறொரு தலைமை வீரனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வளவனும் விஜயனும் சென்றார்கள் ,விஜயன் இவ்வாறு செய்ய வேறு காரணமும் இருந்தது அது தான் லிங்கம் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளும் எண்ணம் எனவே அவ்வாறு செய்துவிட்டு சென்றான் .
வளவனும் விஜயனும் வனத்தில் யானை பாதையை பின்பற்றி செல்ல அது ஒரு நதிக்கு வழி வகுத்தது ,சிறிய நதிதான்இயற்கையில் உருவாகியதை போன்று தோற்றமளித்தாலும் அது மனிதனால் செயற்கையாகை உருவாக்கப்பட்டது விஜயன் இப்போது சற்று குழம்பினான் "இந்த நதி உண்மையில் நதி தானா இல்லை யாழி தேசத்தார் உருவாக்கிவைத்த மாயநதியா ?" என்று குழப்பமாக அவன் யோசிக்க வளவன் அந்த நதி பாய்ந்து ஓடும் திசையை நோக்கி நடந்தான்.
விஜயன் ஒன்றும் பேசாமல் வளவனை பின் தொடர வளவன் ஒரு இடத்தில நின்று அங்கே தரையில் கைவைத்து எதையோ உணர முயற்சித்தான், விஜயன் அவன் செய்வதை அமைதியாக பார்க்க வளவன் திடீரென்று அருகில் இருந்த நதி குதித்துவிட்டான் ,அவனை பார்த்த விஜயனும் குதிக்க வளவன் அடியாழத்திற்கெல்லாம் செல்லவில்லை ஆறடியில் உள்நீச்சல் அடித்து நதியினோடே பயணிக்க அந்த நதி அவர்களை சிறிது தூரத்திற்கு அழைத்து செல்ல விரைவிலேயே ஒரு பகுதிக்கு வந்துவிட்டார்கள் அங்கே அழகிய குகை போன்ற அமைப்பிருந்தது சுற்றி மரங்கள் சூழ்ந்திருக்க ,மிகுந்த அமைதி அங்கே நிலவியது.
ஏதோ பல பறவைகள் அங்கே சப்திக்க அதை தவிர வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை அவர்களுக்கு வளவன் " நிச்சயம் இந்த குகைக்குள் தான் லிங்கம் இருக்க வேண்டும் " என்று கூற விஜயன் அதை ஆமோதிக்கும் வகையாக தனது தலையை ஆட்டினான்.
வளவன் விஜயனை அழைத்துக்கொண்டு அந்த குகையை நோக்கி செல்ல விஜயன் வளவனை பின் தொடர்ந்தான். குகையின் வாயிலில் நின்று வளவன் விஜயனுக்கு வழிவிட விஜயன் முன்சென்று அந்த குகையின் உட்பகுதிக்கு வந்தான் அங்கே ஒரு பாறை மட்டும் அதிக உயரத்தை கொண்டிருந்தது, விஜயன் அதன் அருகில் சென்று.
தனது முழுபலத்தையும் கொண்டு அதனை நகர்த்த அந்த பாறை சிறிதாக நகர்ந்தது விஜயன் இன்னும் அதிகமாக முயற்சிசெய்ய அவனுக்கு தோள் கொடுக்க அங்கே வளவனும் வந்தான் ,இருவருமாக அந்த பாறையை நகர்த்த அது அழகாக நகர்ந்தது.
ஒருகணம் ,இருவரின் கண்களும் கூசியது, அங்கே ஒன்றறை அடிக்கு குறையாமல் கண்களை கவரும் வண்ணம் ,வைரத்தால் மட்டுமே உருவாகிய பழம் பெரும் பெருமைகளை கொண்ட ருத்ர பைரவ லிங்கம் காட்சியளித்தது.
விஜயனும் வளவனும் அதன் அழகில் ஒருகணம் தங்களை தொலைத்தார்கள் ,அதுவே அந்த லிங்கத்திற்கு இருக்கும் சிறப்பு, அதை சாதாரண மனிதன் பார்த்தால் நிச்சயம் அடையாமல் அவன் ஓயமாட்டான், எவன் ஒருவன் தன்னை பற்றி எண்ணாமல் மக்களின் எதிர்காலத்தை மனதில் நிறுத்தி செயல் படுகிறானோ அவன் கைகளில் லிங்கம் இருக்க வேண்டும் என்றே யாழி தேசத்து முன்னோர்கள் இத்தனை ஆபத்தான இடத்தில அந்த லிங்கத்தை வைத்தார்கள்.
மயக்கத்தில் இருந்து முதலில் தெளிந்தது விஜயனே "சரி நாம் இங்கிருந்து செல்லாம் வளவா " என்று வளவனின் தோள்மீது கைவைத்து அவன் கூற வளவன் ஏதோ கனவில் இருந்து எழுந்தது போல "ஆஅ .....சரி விஜயா " என்று கூறி முன் நடந்தான்.
மன்னர்கள் கைப்பற்ற அஞ்சும் ,பெருமதிப்பை கொண்ட ருத்ர பைரவ லிங்கத்தை கைப்பற்றினான் விஜயன். அதே சமையம் அங்கே அவர்களுக்கு மேல் வனத்தில் பல அடி தூரத்தில் அவர்களை பார்த்து கொண்டிருந்த பருந்து இப்போது விரைந்து வேறு திசையில் பறக்க துவங்கியது.
பின்பு அவர்கள் வந்த வழியே செல்ல ஆனால் நதியை கடக்காமல் சுற்றி செல்ல அதற்குள் மதியம் முடியும் நேரம் நெருங்கியது வானம் ,அவர்கள் வீரர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து அவர்களும் அழைத்துக்கொண்டு நாவாய் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
மேற்கு திசை கப்பல் தனது பயணத்தை முடித்துக்கொண்டு வர துவங்கியது இடும்பன் எந்த வித வேறுபாட்டையும் ஏற்படுத்தாமல் அந்த கப்பலை அங்கேயே நிறுத்திவைத்திருக்க மேற்கு திசை கப்பலில் இருந்த தலைவனுக்கு குழப்பமாக இருந்தது "இவன் இந்நேரம் அந்த பக்கம் சென்றிருக்க வேண்டுமே !" என்று யோசித்தவாறே அவன் கப்பலை செலுத்த.
மேற்கு திசை கப்பலில் இருந்து புகை வளையங்கள் வானை நோக்கி செலுத்த பட இடும்பன் இந்த கப்பலில் இருந்த தலைவனை நோக்கி "அங்கு அனுப்பப்படும் செய்திக்கு பதில் செய்தி அனுப்பு அதாவது இங்கே எந்த பிரச்னையும் இல்லையென்று " என்று கூற ,அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது ,அது வெற்றி புன்னகையோ இல்லை ஆணவ புன்னகையோ என்று இடும்பனுக்கு புரியவில்லை எனவே "எதற்காக நகைக்கிறாய் " என்று அவன் கழுத்தில் ஒரு குறுங்கத்தி வைத்து வினவ "நீங்கள் கூறுவதை செய்வது வீண் " என்று கூற இடும்பன்" என்ன கூறுகிறாய்" என்று வினவ அவன் "நாங்கள் செய்தி அனுப்பினாலும் ,அனுப்பாவிட்டாலும் அரசர் காதிற்கு இந்த செய்தி இந்நேரம் போய் இருக்கும் , அரண்மனையில் இருந்து காவல் வீரர்கள் வர துவங்கி இருப்பார்கள் " என்று கூறி அவன் நகைக்க துவங்கினான்.
இடும்பன் ஒரு கணம் அதிர்ந்தான் பிறகு "சரி இப்போது அவர்களுக்கு செய்தி அனுப்பு மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் " என்று கூற, அவனும் அவ்வாறே செய்தான் .
இடும்பன் மனதில் 'விஜயன் வந்துவிட வேண்டும் , யாழி வீரர்கள் வந்துவிட்டால் நிச்சயம் தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல ' என்று மனதில் நினைத்து கொண்டிருக்கையிலேயே அந்த சிறு படகுகள் அவர்கள் நாவாயை நோக்கி வரத் துவங்கியது அதை கண்டு இடும்பன் மனதில் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
சிம்ம தேசத்து நாவாயில் இருந்து இடும்பனுக்கு செய்தி அனுப்பப்பட இடும்பன் சற்றும் தாமதிக்காமல் அந்த கப்பலில் இருந்த அனைவரையும் கட்டிபோட்டுவிட்டு அவர்களது நாவாயை நோக்கி சென்றான்.
அதேசமயம் அங்கு விஜயனும் வந்திருக்க வானம் செம்மை நிறம் பூசிக்கொள்ள துவங்கியது அருளாளர் நாவாயை கடலில் செலுத்த சிறிது நேரத்திலேயே அது கடலில் சீறிப்பாய்ந்தது ,செல்லும் வழியில் வனக்கோட்டையில் பிடித்த கைதிகளை தீவு கரையிலேயே விட்டுவிட, அவர்கள் நாவாய் சிம்ம தேசம் நோக்கி சென்றது.
அதே சமயம் யாழி தேசத்து வீரர்களும் காவல் படையினரும் வந்துவிட அவர்களால் அந்த நாவாயின் சிறு புள்ளியை மட்டுமே காண முடிந்தது.
நடுக்கடலில் சிம்ம தேசத்து நாவாய் வேகமாக செல்ல அதைவிட பன்மடங்கு வேகத்தில் சென்றது ஒரு பருந்து. அது நேராக சென்று அமர்ந்த இடம் விஷ்ணுவர்தனின் திரண்ட தோள்கள் தான் .

வருவான் !!!.
சிம்ம தேசம் : ஆதிரையன் , விஜயவர்மன் , வளவன் அருளாளர்
யாழி தேசம் :விஷ்ணுவர்தன்
ஆழி தேசம் : சமுத்திரா தேவி ,அல்லி ,ஆதித்யன்
கொள்ளையர் தலைவன் :இடும்பன்

சிறுபொழுது

1. காலை : 6 am-10 am
2. நண்பகல் : 10 am-2 pm
3. எற்பாடு : 2 pm-6 pm
4. மாலை : 6 pm-10 pm
5. இடையாமம் : 10 pm-2 am
6. வைகறை: 2 am-6 am
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes