A note about the story "ஒரு பெண்ணின் கதை"

Advertisement

Sahi

Well-Known Member
இது கதை அல்ல நிஜம்.
இப்போதைய காலகட்டத்துல பெண்களுக்கு இழைக்கப்படற கொடுமைகள் and பெண்களால் ஏற்படும் இழிவுகள் ஊடகங்கள் வாயிலாக இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. அதை மக்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பது அவர்கள் மனநிலையைப் .பொறுத்தது.
இந்த நிஜத்தை இங்கே பதிவிடறதுக்கு காரணம் பாதிக்கப்பட்ட பெண்ணே என்றால் நம்ப முடியுமா. அவங்க உண்மையான பெயர் போட்டே எழுத சொன்னாங்க. அது தேவையில்லை என்பதால் நான் பொதுப்படையாக எழுதியுள்ளேன். அவர்கள் எனக்கு சகோதரிபோல. கதையில் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் 50% கூட கிடையாது. இதற்கு தொடர்புடைய இன்னும் நிறைய கிளை கதைகளும் உண்டு.
சின்ன சின்ன மனகசப்புகளுக்கெல்லாம் பெரிய முடிவுகள் எடுக்கும் பெண்கள் மத்தியில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டத்தான் இந்தப் பதிவு.
சகோதரி பிரியா கூறியது போல் நிறைய குடும்பத்தில் மிகவும் ஒத்துத்துழைப்போடு இருக்கிறார்கள். மிகவும் வரவேற்கதக்கது. இது எல்லா இடத்திலும் நடந்தால் மிக்க மகிழ்ச்சி.
கதைக்காக எதுவும் மிகைப்படுத்தபடவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல understate தான் பண்ணியிருக்கேன்.
எழுதலாமா வேண்டாமா என்று பல முறை யோசித்து தான் முடிவு செய்தேன். யாரையும் புண் படுத்தவோ, அழவைக்கவோ இல்லை. இந்த பதிவின் மூலம் at least ஒன்று, இரண்டு பேராவது தவறான பாதையில் போகாமல் இருக்கலாமே என்ற நப்பாசை தான் காரணம்.
இங்கே குறிப்பிடாமல் விட்டது சகோதரியின் கணவர் பற்றி திருமணத்தின் போது எதிலும் பட்டுக்காமல் இருந்தவர் இப்போ full support அவங்களுக்கு எல்லா விதத்திலேயும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top