5. நாடியடி நீ எனக்கு

Advertisement

Kavya Narasimman

New Member
அடுத்தடுத்து வந்த நாட்கள்ல ரெண்டு பேரும் ரொம்ப அதிகமாவே நெருங்கிருந்தாங்க. இவங்க ரெண்டு பேரும் பொறுப்பெடுத்து அவங்க பிசினஸ்ஸ பக்கரனால அது இன்னும் அதிகமாக வளர்ந்திருக்கு.
இவங்க காதலுக்கு அடையாளமா ஒரு உயிர் இப்ப மல்லிகா வயித்துல வளருது. இது தெரிஞ்ச நாள்ல இருந்து அவன் அவளை நெஞ்சுலயும் கைலயும் தாங்க ஆரம்பிச்சுட்டான்.
இப்பிடி அப்படினு மல்லியோட வளைகாப்பும் வந்துச்சு.
என்ன சொல்லியும் அவன் அவளை அனுப்ப மாட்டேன்னு உறுதியா இருந்தான்.
அப்பறம் எல்லாரும், கெஞ்சி கூத்தாடி அனுப்பி வெச்சாங்க. அத்தனை அட்வைஸ், அத்தனை முத்தம் கொடுத்துதான் அவளை அனுப்பி வெச்சான்.
அவ இங்க வந்ததுல இருந்து, அவளுக்குமே மனசு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு.
ஒரு நாள் தேவ்க்கு வேலை விஷயமா நியூயார்க் போக வேண்டிய சூழ்நிலை. அது அவளுக்கு 9 வது மாசம், அதனால அத்தனை அட்வைஸ் பண்ணிட்டு அவன் கிளம்பி போனான்.
அவன் போனதுல இருந்து இவளுக்கு உள்ளுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு.
அவனும் எல்லா வேலையும் முடுச்சுட்டு கெளம்பிட்டான் இந்தியாக்கு. வழக்கமா கஷாயம் குடிக்க படுத்தற மாறி இன்னைக்கும் அடம் புடுச்சுட்டு இருந்தா.
ஒரு வழியா குடிக்க டம்ளர் வாங்கும் போது டிவில சொன்ன நியூஸ்ல கேட்டு டம்பளரை கீழ போட்டுட்டா அதிர்ச்சில...
அவளோட இந்த அதிர்ச்சிக்கு காரணம் டிவில சொன்ன அந்த விமான விபத்து...தேவ் வர போறதா சொன்ன அதே விமானம் ..... அவளுக்கு ஒரு நிமிஷம் தலையே இருட்டிருச்சு...
அப்டியே மயங்கி விழுந்துட்டா... அவ கண் முழுச்சு பாக்கும் போது அவ பக்கத்துல, அவ கையை கோர்த்துட்டு உக்காந்துருந்தான் தேவ்.
ஆமா அவனே தான் தேவ் சக்கரவர்த்தி... ஹாஸ்பிடல்லே அதிர்ர மாறி தேவ்னு கத்தி அவனை கட்டி புடுச்சு கதற ஆரம்பிச்சுட்டா...
டேய் எனக்கு ஒன்னும் இல்லை, நான் நல்லாத்தான் இருக்கேன். நியூஸ்ல ஏதோ சொன்னாங்களே, அது உண்மை தான் நானும் அதுல தான் வராதா இருந்தேன். செக்கவுட் பண்ணும் போது அந்த ஹோட்டல்ல பயர் (fire) அக்க்சிடெண்ட். அதுல நான் மாட்டிகிட்ட. அதுல சின்னதா அடி பட்ருச்சு.... அப்பறம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருந்தாங்க.
கண் முழுச்சு பாக்கும் போது பிலைட்க்கு டைம் ஆச்சுன்னே அப்பத்தான் தெரிஞ்சுது. அப்பறம் ஒடனே அடுத்த பிலைட்ல டிக்கெட் புக் பன்னி வந்தேன். இந்த விஷயம் தெரிஞ்சதும் உனக்கு கூப்பிட்டு சொல்லணும்னு கால் பண்ணா மேடம் இங்க இருக்கீங்க அதான் இங்க ஓடி வந்துட்ட... போடா நான் எப்படி பயந்துட்ட தெரியுமா ... உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அவ்ளோ சீக்கிரமா போக மாட்ட... அப்பதான் அவ மணியை பாத்தா மணி 9. அவ மயங்குனது 2.30 இவ்ளோ நேரம் எப்படி மயக்கத்துல இருந்தேன்னு யோசிக்கும் போதுதான் ஒரு வலிய உணர்ந்தா... ஆமா இப்ப அவளுக்கு பிரசவமே நடந்து முடுஞ்சுருச்சு...
ஹாஸ்பிடல்க்கு வரும் போது அவளுக்கு பிரஷர் அதிகமானால குழந்தய வெளிய எடுத்துட்டாங்க... கரெக்டா அப்ப தேவ்வும் வந்துட்டான். குழந்தய பாத்ததும் அவனுக்கு கண்ணே கலங்கிருச்சு...
அவளும் அவங்களோட காதல் பரிசை ஆசையா பாத்துட்டு இருந்தா. தேவ்வ அப்டியே உரிச்சு வெச்சுருந்தான் அவன் பையன்.
மொத்த குடும்பமும் அத ஒரு திருவிழா மாறி கொண்டாடணும்னு முடிவு பன்னி, பேர் வெக்கற விழாவை சிறப்பா நடத்துனாங்க. குழந்தைக்கு அக்னினு பேர் வெச்சாங்க.
எல்லாரும் இந்த புது வரவால ரொம்பவே சந்தோசமா இருந்தாங்க.
நாம ஆச படர விஷயம் கண்டிப்பா ஒரு நாள் நமக்கு கிடைக்கும். நம்ம எண்ணத்தோட வலிமை ரொம்ப அதிகம். ஒரு விஷயம் நடக்கணும்னா நம்ம நேர்மறை எண்ணம் அத கண்டிப்பா நிறைவேத்தி வெக்கும்....


சுபம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top