4. நீயே என் ஆதியும் அந்தமும்

Kavya Narasimman

New Member
அந்த அரங்கத்துக்குள்ள வந்ததுல இருந்து அவனுக்குள்ள நடக்கற மாற்றத்தை அவனால விவரிக்க முடியல, இன்னும் சொல்ல போனா எவ்வளவோ பெரிய மீட்டிங்லா அசால்ட்டா டீல் பண்றவன், இணைக்கு எதுக்காக இப்டி ஆகுதுனு அவனுக்கே புரியல....

அவனோட முக மாற்றத்தை வெச்சு ஏதோ சரி இல்லனு யோசுச்ச அவனோட பி. ஏ தீரன் பக்கத்துல வந்து சார் ஆர் யூ ஓகே, நீட் எனி ஹெல்ப்னு கேக்கற அளவுக்கு இருந்துச்சு அவனோட நிலைமை... அவளை பார்க்க கூட இல்லாம நோ தாங்க்ஸ் மிஸ். பூஜா என்று எங்கோ பார்த்து கூறினான்... அவன் கண்ணு யாரையோ தேடுது..... இங்க வந்ததுல இருந்து அவன் சரி இல்லை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது....

இப்டிலா ஏன் நடக்குதுன்னு கூட பாவம் அவனுக்கு தெரியல... ஆனா அவனுக்கு இது ரொம்பவே இம்சயா இருக்குனு மட்டும் புரியுது.... ஸ்டேஜ்ல இருந்து அவன் கண் அவனோட இந்த நிலைமைக்கு விடை தேடீட்டு இருக்கு....

அது எந்த அளவுக்குனா இவனை ஸ்பீச் குடுக்க கூப்பிட்டது கூட தெரியாத அளவுக்கு, அங்க இருக்கவங்களோ இவனை புரியாம பாக்க உடனே பூஜா அவன் அருகில் வந்து சார் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூற நிகழ் காலத்துக்கு வந்தவன்.... திருவிழாலா தொலைஞ்சு போன கொழந்த மாறி முழிக்க... சார் உங்கள ஸ்பீச் குடுக்க கூப்பிபட்றாங்கனு சொன்னதும் ஏதோ பொம்மை மாறி எழுந்து போனான்....

இங்க ஆதிராவோ உச்சக்கட்ட மகிழ்ச்சில இருக்கா... முதல் முறையா அவனோட குரலை கேக்க போறோம்னு ஒரு சந்தோசம்... ஆனா அவளுக்கு ஏதோ தன்னோட ஒடம்பு சரி இல்லனு மட்டும் நல்லா தெரியுது....

இருந்தும் அவன் பேச போறானு அவ்ளோ சந்தோஷம், தன்னோட தொண்டைய செருமிட்டு... குட் ஈவினிங் எவ்விரிஒன் (everyone) இதை கேட்டதுமே ஆதிராஓட இதயம் தாறு மாறா துடிக்க ஆரம்பிச்சுருச்சு.....

ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு.... அவன் அடுத்து பேசுன எதுவுமே அவ காதுல விழுகல.... விதியும் ஓரமா எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு இருக்கு....

ஒரு வழியா அவன் அவனோட ஸ்பீச்ச முடுச்சுட்டு வந்து உக்காந்துட்டான்... அதுத்தடுத்து நடந்த எந்த நிகழ்விலும் அவன் கவனம் இல்ல... பிஸிக்கலி ப்ரெசென்ட் மெண்டலி அப்சென்ட் (physically present mentally absent )....

இப்ப பெஸ்ட் ஸ்டுடென்ட் அவார்ட் குடுக்க தீரனை வெல்கம் பண்ணாங்க... அவனும் ஏனோ தானோன்னு பரிசை குடுத்துட்டு இருந்தான்....

இங்க இரு கண்கள் வெறுப்ப கக்கீற்றுக்கு, இரு கண்கள் எதிர்பார்ப்ப காட்டீற்றுக்கு ..... ஆதிரா இந்த விருதை வாங்கணும்னு இவ்ளோ நாள் ஏங்கல, ஆனா என்னைக்கு அத தீரன் தான் குடுக்க போறான்னு தெரிஞ்சுதோ அப்ப இருந்து அவ அவளா இல்லை,

அடுத்ததா இ. சி. இ டிபார்ட்மென்ட் பெஸ்ட் ஸ்டுடென்ட் அவார்ட் கோஸ் டூ மிஸ் ஆதிரா.... இதை கேட்டதும் கூட்டத்துல ஆராவாறதுக்கு அளவே இல்லை.... ஆனா மதுவோ கோவத்தின் உச்சதுல இருந்தா, இரு டி நீ எப்படி ஸ்டேஜ் ஏர்ரன்னு பாக்கலாம்னு ஒரு ஏளன புன்னகை அவ முகத்துல....

ஆனா ஆதிராக்கு எழுந்து ஸ்டேஜ்க்கு போயிருவோமானு தோன்ற அளவுக்கு தல சுத்த... அப்டியே தலையை புடுச்சுட்டு ஸ்டேஜ் நோக்கி போனா... எப்படியும் வாங்கியே ஆகணும்னு ஒரு வெறி அதுவே அவளை உந்தி கொண்டு போச்சு.......

தீரனும் விருதை வேண்டா வெறுப்பா புடுச்சுட்டு இருந்தான்.... அவ பக்கத்துல வர வர அவனோட இதய துடிப்பு எகுர்றது அவனுக்கு புருஞ்சுது... ஒரு வித எதிர் பாப்போடா தீரன் கீழ பாத்தான்....

ஆதிரா தலையை குனுஞ்சுட்டு மெதுவா வந்தா.. அதுல அவளோட முகம் சரியா தெரியாத நாளா அவனோட எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இதயமோ தாறு மாற துடிக்க... அவளோ அவனை காக்க வெக்காம மேல வந்தா...

அவனை பாத்து ஒரு வெற்றி புன்னகை சிந்த ஏதோ பிறவி பயன் அடஞ்ச ஒரு பீல் அவனுக்கு என்ன ஏதுனு உணர் வதற்க்கு முன்னாடி அவளோ மயங்கி விழ போக, அவனோ அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்துக்கொண்டான். ஏனோ அப்போது அவள் என்னவள் என்ற உணர்வு எழுந்தது அவனுக்கு.... இவள் யார் என்ன என்று ஏதும் தெரியாது ஆனால் இந்த நிமிடம் இப்படியே நீடிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது அவனுக்கு....

தன் மனதில் தோன்றியதை ஒதுக்கி வைத்து விட்டு.. எதுவும் யோசிக்காம அவளை தட்டி எழுப்ப அதுக்குள்ள எல்லாரும் அவளை சூழ்ந்து எழுப்ப அவதான் பாவம் கண்னை தொறக்கவே இல்லை....

எதையும் யோசிக்காம எல்லாரையும் விளக்கி விட்டுட்டு அவளை கைல தூக்கிட்டு வெளிய போய்ட்டான்... இங்க இருக்கவங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு புரியாம குழப்பத்துல இருக்க அவன் காத்த விட வேகமா மருத்துவமனய நோக்கி காரை செலுத்துனான்.....

எதையோ சாதித்த வெற்றி கழிப்பில் விதி இவர்களை பின்தொடர்ந்தது......
 






Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top