4....எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....

#1
எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்.... 4


வீட்டிற்குள்
வந்து மெத்தையில் வீழ்ந்தவனுக்கு உறக்கம் மட்டும் தான் வரவேயில்லை....

கண்களை கரித்துக் கொண்டு கண்ணீர் தான் வந்தது...

அவனுடைய காரச் சட்னிக்கு எல்லாவற்றிலும் அவசரம் தான் அடம்... தான்.....

எதையும் மெல்ல விசாரித்து நிதானமாக புரிந்து செயல்படுவதெல்லாம் அவளுக்கு சுட்டுப் போட்டாலும் வராது....

எவ்வளவு காதலிக்கிறாளோ அவ்வளவு சந்தேகம்.... பைத்தியக்காரி... நானெல்லாம் என்ன பெரிய மன்மதனா....

எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் அவளால் மாற்றிக்கொள்ள முடியாத வியாதியாக இந்த சந்தேகம் மாறிப் போனது தான் மிகவும் கொடுமை...

கார்த்திக்கும் ஸ்வேதாவின் சிறுபிள்ளை தனமான கேள்விகளையும் கோவங்களையும் எத்தனையோ முறை எப்படியோ கடந்துவந்தான்.... இதுவரை கடந்துவிட்டான்.... தான்.... ஆனால் .....

சில நேரங்களில் இவனும் கோவம் அதிகரித்து முகந்திருப்பிக் கொண்டு உணவை கத்தரித்து அவளின் கோவத்திற்கு தூபம் போடுவான்...

பின் அவளும் பட்டினி கிடப்பதை பொருக்க முடியாமல் மானமாவது மண்ணாவது என்று அவளுக்கும் சேர்த்து சமைத்து பரிமாறுவான்...

அவளுடைய சண்டையையும் சந்தேகத்தையும் தாக்கு பிடிக்க முடிந்தவனுக்கு அவளுடைய கண்ணீரையும் பசியையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவே முடியாது...

அவளிடம் கோவம் என்ற முகத்தை காட்ட நேர்ந்ததே கடந்த மூன்று மாதங்களாகத் தான்....

அது கூட அவளுடைய அதீதங் காதலின் வெளிப்பாடு என்று தான் இத்தனை காலம் பொருத்திருந்தான்...

இப்போது தான் எல்லாம் தலை கீழாக மாறிப் போனது...

ஆதாரங்கள் ஏதும் இன்றி இப்படி அடுத்தவரோடு எப்படி அவள் என்னை இணைத்து பேசலாம்... என்ற கோவம் கையை ஓங்கிவிட்டான் முதல் முறை...

அவள் பேசப் பேசத் தடுக்க முடியாமல் ஒரு அறை ஆழமாக இறங்கிவிட்டது அவளுடையக் கன்னத்தில்...

அந்த அறை தான் இந்த விவாகரத்திற்கே பிள்ளையார் சுழி....

அவள் பேசியதும் அதிகம் என்பது அவளுக்குமேத் தெரியும்...

ஆனாலும் ஈகோ தலைத் தூக்க அப்படியே கத்தி கத்தி சண்டை போட்டாள்....
டைவர்ஸ் கேட்டாளா.... ஏதோ கிருக்கி உளருகிறாள் என்று பார்த்தால்.... அடுத்த நாள் காலை கிளம்பி அம்மா வீட்டிற்கு போனவள் அதோடு எந்த தகவலும் இல்லை...

இவனை அழைக்கவும் இல்லை ... இவன் அழைப்பை ஏற்கவும் இல்லை...

இரண்டு சிம்களும் பிளாக் செய்ப்பட்டுவிட்டது.. கார்த்திக் எத்தனையோ முறை முயன்றும் அவளைப் பார்க்கவோ பேசவோ முடியவில்லை...

ஆனால் மாமனாரைத் தனியே சந்தித்து எல்லாவற்றையும் சொல்லி இருந்தான்...

அடித்ததைத் தவிர... அதை மட்டும் சிறிது வார்த்தை எல்லை மீறி என்று மென்று விழுங்கவுமே கண்டுகொண்டார்..... ஸ்வேதாவின் அப்பா...

ஒரு ஆணாகவும் மாமனாராகவும் மருமகனின் புறம் நியாயம் இருந்தாலும் ...

ஒரு தந்தையாகவும் ஸ்வேதாவின் அப்பாவாகவும் இதை அவரால் ஏற்கவே முடியவில்லை...

இருந்தாலும் பொருத்திருந்து என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று தான் நடந்தது எதுவும் தெரியாதவராக இந்த நிகழ்வை கிடப்பில் போட்டுவிட்டு ஸ்வேதாவிற்கு யோசிக்க நேரம் கொடுத்தார்...

இந்த பிரிவு அவளுக்குள் அமிழ்ந்து போன காதலைத் தட்டி எழுப்பி தவறை திருத்திக் கொள்ள உதவும் என நம்பினார்...

ரமணி ஒரு தாயாக பயந்து கடிந்து கொண்டதும் நியாயம் தான்... இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சாதாரண சண்டையை மகள் இத்தனை பெரிது படுத்தி விவாகரத்து வேண்டும் என்று வந்து நிற்பது அவருக்கு ஏற்புடையதாக இல்லை...

ஆனாலும் அதை அவளே உணர்ந்து தான் வெளிவர வேண்டும்... அதுவரை பொருத்திருங்கள் நான் அவளிடம் பேசுகிறேன் என்ற கார்த்திக்கும் இன்னும் பேசவில்லை... பேசும் வாய்ப்பை ஸ்வேதாவும் தரவில்லை என்பது வேறு விஷயம்....

பேசினாலும் உடனே கேட்கும் நிலையில் அவள் இல்லை...

ஆணாதிக்கம் அது இது என்று பேசி பேச்சை திசைத் திருப்பிவிட்டு தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என நிற்கும் ரகம் அவள்...

அதனால் தான் மனதை கடினப்படுத்திக் கொண்டு இந்த விவாகரத்து பத்திரத்தை அனுப்பி வைத்தான்...

அப்படியாவது அவளுக்குள் இருக்கும் பூனைக் குட்டி வெளியே வரும் என்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி இன்னும் அதே அழுத்தத்தோடு தான் இருக்கிறாள்... என்ன செய்தால் தகும் இவளை..

இதற்கிடையில் குழந்தையைக் கூட பார்க்க முடியாமல் தவிப்பவது வேறு மேலும் மேலும் அவனை பலவீனப் படுத்திடவே இப்படி மதுவின் பின் ஓடினான் ஆனால் அதுவும் பாவம் எந்த விதத்திலும் அவனுக்கு அமைதியைத் தரவில்லை...

அவளுடனான காதல் கணங்களை மட்டுமே நினைவூட்டிச் செல்கிறது... எல்லாம்....

அந்த ஆசையும் பாசமும் அடிமைத்தனமும் அரவனைப்பும் மீண்டும் வேண்டும் என்று ஒவ்வொரு செல்லும் அடம்பிடிக்கிறது...

அதை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாமல் கலங்கியவனை சுற்றியிருந்த ஒவ்வொரு பொருளும் .....ஒவ்வொரு நினைவும் ......
எழுந்தது முதல் ......இரவு இதோ இந்த பஞ்சு மெத்தை வரையில் அவள் மடிமீது துயின்றது வரை விடாமல் துரத்தித் துரத்தி தொல்லை செய்கிறதே ... இவனை....

அந்த தொலைத்த காதல் தருணங்கள் எல்லாம் உனக்கு தோன்றவே இல்லையா ????
உன்னைப் பிரிந்து நான் தவிப்பது போல....
என்னை இழந்து நீ தவிக்கவில்லையா.....????
நம் காதல் உனக்கு எதையும் நினைவூட்டவால்லையா....???
எந்த கேள்விக்கும் பதில் சொல்லத்தான் அவள் இல்லையே.....
மீண்டும் மீண்டும் இதயம் செய்யும் இம்சை தாங்க முடியாமல் அவள் புடவையை எடுத்து மெத்தையில் விரித்து நத்தையாக சுருண்டுவிட்டவனுக்கு அவள் வாசனை மட்டுமே ஆருதலாக தலைக்கோதிட அப்படியே அயர்ந்து போனான்... அன்றைய இரவு.....

நெஞ்சோடு பிள்ளையின் படமும் உயிரோடு அவள் விட்டுச்சென்ற வாசமும் மட்டுமே அவனை இயங்கச் செய்து கொண்டு இருக்கிறது... என்பதை அவளும் விரைவில் அரிய மாட்டாளா.... என்ன....

இவன் சொல்லிப் புலம்பித் தவிக்கிறான்

அங்கே ஒருத்தி அந்த நினைவுகளை அசைப்போட்டு கழிக்கிறாள்...

ஈகோவும் போட்டியும் சந்தேகமும் மட்டுமே இருவரையும் இணைக்கும் பாலமாக இடையேத் தொங்கிக் கொண்டிருக்கிறது....

______ _____ _____ ______ _______ ______

அன்னை பிடியில் உண்டு அன்னை மடியோடு உறங்கி விழித்தவளுக்கு மனம் சற்றே தெளிந்திருந்தது...

இவள் எழுந்து வரும் முன்பே விஹானுக்கு ரமணி காலை உணவை பாதி ஊட்டிவிட்டிருந்தார்...

சுட்டிப் பையனோ.... பாட்டியோடு இந்த மூன்று நாளும் அட்டையாக ஒட்டிக் கொண்டான்....

கையில் கைப்பேசியில் குழந்தைகளுக்கான ரைம்ஸ் ஓடிக் கொண்டிருக்க விஹான் அதைத் தான் விழியகற்றாமல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தான்....

வெளியே வந்தவளின் தோற்றம் ரமணிக்கு வருத்தம் தான் கலையிழந்த முகம் கண்கள் சிவந்து சிறுத்து கலைந்த ஓவியமாக இருந்தவளுக்கு கண்களில் உயிர்ப்பு இல்லை....

ஆத்திரக் காரணக்கு புத்தி மட்டு என்று நிரூபித்து விட்டு நிற்கும் மகளிடம் இரமணிக்கு கோவம் பொங்கியது...

ஆனாலும் அமைதியாக இருந்தார்...

அன்னையைக் கண்டதும் விஹான் ஓடி வந்து கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தான்.... அப்பாவைப் போலவே....

ஸ்வேதாவிற்கோ கன்னத்து முத்தம் கூட முதலில் தன்னவனைத் தான் நினைவூட்டியது...

ஏ ஸ்வீட்டி...

ம்ம்ம்... என்ன...

கரண்ட் கட்டானா இருட்டுல பவர் கிளாஸ் யூஸ் பன்னக் கூடாதாம் ...

ஏன்....

இன்னும் பவர் பாதிக்குமாம்...

அப்படியா...

ம்ம்ம் கழட்டு நான் வேணும்னா புரூஃப் பன்றேன்...

ம்ம்ம்... எப்படி....???
கழட்டு சொல்றேன்....
ம்ம்ம்.....

இங்க என்ன தெரியிது...

ஒன்னும் இல்லையே...

நல்லா பாருடி...

ஒன்னும் தெரியலடா...

ஏய் நல்லா பாரு இதோ இங்க...

ம்ஹூம்... தெரியல...

இப்போ...

ம்ஹூம் என்ன இருக்கு அங்க...

இதான்...

முத்தத்தின்
சத்தமும் வெட்கத்தின் வெளிச்சமும் மட்டும் தான் தெரிந்தது அங்கே...

இன்னும் அதெல்லாம் கண்முன் தோன்றி மேலும் கறைந்து கண்களின் கண்ணீரை வழிய விடாமல் துடைத்துக் கொண்டாள் ஸ்வேதா....

ரமணி எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காது கடந்துவிட்டார்...

குளிச்சிட்டு வா ஸ்வேதா சாப்பிடலாம்....

ம்ம்ம்...

குளியல் இந்த வார்த்தையில் ஆயிரம் நினைவுகளை அடக்கிவிடலாம் காதல் தம்பதிகளுக் கிடையில்....

அவளுக்கோ ஒவ்வொரு நினைவும் வென்னீரை தலைவழியே கொட்டிய தகிப்பைத் தான் விட்டுச் சென்றது.... இன்று...

சாப்பாட்டு மேசையில் உணவு கூட.... விட்டு வைக்கவில்லை அவளை....

ஏய் கார சட்னி ஊட்டி விடுடி மணியாச்சு...

நீ நடந்துகிட்டே இருந்தா இருடா வரேன்...

போதும் போதும் கொஞ்சமா ஊட்டு....

நீ ஒழுங்கா வாயத்தெற எடுக்குற சாதம்
பாதி கைல தான் இருக்கு...

மணியாச்சு
டி மிச்சத்த நீயே சாப்பிட்டு சமத்தா இரு பாய் ...
மீண்டும் சில ஈர முத்தங்கள் இளைப்பாரிய கன்னங்களில் இன்று உப்பு நீர் மட்டுமே...

எடுத்த உணவை விழுங்கவே முடியவில்லை .. இன்னேரம் சாப்பிட்டு இருப்பானா... ????
இருக்காது சமைக்க தான் நான் இல்லையே இரவாவது சாப்பிட்டிருப்பானா????
எப்படியும் குடித்திருப்பான் அது நிச்சயம் ஆனால் உணவு...

எத்தனையோ முறை நானே கெஞ்சி கெஞ்சி தான் ஊட்ட வேண்டும் நானும் இல்லாமல் எப்படி சமைத்தானோ சாப்பிட்டானோ... உணவு கைகளைத் தாண்டி வாய்க்கு போகவே இல்லை...
இவளுடைய பசியை அறிந்து பார்த்து பார்த்து ஊட்டி விடுவான்....
எத்தனை பெரிய சண்டை வந்த போதும் வெறும் வயிற்றோடு அவளை விட்டதே இல்லை....
முடியாத நாட்களில் கூட முன்பே எழுந்து அவனுக்கு தெரிந்த சப்பாத்தியோ... மேகியோ... தோசையோ ஒன்று இருக்கும் அவளுக்காக....
அவள் பிள்ளை உண்டான போது கூட தாளிப்பு வாடை பிடிக்கவில்லை என்று தானே விதவிதமாக சமைத்துப் போட்டு அசத்தி இருக்கிறான்....
ஆனால் அவனுடைய பசியை பற்றியும் அவனைப் பற்றியும் நான் நினைக்கவே இல்லையா.... எப்போதிலிருந்து இப்படி ஆகிவிட்டேன் நான்....
சிலை போல சிந்தனையோடு ஸ்தம்பித்திருந்தவளை....

ரமணி ஸ்வேதா....ஸ்வேதா என்று கத்தியதெல்லாம் காற்றில் வைத்த கற்பூரமானது... தான் மிச்சம்....

தட்டி எழுப்பவும்... தான்....

அதிர்ந்தவள் என்னம்மா... என்க...

சாப்பிடு டி .. என்ன கனவுல இருக்க நீ...

அ..அது இன்னைக்கு என்ன கிழமை...

வெள்ளி கிழமை...

ஓ... நான் விரதம்...

என்னடி திடீர்னு...

அங்கே பதில் சொல்ல அவள் இல்லை...

ஆனால் மாமனார் புன்னியத்தில் இங்கே மருமகனுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் காலையிலேயே அப்டேட்டடாக இருந்தது....

image_search_1579894656053.jpg
Screenshot_2020_0125_010316.png

Screenshot_2020_0125_010514.png

இப்படி ஒரு ஸ்டேட்டசை பார்த்தவளுக்கோ பி.பி எகிறிட... வேக வேகமா வெளியே வந்தவள் ரமணி மூடி வைத்த தட்டை எடுத்து தடால் புடால் என ஒரு உருட்டு உருட்டி விட்டு அவன் மீதிருந்த மொத்த கோவத்தையும் சாப்பிட்டு
தீர்த்துக் கொண்டாள்....
அவனோ மொபைல் திரையை பார்த்து மனம் விட்டு சிரித்துவிட்டு நீண்ட நாட்கள் கழித்து ஆனந்தமாக அலுவலகம் சென்றான்....

__தொடரும்....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update

கார்த்திக்காக...

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ...
 
Last edited:
#10
ஹா ஹா ஹா
கோபம் வந்தால் சாப்பாடு நல்லா ஒரு கட்டு கட்டணுமா?
இது கூட நல்லாயிருக்கே

இரண்டு பேருமே ஒருத்தர் மீது மற்றவர் ஆசையும் பாசமுமா இருக்காங்க
அப்புறம் அந்த வீணாப் போன ஈகோவாலே
ஏன் பிரிஞ்சு இருக்கணும்?
 
Last edited: