4.அன்பின் வெற்றிவேல்

Pavidurai

Member
Hai friends,


வாங்க! வாங்க !

தங்கம் நல்லா இருக்கியமா?

ஆமா அண்ணா. நீங்க நல்லா இருக்கீங்களா .......நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்மா.....வாங்க மதனி......திவ்யா குழந்தை நல்லா இருக்காமா....
ஆமா அத்த தூங்குறா....அவரு வச்சுருக்காரு .......பெயர் என்னம்மா ..... "தியா "அத்த....

....
மாப்பிளை வரலயா அண்ணா?. ....
இப்போ வந்துருவான்மா....ம்ம் ..உபசரிப்பு படலம் முடிஞ்சு.....வாசலில் ......வண்டி சத்தம் கேட்க ....

வெற்றி வந்துட்டான்......நான் கூட்டிட்டு வாரேன்...என கண்ணன் போக. ......வாங்க தம்பி உள்ள வாங்க.... சிறு தலையசைப்புக்கு பின்
நல்லா இருக்கிங்களா மாமா?....

" நல்லா இருக்கோம் மாப்பிள்ளை "...
சாரி மாமா லேட் ஆகிட்டு....அப்படியெல்லம் இல்ல மாப்பிள்ளை ...

வீட்டுற்குள் வந்த வெற்றி அக்கா, பக்கத்தில் அமர......

அப்பத்தா......
வெற்றியை பார்த்து ஐயா,
"ராசா மாதிரி இருக்கயா....அப்படியே நல்ல உயரமா கம்பீரமா நம்ம நிறத்துல (அதாங்க கருப்பு ) ராசவாட்டும் இருக்க....அந்த காலத்துல
உங்க தாத்தா அதா எங்க அண்ணாவ
பார்த்த மாதிரி இருக்கு.....மகராசனாட்டும் இருக்கய்யா"......எல்லாரும் சிரிப்புடன் வெற்றியை பார்க்க ....அவனோ எழுந்து அப்பத்தா காலில் விழுந்து ஆதிர்வாதாம் பெற்றான்........சிறிது நேரம் களிய
வெற்றியின் கண்கள் வீட்டைச் சுற்றி அவனுடைய ஆள தேட.....அவளை காணவில்லை.....


என்னடா தேடுற இல்லக்கா ....சும்மா சுத்திபார்த்தேன்அவ்வளவுதான்....
" ஏண்டா மாப்பிள்ளை பொய் சொல்லுற பொண்ண தேடுறேன் காட்டுங்கனு சொல்லு"...........என சிரிக்க....

சும்மா இருங்க மாமா.....அப்படியெல்லாம், இல்ல...."டேய் அண்ணா ஒத்துக்கடா"....

டேய் ,கவி கொள்ளப்போறேன் உன்னை;இவர்களை பார்த்த வெற்றியின் அப்பா,

கவி, "என்னடா சொல்லுறான் உன் அண்ணா".............அதுவா அப்பா..... "நீங்களே ,பேசினா எப்படி முதல்ல அண்ணிகாட்டுங்கனுசொல்லுறான்".....
இதை கேட்டு,
' எல்லாரும் சத்தமா சிரிக்க".....வெற்றி, "கொலவெறியோட தன் தம்பியே பார்க்க"........அவன் எனக்கும் அதுக்கும்
சம்பந்தம் இல்ல என்பது போல்
இருந்தான்.................

உடனே அப்பத்தா,
"ஏத்தா தங்கம் நம்ம அப்புவ கூட்டிடுவா".........இதோ அத்த....


தங்கம் .......செல்வியை ,கூட்டிவர செல்வி நிமிர்ந்து பார்க்க
வெற்றி கண்களில் குறும்புடன் அவளை பார்க்க..........


அவளோ ,"அதிர்ச்சியாக தன் விழிகளை அகல விரித்து வெற்றியை
பார்க்க "..........அவன் கண்களை சிமிட்டி சிரிக்க .....அவளோ தனது பார்வையை
வேற பக்கம் திருப்பிக்கொன்டாள்.....


மணி .....அன்பு வாம்மா...........
வந்து உட்காரு பேசுவோம் ....எதுக்கு அதிர்ச்சியில் இருக்க என கேட்க ....அவளோ திருதிருத்தால்.....

"அடியே அப்பு என்னடி"....... இப்படி
இருக்க ஒன்னும் இல்ல ,அப்பத்தா...
" நல்ல சரவெடி மாதிரி பேசிட்டே இருப்ப ".......இப்ப என்ன அமைதியா இருக்க....அவளும் வெற்றியை முறைத்து ஒன்னும்இல்ல அப்பத்தா
என அவள் வெற்றியை பார்த்து கொண்டே சொல்ல ;அவன் குறும்புடன்
சிரித்தபடி இருந்தான்....

பெரியவர்கள் அவர்களுக்குள் பேச......
இவர்களை பார்த்த திவ்யா, சரண் (திவ்யா கணவர்) கவின் மூவரும் இருவரரையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தனர்.....சிறிது நேரத்தில்....

(கவின்) ....அப்பா நம்ம வெற்றி அண்ணி கிட்ட தனியா பேசனும்னு சொல்லுரான்.....வெற்றி கவியை தெய்வமாக பார்க்க...

கண்ணன்,

" ஓ....அப்படியா மாப்பிளை".....அதுகென்ன தாராலமா பேசட்டும்........
அப்பு....."மாப்பிள்ளையை தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் பேசிட்டுவாமா".....

அப்பா,' அது வந்து'.....
நம்ம வெற்றி தான்மா......போ... போய் பேசிட்டுவாமா....ம்ம்ம்ம் சரிப்பா

இருவரும் வீட்டிற்குபின்னால் வர......

ஏய் குட்டச்சி......
என்ன குட்டச்சியா.....? என முறைக்க.....
....ஆமா டி.....என்னடி பன்னுவா
Hello..... குட்டச்சி அது இதுனு சொன்னிங்க....அப்றோம் நான் வாடா போட சொல்லுவேன்.அப்புறம் என்ன டி....... யா?

ஆமா....டி

அப்புறம் நானும் டா....சொல்லுவேன்.....
ஏன் நீங்க டி ....சொல்லும்போது நான்
டா ....சொன்னா தப்பா.....

எங்க சொல்லு பார்ப்போம்.......
.....அடியே....சொல்லு சொல்லு....எங்க ......டா சொல்லுடி பாக்கலாம் என அவளை நோக்கி அடி எடுத்து வைக்க
அவளோ பின்னால் நகர....கடைசியில்
மரத்தில் மோதி நிற்க.....அவனோ
அவளுக்கும் தனக்குமான ஒரு அடி
இடைவெளி விட்டு நின்று அவளை பார்க்க .......

அவளோ அவனை கண்களில் மிரட்சியோடு பார்க்க....."அவனோ
இருவருக்குமான இடைவெளியை இன்னும் குறைத்து அவளின் காதில்
அடியே குட்டச்சி" எப்படி... டி இவ்வளவு அழகான? ......."கொள்ளுரடி மாமன"......

" முன்னால அப்படியே நல்லா பாப்ளீயா இருப்ப ........ அப்படியே கண்ணம் ரெண்டும் "ஸ்ப்ட்டா" பன்ணு மாதிரி இருக்கும்....

இப்ப ஆளே அடையாளம் தெரியாத மாதிரி சிரோ சைஸ் ஆகிட்ட....ஆனா பாரு ,"இந்த கண்ணு மட்டும் இன்னும் மாறவே இல்ல"......" இப்பவும் என்ன அப்படியே முழுங்குற மாதிரிதான்
பாக்குது"......என அவளின் கன்னத்தை கிள்ள வர .......


அவளோ அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு நகர்ந்து "போடா
கருவாயா" என உள்ள ஓடிவிட்டாள்....

" அடிங்க யாருடி கருவாயன்".........

" நீதான்டா என்கருவாயா".......இருடி உன்ன வந்து வச்சுகிறேன்......என வசீகர சிரிப்புடன் ஸ்டைலாக தலை கோதினான்......

அவளும் வெக்கச்சிரிப்புடன் உள்ளே வர அவர்களை தேடி வந்த சரண் மீது
மோதினால் .....

அவனோ ,"என்னமா இப்படி ஓடி வர
என்மச்சான் ஓடி பிடிச்சு விளையாடுர
வர வந்துட்டாரா".... ஐயோ, "போங்கண்ணா வெக்கப்பட்டு ஓடிவிட்டாள் நம் நாயகி....

வெற்றியோ.....விசில் அடித்துகொண்டே வந்தவன்..."
என்ன மாமா இங்க நிற்குறீங்க.......
கவின் டேய் அண்ணா உங்கள தேடித்தான் வந்தோம். ...

வாங்க ,உள்ள போலாம்......"தேடுவாங்கா"....என உள்ளே வர சரி எல்லாருக்கும் கிளம்புறோம்.....என சொல்லிட்டு கிளம்ப... " செல்விகிட்டேயும் சொல்ல அவளும் சிரித்தே விடை கொடுக்க சந்தோசமாக கிளம்பினார்கள்"........


.


 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top