3. நீயே என் ஆதியும் அந்தமும்

Advertisement

Kavya Narasimman

New Member
தீரன் குரூப் ஆப் கம்பெனி வெளிய இருந்து பாக்கறவங்கள ஒரு வாட்டியாச்சும் இதுக்குள்ள வேல செய்ய நமக்கு வாய்ப்பு கெடச்சுராதாணு எங்கற அளவுக்கு அவங்க தொழிலாளர்களுக்கு குடுக்கற சலுகைகள் எக்க சக்கம்.
இந்த கம்பெனில திறமைக்கு மட்டும் தான் மதிப்பு, இந்த கம்பெனில வேல செய்யறன்னு சொல்றதே ஒரு தனி கெளரவம் தான். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்லூரிகளில் இருந்து ஒரே ஒரு சிறந்த மாணவருக்கு தான் இதில் சேர வாய்ப்பு கிடைக்கும்.... இப்படி பட்ட கம்பெனி ஓட சி. இ. ஓ தான் நம்ம காதநாயகன் தீரன். காட்டுக்கோப்பான உடம்பு பாத்தாவே பெண்கள் காதல் வலைல விழுந்துருவாங்க அந்த அளவுக்கு வசீகரமான மற்றும் திறமையான பையன்.
எத்தனை பொண்ணுங்க இவனால பைத்தியம் ஆனாலும் நம்ம ஆளு எதுக்கும் மயங்குனது இல்லை. தீரன் என்றாலே ஒரு கெத்து தான், அவனுக்குன்னு ஒரு தனி சாம்ராஜ்யமே இருக்கு, அவனை எதிர்க்கவே எல்லாரும் பயப்படுவாங்க, ஆனா விதி அவனையும் ஆட்டி படைக்க ஒரு ஆள செட் பண்ணி வெச்சுருக்கு


இன்னைக்கு தான் ஆதிரா ஓட கல்லூரில அந்த விழா நடக்க போகுது, எல்லா மாணவர்களும் ரொம்பவே உற்சாகமா இருந்தாங்க, ஏன்னா வரப்போற விருந்தினர் அந்த மாறி.....
அது வேற யாரும் இல்ல தீரன் குரூப்ஸ் சி. இ. ஓ தீரன். இவனை பாக்கறதுக்காகவே இன்னைக்கு எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு வந்துருந்தாங்க.

எல்லாரும் தீரான பாக்க போர சந்தோஷத்துல இருந்தா மது மட்டும் ஆதிரவா இதுல கலந்துக்க விடக்கூடாதுனு வெறியோட இருந்தா. காரணம் அவளுக்கு நல்லாவே தெரியும் ஆதிரா தீரன் குரூப்ஸ்ல ஜாயின் பண்ண வெறியோட தயாராகிட்ருக்கானு. அதனால அவனை பாக்க விடக்கூடாதுனு ஒரு பிளான் பண்ணா.
ஒரு விதமான மாத்திரயை ஆதிரா ஓட டிபன் பாக்ஸ்ல மிக்ஸ் பண்ணி வெச்சுட்டா, இத சாப்டா நார்மல் புட் பாய்சன் மாறி தான் தெரியம் ஆனா அவ ஒடம்பு படாத பாடு படும், ஏன் மருத்துவர்களாலயே என்னனு கண்டு புடிக்க முடியாது.....
இன்னும் சொல்ல போன அவ கோமாக்கு போறதுக்கு கூட வாப்பிருக்கு, இதெல்லாம் தெரிஞ்சும் மது எப்டியோ ஆதிரா டிபன் பாக்ஸ்ல அந்த மாத்திரய மிக்ஸ் பண்ணிட்டா. ஆதிராவும் தீரன்ன பாக்க போறோம்னு எப்பவும் மிச்சம் வெக்காம சப்பட்றவ இன்னைக்கு பேருக்குனு சாப்டா, இல்லை இல்லை ஒரு வாய் மட்டும் தான் சாப்டா.... இந்த விருதுல பெருசா நாட்டம் இல்லாம இருந்தவளுக்கு அதை வழங்க போவது தீரன் என்று தெரிந்ததில் இருந்து அவளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை....
விழாவும் தொடங்கிருச்சு நம்ம நாயகி மட்டும் இல்ல ஒட்டு மொத்த இளைஞர் பட்டாலமும் ஆவளோட இருந்தாங்க..... விதியும் பொறுமையா வெயிட் பண்ணீற்றுக்கு....
எல்லாரோட ஆறாவரத்தோட நம்ம நாயகன் அரங்கத்துக்குள் பலத்த பாத்துக்கப்போட உள்ள வந்தான். பொதுவா இந்த மாறி விழாக்குலா வராத நம்ம ஆளு இன்னைக்கு இந்த கல்லூரி முதல்வர் அழைத்ததும், அவனுக்கும் சடன்னா போகணும்னு தோணுச்சு உடனே வரேன்னு சொல்லிட்டான்.
உள்ள வந்ததுமே அவனோட மனசு டக்குனு எதையோ தேட ஆராம்புச்சுது, இதுவே புது விதமான அனுபவமா இருந்துச்சு அவனுக்கு, நம்ம ஆதிராக்கும் அதே மாறி ஒரு உணர்வு தான்.
இந்த விருது வாங்க போறதுக்காக காத்திருந்தவளுக்கு இது பெரிதாக தெரியவில்லை...ஆனா தீரனுக்கு இது ஒரு அவஸ்தையா இருந்துச்சு....
இந்த சிறிய வயதிலேயே பிசினஸ் உலகின் முடி சூடா மன்னன் அவன், எதற்கும் அஞ்சாதவன்.... எப்படி பட்ட டீலிங் ஆக இருந்தாலும் சுலபமாக முடிக்க கூடியவன்... ஆனால் இன்று ஏனோ அவனுக்குள் நடக்கும் மாற்றம் அவனுக்கே சற்று விதயாசமாக இருந்தது....
இப்படியும் அவனுக்கு நடக்கும் என்று நினைத்திராதவன், நடப்பதை அவனாலையே நம்ப முடிய வில்லை.... ஆனால் இன்று ஏதோ பெரிய சம்பவம் நடக்க போகிறது என்று மட்டும் புரிந்தது அவனுக்கு... எவ்வளவோ பாத்துட்டோம் இதை பாக்க மட்டமா என்ற எண்ணத்தில் என்னதான் நடக்க போகிறது என்று அவனும் ஆவலுடன் இருந்தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top