3. நாடியடி நீ எனக்கு

Advertisement

Kavya Narasimman

New Member
அவங்களோட அவ்ளோ பெரிய வீட்ல தேவ் அப்பறம் அவனோட அப்பா அம்மா மட்டும் தான். அப்பறம் ஜெயாம்மா பின்னாடி இருக்க கெஸ்ட் ஹவுஸ்ல இருப்பாங்க. ஆனா இங்க இவ்ளோ பேர் ஒரே வீட்ல இருக்கவும் அவனுக்கு அந்த குடும்பத்தை ரொம்பவே புடுச்சுது.

இவனை கொஞ்சோம் கூடுதலாவே கவனிச்சுக்கிட்டாங்க. இதெல்லாம் அவன் மனசுல இந்த லைப் தான் பெஸ்ட்னு ஒரு எண்ணத்தை உருவாக்கிருச்சு.

அவங்க வந்த வேலை முடுஞ்சுது, அதனால அடுத்த நாள் அவங்க ஊருக்கு கெளம்பனும், நைட் பேசிற்றுக்கும் போது அவனோட அப்பாவின் நண்பர், தேவ் கண்ணா அடிக்கடி நீ இங்க வரணும். உனக்கு இங்க இவ்ளோ பெரிய குடும்பம் இருக்கு சரியா.

அவனுக்கு அழுகையே வந்துருச்சு, இங்க இருந்து போகவே எனக்கு மனசு இல்லை. அங்க போன போர் அடிக்கும்... நான் இங்கயே இருந்துக்கறேன்னு அழ ஆரம்பிச்சுட்டான்..

அச்சோ... அழுகாத சாமி...என் மகள உனக்கு கட்டி வெச்சு உன்னை என் மாப்பிள்ளை ஆகிக்கறேன்.

அப்பறம் உரிமையா நீ இங்க எப்ப வேணாலும் வரலாம். கட்டிக்கறதுனா என்ன மாமா. அது உனக்கு இப்ப புரியாது, பெருசானதும் தெருஞ்சுக்குவனு எல்லாரும் சிரிக்க....அந்த வயசுல என்ன புருஞ்சுதோ தெரில, அவனும் சேரினு அழுதுட்டே சொன்னான்....

அப்ப இருந்து அவங்க அப்பா அந்த ஊருக்கு போகும் போதெல்லாம் இவனும் கூட போயிருவான். அவங்களும் தேவ்வ நல்லாவே கவனிச்சுக்கிட்டாங்க. ஒரு நாள் அவன்..... மாமா உங்க பொண்ணு யாரு, எப்ப எனக்கு கட்டி வெப்பீங்கனு கேட்டுடான்.

அட அத நீ இன்னும் மறக்கலயா.... அவ பேரு மல்லிகா அவ ஊட்டில படிக்கறா.....

எப்ப வருவா....

லீவுக்கு தான் வருவா. அடுத்த தடவ வரும் போது சொல்றேன் நீயும் அப்பா கூட வந்துரு.


அவ எப்ப வருவான்னு, மனசுக்குள்ளேயே எண்ணீற்றுந்தான். எவ்ளோ முயற்சி பண்ணியும் தேவ் ஸ்கூல் முடிக்கற வரைக்கும் அவனால மல்லிகாவை பாக்கவே முடியல.


அப்பறம் அவன் காலேஜ் படிக்க லண்டன் போய்ட்டான். ஒரு தடவ தேவ் லீவ்க்கு சென்னை வந்துருந்தான். அப்போ ஏர்போர்ட்ல ஒரு பொண்ண பாத்தான், பாத்ததுமே மனச பறி குடுத்துட்டான். அவ்ளோ அழகு இந்த அழகை யாருமே ராசிக்காம இருக்க மாட்டாங்க.

அப்படியே பாத்துட்டே போகும் போது, தேவ் அந்த பொண்ணு மேல மோதிட்டான். அப்ப அவன் வாங்குன அடில ஒரு நிமிஷம், என்ன நடந்துச்சுனே புரில.

ஹலோ என்ன கண்ண எங்க வெச்சுருக்க, பாக்க இவ்ளோ டீசென்ட்டா இருக்க, இப்பிடி வந்து மேல மோதர. இனியும் யாராச்சும் பொண்ண தப்பா பாத்தாலோ, இல்லை இப்பிடி மோதணும்னு தோணுனாலோ உனக்கு இந்த அடி நியாபகம் இருக்கணும்.

அவனுக்கே ஒரு மாறி ஆகிருச்சு, ச்ச இப்பிடி பண்ணிட்டனேனு தலையை தடவிகிட்டே வெளிய வந்துட்டான்.

அப்பறம் வெளிய வந்ததும், அவங்க வீட்ல இருந்து அனுப்பியிருந்த கார்ல ஏறி வீட்டுக்கு போய்ட்டான்...

தேவ் எப்பவும் அவங்க ஆபிஸ்க்கு லாம் போக மாட்டான். அன்னைக்கு சும்மா போகலாமேனு போயிருந்தான். உள்ள போகும் போது கரெக்டா போன் வந்துச்சு அத எடுக்கும் போது, ஒரு பொண்ணு வந்து இவன இடுச்சுருச்சு....

அதுல இவன் போனை கீழ போட்டுட்டான். கீழ குனிஞ்சு எடுக்கும் போது, அந்த பொண்ணு இவன் முஞ்சியை பாத்ததும், ஒடனே திட்ட ஸ்டார்ட் பண்ணிட்டா. ஹே நீயா.....

உனக்கு இதே வேலைதானா, பொண்ணுங்களை பாத்தவே இப்டித்தான் மேல மோதிட்டே இருப்பியா.... என்ன நெனச்சுட்டு இருக்க. அப்படி இப்பிடினு அவ மேல இருக்க தப்பா மறைக்க இவனை கத்த ஆரம்பிச்சுட்டா ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top