18.அன்பின் வெற்றிவேல்

#1
உடனே முகத்தை திருப்பிக்கொள்ள ...........செல்வி தன் அத்தையை பார்க்க......

அன்பு "போடா போய் ப்ரெஷ் ஆகிட்டுவா "பாட்டிகூட பேசலாம்.

அவள் தன் அத்தையை பாவமாக பார்க்க.....
"போடா போ "என அவளை அனுப்பிவைத்துவிட்டு பாட்டியை பார்த்து சிரித்துக்கொண்டே
சின்ன பொன்னுல சித்தி என்றார் ,மணி ..................

என்ன மணி சின்ன பொண்ணா ?......அப்போ சின்ன பொண்ணஏன் என் பேரனுக்கு கட்டிவச்ச கோவமாக கேட்டவர் ,நானும் கண்ண மூடுறதுக்குள்ள என் கொள்ளு பேரன பாத்துரலாம்னு இருந்தா; நீங்க படிக்கிற புள்ளய கட்டிவச்சிருக்கீங்க தன் முகத்தை திருப்பிக்கொண்டு தன் அறைக்கு செல்ல ,

இன்னும்,

"என்னன்ன நடக்கபோகுதோ எண்ணிக்கொண்டு இருக்க" .............அத்த அத்த என சொல்லிக்கொண்டே செல்வி அவர் அருகில் வர "வாடா "என அவளை அழைத்துபோய் அன்பு,
பாட்டி நம்ம வீட்டில் இருக்கிறவர சேலை கட்டிக்கிட்டு தலையில பூ வச்சிக்கடா ..........பாட்டி கொஞ்சம் பழையா ஆளு அதனால ,"ஏதாவது பேசுனா வறுத்த படாதடா" ...........

சரியத்த .......சோகமாக சொல்ல .........

கொஞ்சநாள்
பொருத்துக டா.......


சரி சரியத்த," அதெல்லாம் ஒன்னும் கோவப்பட மாட்டேன் " கவலைப்படாதீங்க என அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தாள்

அவள் அனுப்பியதும் போன வேகத்தில் திரும்பி வந்தவர் ,அப்புறம் அன்பு நான் சொல்ல மறந்துட்டேன் பாட்டிக்கு வெற்றியை ரொம்ப பிடிக்கும் அதனால அவனுக்கு நல்லதுன்னு சொல்லி ஏடாகூடமா ஏதாவது பேசினால் கூட பொறுத்துக் கொள்ளவும் அப்புறம் அவங்க
இருக்கும் போது இருவரும் சேர்ந்துதான் இருக்கனும் என்றார்......


அவள் ஏன் ?என்பது போல் பார்க்க........


அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவர் போல் , இல்ல அன்பு ஏற்கனவே பாட்டிக்கு அவங்களோட பேத்திக்கு வெற்றியை கட்டி வைக்கலாம்னு ரொம்ப ஆசைதான்; ஆனால் வெற்றிதான், முடியவே முடியாது எனக்கு இதுல உடன்பாடு இல்ல பாட்டி என்ன கட்டாயப்படுத்தாதீர்கள் என மறுத்துவிட்டான்.


ஏன் அத்தை ?உங்க புள்ளைக்கு அந்த பொண்ண கட்டிக்க விருப்பமில்லை என கேட்க......

நான் அவளை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாமா,; எனக்கு இதுல விருப்பமில்ல இவ்வளவு தான் சொன்னான்" வேற எதுவும் சொல்லல என்று சொன்னார்."ஓ "என கேட்டுக்கொண்டவள் ... பதில் ஏதும் கூறவில்லை.


பின் மணி சொன்னது போல் சேலை கட்டி தலையில் பூ வைத்து மாலை 5 மணி ஆனதால் எல்லோருக்கும் அவளை காப்பி போட......

வெளியில் வெற்றி வரும் அரவம் கேட்டது, வந்தவன் வந்ததும் ஹாலில் இருந்த பாட்டியை பார்த்து அவரது கையை பிடித்து அவர் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க. ............

செல்வியும் இருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

இவருக்கும் அவள் கொண்டு கொடுக்க வெற்றி சிரித்துக்கொண்டே எடுக்க பாட்டியும் ஏண்டா வெற்றி உன் பொண்டாட்டிக்கு காபி போட.... இவ்வளோ, நேரமா? என குறை கூறிக்கொண்டே எடுத்தார்.


எவ்வளவு நேரம் எடுக்கிறானு பாக்காதீங்க பாட்டி............ காபி டேஸ்டா போட்டு இருக்கான்னு பாருங்க.

எப்பவுமே," என் பொண்டாட்டி போடுற காபி டேஸ்ட் செமையா இருக்கும்" என வார்த்தைக்கு வார்த்தை அவளை விட்டுக்கொடுக்காமல் அவளுக்காய் பேச.............

அது மட்டுமல்லாமல் ,"அவளது கைகளைப் பிடித்து தன் அருகில் அமர்த்தி அவளது தோளில் கை போட்டு கூற"............


செல்வி,
வெற்றி தனக்காக, தன்னை விட்டுக்கொடுக்காமல் எவ்வளவு தூரம் பாட்டியிடம் பேசிய வெற்றியை காதலாக பார்க்க .........................வெற்றிம் திரும்பி அழகாக அவளைப் பார்த்து தன் பல்வரிசை தெரிய சிரித்தான்.
காபி குடித்ததும் எழுந்து கொண்டவன் ,தான் ப்ரஷ் ஆகி வருவதாக சொல்லி பாட்டியிடம் விடைபெற்றுத் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.

அவளும் அவனோடு செல்ல........

பாட்டிக்கு தான் பொறுக்க முடியவில்லை. இவளை விட நன்றாகப் படித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் தன் பேத்தி , இவளை விட எந்த விதத்தில் என் பேத்தி குறைந்துவிட்டாள் என அவர் வஞ்சத்தை மனதில் வைத்து எண்ணிக்கொண்டிருக்க......


அறைக்குள் வந்ததும் செல்வி வெற்றியிடம்,

ஏங்க, உங்களுக்கு எதுக்கு?........." அவங்க பேத்திய கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல" என கேட்க..........

அவனோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு; அதை ஏன் கேட்கிற ?என்றான்.


சொல்லுங்க, என அவன் என்ன பதில் சொல்வான்? என எதிர்பார்த்து நிற்க.

என்ன சொல்ல? என......" தன் தலையில் தட்டி யோசிப்பது போல் யோசித்து," இந்த லூசு தான் எனக்குனு இருக்கும் போது," எனக்கு வேற எவளையோ எப்படிடீ பிடிக்கும்?..........தன் புருவம் உயர்த்த............

ஏனோ அவளுக்கு ,"தன்னை அவன் லூசு என சொல்கிறான்" என்பதெல்லாம் கருத்தில் படாமல்....................

தன்னை என்னவள் என அவன் தனக்கு உணர்த்துகிறான் என்று உற்சாகம் தோன்ற காதலாக அவனைப் பார்த்து சிரிக்க....

அடியே! என அவளது கைகளை பிடித்து தன் பக்கத்தில் இழுத்து அவளை அணைத்துக் கொண்டு அடியே, உனக்கு நான் ஊருக்கு போகம்போது தானா பார்த்து இப்படி எல்லாம் சிரிக்கணும் அப்படின்னு தோணுமா அவளது தலையைத் செல்லமாக முட்ட..........................

அவளது சிரிப்பு பாதியில் இருக்க அவனை அண்ணாந்து பார்த்தாள்.

ஆமாம்மா எனக்கு ட்ரெய்னிங் போட்டு இருக்காங்க," ரெண்டு மாசம் கொஞ்சம் தூரத்தில் போட்டு இருக்க. அதனால் அங்கேயே தங்கி வேலையை முடிச்சிட்டு வரலாம்ன்னு இருக்கேன்.
.
ஏன் இப்படி? என்பதுபோல் பார்க்க.........

என்ன செய்ய ?என்று போல் அவன் பதில் பார்வை கொடுத்தான்....

இருவரும் சற்று நேரம் பேசிவிட்டு வெளியில் வர

ஒரு நற்செய்தி பாட்டி ஊருக்கு கிளம்புவதாக.......

ஏன் பாட்டி இப்பவே ஊருக்கு போகணும் அப்படின்னு சொல்றீங்க ............... இன்னைக்குதான வந்த ரெண்டு நாள் தங்கிட்டு போகலாம் இல்ல....


எனக்கும் ஆசை தான் ராசா ஆனா இப்பதான் போன் வந்தது. நிவேதாவை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம்.

அதனால நான் போனா தானே முடியும். நான் போரகாரியம் நல்லபடியா முடிஞ்சதும் ஒரு மாசம் வந்து தங்கி விட்டு போறேன் என சொல்லி நாளை காலை கிளம்புவதாக உள்ளே சென்றார் .

வெற்றி தற்போது தான் ட்ரைனிங் செல்வது பற்றி தன் குடும்பத்தினருடன் பேச

எல்லோருக்கும் வருத்தம் தான் என்றாலும் போய்தான் ஆகவேண்டும் என்பதால் சம்மதித்தனர்.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement