16 (2) அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
Hai friends,
sorry konjam late aagittu,.........pidichirunthaa like & comment pannunga ,...........







சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த வெற்றி, திடீரென்று செல்வி உனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியுமா?.... என கேள்வியாக அவளை பார்க்க....


ம்ம்ம்ம்... தெரியுமே.....

ஓகே; அப்போ சரி........... வெயிட் பண்ணு," ஒரு வாரத்துல நம்ம ஒரு ஸ்கூட்டி எடுத்திடலாம்"என சிரித்துக்கொண்டே சொல்ல......

வெற்றி சொன்ன பதிலை கேட்ட செல்வி துள்ளிக்குதிக்க.......

சிவா ; டேய் மச்சி! அவ சொல்றத நம்பாத டா............ அவளுக்கு லைசன்ஸ் கூட கிடையாது டா ஏதோ,; நம்ம ஊருக்குள்ள பக்கத்தில் எங்காவது போயிருப்பா வேற எங்கேயும் வண்டி ஓட்டி பழக்கம் இல்லடா,' என சிவா வெற்றியிடம் சொல்ல


வெற்றியும் "அப்படியா" என்பதுபோல் செல்வியை பார்க்க.......

டேய் !டேய்! போதும்டா ,அண்ணா போதும்.....
எப்பவுமே சிவா அண்ணா ஏதாவது சொன்னால் ;உடனே அவர் சொல்வது கரெக்டாதான் இருக்கும் அப்படின்னு என்ன விஷயம்....... கூட கேட்காம ok சொல்லுவ இப்ப என்னவோ எதுக்கு எடுத்தாலும் நீ இந்த............ லூசு அண்ணியை பாக்குற என்றும் நீ உன் பிரண்ட நம்ப மாட்டியா..... அவன் பங்குக்கு செல்வியை கலாய்த்து வெற்றியை விளையாட்டாய் அதட்ட ........



செல்வி,
கவினை பார்த்து முறைத்து கொண்டே போதும் நிறுத்துடா நான் ஒன்னும்,' ஸ்கூட்டி இருந்தாதான் காலேஜ் போவேன்னு சொல்லல"...........பின் தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவள்........


டேய் கவி எதுக்குடா ,எப்ப பார்த்தாலும் என்னை ஏதாவது சொல்லி கிட்டு இருக்க ;நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சிவா என்னடான்னா
எங்கிட்ட லைசன்ஸ் இல்ல அப்படிங்கறாஅது மட்டுமா எனக்கு ஒழுங்கா ஓட்ட தெரியாது அப்படி என்கிறா....


நீ என்னமோ அவரு நீங்க சொல்ல சொல்ல கேட்காம ,ஸ்கூட்டி எடுத்துட்டு வந்த மாதிரி என பேச முடியாமல் மூக்கு விடைக்க அழுகையை அடக்கி கொண்டே சொல்ல.................

அவளை பார்க்கவே வெற்றிக்கு பாவமாக இருக்க அவனும் செல்வியை அமைதி படுத்த முயல;

அவளோ விடாமல்,
என் யூஜி பிரென்ட் அணுவும் அங்குதான் சேர்ந்து இருக்கா............... அவளுக்கும் உங்க ஊரு தான் அதுவும் பக்கத்துல தான் நான் அவகூட பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் ஏறி காலேஜ் போய்க்கிறேன்............ போங்கடா................... என கோபமாக தன் அறைக்கு செல்ல.......


ஏய் பாப்பா குட்டி.......... என சிவா அவளை கூப்பிட அவளோ போடா திரும்பி தலையசைத்துவிட்டு.......
உள்ளே சென்று கதவை அடைத்தாள்.


வெற்றி இருவரையும் பாவமாக பார்க்க.....

டேய் !போடா போடா!............ போய் அவளை சமாதானப்படுத்தும் சிவா தான் அவனை உள்ளே அனுப்பி வைத்து தான் கிளம்புவதாக சொல்லி கிளம்பினான். அவனுக்கு ,
தன் தங்கையின் கோவம் சிறுபிள்ளை தனமானது என்றும் வெற்றி எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள் என,
கவின் சோகமாக இருக்க அவனையும் சமாதானபடுத்தி அவளே கோவம் குறைந்து வந்து பேசுவாள் என அவனையும் அழைத்துச்சென்றேன்



வெற்றி கதவை லேசாக திறந்து உள்ளே பார்க்க அங்கே கட்டிலின் ஓரத்தில் தன் கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்து இருந்தாள்...... அவனின் அன்பு மனையாள்.
ஒருவழியாக அவளுக்கு அவர்கள் சொல்வதின் நியாயத்தை எடுத்துக் கூறி அவளை சமாதானம் செய்து மறுநாள் கல்லூரிக்கு போகவேண்டியது பற்றியும் பாடம் சம்பந்தமான சில டிப்ஸ்களையும் அறிவுரைகளையும் ஒரு ஆசிரியராக அவளுக்கு வழங்க ஆரம்பித்து விட்டான்



செல்வியும் எவ்வளவு விளையாட்டாக இருந்தாலும் விளையாடுவாள் அதுபோல் படிப்பிலும் அவள் கெட்டிதான்....
அதனால் இப்போது அவனுக்கு மாணவி ஆகி அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்துவிட்டாள்.



ஒரு வழியாக மறுநாள் காலை விடியலும் பரபரப்பாக..................

அதுவும் காலையில் வெற்றிக்கு முன் எழுந்து குளித்து வீட்டு வேலைகளில் தன் மாமியாருக்கு உதவ சென்றுவிட்டாள்...
என்றைக்கும் விட இன்று தாமதமாக எழுந்த வெற்றியும் தன் பக்கத்தில் தன் மனைவியைத் தேட அவள் எங்கே அங்கு இருந்தாள்..............


அவள்தான் அப்போதே தனது மாமியாரிடம் சென்று விட்டாலே,......... இது தெரியாத வெற்றி எழுந்து தன் அறை முழுவதும் தேட....... காணவில்லை ;பின் அவசர அவசரமாக குளித்து விட்டு வெளியில் வந்து பார்த்தால்........

அவள் அவனின் அம்மாவுடன் பேசிக்கொண்டேகாய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தாள்











அதைப் பார்த்து சிரித்துவிட்டு அவனும் வெளியில் சென்று விட்டான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top