16. அன்பின் வெற்றிவேல்

#1

சாரி தோழர்களே,

கொஞ்சம் லேட்டாயிடுச்சு.......
எல்லோரும் வாசிங்க ......பிடிச்சிருந்த லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க.....
இன்றோடு வெற்றியின் குடும்பம் திருச்செந்தூர் சென்று வந்து பத்து நாட்கள் ஆகியிருக்க......அவன் அங்கே இருந்த இரு நாட்களுமே," சரிதாவை அம்மு ;அம்மு..... என சுற்றி வருவதைப் பார்த்த இருவீட்டு பெரியவர்களும்
கலந்து பேசி,
கவினுக்கு அம்முவை இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதாக இரு குடும்பத்தாரும் பேசி வைத்திருக்க..........
அவர்கள் சொல்வதைக் கேட்ட கவினுக்கும் சரிதாவுக்கும் தங்கள் காதல் நிறைவேறியதில் மிகுந்த சந்தோசம்....... அதுவும் கவினுக்கு சொல்லவே வேண்டாம் .........தான் சிறுவயதிலிருந்தே சுற்றிவந்த தன் அம்மு, தனக்கு கூடிய விரைவில் தன் மனைவியாக தன் வீட்டில் தன் அருகில் வாழ போகிறாள் என்று ........அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை..........
அந்த சமயத்தில் கவினுக்கும் அவன் ஆசைப்பட்ட வேலை கிடைத்திருக்க, இன்னும் ஒரு மாதத்தில் வேலையில் சேர்வதற்கான ஏற்பாடுகள் நடந்திருந்தது. அவன் தன் வேலை விடயமாக சுற்றிக்கொண்டிருந்தான்......

அதுபோல்,
செல்விக்கு இன்னும் கல்லூரி துவங்க இரண்டு நாட்களே இருப்பதால்," வெற்றியும் செல்வியும் ;

அவளுக்கு கல்லூரிக்கு தேவையான புக் நோட்ஸ் டிரஸ் எல்லாம் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றிருக்க........

அப்போது வீட்டுக்கு வந்த கவின் மிகவும் களைத்துப் போயிருந்தான்.............

அவன் வந்து அமர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்த மணி.............

டேய் கவி ,"என்னடா ஆச்சு எதுக்கு டா? ........... இப்படி சோர்ந்து போய் இருக்க" என்று கேட்க,


ஆமா அம்மா, "ரொம்ப டயர்டா இருக்கு".......
கொஞ்சம் அந்த அந்த ஜன்னலை திறந்து விட்டு ஃபேன் போடும்மா.............அவரும் அவன் சொன்னதை செய்ய....... அவனும் தனது எதிரில் இருந்த டீப்பாய் மீது காலை வைத்து சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.......

அம்மா அப்படியே," கொஞ்சம் ஜில்லுனு ஜூஸ் போட்டு எடுத்துட்டுவாம்மா"............அவரும்" என்றுமில்லால் தன்மகன் இன்று மிகவும் களைப்பாக இருப்பதால்",........ உடனே போய் அவன் கேட்ட ஜூஸ் போட்டு எடுத்துக்கொண்டு வர...........
ஜூஸ்ஸை தன் கையில் வாங்கிக் கொண்டு மறுகையால் அவரது கையை பிடித்து தன் அருகில் அமர வைத்து
சந்தோசமாக அதனை வாங்கி பருகிக்கொண்டே...... அம்மா உனக்கு என் மேல இவ்வளவு பாசமா........
இத்தனை நாள் எனக்கு தெரியாம போச்சேம்மா.........
நீ இப்படி எல்லாம் என்னை விழுந்து விழுந்து கவனிப்பண்ணு தெரிஞ்சிருந்தா.......... டெய்லியும் கிரவுண்டுக்கு போய் விளையாடி இருப்பேனே........... என அவரது தாடையைப் பிடித்து கொஞ்ச.......

அவனது கையைத் தட்டி விட்டவரோ,டேய் "என்னவோ வேலை விஷயமா அலையிறியே வெயிலில் அலைந்து கொண்டிருப்பனு நினைச்சு உனக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தா?.......
"நீ விளையாடிட்டு
வந்ததும் இல்லாமல் ஹாயா சோபால வந்து உட்கார்ந்து பேன்ன போடு..... ஜன்னலைத் திற ......ஜூஸ் எடுத்துட்டு வா அதுவும் பிரஸ் ஜூஸ்........ என சொல்லி சொல்லி அவனது காதைப் பிடித்துத் திருகிக் கொண்டே ஒரு கையால் அவன் முதுகில் இரண்டடி போட".........
அவன் ஒரு லாவகமாக அவரது கையில் இருந்து தப்பி அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே..... அம்மா," அப்படியே நல்ல முறுக நெய் தோசை சுட்டு எடுத்துட்டுவாம்மா".........
என கத்திக் கொண்டே அவனது அறையினுள் சென்றுவிட்டான்.........

மணியும் தனது இளைய மகனின் குறும்பினை நினைத்து சிரித்துக் கொண்டே அவன் கேட்ட அந்த தோசையை செய்ய சென்றார்.........
அறைக்குள் சென்று கவின் விரைவாக ,ஒரு குளியலைப் போட்டு வந்து கட்டிலில் அமர்ந்து; தன் அம்முவிடம், தனது அலைபேசியில் தங்களது காதலை வளர்க்க............

அவன் கேட்ட தோசை சுட்டு கொண்டு வந்த மணியும் அவனைப்பார்த்து ,டேய்! அதுக்குள்ள
குளிச்சிட்டியாடா நீ?........

என அவன் கையில் சாப்பாடு தட்டை திணிக்க .......அவனும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு அவரது கையில் போனை கொடுத்தான்..........

அவரும் தனது மருமகளிடம் நலம்
விசாரிக்க ;கவினும் அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டே சாப்பிட்டான்.......... அப்போது,

வெளியில் வெற்றியின் வண்டி சத்தம் கேட்க கவினிடம் போனை கொடுத்து விட்டு வெளியில் வந்தார்...

அப்போது அவர்கள் இருவரும் உள்ளே வர, விரைந்து போய் செல்வியின் கையிலிருந்த பைபிளை வாங்கியவர்......

டேய் என்னடா இது அன்புவ வெயிட் தூக்க வச்சுட்டு நீ சும்மா வர ..... என வெற்றியை திட்டியபடி அவர் பைகளை வாங்கி மேசையில் வைத்தார்.

வெற்றி, அட நீங்க வேற ஏன்ம்மா? இவ்ளோ நேரம் நான் தான், பைய தூக்கிட்டு வந்தேன். இப்போ தான், இங்க வந்ததும் வண்டியில் இருந்து இறங்கி எடுத்துட்டு வந்து இருக்கா; நீங்க என்னமோ அங்கிருந்து நடந்து தூக்கிட்டு வர்ற மாதிரி," ரொம்ப தான் பண்றீங்க! போங்கம்மா" ....வர வர நீங்க உங்க மருமகளுக்கு தான் அதிகமாக சப்போர்ட் பண்றீங்க.......
என அவன் பொய்யாக கோவித்துக்கொள்ள......

வெற்றியின் பேச்சைக் கேட்ட மணி" போடா டேய் "!என சிரித்துக்கொண்டார்.


பின் என்னமா ?செல்வி ,"உனக்கு தேவையானதெல்லாம் வாங்கி தந்தானா வெற்றி"?

அவளும் சிரித்துக் கொண்டே ஆமா அத்தை .....என தான் கொண்டு வந்த பைகளை எடுத்து, அதில் 2 பெட்டிகளை எடுத்து அவரது கையில் கொடுத்தாள்.

அவரும் அவள் தந்ததை பிரித்து பார்த்துக்கொண்டு என்னம்மா இதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வந்த?......


அத்த நல்லா இல்லையா? உங்களுக்கு பிடிக்கலையா உங்களுக்கு பிடிக்கலைனா மாத்திக்கலாம்.....

ஐயோ ,அப்படி எல்லாம் இல்ல மா நல்லா இருக்கு... அதெல்லாம் அழகா இருக்கு; இப்ப எதுக்கு வீண் செலவு எங்களுக்கு எல்லாம் எதுக்கு எடுத்துட்டு வந்த..........

அதுக்கு என்னத்த எனக்கு எடுக்கப் போனேன். அப்போ உங்க எல்லாருக்கும் எடுக்கணும்னு ஆசையா இருந்தது; அதான் எடுத்துட்டு வந்தேன்........ கவின் எங்கத்த வந்துட்டானா?.....

இதோ வந்துட்டேன் நீ என்ன அவனும் வெளியில் வந்தான்.

டேய் இந்தாடா உனக்கு... புடிச்சிருக்கான்னு பாரு என அவன் கையில் ஒரு பெட்டியை திணிக்க பாரு......


அண்ணி ,நீயா செலக்ட் பண்ண?......... பரவால்ல அழகா இருக்கு பிளாக் கலர் ஷர்ட்....

டேய் அடங்குடா. ....... உனக்கு பார்த்து பார்த்து செலக்ட் பண்ணுணேன் நீ என்ன கலாய்க்கிறீயா? இருடா உன்ன பாத்துகிறேன்...... என அவனைப் பார்த்து பழிப்பு காட்ட


அவர்களைப் பார்த்து வெற்றியும் மணியும் சிரிக்க நேரம் கலகலப்பாக சென்றது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் அனைவரும் வீட்டில் இருக்க.......

தங்கை நாளைக்கு முதல் நாள் காலேஜ் செல்வதால் சிவாவும் வந்து இருந்தான்.

நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க........ கவின் தான் டேய் அண்ணா நாளையிலிருந்து இரண்டு பேரும் ஒன்னாதான் காலேஜ் போறீங்களா? இல்ல தனித்தனியா போகப்போறீங்களா?...
கவின் அப்படி கேட்டதும் மற்ற இருவரும் வெற்றியின் முகத்தை பார்க்க......... அவன் செல்வி முகத்தை பார்த்து தன் புருவங்களை உயர்த்தினான்.

பாப்போம் இருவரும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என......
.......... 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement