15.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
hai friends,
like and comment pannura ellarukkum rompa thanks.......






வீட்டுக்கு வந்த எல்லாருக்கும் கமலம் காப்பி போட்டு கொடுக்க; அனைவரும் குடித்துவிட்டு ஓய்வெடுக்க செல்ல........



வெற்றி செல்விக்கு மாடி அறை ஒதுக்கிருந்தனர். அதன் பக்கத்தில் உள்ள அறையில் சரணும் திவ்யாவும் தங்க.......



கவினுக்கு கீழே சரிதா அறைப்பக்கம் ஒதுக்கி இருக்க........

அவனுக்கு வசதியாய் போனது.



தனது அறைக்கு சென்றவன் ,வேகமாக உடை மாற்றி வெளியில் வர.........



அதேசமயம் சரிதா, தனது அறைக்கு
வர. .......
அவளை பார்த்தவன் அவள் பின்னாடியே வந்து, அவளுக்கு முன் அவள் அறை உள்ளே சென்று அவளை அறைக்குள் இழுத்து கதவை அடைத்தான்...........



அவனை பார்த்து பதறியவல்.........



ஐயோ அத்தான் என்ன பன்னுறீங்க?......"முதல்ல கதவ திறங்க ....யாராவது வந்தா அசிங்கமாகிடும்....

என அவன் பிடியில் இருந்து திமிர"......


அதெல்லாம் ஒன்னும் ஆகாது......நான் வெற்றி கிட்ட சொல்லி யாரும் வராம பாத்துகிறேன்........கெத்தாக சொல்ல.....



அத்தான் ,"நீங்க என்ன லூசா??..... .....வெற்றியத்தான் என்ன நினைப்பாங்க? ........பர்ஸ்ட் வெளியபோலாம் வாங்க!......என அவள் காதவருகே செல்ல ..........


அவளை நிறுத்தியவன்....

ஐயோ! ஏன்டி ,படுத்துற என தன் தலையில் அடித்துக்கொள்ள .......

அடியே, நம்ம கிட்டதட்ட நான்கு வருசத்துக்கு அப்புறம் பாக்குறோம்.......

அப்பக்கூட அத்தான் எப்படி இருக்கீங்க னு ஆசையா கேட்டியா?......இல்ல ஒரு பார்வையாவது பார்த்தியா?.........என கேட்டு அவளை முறைக்க.....



எதுக்கு கேட்கனும் இல்ல நான் எதுக்கு கேக்கணும் சொல்லுங்க?...
........நீங்க என்ன பாரின்....லயா.....
இருந்தீங்க என கேட்டு வேகமாக அவன் பிடியில் இருந்து தன் கைகளை உருவிக்கொண்டு......
இதோ இங்க இருக்க நெல்லையில் இருந்துட்டு ,"நீங்க ஒவரா பில்டப் பன்னாதிங்க....... என தன் கைகள் இரண்டையும் இடுப்பில் ஊன்றி தன் முட்டைக் கண்களை உருட்டி விழித்தாள்...........



கவி தான் மிரண்டு விட்டான் அவளது இந்த புதிய அவதாரத்தில்......

"எப்பவுமே அத்தா...ன். ... அத்தான்... என தன்னை சுற்றி வரும் சரிதாவா இது"தான் திட்டினாள் கூட இல்ல......இல்ல ........அதட்டினாலே...... தன் கண்கள் இரண்டையும் கசக்கும்; அந்த அப்பாவி சரிதாவை இது எனப் பார்த்துக் கொண்டு நின்றான்.

"அவன் நினைத்தது என்னவோ"??..... தன்னைப் பார்த்ததும்; ஏன் அத்தான் என்னை பார்க்க வரவில்லை ?என கதறுவாள் " என்று நினைத்தால் ...... அவளோ அவனை கதற விட்டு விட்டாள்.



இருந்தும் ,அவள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு;

ஆமா," நான் வந்தா மட்டும் என்ன பண்ணுவீங்க"?......நாலு வருசம் முன்னாடியே உங்க அப்பாவும், அம்மாவும்;
நான் வந்தாலே உன்ன ரூம விட்டு வெளிய விடமாட்டாங்க.......

.........நான் என்னமோ," நீ வெளிய வந்தா உன்ன கூட்டிட்டு போய் விடுவேனோ "என்று பயந்து வெளி விடமாட்டாங்க....... இதுல, நான் போன் பண்ணா கூட பயப்படுறாங்க..... உங்கப்பா கிட்ட மாமா எப்படி இருக்கீங்க ன்னு?... கேட்டா,ஏதோ கடன் கொடுத்தவன் கடன் கேட்க போன் பண்ண மாதிரி பதறுறாரு"...... என அவன் விடாமல் பேசிக் கொண்டே செல்ல..................

"சரி சரி .....போதும்"...

"நிறுத்துங்க"...........நீங்க என்னமோ பச்ச புள்ள மாதிரி பேசுறீங்க.............. "பத்து வயசிலேயே வா அம்மு நம்ம கல்யாணம் பண்ணலாம்னு கூட்டவருதானே நீங்க".........


"அதோடவா விட்டீங்க?....... பத்து வயதிலேயே எங்க சித்தி கல்யாணத்துக்கு வந்துட்டு..... "மணமேடையில இருந்த சித்தி சித்தப்பாவை எழுந்திரிக்க சொல்லி என்ன ரகளை பண்ணீங்க...... இதுல இந்த வயசுல," நீங்க போன் பண்ணா பயமா தான் இருக்கும்".......
என தன் தந்தையின் வார்த்தைகளுக்கு நியாயம் சொல்ல.....


கடைசியில் கவின்தான் அவளைப் பார்த்து அசடு வழிய என்றான்.

வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்க................

ஐய்யோ! என பதறி" சரிதா கவினை பார்க்க அவனோ, கூலாக அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்தான்".

அவளோ பதறி,
ஐயோ! அத்தான் இப்ப என்ன பண்றது?.......

நீ ஒன்னும் பண்ண வேண்டாம்........... கதவு தட்டுவதை வெற்றியா தான் இருக்கும் ...."போ"..... எவ்வளவு நேரம்
தட்டுவான்?" போ!போய் திற".......


அது உங்களுக்கு எப்படி தெரியும்?............ நான்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்ல.... நீங்க எதுக்கு சொன்னீங்க?........

அடியே மக்கு அம்மு," நான் உன் கூட தானே பேசிட்டு இருந்தேன்" நான் எப்போ சொன்னேன்?....

அப்புறம் எப்படி அவர்தான் கதவை தட்டுறதுனு சொல்றீங்க.......

அடியே லூசு அம்மு," அவன் என்னை தேடி ரூம் போயிருப்பான்........ நான் அங்க இல்லாததால் , எப்படியும் உன்கிட்ட தான் இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டு இங்க வந்து கதவை தட்டுறான்".......


அவளோ ,அவனை அர்ச்சைத்துக்கொண்டே கதவினைத் திறக்க.....

வெற்றி தான் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்....


அவளோ, அவனைப்பார்த்து சங்கடமாக உள்ள வாங்கத்தான் என அழைக்க .....

அவனும் சிரித்துக் கொண்டு...

என்னமா? அவன் ,ரொம்ப ஓவரா பண்றானா"......

நான் வென்ன கொஞ்சம் தட்டி வைக்கட்டா......

அவ்வளவு தான் அவனது இயல்பான பேச்சு அவளையும் வாயடைக்க வைத்தது.......

பின் மூவரும் சகஜமாக பேசிவிட்டு........ வெற்றி கவினிடம் ,டேய் !கவி கொஞ்சம் பொறுத்து இருடா .............
இன்னும் ஒரு வருஷம் போகட்டும்; சரிதா படிப்பு முடிச்ச உடனே நானே வீட்ல பேசி கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.....

" நீயும் இப்பதான் படிப்ப முடிச்சிருக்க.. ... நீ ,வேலையில ஜாயின் பண்ணனும்..... இந்த, ஒரு வருஷம் ஒழுங்கா யூஸ் பண்ணிக்கோ என ஒரு அண்ணனாக அவனுக்கு எடுத்துக்கூற".........."கவினும் கருமமே கண்ணாக தலையசைத்தான்"............


ஆமா ,டேய்! அண்ணா அண்ணிய எங்கடா?...

"டேய் !அவ தியா கூட விளையான்டுட்டு இருக்கா......

சரிடா கவி, வாங்க நம்மளும் அங்க போலாம்....... என வெற்றி இருவரையும் அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வர................

அங்கே, தியா தனது மழலை மொழியில், பாட்டுபாடி நடனமாடிக் கொண்டு இருந்தாள்..............

அதை பார்த்துக்கொண்டு மூவரும் அவர்கள் பக்கத்தில் வர, அந்த குட்டி வாண்டு வெட்கப்பட்டு ,செல்வியின் பின்னால் ஒளிய......
அப்போதுதான் செல்வி திரும்பி பார்த்தாள்.........

உடனே மூவரையும் பார்த்து எங்க போனீங்க ........" எவ்வளவு நேரமா தேடுவது?........... என கவினை பார்த்து முறைக்க.............


ஐயோ! அண்ணி ,நீங்க என்ன பார்த்து முறைக்க கூடாது." உங்க ஆளு அந்த பக்கம் நிற்கிறான்"....
அவன் கிட்ட கேளுங்க எங்கடா போனனு"........

போடா லூசு.... அவனைத் திட்டிவிட்டு, தியா குட்டி டான்ஸ் ஆடுங்க நம்ம மாமா பாக்கலையா?... வாங்க வாங்க ஆடுங்க ...... என அழைக்க.

இப்போது தனது அம்மாவை இருக்கமாக கட்டிக் கொண்டது.


பின் மெதுவாக செல்வியிடம் வந்து அவளை மீண்டும் விளையாட அழைக்க.......... எல்லோரும் சேர்ந்து கண்ணாம்பூச்சி விளையாட நேரம் எட்டு மணி ஆனது.. ..

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அனைவரும் பேசிவிட்டு தூங்க சென்றனர்....... ...






 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top