14(2)அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member


வெளியில் வந்த வெற்றி ,

தனது அம்மாவிடம்;

அம்மா, எதுக்குமா கூப்பிடுங்க? "சொல்லுங்கம்மா"

டேய்! அவங்க ரெண்டுபேரும் எங்கடா?..

இதோ வந்துட்டோம்......

டேய்! கவி," உன்ன அவங்களை கூட்டி வர தானடா சொன்னேன்".

அத விடுங்க மா அதான் வந்துட்டோமே ,சொல்லுங்க........



அவன் பேச்சைக் கேட்டு அவரது தலையில் தட்டி கொண்டவர்; உன்னலாம் என்ன செய்யறதுன்னே தெரியலடா......

அவரைப்பார்த்த செல்வி.... அவன விடுங்கத்த நீங்க சொல்லுங்க..........

அதுமா , நம்ம எல்லாரும் சேர்ந்து வர வெள்ளிக்கிழமை நம்ம குலதெய்வ கோயிலுக்கு போகலாம்னு இருக்கோம்.........
உங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க போனது....... உங்க கல்யாணம் முடிஞ்ச, உடனே உங்களை கூட்டிட்டு போயிருக்கனும்.... "இரண்டு வாரம் ஆயிடுச்சு"......

அதனால உங்கமாமா வர வெள்ளிக்கிழமை போலாம்னு சொல்றாரு....... உனக்கும் வெற்றிக்கும் வசதிபடும் தானே, போலாம் தானே........

செல்வி வெற்றியை பார்க்க.........

அவனும் அது எல்லாம் ஒரு பிரச்சனை இல்ல போகலாம்மா......
எனக்கு வெள்ளிக்கிழமையில் இருந்து மூணு நாள் லீவு தான்.......

ஓ ! அப்படியே வெற்றி ரொம்ப நல்லதா போச்சு.......
நம்ம குலதெய்வக் கோயிலுக்கு போயிட்டு அப்படியே பக்கத்துல இருக்க உங்க அத்த வீட்டுலயும் ஒரு நாள் தங்கிட்டு வந்துடலாம்....

கவின், அட என்னமா! அத இப்ப சொல்றீங்க ....இததான் அம்மா நீங்க ஃபர்ஸ்ட் சொல்லியிருக்கணும்..... நம்ம அத்த வீட்டுக்கு போறோம்மா. அப்போ சரி ஒகே..........

போடா தடியா .....
சரிபா வெற்றி ....... நான் அப்பாகிட்ட சொல்லிட்டுவறேன்..... ......அப்புறம் திவ்யா வீட்டுக்கு சொல்லனும் நான் போய் பாக்குறேன்...

செல்வி,
டேய் கவி!... என்னடா? உன் பேச்சு சரி இல்லையே....... ஏங்க என்ன விஷயம் .... இவன் முகமே பிரகாசமாய் தெரியுது..........

இவள் வெற்றியுடம் கேட்க....


அவன விடு செல்வி...... இவன் இப்படித்தான் .......அங்க போயிட்டு வரமட்டும் இப்படித்தான் இருப்பான்.........

ஏங்க அப்படி என்ன ஸ்பெஷல்.........

வெயிட் பண்ணு மா ,அது அங்க போய் தெரிஞ்சிக்கலாம்.......

அதெல்லாம் முடியாது இப்ப சொல்லுங்க,.....

இவர்கள் இருவரும் தன்னைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..........
என்பது கூட கருத்தில் பதியாமல் எங்கேயோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்(கவின் )..........

கவினை பார்த்த வெற்றி தலையில் அடித்துக்கொண்டு சிரிக்க.......

செல்வி அவனை ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்......

வெற்றி கவினை உலுக்கி நிகழ்காலத்துக்கு கொண்டுவர.......

செல்வியும் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.....

ஏங்க உங்க கோயில் எந்த ஊரில் இருக்குது?.......





அதுவா செல்வி, ய்ங்க இருந்து ஒரு ரெண்டு மூன்று மணிநேரம் டிராவல் தான்........... திருச்செந்தூர் பக்கத்துல ஒரு கிராமத்தில் இருக்கு.......
ரொம்ப சக்தி வாய்ந்த கோயில்.......


எப்பவுமே வருஷத்துக்கு ரெண்டு தடவை கோவிலுக்கு போய் விடுவோம்........
பக்கத்துல திருச்செந்தூரில் தான் எங்க அத்தை அப்பாக்க தங்கச்சி வீடு...... ரொம்ப பாசமா இருப்பாங்க.... "நாங்க சின்ன பசங்கள எப்போவுமே.... நான் கவி திவ்யா எல்லாரும் லீவுக்கு அடிக்கடி போவோம்".........
போன 10 நாள் 15 நாள் தங்கி ஜாலியா சுத்திட்டு தான் வருவோம்.......

அப்புறம் வளர வளர படிப்பு வேல அப்படின்னு போயிடுச்சு....
அதான்," நம்ம கல்யாணத்துக்கு அத்தை மாமாவ வந்துருந்தாங்கல நீ பார்த்திருப்பியே .. உனக்கு நான் சொல்லித் தந்தானே"........

ஏங்க இது உங்களுக்கே ஓவரா இல்ல....... கல்யாணத்துக்கு அந்த எல்லாத்தையும் தான் இப்படிச் பண்ணி வச்சு இல்லையா எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?..........

சரிமா விடு...... "அதான் இன்னும் ரெண்டு நாள்ல அங்கு போறோமே.... அப்போ தெரிஞ்சிக்கலாம்".........

சரி சரி இதவிடு ....வா நாம போகலாம். நீ வந்தது அட்மிஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி கொடு.....

சரிங்க வாங்க போலாம்.......

அவளும் pg போர்ம் பண்ணி கொடுக்க......

அவனும் அட்மிஷன் போட்டுவிட்டு வந்தான்....... இப்படி இரண்டு நாட்கள் கடக்க.......

காலையில் பரப்பரப்பாக எல்லோரும் கோயிலுக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள்......

ஏய் திவ்யா என்னடி எல்லாத்தையும் எடுத்து வச்சிடியா?......... தியா குட்டி எங்க?.......
தியா செல்வி கிட்ட இருக்காம்மா....... செல்வி தான் அவளுக்கு டிரஸ் பண்ணி மேக்கப் பண்ணிட்டு இருக்கா..........

அப்போ சரி "எல்லாத்தையும் எடுத்து வச்சாசா......சரி வா வண்டில எடுத்து வைக்கலாம்".........

அவர்களை பார்த்த வெற்றி....


ஆமா என்ன பண்ணறீங்க?....
அக்கா நீ அம்மாவை உள்ள கூட்டிட்டு போ..... நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்....

சரிடா வெற்றி.........

இவர்கள் இருவரும் உள்ளே வர இவர்களைப் பார்த்து ஓடி வந்தது ;அந்த இளஞ்சிட்டு.......

ம்மா...பாத்தி.... என அழகாக குட்டி பட்டு பாவாடை சட்டையில் தலையில் இரண்டு குட்டி போனிடையிலும் சுற்றி குண்டுமல்லி வைத்து வகிட்டில் குட்டியா நெத்திச்சுட்டி வைத்து அழகாக அலங்கரித்து வைத்திருந்தாள் செல்வி.........

பார்க்க குட்டி தேவதையாக ஓடி வந்தால் தியா குட்டி......

அவளைப் பார்த்த திவ்யாவும் மணியும் அவளை தூக்கி முத்தமிட்டு அவளை கொஞ்ச............ அந்த குட்டி வாண்டு..." பாத்தி முத்தம் வைக்காத மேக்கப் கலதிடும்.......


அடியே பாருடி திவ்யா இந்த குட்டிய ........

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த கவின்.....

தியாவை தூக்கிக்கொண்டு...
"டேய் தியா குட்டி இதுஎல்லாம் யாருடா சொல்லி தந்தா"?........

அது மாமா என தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தபடி..........." அம்மா நாளைக்கு அப்பாத்த சொன்னா"....... என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திவ்யா தலையில் அடித்துக் கொள்ள, கவின் வாய் பொத்தி சிரித்தான்..........மணி தலையில் அடித்துகொண்டு செல்ல....

இவர்கள் பின்னாடி வந்த செல்வியும் இதை கேட்டுவிட......
திவ்யாவுக்கு ரொம்ப வெக்கமா போச்சு.........

" அவளோ அய்யோ! என நைஸாக தப்பிக்க பார்க்க"........
கவினும் செல்வியும் அவள் முகம் போன போக்கில்.........
சத்தமாக சிரித்து விட்டனர்.......

இவர்கள் சிரிப்பதைப் பார்த்த வெற்றியும் சரணும் உள்ளே வர...........

சரணை பார்த்த கவின், தியாவை பாட்டி கிட்ட போய் சொல்லி இறக்கிவிட்டுடு.....
"என்ன அத்தான் காலையில ரொமான்ஸ் போல"...... என வம்பிழுக்க..........

செல்வி வாய்பொத்தி சிரிக்க....... "திவ்யா சரண்னை இழுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்".........

இவர்களைப் பார்த்த வெற்றி என்னடா நடக்குது இங்க?......

அண்ணா இதெல்லாம்," நீ அண்ணி கிட்ட தான் கேக்கணும் என செல்வியை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிட்டான்"...........

வெற்றிசெல்வி கேள்வியாக பார்க்க..........

அவளும் சிரித்துக்கொண்டே நடந்ததை சொன்னாள்............

இவ்வாறு கலாட்டாவாக கோவிலுக்கு வந்து சேர.......

காலை ஒன்பது மணி தாண்டிவிட்டது.......... இரண்டு கார்களில் வந்திறங்க, வண்டியில் வந்த அசதியில் தியா தூங்கிக் கொண்டிருக்க அவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு நடந்தால் திவ்யா அவருடன் சரணம் பைகளை தூக்கிக்கொண்டு நடக்க.........

அவர்களுக்குப் பின்னால் வந்த கவினும் சுற்றி முற்றி யாரையோ தேட.............

அவன் கூட வந்த வெற்றி அவனது தலையில் தட்டி டேய் போடா........ அதெல்லாம் அவங்க மதியானம் பூஜைக்கு தான் வருவாங்க............. கொஞ்சம் வெயிட் பண்ணுடா ரொம்ப அலையாத என்க....

அவன் பேச்சைக் கேட்ட கவின் பொங்கி எழுந்து; டேய் அண்ணா! "உனக்கு என்னடா தெரியும் உன் பொண்டாட்டி உன் கூடவே இருக்காங்க"...........
"நான் அப்படியா நீதான் லவ்வே சொல்லணும்"..........

கவின் பேசுவதைக் கேட்ட செல்வி அதிர்ச்சியாக வெற்றியையும் கவினையும் மாறி மாறி பார்க்க............

அவளது பார்வையில்.....
"வெற்றியோ சத்தமாக சிரித்து விட்டான் ;............ டேய் போதும்டா போதும்டா...... முதல்ல படிச்சி முடி டா" .......... அப்புறம் பார்க்கலாம்.

போடா அண்ணா....
என அவன் முன்னால் நடக்க......



செல்வி வெற்றிடம்,
"என்னங்க நடக்குது இங்க?".....


"விடு செல்வி போகப்போக உனக்கே தெரியும்". வா போலாம்
என வேகமாக நடந்தனர்.


இவர்கள் போய் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்க.....

வெற்றியின் அத்தை குடும்பம் வந்தது........

அவனது அத்தைக்கு இரண்டு பெண்கள் .......... மூத்தவள் சுபிதா பக்கத்து ஊரில் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை. இரண்டாவது " சரிதா"..... இவளைத்தான் நம் கவின் தேடிக்கொண்டிருந்தது.....
இவள் இப்போது இளங்கலை இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்...........




இவர்கள் சிறுவயதிலேயே கவிஞனுக்கு சரிதா என்றால் மிகவும் பிடிக்கும்..... அதுவும் கொலு பொம்மை போல் இருக்கும் அவளை சிறுவயதிலிருந்தே அம்மு அம்மு என அவளை சுற்றிச் சுற்றி வருவான் யாரையும் தூக்க விட மாட்டான்..........அதற்கு ஏற்றார்போல அவளும் அவனை அங்கிருந்து நகர விடமாட்டாள்.

இவர்களது செய்கையை பார்த்த அனைவரும் கவிஞனுக்கு தான்
சரிதா என பேசி சிரிப்பார்கள்........

அவனுக்கும் அது பசுமரத்தாணி ஆக பதிந்து போனது........

கிட்டத்தட்ட அவளைப்பார்த்து நான்கு வருடங்கள் ஆகிஇருக்க......
ஆர்வமாகப் பார்த்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த
அவளோ தலை நிமிர்ந்து அவனை பார்க்கவே இல்லை...........


அவள் பார்க்க்காததால் கவினின் முகம் வாட, அதைப் பொறுக்காத அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.......

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்ட செல்வி........
வெற்றிடம் காட்ட அவனும் சிரித்துக் கொண்டான்.

பின் நல விசாரிப்புகள் முடிந்து பூஜைக்கு தயாரானார்கள்.

பூஜைக்கு திருமணம் முடிந்த புது தம்பதிகள் பொங்கல் வைப்பது வழக்கத்திலுள்ளதால் வெற்றிசெல்வி இருவரும் சேர்ந்து பொங்கல் வைக்க இனிதாய் பூஜை நடைபெற்றது...........


பூஜை முடிந்ததும் வெற்றியின் அத்தை கமலம்.....

செல்வியிடம் நன்றாக பேச, பேச்சுவாக்கில் ஏத்தா நீ படிக்க போறதா அண்ணி சொன்னாங்க......

படிக்கிறது எல்லாம் சரித்தான்...
ஆனா அதுக்காக குழந்தையும் தள்ளிப்போடத்தா காலகாலத்தில் பெத்துக்கங்க..........

அதுதான் வாழ்க்கைக்கு நல்லது குடும்பத்துக்கு நல்லதுத்தா என்க............

அவர் பேசியதன் உண்மை .......
தனது அம்மாவும் அப்பாவும் பேசியது நினைவுக்கு வந்தது......... இரண்டு நாட்களுக்கு முன் செல்வி தன்னை வெற்றி படிக்க வைப்பதாக சொல்லியதை சந்தோஷமாக சொல்ல அவளது அம்மாவும் அப்பத்தாவும் இவர் சொன்னதை போல் அப்புகுட்டி நீ படிக்கிறது தப்பில்ல; அதுக்காக படிச்சு முடிச்சபிறகுதான் குழந்தை பெத்துப்பேன் சொல்ல கூடாது ........இதுஎல்லாம் காலக்காலத்துல நடக்கனும்னு சொல்ல..........

அவளோ அவர்கள் பேசியது எதையும் காதில் வாங்காமல் அசால்ட்டாக விட்டுவிட்டால்......

ஆனால் இப்போது கமலும் அதை சொல்ல அவளும் மௌனமாக தலையசைத்தாள்.........

இவள் அமைதியாய் இருப்பதை பார்த்த வெற்றி.........

பூஜை முடிந்து எல்லோரும் காரில் கிளம்ப......
அவளது அத்தை பெண் சுபிதாவும் அவள் கணவனும் வந்த பைக்கை வெற்றி வாங்கி அவர்களை காரில் அனுப்பி வைத்தான்.......

"வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தையை கொன்டுகிட்டு நீங்க பைக்கில் வரவேண்டாம்"........ நானும் செல்வியும் பைக்ல வாறோம்.......

நீங்க கவின் வந்த காரிலேயே ஏருங்க ......... அவன் சொல்வதும் சரி என பட அவர்களும் கிளம்பினர்.

இப்போது நிதானமாக செல்விடம் என்னாச்சு செல்வி?...
எதுக்கு உன் முகம் வாடி போய் இருக்கு?......

அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க வண்டி எடுங்க நாம போகலாம் என அவள் அவனது முகத்தைப் பார்க்காமல் வண்டியை பார்த்துக்கொண்டு சொல்ல.............

சொல்லு செல்வி....... "உன்ன பத்தி எனக்கு தெரியாதா? எதுக்குடா உன் முகம் வாடிப்போய் இருக்குது?" ......
சொல்லுமா என்ன ஆச்சு? யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா ?அத்தை ஏதாவது சொல்லிட்டாங்களா?....

கேள்வியாக கேட்டு கொண்டே செல்ல ..........

அவளும் அவர் சொன்னதையும் தன் அம்மா அப்பத்தா சொன்னதையும் சொன்னாள்.........

அதனைக் கேட்டுக் கொண்ட வெற்றி.......

ஏய் செல்வி ,"இதுக்கு போய் எதுக்கு அப்செட் ஆகுற"........

நம்மை அவங்க சொல்ற மாதிரி குழந்தை வேண்டாம் என தள்ளியாருக்கோம்........

இப்போதான் நமக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கு போகப்போக புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை தொடங்கலாம்னு
இருக்கோம்........ நீ கவலைப்பட தேவையில்லை................ப்ரீயா விடுமா.........
என் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தான் ......

அதுவும் முடியாமல் போக அவள் இன்னும் யோசனையிலேயே இருந்தாள்........

அவனும் அவளை கலாட்டா பண்ண முடிவெடுத்து அப்போசரி ,"இன்னைக்கு ஆரம்பிச்சுடலாம் நம்ம வாழ்க்கையே சரியா என்க"..........

அவளோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.......

அவனோ குறும்பாக சிரிக்க அவன் தன்னை கேலி செய்கிறான்....... என புரிந்து கொண்டு அவனை துரத்த ஆரம்பித்தாள்.........

இவ்வாறாக ஒரு வழியாக தங்களது அத்தை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top