13.என்னவள் நீதானே

SharmiMohanraj

Well-Known Member
#1
ஜானுவின் உடைந்த மனத்தை பாத்தவுடன் ஆதவ்வும் உடைந்து தான் போனான் என்றே சொல்ல வேண்டும்..
ஜானு முதன் முதலாக தன் காதலை அவனிடம் சொன்ன போதே தன் நண்பனின் நிலையை அறிந்து தன் மனதை அடக்கியவன் ஆயிற்றே..
இன்று அவளின் கலங்கிய முகம்
நோக்கியவுடன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ என்ற குற்ற உணர்வு தோன்ற அவளை சமாதானப்படுத்த சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்று அவளின் தோளை பற்றினான்...
அவன் தோளை பற்றிய அடுத்த நொடியே தன்னவன் மீது சாய்ந்து அழ தொடங்கினாள் ஜானு,எங்கே ஆதவ் தன்னை வெறுத்துவிட்டானோ என்றெண்ணி....
அவளின் எண்ணத்தை உணர்ந்தவனாக அவளை பார்த்து பேச தொடங்கினான் ஆதவ்..
ஆதவ்,"ஜானு இங்க பாரு ... அழரத கொஞ்சம் நிறுத்து ப்ளீஸ்.."என்றான்.
அவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த ஜானு அழுகையை கட்டுப்படுத்தி அவனை ஏறிட்டு பார்த்தாள்..
ஆதவ்வோ ஜானுவை நோக்கி," அடிச்சது வலிக்குதா என்றான் "குற்ற உணர்வுடன்...
அவன் மனமறிந்த ஜானுவோ அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் அவனிடம் பேச தொடங்கினாள்.. "நீங்க அடிச்சது வலிக்கல... உங்களை நானே புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்திட்டங்கிறது தான் ரொம்ப வலிச்சது.. நீங்க என்ன வெறுத்தர மாட்டீங்கள்ள என்றாள் வெறுமையான குரலில்....
ஆதவ்வோ மனதில், 'இவளை இப்படியே விட்டா ரொம்ப யோசிப்பா' என நினைத்து அவளின் மன நிலையை மாற்றும் பொருட்டு வழக்கம் போல் அவளை சீண்ட தொடங்கியிருந்தான்..
ஆதவ் சிரிப்புடன் அவளை நோக்கி,"அப்போ இன்னும் எவ்ளோ வேணாம் உன்ன அடிக்கலாம் போலயே" என்றான்..
ஜானுவோ அவனின் சிரிப்பை பாத்தவுடன் அவளும் சிரிச்சுக்கிட்டே,"ஹோஅப்போ சார், அடிச்சதுக்காக வருத்தப்படல.. ஹ்ம்ம்" என்று புருவம் உயர்த்தி வினவினாள்..
அவனும் சிரித்துவிட்டு,"சரி நம்ம சண்டையை அப்பறம் வச்சுக்கலாம், எதுக்கு என்ன அவசரமாக பாக்க வர சொன்ன அதை சொல்லு முதல்ல" என்றான்.
ஜானு,"அட ஆமா நடந்த பிரச்சனையில் நான் எதுக்கு உங்கள வர சொன்னேன்னே மறந்துட்டேன்" என்றாள்.
ஆதவ் செல்லமாக அவள் தலையில் கொட்டிவிட்டு," மேடம் எனக்கு டைம் இல்ல கொஞ்சம் சீக்கிரம் சொல்றிங்களா..."
ஜானு ஆதவ்விடம்,"எனக்கென்னமோ அண்ணன் ஆராதனாவை லவ் பன்றானோன்னு தோணுது"என்று தான் மனதில் பட்டதை உரைத்தாள்.
ஆதவ்வும் அதை ஆமோதிப்பவனாக தலையசைத்து விட்டு ,"எனக்கும் அப்படி தான் தோணுது இருந்தாலும் சிவா மனசு இப்போ ஒரு நிலைல இல்ல கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம்" என்றுரைத்தான்.
ஜானு,"ஆராதனாவும் லவ் பண்ரா தானே.. எனக்கு என்னவோ அண்ணாவை விட இவளை பாத்தா தான் அப்டி தெரியுது.. உங்க தங்கச்சி தானே கேட்டு சொல்லுங்க"என்றாள்.
அவனும் விடாமல் ஏன் இப்போ ரெண்டு பேரும் தான் பிரண்ட் ஆகிட்டிங்கல்ல.. நீயே போயி கேட்டுக்கோ என்றான்..
ஜானு,"சரி நம்ம ரெண்டு பேருமே சேந்தே அவ கிட்ட போய் கேட்போம்.. இப்போ நான் கெளம்புறேன்.. உங்களுக்கும் டைம் ஆகுது.. அப்பறம் தேங்க்ஸ் அண்ட் சாரி பார் ஆல்" என்று அவனை நோக்க..
அவனும் அதை புரிந்தவனாக," ஹேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல..மீ டூ சாரி பார் ஆல்.. பை பாத்து போ போய்ட்டு மெசேஜ் பண்ணு" னு சொல்லிட்டு அவளை அனுப்பிவிட்டு இவனும் கிளம்பினான்...
அங்கோ ஆராதனா சிவாவிடம் பேசணும் எப்படி போயி பாக்கறது எங்க போயி பாக்கறது.. இன்னிக்கு வேற வீட்ல இருந்து வெளிய போக விட மாட்டாங்களேனு யோசிக்க...அவளின் வானர பட்டாளம் அவளை தேடி வீட்டிற்கு வந்தது..அவர்களை பாத்தவுடன் இது தன் அன்னையின் வேலை தான் என்றுணர்ந்தாள்...
அவளின் மனதை மாற்றுவதற்காகவே அவர்களை வர சொல்லியிருந்தார் பார்வதி,
தாய் அறியாத சூழலா என்ன..?
நண்பர்கூட்டம் அவளை கவலையுடன் பாக்க அந்த பார்வை நாங்க இருந்தும் உனக்கு இப்படி ஆயிடுச்சே என்பதை போல் இருந்தது அவளுக்கு... அவளே நண்பர்களிடத்தில் பேச ஆரம்பித்தாள்..
ஆரா,"ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க.. என்ன ஆச்சு.."
அக்ஸா,"நாங்க உனக்கு யாரோ ஆயிட்டோமா டி, ஏன் எங்க கிட்ட ஏதும் சொல்லல.."
அஸ்வத்தோ, அஜய்யை பாக்க அதில் அர்த்தம் உணர்தவனோ.... அக்ஸாவிடம்,"ஹே விடு அவ சூழ்நிலையில இருந்து யோசிச்சு பாரு அவ என்ன பண்ண முடியும்... இதுவரைக்கும் அவ கிட்ட நம்ம என்ன நடந்துச்சுன்னு கூட கேக்கல"
அதை ஆமோதித்தவளாய் ஆராவிடம் நெருங்கி என்ன நடந்தது என கேக்க அவளோ நடந்த அனைத்தையும் நண்பர்களிடம் உரைத்தாள்...
ஆராவின் நண்பர்களுக்கு கண்ணனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.. இருந்தும் அவர்களால என்ன பண்ண முடியும்..
சிவா அதை பாத்துகிறேன்னு சொன்னதாக ஆரா சொல்லி இருந்ததால, கண்ணனின் அரசியல் பின்புலத்திற்கும் அவனுடன் மோத சரியான ஆள் சிவா என்றே தோன்றியது அவர்களுக்குள்...
அந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள்ள ஒரு பயம் வந்துருது அதே மாதிரி தான் இப்போ அவ அந்த விஷயத்தை பத்தி அவங்க பிரண்ட் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும் போது கூட ஒரு உதறல் அவளுக்குள்.. அவளின் கையை பிடித்த அக்ஸா அவளுக்குள் ஒரு நம்பிக்கை தர அஜயும் அஸ்வத்தும் வழக்கம் போல் மொக்கைய தொடர அந்த இடமே கலகலப்பானது...
இடையிடையே சிவாவின் எண்ணம் அவளின் மனதில் வந்து கொண்டே தான் இருந்தது.. அவ கிட்ட ஜானு நம்பர் தான் இருக்கு.. ஜானுவுக்கு போன் பண்ணாலும் சிவாவை பத்தி எப்படி கேக்கறதுன்னு தயக்கம் வேற..
சிவாக்கும் அன்னிக்கு காலைல எழுந்ததுல இருந்து அவளோட நியாபகமா தான் இருந்துச்சு...அவளுடைய நம்பர் இருந்தும் எப்படி பேசறதுன்னு ஒரு தயக்கம்.. பேசி ஒரு வேளை தப்பா எடுத்துகிட்டானா என்ன பண்றதுன்னு வேற யோசனை.. அதே யோசனையுடனே கிளம்பி ஆபீஸ் சென்றுவிட்டான்....
சிவா ஆராவுடன் பேசுவானா????
 
#10

Nice ud dear
 
Advertisement

Sponsored

New Episodes