12.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
உள்ளே வந்த வெற்றி,

......... தான் வந்தது கூட தெரியாமல் கட்டிலில் படுத்து "ஏதோ பலத்த யோசனையில் இருக்கும் தனது மனையாளை பார்த்துக்கொண்டிருந்தான்"......





அவளோ ஒருவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கூட அறியாமல்......... அதே நிலையில் இருந்தாள்.



சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்ற வெற்றியோ....... அவளது கவனத்தை கலைக்க வேண்டும் என அவள் படுத்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக நின்று "பே"என கத்தி விட்டான்.........





அவனது கத்தலில் திடுக்கிட்டு எழுந்த செல்வியோ........... தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற வெற்றியை தீ பார்வை பார்த்தாள்.........

சற்று யோசித்தவள்,

அவனை முறைத்துக் கொண்டு அவனை அடிக்க வெற்றியின் கையை பிடித்து இழுத்தாள்.......



அவனோ, திடீரென தனது கையை பிடித்து இழுப்பாள் என அறியாதவன்.......

பேலன்ஸ் இல்லாமல் ,

அவள் மீதே விழ, அவனது இதழ்கள் அனுமதி இன்றி அவளது நெற்றியில் பதிந்தது.....



அவளோ அதிர்ச்சியில் தனது கண்களை விரிக்க, வெற்றி தான் சுதாரித்து விலகினான்.



அவளோ மறுபடியும் ,அவனை முறைத்துக்கொண்டு ஒழுங்கா நிற்க மாட்டீங்க............

பாருங்க," இப்போ உங்களால எனக்கு வலிக்குது. போங்க போங்க ஒழுங்கா நிற்க தெரியாது.விழுந்ததுதான் விழுந்திங்க அவ்வளவு இடம் இருக்குல்ல தள்ளி விழ வேண்டியதுதானே.......

என் மேல எதுக்கு விழுந்தீங்க பாருங்க இப்ப எனக்கு வலிக்குது என அவள் உதட்டைப் பிதுக்க.............



அவனுக்கு , "அவளைப் பார்க்க வளர்ந்த குழந்தையாக தெரிந்தாள்".

அவளை சற்று ரசித்தவன்; பின் வலிக்குது என்றதால்...........ஏய் செல்வி! சாரிம்மா என்னாச்சு எங்க வலிக்குது?............



என்ன சொல்லுது திருத்திரு விழித்தவள்,

சுதாரித்து, அதெல்லாம் ஒன்னும் இல்ல விடுங்க....... நீங்க படுங்க.நான் பாத்துக்கறேன் என்றாள்.....





அவள் சொல்லியும் மனது கேட்காதவன், அவளது நிலை புரியாமல் அவளிடம் ,மறுபடியும் சொல்லுமா எங்க வலிக்குது?...

நான் மருந்து போட்டு விடுறேன்

என்க.



அவனது கூற்றில் பதறி போனவள், ஐயோ எனக்கு ஒன்னும் இல்ல......... "நீங்க தூங்குங்க நான் பார்த்துக்குறேன் என்றாள்".



" இப்ப எதுக்கு செல்வி பதறுற"



நான் என்ன வேற யாருமா?....சொல்லு உன் புருஷன்மா .........நீ எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லு.

என்னால முடிஞ்சா கண்டிப்பா

உனக்கு உதவி செய்வேன்......







அவன் இவ்வளவு தூரம் சொல்ல தயங்கி தயங்கி அவனை நிமிர்ந்து பார்த்தவள்.......பின் வேகமாக தலை குனிந்து தரையை பார்த்துக் கொண்டே ,"இல்ல அது வந்து, .....திக்கி திணறி அது நெஞ்சில் அடிபட்டுட்டு என கூற".........



அவளது தயக்கத்தின் காரணம் புரிந்தவன் சாரிம்மா.......நீ கொஞ்சம் பொறுத்துக்க ....."நான் வந்துறேன்"என வெளியில் சென்றவன்.......

..பத்து நிமிடத்தில் மீண்டும் வந்து அவள் கையில் மருந்து தந்துவிட்டு தான் வெளியில் இருப்பதாக சென்றுவிட்டான்.



அவள் என்னவென்று பார்க்க ...

......." மருந்து அவளும் அவனது அக்கறையில் குளிர்ந்து மருந்தினை போட்டுக்கொண்டாள்".............







அவள் கதவைத் திறக்க உள்ள வந்தவன்....... கட்டிலின் மறுபக்கம் படுத்துக்குக்கொன்டான்......



சிறிதுநேரம் அவனையே பார்த்துக்கொண்டு நின்றவள்....... (அவளது மனதில் எந்த மாதிரி மனிதன் இவன் ..........கீழே விழுந்தேன்......

தூக்கிட்டு போனான் ;இப்போது வலிக்குது என்றேன், மருந்து வாங்கி தந்தான் )

தானும் போய் அடுத்த பக்கத்தில் படுத்துக் கொண்டாள்....



" கதிரவன் தன் கதிர்களை பூமியை நோக்கி பரப்ப அழகாக உதயமானது இளங்காலைப்பொழுது".............



சூரியக்கதிர்கள் ஜன்னலின் கதவில் பட்டு தெறிக்க லேசாக விழிப்புத் தட்டியது செல்விக்கு............



தன் கண்கள் கூச மெல்ல கண்களை கசக்கி மீண்டும் தலையணையில் முகத்தை புதைக்க........ அதுவோ கடினமாக இருந்தது.......



இவளும் என்னடா இது........

என மறுபடியும் தலையணை என நினைத்து வெற்றியின் மார்பில் முகத்தை தேய்க்க......." வெற்றிதான் தூக்கத்திலிருந்து விழித்து ," ஏய் செல்வி ஏண்டி முகத்தை தேய்க்கிற கூசுதுடீ.....

என மீண்டும் அவளது இடையை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்க..........



அவளோ, அவனது வார்த்தையில் வாரி சுருட்டி எழுந்தாள்........... அதாவது முயன்றால் ஆனால் முடியவில்லை......... வெற்றியின்

கை இரும்பு பிடியாக அவளது இடையை சுற்றி வளைத்து இருந்தது............



வெற்றி விடுங்க; என்ன பண்றீங்க....... என அவஸ்தையாக நெலிய........

" ஏய் ,நீ பேசாம இருடி தூக்கம் வருது என்க"..........





எடுங்க உங்க கையை.........

நான் போறேன்; நீங்க தூங்குங்க........ ....

......முடியாது தூங்குடி ..............



அவள் எழுப்ப எழுப்ப அவன் அசைந்தபாடில்லை.......... "அவளோ அவனது கையில் நறுக்கென்று கிள்ள".........



சடாரென்று கையை எடுத்து தேய்த்துக்கொண்டு ...... "ஏண்டி கிள்ளுற" என வினவ.....



அவளும், அவனை முறைத்துக் கொண்டு " என்ன இதெல்லாம்.....



என்ன பண்றீங்க .......என அவர்கள் இருந்த கோலத்தை

சுட்டிகாட்டி விவரிக்க........



அவனும், அசால்டாக ஏன்? நான் என்ன பண்ணேன்........ என்றான்.



அவளோ," என்ன?.... பண்றது எல்லாம் பண்ணிட்டு..... நான் என்ன பண்ணேன்....... நான் என்ன பண்ணேன் என கேட்க்கிறீங்க"?...........

என அவள் அவனிடமிருந்து எழ அவனும் எழுந்தமர்ந்தவன்......



அடியே நான் என்னமோ உன்ன கட்டி புடிச்சு தூங்குற மாதிரி சொல்லிட்டு இருக்க.....

தினமும் தூங்குன கொஞ்ச நேரத்துல," என் பக்கத்துல வந்து என் மேல கை போட்டு என் நெஞ்சிலே படுத்து தான் தூங்குற"............

நானும் உன்னை விலகி தள்ளி படுத்தாலும்.......

நீ மறுபடியும் பக்கத்துலதான் வார....... அதான் நான் கட்டில் விளிம்புக்கு போனதும் ,"நான் உன்ன அனைச்சி படுத்துக்குறேன்"...........

என்ன தினமும் நான் உனக்கு முன்னே எந்திரிச்சு போயிறதால , உனக்கு தெரியல......... இன்னைக்கு நீ முன்னும் கூட்டி முடிச்சிட்ட அதனால காச்மோச்னு கத்துற.........



ஏ லூசு ...... தினமும் எந்திரிக்கும் போது உன் பக்கத்துல இரண்டு பக்கமும் தலையணை இருக்குமே எப்படினு கவனிச்சியா?.

நீ விழுந்திடபோறனு தான் நான் வச்சிட்டு போவேன்............



அவன் சொல்லியதை யோசித்துப்பார்த்தால்........... பின்பு மெதுவாக நிமிர்ந்து வெற்றியை பார்த்து தனது , "கண்களையும் முகம் சுருக்கி உதட்டைக் குவித்து ,"சாரி "என கேட்க....... அவள் கேட்ட விதத்தில் மயங்கி தான் போனான்" ............





வெளியில் அப்பத்தாவின் குரல் கேட்க.......... விடிந்து நேரமாவதை உணர்ந்தாள்......



வெற்றியும் கட்டிலில் இருந்து ஏழ...... செல்வியும் தனது துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்......





நீங்க குளிச்சுட்டு வாங்க.......

நான் வெளியே போறேன்..

"நா லேட்டா போனா எங்க அப்பத்தா என்ன திட்ட ஆரம்பிச்சிரும்" என அவனிடம் கூறிவிட்டு வேகமாக கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.........





இவள் வருவதைப் பார்த்த அப்பத்தா ....... ஏய் அப்புகுட்டி இது நீதானா?..... காலைல எந்திரிச்சு குளிச்சிருக்க.......என முகவாயில் கை வைத்து போலியாக ஆச்சரியப்பட.........



செல்வி அப்பத்தாவை முறைத்துக்கொண்டு இருக்க....



அங்கு வந்த தங்கம்" என்னத்த என்ன ஆச்சு"?......



ஏத்தா தங்கம் பாத்தியா உன் மொவல (மகளை).........



அவரும் தனது மாமியாரின்

வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து

சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்...........





போ போ அப்பத்தா," உனக்கு ரொம்ப தான் கொழுப்பு...... நீ

திட்டுவனு தான் குளிச்சிட்டு வந்தேன்"......... ஆனா நீ என்ன கிண்டலடிக்கிற ....... என முகத்தை திருப்பிக் கொண்டு அவள் பின்கட்டுக்கு சென்று விட்டாள்........



பின் கட்டு வாசலில் அவள் அமர்ந்திருக்க...... அவளது அம்மா அவளுக்கு காபி கொண்டு கொடுத்துவிட்டு வெற்றிக்கும் கொடுக்குமாரு சொல்லி செல்ல........ அவளும் தனது காபியை குடித்துக்கொண்டு வெற்றிக்கு கொண்டு சென்றாள்.........



அப்போது தான் குளித்து விட்டு வெளியில் வந்த வெற்றியும், அவள் தந்த காபியை பருகி விட்டு...... இருவரும் வெளியே வந்தார்கள்......



சோபாவில் அமர்ந்திருந்த சிவாவும் இவர்களைப் பார்த்து தன் அருகில் அமர சொல்ல அவர்களும் அவனருகில் அமர்ந்து பேசத் தொடங்கினர்..........







செல்வி,

சிவா எல்லாரும் சேர்ந்து

எங்காவது போலாம் டா கவிக்கும் திவ்யா அண்ணிக்கும் போன் பண்ணு என்க.......





சிவாவும் வெற்றியை பார்க்க அவனும் சரியான தலையாட்ட உடனே அவனுக்கு அழைத்தான்.....



போன் எடுத்த கவி

"சொல்லு சிவா, என்ன?

எனக்கேட்டான்."



அவன் கையில் இருந்து போனை பறித்த செல்வியோ,"கவி நம்ம எல்லாரும் சேர்ந்து ஊர் சுத்தலாம்; வாடா நா அவங்க சிவா நீ அண்ணி தியா எல்லாரும்........சீக்கிரம்

வாங்கடா ...........





கவின்,

ஏய் அண்ணி அமைதியாய் இரு அமைதியா இரு ......அத்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு வரேன்னு சொன்னாங்க ;அவங்க வந்ததும் எல்லாரும் சேர்ந்து போகலாம்.



டேய் அண்ணா நேத்து தானடா போனாரு ......இன்னைக்கு எப்படிடா வருவாரு?.......



லூசு அண்ணி.... உனக்கு தெரியாது..... அத்தான் திவ்யா தியா இல்லாம அவரால் இருக்க முடியாது. அதனால எங்க போனாலும் ,"ஒரு நாளைக்கு மேல வேற எங்கேயும் இருக்க மாட்டாரு "அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்துருவார்....



இதைக் கேட்ட கேள்விக்கு ஆச்சரியமாகவும், சந்தோசமாக இருந்தது .....



சரிடா கவி ....."நீங்க வாங்க வந்தபிறகு அவங்கள செய்து ஓட்டலாம்"..........



சூப்பர் அண்ணி சூப்பர்....

"ஐ அம் வெயிட்டிங்" என அவன் சொல்ல.......



சரி என போனை வைத்தாள்.....



அவர்களும் இரண்டு மணி நேரத்தில் வந்து விட....... அனைவரும் சேர்ந்து தியேட்டர் போகலாம் என முடிவு எடுத்தனர்......



அப்போது இறங்கியிருந்த புது படத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணி விட்டு அனைவரும் சேர்ந்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தாங்க........



இடையில் சரன் மற்றும் திவ்யாவை ஓட்டமும் மறக்கவில்லை.......... நேரம் கலகலப்பாக செல்ல..... மதியம் வெளியில் சாப்பிட்டு விட்டு மாலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு வந்தனர்..........



அப்போது சரண் வெற்றிடம்

மச்சான் உனக்கு காலேஜ் எப்போ ஓபன் ஆகுது



இரண்டு வாரம் இருக்குத்தான் .......



சரி டா அப்ப நீயும் சரி நீயும் எங்க கூட கிளம்பி ஊருக்கு வந்துருங்க ஒரு வாரம் தங்கிவிட்டு வாங்க காலேஜ் போறது ரெண்டு நாளைக்கு முன்னே ஊருக்கு வாங்க அப்புறம் காலேஜ் ஜாயின் பண்ணிக்கலாம்........



அவன் சற்று யோசித்துவிட்டு செல்வியை பார்க்க அவளும் சரியான தலையை அசைக்க........



சரியத்தான் அப்பா கிட்ட பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்......



திவ்யா,

டேய் அதெல்லாம் கேட்டாச்சு அவரும் ஓகே சொல்லிட்டாரு.... சரி, இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு கிளம்பி வாங்க ........



சரி என வெற்றி தலையசைக்க.....



சரண்,

நம்ம நாளைக்கு நைட்டு ஊருக்கு கிளம்பலாம்........



அவர்களை செல்வி வீட்டில் இறக்கி விட்டுவிட்டு ....நால்வரும் வெற்றியின் வீட்டுக்கு சென்றனர்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top