10.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
வெற்றி செல்வியை பார்க்க ...........
அவளோ வேறொரு உலகத்தில் இருந்தாள்.....
அவளது கையைப் பிடிக்க........ உணர்வுக்கு வந்தவள்,
அவள் வெற்றியின் முகத்தினை பார்க்க முடியாமல் அவனது தோளில் முகத்தினை புதைத்துக்கொண்டாள்...


"அவளது செய்கையில் வெற்றியும் சிரித்துக்கொண்டே அவளை இறுக அணைத்துக்கொண்டான்"..........


அணைப்பில் நின்றபடியே செல்வியின் காதில் தன் மீசை முடி உரச "செல்வி" என மெல்ல கிசுகிசுக்க ...........

"அவளும் அதே நிலையில் ......ம்..... என பதில் கொடுத்தாள்"........

" ஓய் பொண்டாட்டி இப்படியே நிக்க எனக்கும் ஆசைதான்....... ஆனால் பாரேன் ; நாம இன்னும் கொஞ்ச நேரம் இப்படி நின்னா
நம்மளை யாராவது தேடி வந்துடுவாங்க"........
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல உனக்குதான் வெக்கமா இருக்கும் என்க........


அப்போதுதான் அவளுக்கு சுற்றுப்புறம் உரைக்க சட்டென்று அவனை விலகி நின்றாள்..........

அவளது விலகளில்,
வெற்றியும் சிரித்துக்கொண்டே
மீண்டும் அவளை தன் பக்கம் இழுத்து
"அவளை தூக்கி வெளிப்புறமாக அமரவைத்து. ....
தானும் தொட்டியிலிருந்து வெளியில் வந்து அவளைத் தூக்கிக்கொண்டு நடக்கலானான்".........




தூரத்தில் பாத்தி பிடித்துக் கொண்டிருந்த பழனி ,
வெற்றி," செல்வியை தனது கைகளில் தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து .....அவர் பதறியடித்து ஓடி வந்து வெற்றிடம் என்னப்பா?.....அம்மா செல்வி என்ன ஆச்சி?...என்று கேட்க.

அவர் பதறியதைப் பார்த்து வெற்றிதான் ,ஒன்னும் இல்லண்ணா தெரியாம வரப்பில் வழுக்கி விழுந்துட்டா...... வேற ஒன்னும் இல்ல "லைட்டா சுளுக்கு தான்"

வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஹாஸ்பிடல் போனோ சரியாகிடும் என்க.........
அவன் சொல்வதற்கு பழனியும் செல்வியின் முகம் பார்க்க.....

அதற்கு செல்வியும் ஆமோதிப்பது போலத் தலையசைத்தாள்......வெற்றி மீண்டும் நடக்க
பின்னாடியே அவரும் வாயில் வரை வந்து......" இருவருக்கும் உதவி செய்து வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்".....

வரும்போது போல் ஐல்லாமல் செல்வி வெற்றியை நெருங்கி அமர்ந்து அவனது தோளில் கை வைத்து முதுகில் சாய்ந்து கொண்டாள்..... லேசாக கால் வலிக்க அப்படியே கண் மூடி
அமர்ந்திருந்தாள் .......

வெற்றியும் அவளை தொந்தரவு பண்ணாமல் வேகமாக வண்டியை ஓட்டி வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்..........

வீட்டின் வாயிலில் கவின் தியாவுடன் விளையாடிக்கொண்டிருக்க..... அவர்களைப் பார்த்த வெற்றி கவினை சத்தமாக அழைக்க ..........
இதோ என வந்த கவின். ....... டேய் என்னடா ஆச்சு ரெண்டு பேரும் நினைச்சிட்டு வந்து இருக்கீங்க.....

உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா மழை பெஞ்சுதா என கிண்டலடிக்க....




கவி வர
அவனது பின்னாடி வந்த தியாகுட்டி ..........ஐ வெச்சி மாமா அத்த என குதிக்க.......
டேய் பாப்பு .....அம்மாவையும் பாட்டியையும் கூட்டிட்டு வாடா தங்கம்

அம்மா ......
என உள்ளே ஓட....

கவின் பக்கம் திரும்பிய வெற்றியோ...

டேய் ! கடுப்பேத்தாத .....
செல்விக்கு வண்டியில் இறங்க ஹெல்ப் பண்ணுடா..........

கவின், என்னடா ஆச்சு அண்ணிக்கு?

அண்ணி என்னாச்சு?

அவன் கேள்விக்கு திணறிய செல்வியோ, பாவமாக வெற்றியை பார்க்க............


டேய் அவ தோட்டத்து வயல் வரப்புல தவறிக் கீழே விழுந்துடாடா........

வெற்றி சொல்வதைக் கேட்ட கவினோ செல்வியை பார்த்து சத்தமாக சிரித்து விட்டான்......

அவன் சிரிப்பதைப் பார்த்து வெற்றியை அவனை முறைக்க....

செல்வியோ தனது முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் வெற்றியை பார்க்க...........


கோவமாக கவின் பக்கம் திரும்பிய வெற்றியோ.......
டேய் நிறுத்துடா !.....எதுக்குடா இப்ப அவளை பார்த்து சிரிக்கிற ....அவளே வலியில கஷ்டப்பட்டு இருக்கானே அவள பார்த்த சிரிப்பியா?........
என வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு மீண்டும் அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டு வீட்டினுள் நடக்கலானான்.............


ஐயோ சாரிடா வெற்றி சாரி அண்ணி..........
என அவர்களின் பின்னாடியே ஓடி வர வீட்டின் உள்ளிருந்து மணியும் திவ்யாவை வந்தனர். .......

வெற்றி ,செல்வியை கையில் தூக்கி வருவதை பார்த்த மணியும் திவ்யாவும்
பதறிப்போய் டேய் என்னடா ஆச்சு?.... ஏன்டா?........
செல்வியை கைல தூக்கிட்டு வர்ற என்று மணி கேட்க.

செல்வி,
பதறாதங்க அத்த எனக்கு ஒன்னுமில்ல ......கீழ விழுந்ததில் சுளுக்கு அதான் நடக்க முடியல கால் வலிக்குது அதான் தூக்கிட்டு வாராங்க.......


பார்த்து வரக்கூடாதாம்மா.... இப்போ பாரு அடிபட்டுருச்சி..... சரி நான் பக்கத்துல இருக்குற டாக்டர் ர .... கூப்பிடுறேன் வந்துருவாங்க.


நீங்க ரெண்டு ரூம்ல போய்; டிரஸ் மாத்திட்டு வாங்க டிரஸ் எல்லாம் இருக்கு பாரு....

" டேய் வெற்றி, பாத்து கூட்டிட்டு போடா...."

இருவரும் உடை மாற்றி வரவும்
டாக்டர் வரவும் சரியாக இருந்தது......


சோபாவில் அமர்ந்திருந்த செல்வியின் பக்கத்தில் அமர்ந்த டாக்டர் அவளது "காலை பிடித்து பார்த்து .... அதற்கு மருந்தும் வலி குறைவதற்கான மாத்திரை கொடுத்துவிட்டு ..... நாளைக்கு சரியாயிடும் என்று விட்டு போய்விட்டார்..........


மதிய சாப்பாட்டு வேலை ஆரம்பித்துவிட்டதால் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு இருக்க....

செல்விக்கு மாத்திரையும் கொடுத்து; அவளை தூங்க வைக்க வெற்றியிடம் சொல்ல அவனும் ,"அவளை தூக்கிக்கொண்டு மாத்திரை கொடுத்து தூங்கவைத்தான்"........


மாத்திரையும் வீரியத்தால் நன்றாக உரங்கி கொண்டிருந்த செல்வி மாலை ஆறு மணி போல் எழுந்து அமர ......

அவள் பக்கத்தில் உட்கார்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான் வெற்றி இவள் அரவம் கேட்டு அவன் தலை நிமிர்ந்து பார்க்க.........
அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவாறு என்னங்க இன்னும் என் பக்கத்திலேயே இருக்கீங்க எனக்கு ஒன்னும் இல்ல என்க.....

என லைட்டாக கால் அசைக்க வலி எடுக்க ஆரம்பித்தது

அவளையே பார்த்துக்கொண்டு கொண்டு இருந்த வெற்றிக்கு அவளது முகத்தில் வலியின் சாயல் தெரிய உடனே எழுந்து ," என்னமா ஆச்சு" என்க...


அவளோ ,"அவனிடம் தயங்கி தயங்கி ரெஸ்ட் ரூம் போனோம் என்றாள்"... உடனே அவன் அவளை தூக்கிக்கொண்டு ரூமில் இருந்த பாத்ரூமுக்கு விட்டுவிட்டு அவளுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்த வெளியே வந்தான் பின் மறுபடியும் அவளை தூக்கி கொண்டு பெட்டில் அமர வைக்க....

(எல்லா பொண்ணுங்களுக்கும்.....
வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போகிற நமது வாழ்க்கை எப்படி இருக்கும் ....நமக்கு யாரு கிட்ட கேட்க்கனும் நமக்கு ஒன்னுனா எப்படி ரியாக்ட் பண்ணனும் என்று சந்தேகம் எப்பவுமே இருக்கும் அதே போல் தான் செல்விக்கும்)


செல்விக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு தனது மண வாழ்வு எப்படி இருக்கும் என்ற சந்தேகம்?.. இருந்தது.

இன்று வெற்றியின் நடத்தைகளால்
மிகுந்த சந்தோஷத்தையும் மன நிறைவையும் நிம்மதியையும் கொடுத்தது.

இவ்வாறு அவள் தனது நினைவுகளில் உழன்று கொண்டிருக்க........ அவளை நிகழ்காலத்துக்கு அழைத்திருந்தது வெற்றியின் குரல்,
"ஏய் செல்வி ,...
.....செல்வி...

ஏய் என்னடி .....இப்பதான் தூங்கி முழிச்ச ;மறுபடியும் " விழித்திருந்து கனவு கானுரியா".....


இல்ல இல்ல சொல்லுங்க .....

இப்ப ,வலி பரவாயில்லையா..... நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போகணும் ."போயிடலாமா இல்லை முடியாதா?....

சந்தோசத்தில்,
"ஏய் எங்க வீட்டுக்கு போறோன்னு சொல்லவே இல்ல"........

என்ன பொண்ணுங்களோ போ.... "நேத்துதான்டி உங்க வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்....அதுக்குள்ள அம்மா வீட்டுக்கு போனும்ன உடனே அப்படி சந்தோஷமாக இருக்குதா"......

அதெல்லாம் உங்களுக்கு புரியாது போங்க ..........அதெல்லாம் பொண்ணுங்க ஃபீலிங்ஸ் அவங்களுக்கு தான் தெரியும்"............ சரி சரி விடுங்க விடுங்க..... நான் மறுபடியும் சாப்பிட்டு தூங்குறேன்...... அப்பதான் நாளைக்கு ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.......

அவளது பேச்சில்,
அவனோ தலையில் அடித்துக் கொண்டு சிரிக்க....

"போங்க போங்க" என சிணுங்கினாள்.........



மறுநாள் ,"செல்விக்கு கால் வலியும் குறைய அனைவரும் கிளம்பி செல்வியின் அம்மா வீட்டுக்கு போய் விருந்துண்டு மகிழ" ......
அங்கே கண்ணன் தன் பேச்சை ஆரம்பித்தார்....... முருகா விருந்துக்கு வந்த பொண்ணு மாப்பிள்ளை இரண்டு நாள் தங்க வைத்து விரிந்து கொடுக்கிறது வழக்கும்.
அதே மாதிரி நம்ம வெற்றியும் தோல்வியும் வருந்தினாள் இங்கு தங்கியிருந்து கொடுக்கலாம்னு இருப்போம் நீ என்னப்பா சொல்ற.....

நீ சொல்றது கரெக்ட்டு தான் கண்ணா அப்படியே செஞ்சிடலாம் .......

டேய் வெற்றி, நீயும் மருமகளும் இரண்டு நாள் இங்கேயே இருங்க....
அங்க தோட்டத்து வேலை எல்லாம் நான் பாத்துக்குறேன்.... உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் கவின் எடுத்துக்கொண்டு தருவோம் இரண்டு நாள் இங்கு சந்தோஷமா இருந்துட்டு வாங்க.....
இவர்களை தள்ளியிருந்த சிறியவர்கள் அனைவரும்
வெற்றி பார்க்க....... அவனும் சரி ப்பா என்றான்.
இப்படியாக, "மாலை வரை அரட்டை அடித்து வெற்றியின் குடும்பம் கிளம்ப"....... அவர்களை வழியனுப்பி வைத்து..... உள்ளே," வந்த அனைவரும் ஓய்வெடுக்க அவரவர் அறைக்கு செல்ல வெற்றியும் செல்வியுடன் அவளது அறைக்கு சென்றான்".......



அறைக்கு வந்து செல்வியோ தனது அறையை ஒருமுறை நன்றாக சுற்றி பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சோடு தனது கட்டிலில் அமர........

"வெற்றி தான் அவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தான்".......

ஏய் என்னடி ........ஒரு மாதிரி திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டு இருக்க. ....." இது உன்னோட ரூம் தானே இல்ல வேற ஏதாவது ரூமுக்கு வந்துட்டியா"...

அவனை முறைத்துப் பார்த்த செல்வியோ,
என்ன நக்கலா புருவம் உயர்த்தி கேட்க......

அவனும் சிரித்துக் கொண்டே ,
" என்னடி உங்க வீட்டுக்கு வந்து ஆட்டம் எல்லாம் ஓவரா இருக்கு என்றான்"...
.
அவளும் அவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்துக்கொண்டே ....
"இனி இந்த செல்வி எப்பவுமே இப்படிதான்" இந்த வெற்றி கிட்ட என்றாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top