1) ‍இனியனின் ❣️ இன்னிசை

Aarudhra jeevitha

Active Member
இந்த புதிய கதை உங்களுக்காக ஆரம்பிக்கப்படுகிறது உங்களின் புரிதலுக்காக இந்த தொடர் கதையில் வரும் கதாபாத்திரங்கள் உங்களுக்காக...


மதன் ❤ தென்றல்
இவர்களின் இரட்டைப் பிள்ளைகள் செழியன் நம்ம ஹீரோ இனியன்
நம்ம மதன் தென்றல் பத்தி ஏற்கனவே இரண்டு குட்டிகதைகள் வெளியிடப்பட்டுள்ளது
மதன தென்றலே இவர்களின் காதல் கதையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த கதையை படித்துக் கொள்ளலாம்..


காசி விஸ்வநாதர் விசாலாட்சி
இவங்க நம்ம அம்பை அம்மா அப்பா
இப்போ இதுல விசாலாக்ஷி உயிரோட இல்ல அம்பை பொறந்து 6 மாத குழந்தையாக இருக்கும்போது அவங்க கடவுள்கிட்ட சேர்ந்துட்டாங்க அம்மா இல்லாம அப்பாவோட அரவணைப்பில் அம்பை வளராங்க...


அருண்

இவர்தான் நம்ம தென்றல் தம்பி மதன தென்றலே கதையை படித்து இருக்கவங்க கேள்விப்பட்டிருப்பீங்க இவருக்கு வாழ்க்கையில் விரக்தி சோகம் துக்கம் ஏமாற்றம் எல்லாம் இருக்குது அதனால் வாழ்க்கையை வெறுத்து தனி அறையில் குடித்து குடித்து உடம்பை கெடுத்துக் கொண்டிருக்கும் மனிதன்...


ஜமுனா
இவங்க தான் நம்ம ஹீரோயின் இன்னிசை அம்மா இவங்களுக்கும் வாழ்க்கையில துக்கம் சோகம் எல்லாம் இருக்கு அதனால தான் அவங்களோட மகளை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பத்திரமா பார்த்து பார்த்து வளர்த்து இருக்காங்க நம்ம பொண்ணு வாழ்க்கை நம்மள மாறி மாறி விடக்கூடாது என்று கூறி தன் மகளை புதுமைப் பெண்ணாக வளர்க்கும் ஒரு லட்சிய தாய்..


மார்த்தாண்டம்

இவர் தாம்பா நம்ம படத்துல வர மாதிரி ஒரு தாத்தா செல்லமான தாத்தா பேத்தி மேல உயிரையே வச்சிருக்காரு இவர்தான் நம்ம அம்பை இன்னிசை இவங்களோட அம்மாக்கு அப்பா அதாவது இவரோட மகள்கள் விசாலாக்ஷி ஜமுனா மூத்த மகளை இழந்து இரண்டாவது மகளின் வாழ்க்கையை பறிபோய் இருக்கும் நிலையில் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கண்ணியமான தாத்தா..


செழியன் சிவசக்கரவர்த்தி

இவர்தான் நம்ம ஹீரோவுக்கு அண்ணன் செழியன் இவரும் ஒரு வகை ஹீரோதான் அழகாய் இருப்பார் செழியன் இனியன் இரட்டை பிறவிகளாக இருந்தாலும் முகம் சற்று மாறுபட்டு இருக்கும் (நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம் என என்னுடைய கதையில் அப்படித்தான் இருக்கும்)
இவர் எப்படிப்பட்டவர் என்றால் தன் தம்பிக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு நல்ல அண்ணன் அவ்வளவுதான் போகப்போக இவர பத்தி நீங்களே புரிஞ்சிப்பீங்க..


அம்பை அங்னிகா தேவி
இவங்கதான் அம்பை எங்களுக்கு முழு பேரு இதுதான் கொஞ்சம் பெரியதாக இருக்கும் அதனாலேயே உங்களுக்கு பல பிரச்சினை நடக்கும் சரி அதை விடுங்க இவங்க தான் நம்ம ஹீரோயின் இன்னிசைக் அக்கா கேரக்டர் இவர்களைப் பற்றியும் போகப் போக தெரிந்து கொள்வீர்கள்..


❣இனியன் சக்கரவர்த்தி ❣

இவர் தாம்பா நம்ம கதைக்கு ஹீரோ பெயர் இனியன் ரொம்ப அழகா இருப்பார் கொஞ்சம் திமிர் ஜாஸ்தி ஆனால் அந்த திமிர் எல்லாம் அடக்கிட ஒருத்தி அவ தான் அவருடைய முன்னாள் காதலி ஆனால் என்ன இப்ப அவர் கூட அவை இல்ல அவ இல்லாத விரக்தியில் நம்ம ஹீரோ பண்ற அட்டூழியத்திற்கு அளவே இல்ல இத கண்டிக்க ஒருத்தி வராமலா போவா அந்த ஒருத்தி யார் என்று நீங்களே பாருங்க..


❤இன்னிசை ஐஸ்வர்யா தேவி❤

இவங்க தான் நம்ம ஹீரோயின் இன்னிசை இயற்கைக்கு இனிமையானவை அவமானச் யாருக்கும் துரோகம் பண்ணது இல்ல அவளோடு எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான் நம்மகிட்ட பழகுறவங்க நமக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கணும் அவ்வளவுதான் அதே மாதிரி நாம இன்னிக்கு கோபம் அதிகமாக வரும் அந்தக் கோபத்தால் அவளுக்கு என்ன ஆகப்போகிறதோ..
குக்கூ
இவங்கதான் பா நம்ம ஹீரோ டெய்லி குக்குகுக்கூ சொல்லி புராணம் பாடிக்கொண்டு இருக்கிறவங்க இவங்க நம்ம ஹீரோவ விட்டுப் போனதால் தான் நம்ம ஹீரோஸ் இந்த நிலைமை அதுக்கு என்ன காரணம் போக போக புரியும்..

எல்லாரும் பற்றியும் விரிவாக விளக்கம் தந்து விட்டது அதுக்கப்புறமா எதுவுமே தெரியாதுன்னு சொல்ல கூடாது..

இனி கதைக்குள் செல்வோம்...

அத்தியாயம்-1

"இசை செல்லம் எப்படியோ உங்க அம்மா கிட்ட எப்படியும் அனுமதி வாங்கியாச்சு'"
இப்போ உன் கூட அம்பையும் வரப்போறா ரெண்டு பேரும் பத்திரமா அங்க இருக்கணும்

அங்க ஒரு நல்ல பிளாட் வாடகைக்கு வாங்கியாச்சு .
ஜாக்கிரதையா இருக்கணும் புரியுதா ஆசிரியர் வேலை என்பது ரொம்பகஷ்டமான செயல் அதுவும் இல்லாம நீங்க இசை பள்ளியில் ஆசிரியராக பணி புரிவது ஒரு கடினமான செயல்
இரண்டு பேருக்கும் அந்த டெல்லி ஸ்கூல்ல வேலை கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம்
அந்த வாய்ப்பை ரெண்டு பெரும் நல்லபடியா பயன்படுத்திகணும் ஆறு மாதத்திற்குப் பிறகு நடக்கப்போற இசைப் போட்டியில் உங்களுடைய கர்நாடக இசை வெற்றி பெறனும்..
என்று அம்பையின் தந்தை காசி விஸ்வநாத்இருவருக்கும் அறிவுரைகளை பொழிந்து கொண்டிருந்தார்..

தந்தையின் அறிவுரைகளை நீண்ட நேரமாக கேட்டுக்கொண்டிருந்த அம்பை பொறுமை இழந்து
" போதும் போதும் உங்க செல்லக்குட்டி இசைக்கு உங்களோட அறிவுரை நானும் தான் இவள் கூட போறேன் ஆனா எனக்கு ஒண்ணுமே சொல்லல என்று அம்பை தன் தந்தையைப் பார்த்து கோபித்துக் கொண்டாள்"

அப்போது விஸ்வநாத் அம்பையை பார்த்து
"இங்க பாரு நீ ஏற்கனவே ஆறு மாதம் பெங்களூரில் தனியா தங்கி வேலை பார்த்துகிட்டு இருந்த அதனால உனக்கு தைரியம் ஜாஸ்தி உனக்கு இப்போ 23 வயசு ஆயிடுச்சு ஆனா நம்ம இசை குட்டி இப்பதான் முதல் முதல்ல வெளியூர் போக போறா துணைக்கு நீ இருந்தாலும் அவளுக்கு என்னுடைய அறிவுரைகள் நிச்சயம் தேவைப்படும் அதான் சொன்னேன் என்று தன் மகளின் தலையில் செல்லமாக தட்டினார்..

சரி சரி எல்லாம் சரிதான் இருந்தாலும் நாங்க டெல்லிக்கு ட்ரெயின்ல போறோம் நேரத்துக்கு போனால்தான் வண்டியை பிடிக்க முடியும்..
இப்படியே பேசினீங்க நான் சித்தியை கூப்பிடுவேன்..

அப்போது இசை அம்பையின் கையை பிடித்துக்கொண்டு
"அக்கா நீ என்ன வேணாலும் பண்ணு இப்ப அம்மாவை கூப்பிடாத அம்மா பேச ஆரம்பித்தால் ரெண்டு நாள் ஆகும் நம்ம டெல்லிக்குப் போய் சேர முடியாது ஞாபகம் வச்சுக்கோ வெளிய நின்னு இருக்கும்போது அம்மாவை கூப்பிடு எல்லாம் அப்பதான் கிளம்பப் போறாங்கள் என்று எதுவும் பேச மாட்டாங்க என்று இருவரும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு காரில் வைத்துவிட்டு அம்மாவை அழைக்க..

ஜமுனா பூஜை அறையில் இருந்து விபூதியை எடுத்து வந்து இருவர் நெற்றியிலும் வைத்தார் பிறகு இரு மகள்களுக்கும் ஜாக்கிரதையா இருக்கணும் பொண்ணுங்களா இருந்து தனியா வெளியூருக்கு போறீங்க வாழ்க்கையில நிறைய கட்டங்களை சாதிக்க வேண்டியது இருக்கு இரண்டு பேரும் உங்களோட புடிச்ச வேலையில் சேர்ந்து இருக்கீங்க அதற்கான பயண அடைந்தே தீரும் புரிஞ்சுதா பத்திரமா போங்க என்று இருவரையும் ஆனந்தக் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார்..

இருவரும் தங்கள் அண்ணனிடமும் அப்பாவிடமும் அன்புடன் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி ரயில்வே நிலையத்திற்கு புறப்பட்டனர்..

ரயில்வே நிலையத்திற்கு வந்தவர்கள் சரியாக அவர்கள் வந்து ஐந்து நிமிடத்தில் அவர்கள் செல்லும் டெல்லிக்கு புறப்படும் ரயில் வந்துவிடவே இருவரும் விரைவாக ஏறிக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டனர்..

அப்போது இன்னிசை இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு இத்தனை நாள் வாழ்க்கையில இன்னிக்குதான் முதல்முறை அம்மாவோட தயவு இல்லாமல் தன்னந்தனிமையில் நிம்மதியா பயணம் செய்யப் போறேன் என்று தன் மனதில் வந்த வார்த்தைகள் அனைத்தும் சினிமாவில் வரும் ஹீரோயின் போல சொல்லி கொண்டு இருந்தாள்...

அவளைப் பார்த்த அம்பை அடிப்பாவி அம்மா முன்னாடியும் அப்பா முன்னாடியும் பெரிய நல்லவ மாதிரி டிராமா போடும் அவங்க இல்லாத போது லட்சணம் புரியுது உனக்கு மனசுல இவ்ளோ ஆசையா இருக்கா என்று தன் தங்கை என் காதைப் பிடித்து திருகினாள்..

வலி தாங்க முடியாத இன்னிசை அக்கா போதும் வலிக்குது நான் என்ன பெருசா சொல்லிட்டே நீ மட்டும் ஆறு மாசம் பெங்களூரில் தனியாய் இருந்த ஆனால் நான் அப்படி இல்லையே இதுதான் முதல்முறை அதனால்தான் வாய்க்கு வந்தபடி பேசிட்டேன் சரி அம்மா செஞ்ச பிரிஞ்சி எடு நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம் என்று இருவரும் ஜமுனா செய்த விரிஞ்சி ருசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..

அதேசமயம்....

எனக்கு இப்ப தான்டா சந்தோஷமா இருக்கு ஒன்னு ரெண்டு வருஷத்துல டெல்லிக்கு கூட்டிட்டு வர்றதுக்குள்ள நான் கஷ்டப்பட்டேன் தெரியுமா நீ வாரேனு என்கிற ஒரு விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சா வீடே திருவிழா கோலத்தில் இருக்கும்
அம்மாவுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நான் எதுவும் சொல்லல பிரண்ட பார்க்க வராம தான் சென்னைக்கு வந்த நீ மட்டும் வருது அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அவங்க எழுந்து ஓடிய நடக்க ஆரம்பிச்சுடுவாங்க என்று செழியன் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க..

நம் நாயகன் இனியன் மனதில் தன் காதலி குக்கூ வை நினைத்துக்கொண்டு வாடிக் கொண்டிருந்தான் அப்பொழுதுதான் கிடாரை பார்த்தவன் அவன் மனம் என்னவென்று தோன்றியது என்று தெரியவில்லை வாசித்து பாட ஆரம்பித்துவிட்டான்..

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே


இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்

இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா

இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

அவன் பாடுவதை அக்கம் பக்கத்தில் உள்ள கம்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் சிலரில் இந்த குரல் நல்லா இருக்கு ஏதோ பெரிய பாடகர் வராது போல என்று பெருமையாகப் பேசினார்..

மறுபுறமோ எந்த நேரத்தில் என்ன பாடுவது விவஸ்தையே இல்ல இங்க வயசானவங்க குழந்தைகள் இருக்காங்க இப்படி ஆகிட்டாரே வாசிச்சிட்டு இந்த பழைய பாட்டு யாராவது பாடுவாங்களா சரியான பைத்தியக்காரன் கையெல்லாம் ட்ரெயின்ல வராங்க என்று சிலர் வாய்க்கு வந்தபடி பேசினார்கள்..

அதே சமயம் ஏதோ பக்கத்து கம்பார்ட்மெண்டில் பழைய பாடல் யாரோ பாடிக் கொண்டிருப்பதை கேட்ட அம்பை இன்னிசை இருவரும் ரொம்ப நல்லா இருக்குல்ல இருந்தாலும் கிட்டார் யூஸ் பண்ணி யாராவது இந்த பாட்ட பாடுவாங்களா என்னதான் இருந்தாலும் என்னோட கர்நாடிக் மியூசிக் மாதிரி வராது என்று இன்னிசை பெருமையாகப் பேசினாள்..

அப்போது அம்பை எப்பவுமே உன்னோட இசை மட்டுமே நல்லா இருக்கும்னு இல்ல எல்லாருக்கும் தனிப்பட்ட திறமை இருக்கு இந்த பாடல் சினிமாவில் நம்ம பாக்குறப்போ மியூசிக் மெல்லமா வந்து கேட்டு இருக்கும் யாரோ புது விதமா கிட்டார் யூஸ் பண்ணி கேக்குறாங்க அது சூப்பரா இருக்கும் வாய்ஸ் ரசிப்பியா அதை விட்டு குறை சொல்லிக்கிட்டு என்று இன் அம்பை அவளை கண்டித்தாள்..

பிறகு இருவரும் அந்தப் பாடலை ரசித்தபடி அமைதியாக பயணத்தை மேற்கொண்டனர்..

இந்தப் பாடலைப் பாடியவன் இந்த பாடலல ரசிப்பவளை எப்பொழுது சந்திப்பான்..
முதல் சந்திப்பு எப்படி இருக்கும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ

தொடரும்.....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement