1.. என்னில் தேடி உன்னில் தொலைந்தேன்

Advertisement

Yazh Mozhi

Active Member
image_search_1575880885674.jpgமூன்று நாட்களாக பூட்டிய அறைக்குள் உணவு உறக்கம் மறந்து அழுது வீங்கிய விழிகளோடு சோக சித்திரமாக அந்த சோஃபாவில் அமர்ந்திருக்கிறாளே .... அவள் தான் ஸ்வேதா.... கார்த்திக்கின் ஸ்வீட் ஸ்வேதா....

அந்த அழுது வடியும் சித்திரத்தின் இந்த கலங்கிய வண்ணங்களுக்கு காரணம் சாட்சாத் கார்த்திக் அனுப்பிய விடுதலைப் பத்திரம் தான் ...

விடிய விடிய தூங்காமல் அதை பார்த்து பார்த்து அழுதுகொண்டே இப்படி ஊன் உறக்கம் மறந்து பித்துநிலையில் பறக்கும் பேப்பர்களிலேயே கண்களை விலக்காது பார்த்துக்கொண்டு இருக்கிறாளே....

இந்த டிவோர்ஸ் ஐ வேண்டும் என்று கேட்வளும் இவள் தான்.... இப்போது நான் கேட்டாள் இவன் எப்படி கொடுக்கலாம் என்று இடிந்து போய் அமர்ந்திருப்பவளும் இவள் தான்....

இவனுக்கு நான் முக்கியம் இல்லையா .... அப்படி இருந்திருந்தால் இப்படி விடுதலை பத்திரம் அனுப்பி இருப்பானா இவன். . இவனையா ஐந்து வருடம் அப்படி காதலித்தேன் ... இவனையா அப்படி போராடி பெரும் சண்டைகளுக்கு பின் கணவனாக கரம் பிடித்தேன்... அதற்குள் என்னை இவனுக்கு வெறுத்துவிட்டதா.... நான் சளித்து விட்டேனா.... அதான் கேட்ட உடனே இப்படி கிடைத்ததேப் போதும் வாய்ப்பு என்று அனுப்பி வைத்தானா....

இதையேத் தான் தேய்ந்த ரெக்கார்ட் மாதிரி மூன்று நாட்களாக பூட்டி அறைக்குள் பெற்ற பிள்ளையை கூட மறந்து ஜெபம் போல மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி அழுதுகொண்டே இருக்கிறாள்....

அங்கே கார்த்திக்கோ ஆஃபிஸ்க்கு செல்வது மாலையானால் இரண்டு பாட்டில் பீரோடு போராடுவது... வெந்தும் வேகாததுமாய் கடையில் வாங்கிய துரித உணவை உண்டு பாதி பிரிக்காமலே மீதி என்று பல நாட்களை பட்டினியோடும் தனிமையோடும் விரட்டிக் கொண்டும் அதன் பின் ஓடிக் கொண்டும் இருக்கிறான்....

பல நேரம் அந்த பீர் பாட்டில்களை பார்த்தாள் கூட ஸ்வேதா தான் தெரிவாள் காளி அவதாரமாக.... போடி போடி அதான் நான் வேணாம்னு உங்க அப்பன் வீட்டுக்கு போய்ட்டல போடி நான் இனி யாருக்காக இருக்கனும் குடிச்சு குடிச்சே இப்படியே சாகுறேன் போடி....

சொல்லி சொல்லி முழு பாட்டில் தீர்ந்தாலும் இறுதியில் அவனையும் மீறி கண்கள் கரித்து விடுகிறதே என்ன தான் செய்வான் அவனும் பாவம்....

அந்த துரித உணவுப் பார்சல்களைப் பார்க்கும் போதே ஸ்வேதாவின் உபசரனையும் பரிமாறும் பாங்கும் தான் நினைவு வந்து துளைக்கிறது என்ன செய்ய...

அவன் புதிதாக உணவகத்தில் வாங்கி சுவைக்கும் எந்த உணவாக இருந்தாலும் அடுத்த வாரம் அது அவனுக்காக அவளுடையக் கை மணத்தில் வீட்டில் இருக்கும்....

அவன் வயிறு அறிந்து அன்னமிட்டு அவனை அன்பு செய்வதில் அவளை அடித்துக் கொள்ள நிச்சயம் ஆளே இல்லை....

ஆனாலும் அவள் ஒரு வளரந்த குழந்தைதான் எப்போதும் அடம்... எதிலும் அடம்.... சொல்லி புரிய வைக்க முடியாத விசித்திரமான ஜந்து அப்படி தான் கோவத்தில் பல நேரம் திட்டிவிட்டு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு தண்டனை என்ற பெயரில் கன்னத்தில் கடி வாங்கி இருக்கிறான்....

அவள் இப்போது விடுதலை வேண்டும் என்று கேட்டுவிட்டாளே எப்படி கொடுக்காமல் இருக்க முடியும் இந்த கார்த்திக் கினால்.... ஐந்து வருடம் காதல் ...காதல் .... கதலுக்கெல்லாம் காதல் ... காதலோ... காதல்.... என் காதலித்து கரம்பிடித்த காதலி ஆசையாக விவாகரத்து கேட்டாள் அவளுக்காக பார்த்து பார்த்து செய்த இந்த பாவப்பட்ட காதலன் போராடி போராடி இறுதியில் அவள் கேட்ட விவாகரத்தை வழங்க சம்மதம் தெரிவித்துவிட்டான்....

அவள் இங்கே இல்லை.... சென்றுவிட்டாள்... அவள் நினைவுகளையூம் சேர்த்து எடுத்து செல்ல வேண்டியது தானே... ஏன் பார்க்கும் இடமெல்லாம் இப்படி என்னை பழிப்பு காட்டி இம்சை செய்கிறாள்... இராட்சஷி.... இப்படி என்னை புலம்பி புலம்பி சாகடிக்கத் தான் கேட்டாளோ விடுதலை.... இங்கே தினமும் பலம்பி புலம்பி வெந்த வயிற்றின் வேதனையோடு அவள் நினைவுகளையும் சேர்த்து விழுங்கிக் கொண்டு வேளைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான் கார்த்திக்....

இருவரும் அவரவர்களுக்குள் ஒருவரை ஒருவர் தேடித் தேடி தொலைந்து போன கதையைத் தான் திரட்டி திரட்டி அடுத்தடுத்த அத்யாயங்களில் வாசிக்கப் போகின்றீர்கள்.....

த.காயத்ரி வினோத் குமார்..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன்னில் தேடி
என்னில் தொலைந்தேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி வினோத் குமார் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத் குமார் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top