‍இனியனின் ❣️இன்னிசை

Aarudhra jeevitha

Active Member
முன்னோட்டம்..
அம்மா ப்ளீஸ் இந்த மாதிரி வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது இந்த இசை பள்ளிகள் நாளடைவில் குறைந்து கொண்டே இருக்குது வெளிநாட்டில் தான் எல்லாரும் போய் படிக்கிற மாதிரி ஆகுது ஆனால் டெல்லியில் மட்டும் தான் இந்த பெரிய ஸ்கூல் நடக்குது அந்த ஸ்கூலுக்கு வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம் நானும் அம்பையும் ரொம்ப நாளாவே முயற்சி பண்ணி கிடைச்ச வேலை கொஞ்சநாள் டெல்லிக்கு போயிட்டு வந்துரப் போறோம் என்று நம் நாயகி இசை தன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்...

முடியாது முடியாது உங்க ரெண்டு பேருக்கும் இந்த வீட்ல என்ன குறை உங்க தாத்தா ரிட்டையர் ஆன பிறகு வரை சம்பளம் அதுமில்லாம ஏகப்பட்ட சொத்துக்கள் அந்த சொத்துகளுக்கு ராணிகளை நீங்க ரெண்டு பேர்தான் நீங்க எதுக்கு சம்பாதிக்கணும் என்று இசை யின் அம்மா ஜமுனா கண்டிக்க....

சித்தி இந்த சொத்து எல்லாம் நாங்க சம்பாதிக்கல நாங்க காசு சம்பாதிச்சு எங்களுக்கு சாப்பிடக்கூடாதா நீங்களே சொல்லுங்க அப்பா இருக்காரு தாத்தா இருக்கார்னு அவரை நம்பியே குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் பொண்ணுங்க நாங்க இல்ல என்னதான் பண வசதி இருந்தாலும் சொந்த கால்ல நிக்க ஆசைப்படுகிறோம் என்று அம்பை உறுதியாக சொன்னார்....

சரி அப்படியே வச்சுக்கோங்க உங்களுக்கு இருக்கிற வசதிக்கு நீங்க எங்க வேணாலும் போவீங்க ஆனால் எத்தனையோ பொண்ணுங்க நடுத்தர குடும்பத்தில் இருக்காங்க அந்த பொண்ணுங்கலும் இதே ஸ்கூலுக்கு அப்ளிகேஷன் போட்டு இருப்பாங்க அந்த பொண்ணுகளுக்கு வேலை கிடைச்சா அவங்க குடும்பம் கொஞ்சம் நல்லபடியா சம்பாதிக்கும் அதை விட்டுட்டு நல்ல சம்பாத்தியம் இருக்கிற வீட்டு பொண்ணுங்களே எல்லா இடத்திலும் இருந்தாள் அது என்ன நியாயம் அப்போ நாடு வல்லரசு ஆகாது எல்லாம் குடும்பமும் வறுமைக்கோட்டுக்கு கீழே தான் இருக்கும் என்று ஜமுனா அவர்கள் செல்லாதவாறு பேச....

ஐயோ அம்மா நாங்க என்ன கல்நெஞ்சகாரி ங்களா அந்த ஸ்கூல்ல சீட்டு காலியா இருக்குது அதனால் தான் நாங்க ரெண்டு பேரும் அப்ளிகேஷன் போட்டோம் அதுக்கான பரீட்சையும் நடந்தது அதனாலதான் நாங்க பாஸாகி இப்போ அந்த வேலைக்கு போக போறோம் அந்த ஸ்கூல்ல மட்டும்தான் இசை டீச்சருக்கு எக்ஸாம் நடக்கும்....

சரி விடுமா ரெண்டு இளவரசிகளும் முடிவு பண்ணா முடிவு பண்றது தான் அதுவும் இந்த அம்பை இருக்காளே கல்லூனிமங்கி அமைதியா இருந்து எல்லாம் சாதிப்பாள் நம்ம இசை குட்டி நல்ல திறமையான பொண்ணு ரெண்டு பேரும் டெல்லிக்கு போட்டோம் கொஞ்ச நாள் தானே போயிட்டு வரட்டும் என்று அம்பையின் அப்பா காசி விஸ்வநாத் சொல்ல....

நீங்க சொல்லிட்டீங்க மறுபேச்சு என்ன இருக்கு மாமா சரி நீங்க ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வரணும் அம்பை உனக்கு அம்மா இல்ல எங்க அக்கா இறந்தபின்பு உன்னையும் நான் என் பொண்ணா எடுத்துக்கிட்டேன் அம்மா இல்லாம வளர்ந்ததாலே கெட்ட பேரு உனக்கு வரக்கூடாது
அதே மாதிரி இசை அப்பா இல்லாம வளர்ந்த பொண்ணு நீ உனக்கு எல்லாமே உங்க பெரியப்பா தான் அவருடைய கௌரவத்திற்கு நீ எந்த ஒரு பங்கும் விளைவிக்கக் கூடாது ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க என்று கண்ணீர் மல்க தன் மகள்களை பார்க்க....

இருவரும் ஒருசேர தன் அன்னையை அணைத்துக் கொண்டனர் இருவரும் ஒன்றாக கண்ணத்தில் முத்தமிட்டு டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தனர் அந்த இரண்டு மங்கைகளும்....

அதேசமயம்....
டேய் இன்னும் எத்தனை நாள் தான் துறவி வருஷம் ஒரு வருஷம் ஆயிடுச்சு யார்கிட்டயும் பேசாம வீட்டிலேயும் இல்லாம இந்த இடம் கேவலமா இருக்கு எதுக்குடா உனக்கு தலையெழுத்தா...

உன்ன நெனச்சி நெனச்சி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு இனியன் பாவம்டா அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு வற்புறுத்தலை நீ இழந்தது மிகப்பெரிய விஷயம் அது யாராலும் ஈடுகட்ட முடியாது
இருந்தாலும் வெளிய நடிக்க செய்ய அத பார்த்தாவது அம்மா கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க....

என்ன நா நீயே சொல்றா என்னோட குக்கூ அவளோட மரணத்தை என்னால ஏத்துக்க முடியல அவ என்ன விட்டு போக நான் நினைச்சு கூட பாக்கல எனக்கு எல்லாமே அவ தான் நினைச்சேன் ஆனா இப்போ என்னோட குக்கூ என்கிட்ட இல்ல...

அவ கூட நீ மூணு மாசம் பழகி இருப்பியா அவர் இறந்து ஒரு வருஷம் ஆகுது ஆனா 27 வருஷமா அவளைத்தான் உங்க அம்மா உனக்கு ஞாபகம் இல்லையா...

டேய் சும்மா லவ்வு லவ்வு நுழையாத அந்த பொண்ணுக்கு தலையெழுத்து என்ன தப்பா பார்க்காத இனியன் நான் இயல்பாதான் சொல்றேன் உண்மைய சொல்லுறேன் நடுவுல வந்த ஒரு பொண்ணு உன்ன விட்டு போனதால இவ்ளோ ஃபீல் பண்றேன் ஆனா பயத்திலிருந்து பெற்ற உன்னை இத்தனை வருஷமா வளர்த்த அம்மா வை நீங்கள் மறந்துவிடுவீர்கள் நான் தப்பு சொல்லல கவலைப்படலாம் ஆனா ஒரேடியா எல்லாரையும் கஷ்டப்படுத்தி நீ கஷ்டப் படுறது கஷ்டம் இல்ல கொலை....

சரி அண்ணா என்னதான் பண்ண சொல்ற....

மூடிக்கிட்டு நம்ம ஸ்கூல்ல வாத்தியார் வேலை செய்ய வழியைப்பாரு லைட் மியூசிக் டீச்சர் கொஞ்சம் பேர்தான் இருக்காங்க கர்நாடிக் டீச்சர்ஸ் நிறைய பேரு இருக்காங்க இன்னும் ரெண்டு நாள்ல புது டீச்சர் உங்க வரப்போறாங்க லைட் மியூசிக் குழு தான் ரொம்ப கம்மி சோ நீ வாத்தியாரே வேலை பாக்குற வழியை பாரு புரிஞ்சுதா...

குக்கூ போனது பிறகு எனக்கு மியூசிக் மேலே இருந்த ஆர்வம் போயிடுச்சு...

குக்கூ உன்ன விட்டுப் போயிட்டா நினைக்காதே உனக்கு புடிச்ச இந்த இசை அல்ல இருக்கிறான் இசைய நேசி எல்லாம் உனக்கு நல்லபடியா நடக்கும்...

நீ சொல்றதுதான் நிஜம்தான் இசை எனக்கு ரொம்ப பிடிச்சது இசைதான் இனி எனக்கு எல்லாமே இனி நான் இசை அ மட்டும் தான் ரொம்ப லவ் பண்ண போறேன் என்று ஓராண்டு காலமாக வெறும் சுத்தம் செய்து கொண்டே இருந்த அந்த கிட்டார் இனியன் கைவிரல்களால் கணீரென்று அரை முழுவதும் இசை பரவியது....
அவனை அறியாமலே இசை அவன் மனம் முழுவதும் ஆளுமை செய்தது...

தொடரும்.....

இது வெறும் முன்னோட்டம் தான்....
அடுத்தடுத்து அத்தியாயங்களைப் படித்து எப்படி இருக்குது என்று சொல்லுங்கள் நண்பர்களே....


நன்றி......
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement