வைரநெஞ்சம் -6

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
பாரதி தன் வழக்கமான நேரத்திற்கு, மதிய சாப்பாட்டுடன், தன் தாய் வைஷ்ணவி இடம், விடைபெற்றுக்கொண்டு, பள்ளிக்கு செல்ல, பாரதி சென்ற சில மணி நேரத்திற்குள், வைஷ்ணவி கிளம்பி, அபி வருவதற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும், என்ற முடிவுடன் வைஷ்ணவி கிளம்பிவிட்டார். அவருக்கு நன்றாக தெரியும், தன் உடல்நிலை குறித்து, இருந்தாலும் அவருக்கு தனிப்பட்ட முறையில் ,சில சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அங்கே வடிவு பாட்டி, தன் இரு மகள்கள், பேரன், பேத்தி அனைவரும் வருவதால், தன்னுடைய பங்களாவில் வேலை செய்யும் அனைவரையும் படுத்தி எடுத்துக்கொண்டிருந்தார் .ஆறு மாதம் கழித்து அனைவரும் ஒன்று கூடுவதால் பாட்டிக்கு தலைகால், புரியவில்லை தன் பேரன், பேத்திக்கு சிறுவயதாக இருக்கும்போது மாதத்திற்கு ஒரு முறை, என்று அனைவரும் ஒன்று கூடுவது வழக்கம்.

காலங்கள் செல்ல, மாதத்துக்கு ஒரு முறை, என்பது மூன்று மாதத்திற்கு ஒரு முறை, இப்பொழுது ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றானது, அவருடைய மகன் மனோகர், ஏன்மா? இவ்வளவு அவங்க எல்லாரும், நம்மகிட்ட வேலை செய்றவங்க தான். நம்மளுடைய அடிமை இல்லை வர்றவங்க எல்லாரும் நம்ம வீட்டு ஆளுங்க தானே.

அதற்கு வடிவு என்ன இப்படி சொல்லிட்ட மனோகர் மாப்பிள்ளையும் வராங்க, ஒரு சின்ன குறை இருக்கக் கூடாது. நம்ம வீட்டு பொண்ணுக்கு மரியாதை கொடுத்தால் தான் அவங்க புகுந்த வீட்டிலேயும், அவர்களுக்கு உண்டான மரியாதை கிடைக்கும் என்று சொல்லவும்


மனோகர் திரும்பி தன்னுடைய மனைவி சுதாவின் முகத்தை பார்த்தார். அவர் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் வேலை தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார்.



மனோகர், சுதாவிடம் ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? அத்தை சொல்றது கரெக்டு தான் இல்லிங்க ஒரு பொண்ணுக்கு பிறந்த வீட்டில் மதிப்பு இல்லை என்றால் மதிப்பிலான புகுந்த வீட்டிலேயும் மதிப்பு இருக்காது இல்ல என்று சொல்லவும் மனோகர் அதிர்ந்து தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்க்கவும் நீங்க வருத்தப்படாதீங்க என் மனசுல இருக்கறத சொல்லிட்டேன் எனக்கு உங்கள விட்டா யார் இருக்கா போங்க போயி அத்தை கூட இருங்க.



{வடிவு பாட்டி மகள்களைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் வடிவு பாட்டியின் மூத்த மகள் மாலதி, அவள் கணவர் ஸ்ரீதர் இந்த தம்பதியருக்கு, இரண்டு பிள்ளைகள், மூத்தவன் அன்புச்செழியன் “சிவில் இன்ஜினியரிங்” முடித்து விட்டு “கன்ஸ்ட்ரக்ஷன்” கம்பெனி தனியாக வைத்து திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறான். தன் தந்தைக்கு தேவையான பொழுது அவருடைய பிசினஸ் யும் கவனித்துக் கொள்வான். {ஏற்கனவே நம் கதையில் அறிமுகம்} இரண்டாவது மகள் திவ்யா “எம்பிபிஎஸ்” முதலாம் படித்துக் கொண்டிருக்கிறாள் அன்பும், அபியும்,பாரதிக்கு தேவையான முக்கிய குறிப்புகளை இவளிடம் இருந்து தான் வாங்கி தருவர். பாட்டியின் இரண்டாவது மகள், மந்தாகினி அவளுடைய கணவர், கார்த்திகேயன், இந்த தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் அசோக், “எம்பிஏ பிசினஸ் மேனேஜ்மென்ட்” படித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கும் அபிக்கும் ஏழாம் பொருத்தம், இரண்டாவது மகள் ப்ரீத்தி காலேஜ் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்}.





அனைவரும் வந்துவிட வீடு மொத்தமும் திருவிழா போல் காட்சியளித்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலகலத்து கொண்டிருக்க, அபி மட்டும் அங்கு இல்லை, அன்பு. மாலதி இருவருக்கும் விஷயம் தெரியும் என்பதால் அவர்கள் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.



ஆனால் மந்தாகினி தன் அம்மாவிடம், அபி எங்க கேட்கவும் அப்பொழுதுதான் வடிவு பாட்டி, சுதாவிடம் அபி எங்க போனான்? இருக்க சொன்னேன் இல்ல வெளியே போயிருக்கான் அத்தை இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துவிடுவான் என்று சொல்லவும்



அதற்கு மந்தாகினி அது எப்படி, நாங்க வருவோம் முன்னாடியே தெரியும், இல்ல அது எப்படி கரெக்டா வெளியே போவான் அப்படி என்ன எங்களைவிட முக்கியமான வேலை இருக்கு என்று கேட்கவும் {ஆரம்பத்திலிருந்தே அவர் மனதில் எப்போதும் அபி பாரதி இருவர் உறவின் மீதும் சந்தேகம்.



அதுவுமில்லாமல் பாரதி, வைஷ்ணவி இருவரையும் பிடிக்காது. தன் அம்மா வடிவு, வைஷ்ணவி, பாரதி இருவர் மீதும் கோபப்பட முக்கிய காரணம் இவரே, தான் செய்யவேண்டியதை தன் அம்மா மூலமாக ,தன் அம்மா மூலமாக நடத்திக் கொண்டிருக்கிறாள். அதற்கு முட்டுக்கட்டையாக தன் அண்ணன், அண்ணி, அபி, ஜனனி அவ்வளவு ஏன் அக்கா மாலதி, அன்பு உட்பட அனைவரும் வைஷ்ணவி, பாரதி இருவருக்கும் ஆதரவாக இருக்க, வைஷ்ணவியின் மீதிருந்த வஞ்சம், பழி வெறியாக மாறியது. தன் அம்மாவின், அந்தஸ்து பெருமையை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாள். சரி அது ஏன் குறிப்பாக வைஷ்ணவி மீது மந்தாகினிக்கு இவ்வளவு ஏன்? பழி வெறி அவர் தனக்குள் உழன்று கொண்டிருக்க }அபியின், தங்கை ஜனனி வேகமாக எங்க அம்மா, அப்பாவே ஒன்னும் கேட்கல. நீங்க ஏன் அத்தை? கேக்குறீங்க என்று சொல்லவும். பட்டென்று கேட்கவும் சுதா தன் மகளை வாய மூடு ஜனனி, பெரியவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா அதான் அப்பா இருக்காரு இல்ல என்று சொல்லவும்.



அதற்கு பிரீத்தா, என்ன அத்தை? மறைமுகமா மாமாவுக்கு தூண்டி விடுறீங்களா, அதற்கு மனோகர், பிரீத்தா சின்ன பொண்ணு, சின்ன பொண்ணு மாதிரி பேசணும், பெரியவங்க மாதிரி பேசக்கூடாது.



இந்த வாக்குவாதம், வடிவு பாட்டிக்குப் பிடிக்கவில்லை, அவர் எல்லாரும் கொஞ்சம் மூடுங்க என்று சத்தம் போடவும். எல்லாரும் ,ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி தான் பார்க்கிறோம் சந்தோஷமா பேசாம ,இது என்ன ?ஆளாளுக்கு பேச்சு.

இங்கே இவ்வளவு சண்டை போய்க்கொண்டிருக்க, அன்பு தன் போனையே, நொடிக்கொருதரம் பார்த்துக்கொண்டிருந்தான். மாலதி தன் மகனின் கையை பிடித்துக்கொண்டு, கண்களால் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.



மந்தாகினி முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல், இருடி எப்படி இருந்தாலும், என் மகன் அசோக்கை, கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்க வீட்டுக்கு தானே வந்தாகணும் அப்ப இருக்கு உனக்கு. மந்தாகினிக்கு எப்படியாவது தன் மகள் பிரீத்தா வை, அபிக்கும். தன்மகன், அசோக்கை, ஜனனிக்கும் திருமணம் முடித்துவிடவேண்டும் ஆசை என்று சொல்வதை விட ஒருவித சுயநலம், அவர் மனதில் பல கணக்குகள் உண்டு, தீர்க்கப்படாத, வெளியே தெரியாத வஞ்சம் உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு நாகப் பாம்பை போல ,இவருடைய குணம் அனைவருக்கும் தெரியும், இவர் சுயநலம் பிடித்தவர் எ ஆனால், இவர் மனதில் இருக்கும் வஞ்சம் யாருக்கும் தெரியாது. அது வெளிப்படும் நேரம்? ஆனால் இவருடைய மகன் அசோக், தன் தந்தையை போல் குணவான், மகள் தன் தாயை கொண்டு பிறந்திருக்கிறாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top