வைரநெஞ்சம் 5

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
ஆதி ஐயர் வந்தாச்சு சீக்கிரம் வாப்பா உனக்காக எல்லாரும் எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கோம், என்று அழைக்கவும் மனமே இல்லாமல் அவன் அறையில் இருந்து எழுந்து ஹாலுக்கு சென்றான்.



ஆம் இன்றோடு ஆதியின் அம்மா இறந்து {14 வருடம்} ஆகிறது அது மற்றவர்களை பொறுத்தவரை, ஆதியை பொருத்தவரை அவன் உள் மனதுக்கு ,தன் அம்மா எங்கேயோ உயிரோடு இருக்கிறார் என்று அவன மனதிற்கு தோன்றிக்கொண்டே இருக்கும் .அவனால் முழுமையாக தேவசம் தர மனது ஒப்பாது, ஆனால் அவன் சித்தி பிரேமா திவசம் தரவில்லை என்றால், உன் அம்மாவுடைய ஆன்மா அலையும், என்று அதையும் இதையும் சொல்லி அவனை விடாமல் அவனை வற்புறுத்தவும் வேறு வழி இல்லாமல் அவனும் வருடா வருடம் திவசம் தருகிறான்.



ஐயர் சொல்லியதை சொல்லிக் கொண்டே வந்தவன், ஒரு கட்டத்தில் தன் தங்கையின் பெயரை சொல்லவும், நோ என்று நெற்றி நரம்பு புடைக்க கத்தினான்.



வேகமாக திரும்பி தன் சித்தியிடம் அம்மாக்கு திவசம் கொடுக்கவே வருடா வருடம் நீங்கள் என்னை வற்புறுத்துவதால் வேறு வழி இல்லாமல் தருகிறேன், யாரை கேட்டு ? என் தங்கச்சி பாரதி பெயரை இதுல சேர்திங்க என்று கத்தவும் {ஆம் பாரதியின் அண்ணன் வைஷ்ணவியின் மூத்த மகன் ஆதித்யன் இவன்தான்} நீங்க என் சித்தி தான், என் அம்மா கிடையாது, அதை எப்போதும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க. நீங்க சொல்றதெல்லாம் கேட்கணும்னு அவசியம் கிடையாது, எங்க அம்மாவே எங்கயோ உயிரோட இருக்காங்க. அப்படின்னு என் உள்மனசு சொல்லிக்கிட்டே இருக்கு இதுல என் தங்கையின் பெயரை சேர்த்து வச்சிருக்கீங்க. உங்க எல்லை எதுவோ அதோட நின்னு கோங்க என் விஷயத்துல மூக்கை நுழைக்க வேண்டாம். என்று கத்திவிட்டு தன் தந்தையையும் ஒரு பார்வை பார்த்தவன் உள்ளே சென்று விட்டான்.



அவன் சித்தி பிரேமா, தன் கணவன் நாகராஜிடம், எவ்வளவு திமிர் பாத்திங்களா, உங்க பையனுக்கு என்னை எதிர்த்து பேசுறான் என்று கத்தவும். அதற்கு நாகராஜ் நாம இருக்கிற வீடு, சாப்பிடுற சாப்பாடு, செலவு பண்ற பணம் எல்லாமே அவனுடைய அம்மா வைஷ்ணவி உடையது மறந்துடாத என்று பதில் தரவும், அதற்கு பிரேமாவின் முகம் அதிபயங்கரமாக மாறியது பழச நீங்க மறந்துடாதீங்க. என்னுடைய தப்பு கால் பங்கு தான், முக்கிய குற்றவாளி நீங்களும், உங்க அம்மாவும் நான் சொல்லி தெரியனும் அவசியமில்லை .



ஓஹோ என்ன திடீர்னு? மூத்த மனைவி மேல பாசம் பொங்குது. அதற்கு நாகராஜ் அப்படி பாசம் இருந்திருந்தா அவளை எதுக்கு அவளுடைய வீட்டை விட்டு அவள் அனுப்ப போறேன்.

அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல, இத்தனைக்கும் அவ உன்ன விட பேரழகி, பணத்துக்கு பணம் ,அழகுக்கு அழகு கணக்கு போட்டா, அவ பாரதி பிறந்த பிறகு எனக்கு உபயோகமில்லாமல் போய்ட்டா. காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறிந்து விடுவதில்லையா, அது மாதிரி அவள கழட்டி எறிந்து விட்டேன் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசிய நாகராஜ், சரி சுமித்ரா எங்க?அவன் பொறுமையா பேசுற ஒரே ஆளு சுமித்ரா மட்டும்தான். அவனுக்கு என்னைக்கி நம்மள பத்தி எல்லா விஷயமும் தெரியவருதோ, அன்னைக்கி நம்ம இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டி இருக்கும், அதுக்கு தானே என் பொண்ணுமேல பாசமா இருக்கற மாதிரி வளர்த்து வச்சிருக்கேன். சொந்த அம்மா என்னையே அவ சித்திதான் கூப்பிடுறா, எதுக்காக இதெல்லாம், எல்லாம் இந்த சொத்துக்காக தான். அவன் தங்கை பாசத்தை வெச்சு அவன் பேர்ல இருக்க சொத்து எல்லாம் நம்ப பெயருக்கு மாற்றி அவ அம்மா தங்கச்சி போல இவனையும் வீட்டைவிட்டு அனுப்பல. என் பேரு பிரேமா இல்லை அவளுக்கு தெரியவில்லை, அவள் பெயரை இது எதுவும் நடக்கப்போவதில்லை. கூடிய சீக்கிரம். அவள் மாற்றி வைக்க வேண்டி வரும்.

“அரசன் அன்று கொள்வான்

தெய்வம் நின்று கொள்ளும்”



அதற்குள் ஆதியின் தங்கை சுமித்ரா அண்ணா என்று அன்போடு அழைக்கவும். வழக்கம்போல் அவனுக்கு பாரதியின் நினைவு வந்தது .எங்க இருக்க பாரதி, அண்ணா உனக்கு ஞாபகம் இருக்குமா. உன்னையும், அம்மாவையும் நான் தேடிட்டு இருக்கேன். சித்தி ,அப்பா எல்லாரும் நீங்க செத்துவிட்டதா சொல்றாங்க. ஆனா, என் மனசு அதை ஏத்துக்க மறுக்குது. என்று துக்கத்தோடு நினைத்தவன். சுமித்ராவை பார்த்து, வா அம்மு, அண்ணா காலேஜ் போயிட்டு சீக்கிரமா வந்துடுறேன், நீயும் ஸ்கூலுக்கு போயிட்டு, ஒழுங்கா படிச்சிட்டு சமத்தா இருக்கனும். வா நம்ப ரெண்டு பேரும் சாப்பிடலாம், சுமித்ராவை அழைத்துச் சென்றவன், யாரையும் என்ன? ஏது ?என்று கேட்காமல் “டைனிங் டேபிளில்”இருக்கும் இட்லியை தனக்கும், தன் தங்கைக்கும், தட்டில் வைத்துக் கொண்டவன், சுமித்ரா விற்கு ஊட்டிவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு பொன்னியம்மா என்று சத்தமாக அழைத்தான். அவரும் இவன் கூப்பிட்ட குரலுக்கு, வேகமாக வந்தவர் என்ன தம்பி என்று அன்போடு கேட்கவும். ஸ்கூல் பஸ் வந்ததும், அம்மு கரெக்டா கிட்ட இருந்து நீங்களே ஏத்தி விடுங்க, நான் சாயங்காலம் வழக்கம்போல கூப்பிட்டு கொள்கிறேன். நீங்க கவலை படாதீங்க தம்பி பாப்பா நான் பாத்துக்குறேன். உங்கள நம்பி தான் விட்டுட்டு போறேன் என்று சொல்லிவிட்டு, தன் தந்தை, சித்தி இருவரையும் ஒரு பார்வை பார்த்து சென்று விட்டான்.



அதற்கும் பிரேமா, நாகராஜிடம் பாத்தீங்களா, அவனுக்கு இருக்க கொழுப்பு, அவளை பெற்றவள் நான் குத்து கல்லு மாதிரி இருக்கே, என்கிட்ட சொல்லாம சமையல்காரி கிட்ட சொல்லிட்டு போறான், அதற்கு நாகராஜ் அவனுக்கு உன்ன பத்தி நல்லா தெரியும், அவன் இந்த பக்கம் போனதும், நீ இந்தப் பக்கம் “லேடிஸ் கிளப்புக்கு” போயிடுவ நான் இந்த பக்கம் “ரேஸுக்கு” கிளம்பி போயிடுவேன் அதான் சமையல்காரி கிட்ட சொல்லிட்டு போறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top