வைரநெஞ்சம் 3

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
“ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை

இருள் என்பது குறைந்த ஒளி”

பள்ளிக்கூடம் பாரதியும் ஜனனியும் பேசிக் கொண்டு வர ஜனனி வழக்கம்போல் காரில் சென்று விட்டாள்

பாரதி நடந்து சாலையை கடக்கும் பொழுது பாரதியை விட ஒரு நான்கு வயது இளையவள் போல் இருக்கும் தோற்றத்தில் இருக்கும், சிறு வயது பெண் {சிறுமி} காரின் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்தவள் திடீரென்று சாலையை கடக்க முயற்சித்தாள்.

இதை தற்செயலாக பார்த்த பாரதி, அவளின் கையை இறுகப் பற்றிக்கொண்டு, தானும் சாலையைக் கடக்காமல் அந்த பெண்ணின் கையைப் பற்றிக்கொண்டு, அந்தப்பக்கம் போகணுமா என்று கேட்க, அந்த பெண்ணின் பார்வை இவளை பார்க்காமல் ஒரு மாதிரி இலக்கில்லாமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாரதிக்கு, ஏதோ வித்தியாசமாக பட அந்த பெண்ணிடமே நீ தனியா வந்தியா என்று கேட்க இல்ல அண்ணா வந்தான் உங்க அண்ணா எங்க என்று கேட்க இதோ என்று சாலைக்கு அந்தபுரம் கையை காட்டினாள் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞன் வேகமாக வந்து அந்த சிறு பெண்ணிடம் அம்மு நீ எதுக்கு காரிலிருந்துஇறங்கின? என்று கேட்டுக்கொண்டே அப்போதுதான், பாரதியை திரும்பி பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான். ஏனோ, அவனுக்கு பாரதியை அன்னியமாக நினைக்க தோன்றவில்லை, அதிலும் குறிப்பாக “பாரதியின் கண்கள் நீண்ட அகன்ற சமுத்திரம் போன்ற கண்கள்” அவனுக்கு மிகவும் பரிச்சயமாக தோன்ற, திடீரென்று அவன் மனதில் ஒரு பரபரப்பு, அதற்குள் பாரதி அவனிடம் உங்க தங்கச்சியா பத்திரமா பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.

அதற்குள் இந்த இளைஞன், ஒரு நிமிஷம் நில்லும்மா என்று சொல்லவும் நின்று திரும்பிப் பார்த்தாள். அதற்கு அந்த இளைஞன் என் பேரு ஆதித்யா, நான் இந்த**** காலேஜ்ல “எம்பிபிஎஸ்” நாலாவது வருஷம் படிக்கிறேன் என்று சொல்லவும்.

பாரதியின் மனதில் அட நம்ம அபி ஓட காலேஜ் போல என்ற மனதில் நினைத்தவள் வெளியில் சரி அதுக்கு நான் என்ன இப்ப பண்ணனும் என்று கேட்கவும்? ரொம்ப தைரியம் தான் என்று மனதிற்குள் சந்தோஷமாக நினைத்தவன். நான் என்னோட பேரை சொன்னா, பதிலுக்கு நீயும் உன்னோட பேர சொல்லணும். பாரதி அதற்கு அவசியமில்லை என்று சொன்ன பாரதி வேகமாக சென்றுவிட்டாள்.

ஆதித்யா மனதில் கடைசி வரைக்கும் பேரை சொல்லலியே சரி இந்த ஸ்கூல்ல தான் படிக்கிற பொண்ணு போல போல பார்ப்போம் என்று நினைத்தவன்.

தன் தங்கை சுமித்ராவிடம் அம்மு இந்த மாதிரி காரிலிருந்து இறங்க கூடாது அப்புறம் அண்ணா வெளிய கூட்டிட்டு வரமாட்டேன் என்று சொல்லவும், அந்த சிறு பெண்ணும் சரி என்று தலையாட்டியது.

ஆதித்யா விற்கு மனது தாங்கவில்லை, நான்கு வருடம் முன்புவரை நன்றாக இருந்தவள் திடீரென்று ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு அன்றிலிருந்து இப்படி ஆகிவிட்டால் அவர்களும் பார்க்காத வைத்தியமில்லை முன்பு இருந்ததற்கு இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் மருத்துவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று சொல்லவும்.

தன் தந்தை, சித்தி, தங்கையுடன் கோயம்புத்தூருக்கு வந்து நான்கு வருடம் ஆகிறது. மறுபடியும அவன் நினைவு பாரதி இடம் வந்து நின்றது.



வீட்டிற்கு வந்த பாரதி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டவள் தன் தாய் வைஷ்ணவி வர தாமதமாகும் என்று காலையில் சொன்னதால், அடுப்படியில் சென்று காலையில் மீதமிருந்த 4 இட்லி, தொட்டுக்கொள்ள இட்லி பொடியுடன் அமர்ந்தவள் வேகமாக சாப்பிட்டுவிட்டு. பாத்திரங்களை, மதியம் எடுத்துச்சென்ற பாத்திரங்களோடு சேர்த்து அலம்பி வைத்தவள். .

இரவிற்கு ரசமும், துவையலும் செய்யலாம் என்ற முடிவுடன் அரிசியும், புளியையும் தனித்தனியாக ஊற வைத்துவிட்டு, படிக்க அமர்ந்தாள். சிறிது நேரம் சென்று ரசமும், துவையலும் தயார் செய்தவள்.

மீண்டும் படிக்க அமர பக்கத்துவீட்டில் இருந்த ஒரு சிறுபெண் அக்கா என்று அழைத்துக் கொண்டு வந்தது எனக்கு இந்த பாடம் புரியவில்லை என்று சொல்லவும், அந்த பெண்ணுடைய சந்தேகத்தை தீர்த்துவைத்தவள் தானும் அவளுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.

இங்கு கடையின் வாசலில் வைஷ்ணவி காக காத்துக்கொண்டிருந்தான். அபி, வைஷ்ணவி வரவும் இருவரும் பேசிக்கொண்டே நடந்து வர, திடீரென்று வைஷ்ணவிக்கு இதயம் படபடவென்று வேகமாக அடித்துக்கொள்ள உடல் முழுதும் வியர்த்து கொட்ட ஆரம்பித்துவிட்டது .

பேசிக்கொண்டே நடந்த, அபி திடீரென்று வைஷ்ணவி இடமிருந்து சத்தம் வராமல் இருக்கவே திரும்பிப் பார்த்தவன். வேகமாக னவஷிமா என்னாச்சு? என்று பதறியபடியே வந்து வைஷ்ணவியின் கையை பிடித்தவன்.

அங்கு நடைபாதையில் அமர வைத்துவிட்டு, வேகமாக அந்த தெருவில் இருக்கும் கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கிவந்து கொடுத்தான். அதை குடித்த வைஷ்ணவி வாந்தி எடுக்கவும் பயந்து போன அபி, வேகமாக தன் அத்தை மகன் அன்பு செழியனுக்கு போன் செய்தவன், அத்தான் இங்க னவஷிமா திடீர்னு உடம்பு சரியில்ல என்ன பண்ண என்று கேட்க?, அவன் ஏதோ சொல்லவும் சரி, சரி என்று தலையாட்டி அவன்வேகமாக வேகமாக, ஒரு ஆட்டோ பிடித்து ஒரு வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான்.

இங்கு ஆட்டோவில் வைஷ்ணவி அபி இடம் அதெல்லாம் ஒன்னும் வேணாம் அபி, பாரதி வீட்ல தனியா இருக்கா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்லவும், சும்மா இருங்க னவஷிமா என்று சொல்லி, அவன் வேகமாக தன் தாய் சுதாவிற்கு, அழைத்து இங்கு இருக்கும் நிலைமையை எடுத்துச் சொல்லி பாரதிக்கு துணையாக இருக்க சொன்னான்.

சுதாவும் நான் பாரதிய, பார்த்துக்கிறேன் நீ வைஷ்ணவியை பாத்துக்கோ, என்று சொல்லிவிட்டு போனை வைத்தவர் வைஷ்ணவியை பற்றியும் அவள் உடல்நிலை பற்றியும் நன்றாக தெரிந்த சுதா பதட்டத்தோடு பாரதியின் வீடு நோக்கி சென்றார். . இங்கு என்னால எதுக்கு சுதா க்கு கஷ்டம்? என்று வைஷ்ணவி சொல்லவும், உங்க பாட்டி சுதாவை திட்டுவாங்க அபி என்று வைஷ்ணவி சொல்லவும், நீங்க சும்மா இருங்க னவஷிமா அவங்க எல்லாத்துக்கும் தான் திட்டுவாங்க.

அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம், நீங்க அமைதியா வாங்க என்று இவர்கள் பேசிக்கொண்டே மருத்துவமனையை வந்தடைந்தனர். அங்கு வாசலில் “அன்புச்செழியன்” தனக்கே உரித்தான ஒருவித கம்பீரத்தோடு நின்று கொண்டிருந்தான் இவர்கள் ஆட்டோவில் வந்து இறங்கவும்.

அன்புவை மருத்துவமனை வாசலில் பார்த்த வைஷ்ணவி மிகவும் சங்கடமாக அபியிடம், அன்புக்கு எல்லாம் எதுக்கு சொன்ன அபி? என்று கேட்கவும். இதைக்கேட்ட அன்புசெழியன் ஏன் நான் எதுவும் செய்யக் கூடாதா ?அத்தை என்று சொல்லவும் எதுவும் சொல்ல முடியாதவராக மருத்துவமனைக்குள் சென்றார்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top