வீரமாகாளி 6

Advertisement

சிதம்பரமும் லட்சுமியும் விஜயனிடம் இப்போ உன் கூட வந்திருப்பவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று கேட்டார் சிதம்பரம்.அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அங்கில்.உங்களுக்கு அவங்களாலே எந்தப் பிரச்சனையும் வராது.அவர் அடாவடிலே இறங்கினால் நான் அன்பாலே கட்டிப் போடுறேனு சொன்னான்.அதைக் கேட்டு விட்டு சரி கொஞ்ச நாள் நமக்குள்ளே ஒன்னுமில்லாதது போல காட்டிக் கொள்வோம் என்று சொன்னார்.சரி என்றான்.சரி அத்தை ரொம்ப பசிக்குது.சாப்பாடு போடுங்க என்றான்.திவ்யா இங்கே ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருக்கேன்.யாராவது என்னைச் சாப்பிட்டியா என்று கேட்டீங்களா.உங்க காரியம் முடிஞ்சவுடனே என்னைக் கண்டுக்காம நீங்க மட்டும் சாப்பிடப் போறீங்களே இது என்ன நியாயம்னு கேட்டாள்.ஐயையோ அப்படிலாம் ஒன்னும் இல்லை.நீ வாம்மா வந்து உட்காருனு சொல்லிட்டு சாப்பாட்டுப் பாத்திரத்தைத் திறந்தா அவ்வளவும் காலியாகி இருந்தது.என்னது இது இதிலே இருந்ததுலாம் எங்கே போச்சு.ஏய் நீ தானே எல்லாத்தையும் காலி பண்ணுணேனு சங்கர் கேட்க ஆமா சட்டி நிறைய நிறைய இருந்து பாரு சோறும் குழம்பும்.நாலைஞ்சு கரண்டி சோறும் கொஞ்சோண்டு குழம்பும் பொறியலும் இருந்ததை என்னமோ அரைப் படி அரிசி சோத்தையும் நான் காலி பண்ணிணது மாதிரிப் பேசுறீங்க.

அடிப் பாவி உண்மையிலேயே அவ்வளவு அரிசி தாண்டி வடிச்சு வைச்சேன்.சரி சரி புலம்பாம என் அண்ணணுக்குப் புதுசா சமைச்சு சுடச் சுடப் போடுங்க.அதை விட்டுட்டு இத்துனூன்டு சாப்பாடை சாப்பிட்டதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க.ஆத்தி உன்னைக் கட்டிக்கப் போறவன் பாடு ரொம்பக் கஷ்டம்டி அம்மா.அது அவன் தலைவிதி.அதுக்காக அதை ஏன் இப்போ நினைச்சுக்கிட்டு.மருமகனுக்கு சாப்பாடு போடுற வழியைப் பாருங்க.நல்ல ஆளைப் பிடிச்சேண்ணா.ஐயோ நம்ம வருங்காலக் கணவர் சாப்பிடாமல் இருக்காரே.சமைச்சுப் போடுவோம்னு ஒரு துடிப்பு இருக்கா.மசமசனு நின்னுட்டுறுக்குறதைப் பாரு.பாவம் அண்ணா உன் நிலைமை கடைசியில் நீ தான் அண்ணியாருக்கும் சமைச்சுப் போடப் போறே போலிருக்கு.அதைக் கற்பனை பண்ணிணாலே சிரிப்பா இருக்குனு சொல்லி கலகலனு சிரிச்சா.அவள் சிரிப்பதைப் பார்த்து விஜயனும் சங்கரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஜானகியோ அவளை அடிக்கத் துரத்த இவள் அங்கும் இங்கும் ஓடி ஒருத்தர் பின் ஒருத்தர் பின் ஓடி ஒளிந்து கொண்டு ஜானகிக்கு ஆட்டம் .விஜயனும் சங்கரும் திவ்யாவை உன் அண்ணியைப் பிடி.நீ ஓடாமல் ஜானகியைப் பிடினு கத்த அவர்களையும் ஜானகி அடிக்க ஓடி வர அவர்களும் அவளுடைய கைக்கு அகப்படாமல் ஓடினார்கள்.அந்த வீடே கலகலவென்று சிரிப்புச் சத்தமாக இருந்தது.ஒரு கட்டத்தில் திவ்யாவின் துப்பட்டா ஜானகி கையில் கிடைத்து அதைப் பிடித்து இழுக்க அவள் போட்டிருந்த சுடிதாரும் சேர்ந்து கிழிந்து வந்தது.

அது வரை கலகலவென்று சிரிப்புச் சத்தமாக இருந்த வீடு சட்டென அமைதியான ஒரு சூழ்நிலை உருவானது.திவ்யா தலை குனிந்து கண்ணீருடன் இருக்க சட்டென்று ஜானகி திவ்யாவைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள்.தன் கப்போர்டைத் திறந்து நாலைந்து சுடிதாரை எடுத்துப் போட்டு இதிலே எது உனக்குப் பொருத்தமா இருக்குமோ அதை எடுத்துப் போட்டுக்கோ என்றாள்.அவள் அசையாமல் நிற்கவும் ஜானகி அவளை சகஜ நிலைமைக்குத் திருப்ப எனக்கு இந்த மாதிரி அழுமூஞ்சி நாத்தனார்லாம் எனக்குப் பிடிக்காது.எனக்கு கலகலனு சிரிச்சிட்டு யார் கூடவாவது ஒரண்டை இழுத்துட்டு வருகிற நாத்தனார் தான் பிடிக்கும் என்று ஏதேதோ சொல்லி அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வந்து சுடிதாரை மாற்ற வைத்து கீழே கூட்டி வந்தாள்.அது வரை மற்றவர்கள் கலக்கத்துடன் காத்திருக்க இருவரும் சகஜமாக சிரிப்பதைக் கண்டவுடன் தான் அனைவருக்கும் முகத்தில் தெளிச்சியே வந்தது.அண்ணா எனக்கு நேரமாச்சு.எங்க ஊர்ப் புள்ளைக எல்லாம் எனக்காகக் காத்திட்டிருப்பாங்க.நான் கிளம்புறேண்ணா என்று சொன்னாள்.சிதம்பரம் டிரைவரைக் கூப்பிட்டு இந்தப் பொண்ணைக் கூட்டிட்டு சங்கர் காலேஜுக்குப் போய் அங்கே இருக்கிற புள்ளைகளையும் கூட்டிட்டு பஸ் ஏத்தி விட்டுட்டு வா என்றார்.விஜயனும் நானும் கிளம்புறேன் மாமா என்று சொன்னான்.என்ன மாப்பிள்ளை சாப்பிடலையே என்று கேட்டார்கள்.இல்லை அத்தை எனக்கு இப்போ பசிக்கலை.நான் இன்னொரு நாள் சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்லி விட்டு கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்து விட்டு வீட்டிற்குச் சென்றான்.திவ்யா காலேஜுக்கு வந்து தன் ஊர்ப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு காரில் ஏறினாள்.என்னடி ஆச்சு.ஒன்னும் பிரச்சனை இல்லையேனு கேள்வி கேட்டவர்களைத் தொடையில் கிள்ளி அமைதி ஆக்கினாள்.பேருந்தில் ஏறித் தன் ஊருக்குள் இறங்கியவுடன் தான் நடந்தது அனைத்தையும் சொன்னாள்.

அப்பா ஒரு வழியா சமாதானம் ஆகிட்டாங்களானு ஒருத்தி சொல்லி மூச்சு விட இல்லைடி இனிமேல் தான் கவனமா இருக்கனும்.விஜயன் அண்ணணை சங்கர் அண்ணே அப்பா படிப்பு முடியுற வரைக்கும் இங்கே வர வேணாம்.வெளியிலும் எதுவும் தெரிய வேணாம்னு சொல்லி இருக்காறு.அதுனாலே நாளைக்கு காலேஜீலே யார் எப்படி கேட்டாலும் சங்கர் அண்ணே வீட்டிலே ஒத்துக்கலைனு சொல்லுங்க சரியானு கேட்டாள்.சரினு அவ்வளவும் ஒத்துக்கிச்சுக.வீட்டுக்குப் போன விஜயன் வள்ளியிடம் சாப்பிட ஏதாவது இருந்தால் கொண்டுட்டு வானு சொன்னான்.ஐயா இப்போ சாப்பிட ஒன்னுமில்லையா.கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கனா சாப்பாடு செஞ்சுடுறேன் ஐயானு சொன்னா.மதியம் உங்களுக்கு எதுவும் சமைக்கலையா.சமைச்சேன் ஐயா மீதமிருந்ததைத் தண்ணி ஊத்தி வைச்சிட்டேன் ஐயா.அப்போ அதையே எடுத்துட்டு வா.நான் சாப்பிடுறேனு சொன்னான்.ஐயா என்னய்யா இது புதுப் பழக்கம்.உங்களுக்கு இதெல்லாம் சாப்பிட்டுப் பழக்கமில்லேயே. அதைச் சாப்பிட்டு ஒரு வேளை உங்க உடம்புக்கு ஒத்துக்கலைனா பெரியய்யாகிட்டே என்ன சொல்றதுனு கேட்டாள்.முத்துவும் தங்கவேலுவும் அங்கே தான் இவர்கள் பேசுவதைக் கேட்டுட்டு தான் இருந்தார்கள்.யார் சொன்னது வள்ளி எனக்குப் பழைய சோறு ஒத்துக்காதுனு.நான் எத்தனை நாள் பழைய சோத்தை சாப்பிட்டுறுக்கேன் தெரியுமா.என்னய்யா சொல்றீங்க நீங்க பழைய சோறை சாப்பிட்டியளா.ஆமா அதெல்லாம் பெரிய கதை.உங்களுக்கு என் அண்ணன் என்ன சொன்னாலும் அதே வேத வாக்கா எடுத்துக்கிட்டு எத்தனை குடும்பங்களைக் கொழுத்துவீங்க.அவருக்கு அவர் ஜாதி வெறி தாக்காத வரை அவருக்கு நீங்க எல்லாரும் குழந்தைகள்.அதுனாலே உங்க எல்லாருக்கும் எல்லா வசதியும் கிடைச்சிறும்.ஆனால் என் காலேஜில் படிக்க வரும் பெண்கள் எத்தனை பேர் நல்ல துணி இல்லாம பழைய சாதத்தையும் வெங்காயத்தையும் கொண்டு வந்து யாருக்கும் தெரிஞ்சா கிண்டல் பண்ணுவாங்கனு யாருக்கும் தெரியாமல் சாப்பிட அதையும் இந்தப் பசங்க பார்த்து அவங்க டிபன் பாக்ஸை வாங்கி அனைவருக்கும் காட்டி கிண்டல் பண்ணி அந்தப் பிள்ளைகளை அசிங்கப்படுத்திட்டானுக.அந்தப் பொண்ணுக அன்னிக்கு அழுததைப் பார்த்து அவனுகளை அடி பின்னி எடுத்துட்டேன்.அதுக்கப்புறம் அந்தப் பொண்ணுக கொண்டு வரும் சாப்பாடை நாங்க எடுத்துட்டு எங்க சாப்பாடை மாத்தி வைச்சு சாப்பிட்டிருக்கோம்.இங்கே உள்ளவங்க தங்குறதுக்கு வெறும் ஓட்டைக் குடிசை ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது கூடக் கஷ்டம்.சென்னையில் சாலையோரம் வானத்தையே கூரையாவும் பூமியையே பாயாகவும் பயன்படுத்துறவங்க தான் அதிகம்.அவங்களுக்கு என்ன ஆனாலும் கேட்க யாருமே கிடையாதுங்கிற தைரியத்தில் அவங்க மானத்துக்கும் உயிருக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது.

நீங்க சீக்கிரமே இங்குள்ளவர்களின் நிலைமையைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.அப்போ தான் தெரியும் உங்களுக்கு நாம என்ன மாதிரியான வேலை செய்திட்டிருக்கோம்னு.அப்போ நீங்களே மாறுவீங்க.இப்போ போடு பழைய சாதத்தை என்றான்.அவளும் போட்டாள்.அவன் சாப்பிடுவதைப் பார்த்து மூன்று பேரும் வாயடைத்துப் போய் விட்டனர்.சாப்பிட்டு கையைக் கழுவிட்டு இராத்திரிக்கு எனக்கு சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டு தன் அறைக்குள் அடைந்து கொண்டான்.

பார்ப்போம் விஜயன் சொன்னது போல் இவர்கள் இருவரும் மாறுவார்களா என்று.என்னை ஆதரித்து என் கதையைப் படித்து அதிகம் பேர் விமர்சனம் சொல்லுங்க. அதிகம் பேர் நைஸ் னு மட்டும் சொல்றீங்க.சகோதரி பானுமதி ஜெயராமன் தான் அதிக ஆர்வத்தில் இருக்கிறார்கள்.பானுமதினு பேர் வைச்சவங்க எல்லாம் அடுத்தவருடைய கதையைப் படிச்சிட்டு இப்படித் தான் நானும் விமர்சனம் பண்ணுவேன்.பெருமைக்காக சொல்லலை.சில பேர் என் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்காகத் தான் காத்திருந்தேன் என்று சொல்லும் போது எனக்குள் ஒரு பதட்டம் வரும்.அவங்க மெசேஜ் பக்கத்தில் போய் நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனானு கேட்டிருக்கேன்.அவங்க அதெல்லாம் இல்லைனு சொன்னவுடனே தான் எனக்கு உயிரே வரும்.எனக்கும் அந்த மாதிரி
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மாடி
விஜயன் வெளியே வரும் வரை எனக்கு பக்கு பக்கு-ன்னே இருந்தது, இந்துமதி டியர்
ஆனாலும் சங்கர் குடும்பம் என்ன ஆகுமோன்னு கவலையாத்தான் இருக்குப்பா
பாவம் திவ்யா
நல்ல சாப்பாடு துணிமணி இல்லாமல் திவ்யா போல எத்தனை பேர் கஷ்டப்படுறாங்களோ?
ரொம்பவும் சின்ன அப்டேட்டா இருக்குப்பா
கொஞ்சம் பெரிதாக அப்டேட் கொடுங்க, இந்து டியர்
 

chitra ganesan

Well-Known Member
திவ்யா வுக்கும் ஏதாவது ஆபத்து வருமா?அவ உதவி செய்யாரளே???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top