வீரமாகாளி 12

Advertisement

வீரமாகாளி 12

விஜயன், இரவு பதினோரு மணி வரை போன் காலுக்காகக், காத்திருந்து அப்படியே தூங்கிப் போனான். காலையில் தாமதமாக எழுந்தவன், தன் காலைக் கடன்களை முடித்து, வள்ளி கொடுத்த காபியைக் குடித்து விட்டு, டிபனையும் சாப்பிட்டு விட்டு, கல்லூரிக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே, ' தங்களுக்குக் கொடுத்த பணிகளைச் செய்து கொண்டிருந்தனர் மாணவ, மாணவிகள்.

அருணும், சங்கரும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, ‘யாராவது போன் செய்தார்களா?' என்று கேட்டான். இல்லை என்றனர் இருவரும். அதற்குள் ராணி, திவ்யா குரூப் வரவும், திவ்யாவை ' எப்படி பாதுகாப்பது?' என்ற கலவரம் மூவர் முகத்திலும் தெரிந்தது. விஜய், திவ்யாவை அழைத்து, ' உனக்கு எப்போ பயிற்சி இருக்கிறது?' என்று கேட்டான்.

சாயந்திரம் தான் அண்ணா, என்றாள், திவ்யா. முத்துவிற்கு, போன் செய்து வரச் சொன்னான். முத்து, வந்தவுடன் திவ்யாவை அழைத்துக் கொண்டு முத்துவிடம், ‘இவள் சாயந்திரம் மூன்று மணிக்கு, இங்கு கூட்டிக் கொண்டு வா', அது வரை இவளை நம் வீட்டில் இருக்கட்டும். வள்ளியிடம், சொல்லி என்ன கேட்கிறாளோ, செய்து கொடுக்கச் சொல் என்றான்.

திவ்யா, ஏண்ணா, என்னைப் போகச் சொல்றே? , என்று கேட்டாள். ம்ம் உன் வாய், ஓட்டை வாய். சும்மா லொட லொடனு பேசிட்டு இருப்பே, மறுபடியும் எதுவும் பிரச்சனை வரக் கூடாதுனு தான் போகச் சொல்றோம், என்றான் அருண். தூரத்தில் , 'அந்த அரக்கன் வருவதைப் பார்த்த விஜய், திவ்யாவைக் , காருக்குள் தள்ளி முத்துவைப் போகச் சொன்னான்.

அருண், சங்கர், விஜய்க்கு, 'அவனை அடித்து துவைக்க வேண்டும் போல் இருந்தது'. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அமைதியாக இருந்தனர். பிரின்சிப்பல், வரவும் விஜயன் மட்டும் சென்று, ஏதாவது தெரிந்ததா? சார் என்று கேட்டான். இல்லை, விஜய். நிர்வாகிக்கும், எந்த போனும் வரவில்லை என்று கூறினார்.

பரவாயில்லை, விடுங்க சார். கண்டிப்பா மாட்டுவாங்க என்றான். எப்படி விஜய்? , என்றார். அதற்குள், “ அவன் அதை துஷ்பிரயோகம் பண்ணாமல் இருக்கனுமே “, என்றார். அது நடப்பதற்குள் பிடித்து விடலாம் சார். அது தான் எப்படி?, நேற்று எப்படியோ தப்பித்து விட்டாள். மறுபடியும், ஏதாவது பிரச்சனை என்றால், ‘ ‘அந்தப் பெண் நிலைமை என்ன ஆகும்னு , நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்குப்பா, ' என்றார்.

சார், ஒரு நிமிசம் இருங்க என்று, சொல்லிவிட்டு வேகமாகக் கதவைச் சாத்தினான். பின், மனமார சித்தரை நினைத்து வணங்கினான். சித்தர் அந்தரத்தில் நின்று, ' விஜயா, நீ கவலைப்படாதே.' “ அந்த விசயம் அவனோடே அழிந்து விடும் ; அவன் தப்பான எண்ணத்துடன் தான் ; அதை எடுத்தான்; ஆனால், அது தான் அவன் உயிரை எடுக்கப் போகிறது”, அதனால் தைரியமாக மற்ற வேலைகளைக் கவனி, என்று கூறி மறைந்தார்.

என்ன விஜய் இது ! என்று கேட்டார் பிரின்ஸிப்பல். எனக்கும் என்ன என்று இது வரை புரியவில்லை சார். நேற்று நடந்ததைக் கூறினான். இந்தக் கல்லூரியில் , நீ வந்து சேர்ந்த பிறகு தான் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. நிறையப் பெண் குழந்தைகள் இங்கே சேர்ந்துள்ளனர். இப்போ தான் தெரிகிறது, ' அதன் இரகசியம்', என்றார்.

ஓகே, நீ போய் வேலையைக் கவனி என்றார். சார் , இப்போ நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் சார், என்றான். கண்டிப்பா விஜய், ' நான் , யாருக்கும் சொல்ல மாட்டேன் விஜய்', என்றார். தேங்க் யூ சார் என்றான். விஜய், “அந்த சித்தரிடம், இந்த பங்சன் நல்லபடியாக நடந்து முடிக்கும்படிக், கேட்டுக் கொள்”, என்றார். ' விஜயா, இது நல்லபடியாக நடக்கும், கவலை வேண்டாம்”, என்ற குரல் வந்தது.

இருவரும், ‘ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, நன்றி சுவாமி என்றனர். எல்லாம் சிவமயம் என்று கூறி மறைந்தது. அதற்குப் பிறகு, கல்லூரி வேலைகள் தீவிரமாக நடக்கத் தொடங்கியது. போட்டிக்கான பயிற்சிகள் விறுவிறுப்பாக நடந்தது. சனிக் கிழமை அன்று கமிசனர் கூறிய படி அனைவரும் “ உடற் தகுதித் தேர்வுக்காகச் சென்றனர்”. அதில், தேர்ச்சி பெற்றார்கள். முத்துவும், தங்கவேலுவும் உடன் சென்றனர். விஜய், வேண்டுமென்றே தான், அவர்களை அழைத்துச் சென்றான்.

அடுத்த நாள் ' எழுத்துத் தேர்வு நடைபெற்றது'. அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மறுநாளே “உள்துறை அமைச்சர் அவர்களுக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்; அதில் அவர்கள் கல்லூரி நிர்வாகி, பிரின்சிப்பல் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது; உடனே முதலமைச்சரிடம், அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார்”.

அவரும், அவர்களை சோதனை செய்து பார்த்தார். சில பரிசோதனைகள், சில நேர்முகத் தேர்வு வைத்ததில், அவர்கள் கொடுத்த பதில்கள், அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் பின்னர், அவர்களுக்கு வேலைக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டது. “ முதலமைச்சர், அவர்களிடம் கூறியது இது தான்; நீங்கள் சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.”.

என்னுடைய ஆட்சி, “மக்களின் நலனுக்காக மட்டும் தான் செயல்பட வேண்டும்; இதில் நிறைய புல்லுருவிகள் தலையெடுத்துள்ளனர்; களையெடுக்கப் பட வேண்டிய விசயங்கள் அதிகம் உள்ளன; இங்கே பதவி கிடைத்த வெறியில், கஞ்சா, அபின், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆயுதங்கள் சப்ளை, மரங்களைக் கடத்துதல், ரவுடீசம் என அதிகமான புகார்கள் வருகின்றன.”

“எங்களால் கை கட்டிக் கொண்டு வேடிக்கை தான் பார்க்க முடிகிறது. அவர்களை, எப்படி களையெடுப்பது, என்று நினைக்கும் போது, கடவுளாகப் பார்த்து, உங்களை அனுப்பியிருக்கிறார். உங்களுக்கான வேலை ஆர்டர் காப்பியில் என்ன வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும், எங்களின் உத்தரவே இல்லாமல், உயிரைக் கூட எடுக்கலாம், “என்று தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் எங்கள் உத்தரவை எதிர் பார்க்க வேண்டாம் . ஆல் தி பெஸ்ட் மை பாய்ஸ். தேங்க்யூ சார் என்று கூறி விட்டு கிளம்பி வந்தனர்.

கல்லூரியில், முதலில் விளையாட்டூப் போட்டிகள் ஆரம்பமாகின. ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்தனர். இவர்கள் கல்லூரி அதிக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டே வந்தது. அப்படி இப்படி என்று விளையாட்டுப் போட்டிகள் முடிந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திவ்யாவை, விஜய் வள்ளியைக் கல்லூரிக்கு வரவழைத்து அவளுக்குத் துணையாக இருக்க வைத்தான். விஜய் கோஷ்டியினர் திவ்யாவை ஒழுங்கா வாலைச் சுருட்டிட்டு இருக்கனும். இல்லை மண்டையைப் பிளந்துடுவோம் என்று கூறினர். அண்ணா, இதுலாம் ஓவர் என்றாள் திவ்யா. ஓவரும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. மூடிட்டு வள்ளி அக்காவோடு இரு அனைவரும் ஆளுக்காள் அறிவுரை கூறினர்.

ஏய் என்னடி எல்லாரும் என்னை ஓட்டுறீங்க. நான் என்ன அவ்வளவு மோசமானவளா என்றாள். எனக்கும் பொறுப்பு இருக்கு. சும்மா போங்கடி என்று கத்தினாள். அருண் ஏய் போய் உள்ளே உட்காரு. வள்ளி அக்கா, இவளைத் தனியா மட்டும் எங்கேயும் அனுப்பாதீங்க. ஏதாவது ஏழரையைக் கூட்டிடுவா. எங்கே போனாலும் கூடவே போங்க என்றான்.

ஒவ்வொருத்தராக மேடை ஏறித் தங்கள் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரே விசில் சத்தமும், கை தட்டலும் வானைப் பிளந்தது. அந்த அரக்கன் கூட்டம் பெண்கள் மீது தங்கள் காமப் பார்வையை வீசிப், கண்ணாலேயே துகில் உரித்துக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

வெளியே திடீர்னு ஒரே கூச்சல் குழப்பம். எல்லோரும் வெளியே ஓடினர். வெளியில் இருந்து வந்த வெளி காலேஜ் மாணவர்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். விஜய், ராணி, நான்ஸியிடாம் நம்ம காலேஜ் மாணவிகளை எந்த டிப்பார்ட்மெண்டிலாவது அழைத்து அடைத்து வை என்றான். சண்டையை விலக்கப் போலீசாரும் மாணவர்களும் முயற்சி செய்தனர்.

ஆனால், சண்டையைத் தூண்டி விட்டதே அந்த அரக்கன் தான் என்று தெரியவில்லை. கையில் கிடைத்ததை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். விஜய்க்குப், பொறுமை காற்றில் பறந்தது. கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், அதற்குப் பிறகு நடக்கூம் செயலுக்கு நான் பொறுப்பல்லஎன்றான்.

ஆனால், சண்டை பல ரூபங்களில் பெரிதாகியது. ஒரு காலேஜ் ஸ்டூடண்ஸ்க்கு அதற்கு நட்பான காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் ஈடுபட ஆரம்பித்தனர். விஜயனுக்கு , தன் நண்பர்கள் சிலரை போலீசில் சேர்த்திருந்தான் இல்லையா? அதில் ஒருவன் விஜய்க்குக் கால் பண்ணி, இது அமைச்சரின் மகன் தூண்டுதல் என்று செய்தி அனுப்ப, அடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு கல்லை எடுத்து, ஒரு போலீசார் மேல் எறிந்தான்.

இதே போல் பத்து போலீசார் அடிபட, அதை சாதகமாக்கிக் கொண்டு வெளியில் இருந்த நண்பர்களுக்கு சைகை செய்தான். அவ்வளவு தான், சண்டை போட்டவர்களுக்கு இடையே புகுந்து அடிக்க ஆரம்பித்தனர். சக போலீசாரும் தங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் அடி வெளுத்து வாங்கினார்கள். வாட்ச்மேனைக் கேட்டை இழுத்து மூடச் சொன்னான். முகத்தில் கர்ச்சிப்பால் முகத்தை மறைத்துக் கொண்டு, அமைச்சர் மகன் இருந்த இடத்திற்குச் சென்றவன் அவனைத் தனக்குக் கொடுக்கப்பட்ட லத்தியால் அடி வெளுத்து வாங்கினான்.

தடுக்க வந்த அவன் நண்பர்களையும், சேர்த்து வைத்து வெளுத்தான். மாணவர்கள் சிதறி ஓட முற்பட அவன்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களை, மேடையில் ஏற்றி அவரவர் திறமையைக் காட்டுங்கள் என்றான். போட்டிகள் முடியும் தருவாயில் ,”உள்துறை அமைச்சர் வர , அவரை வரவேற்று, மாலை அணிவித்து, சால் போத்தி, பூங்கொத்து கொடுத்து மேடையில் அமர வைத்தனர்.

என்ன விஜய் இன்னிக்கே சரியான வேட்டையா? , என்று கேட்டார். நடந்ததை சுருக்கமாகக் கூறினான். ம்ம் என்று தலை அசைத்துக் கேட்டுக் கொண்டார். அனைவருக்கும் பரிசும், பாராட்டும் வழங்கி, ஒரு சின்ன சொற்பொழிவு ஆற்றி விட்டுக் கிளம்பினார். திவ்யா, வள்ளியிடம் பாத்ரூம் போக வேண்டும் என்று கூற, வள்ளியும் கூட எழுந்து வந்தாள்.

அங்கே, மறைந்திருந்த அமைச்சர் மகன், திவ்யாவை நோக்கிப் பாய்ந்து இழுக்க, வள்ளி அவனை தாக்க முற்பட, வள்ளி முகத்தில் ஏதோ ப்ரே செய்ய அவள் மயங்கி விழ, யாருக்குப் பயந்து திவ்யாவை மறைத்து வைத்தானோ, அவனிடமே சிக்கிக் கொண்டாள். அவளை நாலு அறை அறைந்ததில் மயக்கம் போட்டு விழ வேட்டை நாய்கள், அந்தப் பிஞ்சை வெறி கொண்ட மிருகங்களாக வேட்டையாடினர்.”

“ ரொம்ப நேரம் ஆகியும் போனவர்கள் வரவில்லையே, என்று பார்க்க வந்த ராணியும்; ரம்யாவும் வள்ளி கிடந்த கோலத்தைக் கண்டு பயந்து போய், தங்கள் கையில் இருந்த விசில் எடுத்து ஊதப் போகும் நேரம்; இங்கேயும் ஒரு கண்ணை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சங்கர் வந்து பார்த்தவன்; ரம்யாவிடம், நீ போய் விஜயைக் கூட்டிட்டு வா”, என்றான்.

இனி வேட்டை ஆரம்பம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top