வாசனின் வாசுகி teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த கதைக்கு teaser போடக் கூடாதுனு நினைச்சிருந்தேன். உங்க cmnts பார்த்த பிறகு போடாம இருக்க முடியல.

எல்லாருமே கேக்குற ஒரே கேள்வி ரோஹனும் அபர்ணாவும் உறவினர்களோ?:eek::unsure:

சத்தியமா சொல்லுறேங்க அபர்ணாகும், ரோஹனுக்கும் எந்த விதமான இரத்த சம்பந்தமும் கிடையாது. கிடையாது. கிடையாது. :p:D:LOL:

Screenshot_20200917-025831_Google.jpg


எப்படி சிக்குவேனா?:cool::p

download (3).jpg




அனைவரும் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, சமயலறைக்குள் நுழைந்த வாசுகி கடைக்கு கொண்டு செல்ல சாப்பாட்டை கட்ட ஜன்னல் புறமாக புஷ்பாவின் குரல் கேட்டது.



"சில தரித்திரம் புடிச்சதுங்களுக்கு குழந்தை தங்காது பத்மா அக்கா, பொறக்கும் போதே! அம்மா இல்ல. இதுங்களுக்கு அம்மா ஆகுற பாக்கியம் இருக்குமா சொல்லுங்க? என்ன கேட்டா இதுங்க கல்யாணமே! பண்ணக் கூடாது"



"கல்யாணம் பண்ணாம எங்க வீட்டுல தரித்திரமா உக்காந்து என் மகளுங்க வாழ்க்கைய அழிக்கவா?" பூர்ணா கோபமாக சொல்ல



பொதுவாக யாரையோ பற்றி பேசுகிறார்கள் என்று வாசுகி நினைக்க பூர்ணாவின் குரல் கேட்டதும் தன்னை பற்றி தானா? இவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள் என்று அதிர்ந்தவள் அப்படியே! நின்று விட்டாள்.



"இதுங்களெல்லாம் உயிரோடயே! இருக்கக் கூடாது, தற்கொலை பண்ணி செத்திடனும்" என்று புஷ்பா கர்ஜிக்க, பூர்ணாவும் ஒத்தூதினாள்.



"ஆமா அத்த தற்கொலைதான் பண்ணிக்கணும்" என்று வாசனின் குரல் கேட்டதும் மூன்று பெண்களும் அதிர்ச்சியடைய வாசுகியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.




download (1).jpg


"என்ன அழகு என்ன அழகு எத்தனை சினிமால பாத்திருக்கேன். நேர்ல பாக்குறதெல்லாம் ஒரு வரம் பா... சே... ஷாஜஹான் பெரிய தப்பு பண்ணிட்டாரு"



வாசன் புரியாது "என்னடி சொல்லுற?"



"மும்தாஜ் சாகுறவரைக்கும் இருந்து தாஜ் மஹால கட்டி இருக்குறாரு உசுரோட இருக்கும் போது கட்டி இருந்தா அவங்க பார்த்து சந்தோச பட்டிருப்பாங்க இல்ல" சோகமான குரலில் சொல்ல



சத்தமாக சிரித்தவன் "என் அறிவுக்கொழுந்தே! இது கல்லறை டி செத்த பிறகுதான் கட்டுவாங்க, உசுரோட இருக்கும் போது கட்டி இருந்தா அந்தம்மா கோபிச்சி கிட்டு அவங்க அப்பா வூட்டுக்கு போய் இருப்பாங்க" என்று கிண்டல் செய்ய



"ஐயே!... கல்லறைனா சுடுகாட்டுல இருக்குற மாதிரி கட்டினா போதாதா? தோட்டம், நீர்வீழ்ச்சி, மண்டம்னுதான் மாளிகை மாதிரி கட்டணுமா? அதுக்கு ஒரு மாளிகைய கட்டி பரிசா கொடுத்திருக்கலாமே! இத கட்டினது மும்தாஜுக்கு தெரியவே தெரியாது. இதுவே! ஒரு மாளிகைய கட்டி கொடுத்திருந்தா காதல் மாளிகைல வாழ்ந்து முடிஞ்ச சந்தோஷத்துல மேல போய் சேர்ந்திருப்பாங்க" வாசுகி நொடித்துக்கொள்ள,



"வாஸ்தவம்தான். இருக்கும் போது மும்தாஜுக்கு சொன்ன காதல அவங்க இல்லாத போ உலகத்துக்கு சொல்ல நெனச்சாரு போல ஷாஜகான். அதான் இன்னைக்கி வரைக்கும் தாஜ் மஹால் நிமிர்ந்து நிக்குது" வாசன் சொல்ல



"இருக்கும், இருக்கும் உலகின் ஏழு அதிசயங்கள்ல தாஜ் மஹாலும் ஒண்ணுனு இன்னைக்கி நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்து மட்டுமில்லாம இவ்வளவு பேர் வராங்களே! பார்வையிட, இங்கயே! இருந்தா எப்படி வாங்க பக்கத்துல போய் பார்க்கலாம்" வாசனின் கையை பிடித்து இழுக்க,



"அடிப்பாவி..." என்று புன்னகைத்துக் கொண்டவன் சேர்ந்து நடக்க எமிலி அவர்களை தாஜ் மஹாலின் முன்னால் உள்ள நீர்த்தொட்டியின் முன்னால் நிற்க வைத்து வித விதமாக புகைப்படம் எடுத்தாள். அவர்களும் வித விதமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் முன்னே நடந்தனர்.



download (6).jpg

வாசனை கடையில் இறக்கி விட்டு அறைக்கு வந்த ரோஹன் தந்தையை அழைத்துப் பேசினான்.



"எல்லாம் நான் நினைச்ச மாதிரிதான் பா... நடக்குது. வாசுகியை கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்துல மருமகனான போகணும்னு பார்த்தேன். அதுக்கு வாசன் அண்ணாக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் இருக்குனு போன் பண்ணி சொல்லி கல்யாணத்தையும் நிறுத்தப் பார்த்தேன். நான் அமெரிக்கால இருந்ததால என்னால கல்யாணத்த நிறுத்த முடியல. வேற வழியில்லை. சந்திராவை கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தேன் அவ என்னடான்னா... அத்த பையன காதலிக்கிறாளாம். அதுவும் போச்சான்னு இருக்கும் போது வாசன் அண்ணா பொண்ணு பாக்குறேன்னு சொன்னதும் சரினு சொல்லி வச்சேன்"



"வாசன் உனக்கு யாரை பார்த்து வச்சிருக்கான்? ரொம்ப நல்லவனா நடிக்கப்போய் போன காரியத்தை கோட்ட விட்டுடாத மகனே!" ரோஹனின் தந்தை ராஜேந்திரன் எச்சரிக்க......


குட்டி, குட்டியா மூணு டீஸர் போட்டுருக்கேன். Enjoy:love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Teaser,
பஸ்மிலா டியர்

அது என்ன?
நாதனுடைய பெண்களைத்தான் கல்யாணம் பண்ணணும்ன்னு ரோஹன் ஏதாவது விரதம் இருக்கானா?
என்ன காரணம்?
ஒருவேளை அபர்ணாவின் விருப்பமோ?
ரோஹனின் அப்பாதான் அபர்ணாவை ஆதரித்ததா?
அபர்ணாவுக்கு என்ன ஆச்சு?
அபர்ணா ஏன் ஓடிப் போனவளாக சித்தரிக்கப்பட்டாள்?
இந்த சதியின் பின்னாடி யாரு இருந்தது?
பூர்ணாவா?
இல்லை நாதனின் சகோதரிகளா?
இல்லை நாதனேவா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top