வாசனின் வாசுகி teaser 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் குட்டி டீசர் தான். கதைய past and present னு எழுதலாம்னு இருக்கேன். எந்த குளறுபடியும் வராது. dont worry

download (3).jpg

ஆத்மநாதனி ஊர் என்றதும் மறுத்தவனை எவ்வாறு சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு கடவுளே! அனுப்பியது போல் ராமநாதன் கடைக்கு வர அவரிடம் புகார் சொல்வதை போல் ராஜம் கூற, பூர்ணாவின் அன்னையின் வற்புறுத்தலின் பெயரால் ராமநாதனும் “போய் பார்த்து விட்டு வரலாம் வாசா..” என்று வார்த்தையை விட நாளை கடத்தினால் ராமநாதனின் மனதை மாற்றி விடுவானோ! என்றஞ்சியே! உடனே கிளப்பி இருந்தார் பெண்பார்க்க. ராமநாதனை மட்டும் அழைத்துக் கொண்டு ரகுவிடம் கடையை ஒப்படைத்து விட்டு வேண்டா வெறுப்பாகத்தான் பெண் பார்க்க சென்றிருந்தான் வாசன்.



ராஜத்துக்கு கைகால் ஓடவில்லை. பூர்ணாவை அழைத்து இப்பொழுதே! மாப்பிள்ளையும் அவர் தந்தையும் வாசுகியை பார்க்க வருவதாக கூறி விட்டு அவர்களுடனே! பஸ் ஏறி இருந்தாள்.



"இது என்ன திடிரென்று வருகிறார்கள்" என்று அதற்கும் பூர்ணா பொரும



"கடை செய்பவர்கள் அப்படித்தான் நேரம் கிடைத்த உடன் வர வேண்டாமா?" என்ற நாதன் தன் சம்மதத்தை மறைமுகமாகவே! சொல்லி இருந்தார்.



வேண்டா வெறுப்பாக வந்ததால் வாசன் கடைக்கு வந்த துணியையே! போட்டு வந்திருந்தான். பஸ் வேகமெடுக்க கண்ணாடியினூடாக வந்து அவனை தொட்டுச்சென்ற காற்றில் அவன் மேல் மசாலா தூளின் வாசனை வேறு அடிக்க தன்னையே! நொந்துகொண்டான்.


பெண் பார்க்க வந்த பொழுதே! தன்னுடைய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறிய வாசன் "எந்த செயற்கை அழகை கொண்டும் அலங்காரம் பண்ணாம எளிமையாக இருக்க அதனாலே எனக்கு உன்ன பிடிச்சிருக்கு" என்று வெளிப்படையாக கூறியது மட்டுமல்லாது “உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்டும் இருந்தான்.



உண்மையில் அன்று வெள்ளிக்கிழமை வாசுகி கோவிலுக்கு சென்றிருக்க, வீடு வந்தவளுக்கு இப்பொழுது மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் தயாராகு என்று பூர்ணா கூறி விட்டு சென்று விட்டாள்.



வழக்கமாக மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருகிறார்கள் என்றால் வாசுகியின் அத்தைகள் வந்து அவளுக்கு பட்டு புடவை கட்டிவிட்டு, அத்தை மகளில் யாராவது ஒருத்தி மேக்கப் என்ற பெயரில் அலங்காரம் செய்து அவளை ஒருவழிப்படுத்தி விடுவார்கள். இன்று யாரையும் காணோம்.



கோவிலுக்கு தான் விரும்பியது போல் சாதாரண ஒரு புடவையில் ஒப்பனைகள் எதுவுமின்றி மல்லிகை சரம் மட்டும் சூடி சென்றிருக்க, நெற்றியில் வீற்றிருந்த வட்டப் பொட்டும் அவளை தேவதையாகத்தான் காட்டியது. கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டவள் இதுவே போதும் என்று இருந்து விட்டாள்.



"என்ன இவர் இப்படி பட்டுனு சொல்லிட்டாரு" அவள் முகம் பார்த்து பதில் எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு தலையை பலமாக ஆட்டுவித்திருந்தாள் வாசுகி. அது ஏன் என்று இன்றுவரை வாசுகிக்கு புரியவில்லை. அவளை பொறுத்தமட்டில் வாயிலிருந்து வரும் அதிகமாக வார்த்தையே! “அப்பாகிட்ட சொல்லணும், சித்திகிட்ட கேக்கணும்” என்றிருக்க, வாசன் கேட்ட கேள்விக்கு சுயமாக தலையை ஆட்டுவித்திருந்தாள். வாழ்க்கையில் அவளாக எடுத்த ஒரே முடிவு அவளுடைய கல்யாணம் என்பது கூட அவள் அறிந்திருக்கவில்லை. மனதில் பட்டதை சொல்வதுதான் வாசனின் குணம் என்று போகப்போகத்தான் அவளுக்கே புரிந்தது.

******************************************************

‘மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்’



{மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக}





என ஐயர் மந்திரம் கூறி மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரிந்துதான் எல்லாரும் திருமணம் செய்கிறார்களா?



தாலியை கையில் வாங்கிய வாசன் வாசுகியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கி இருந்தான்.



முதல் முடிச்சு கணவனுக்கு கட்டுப்பட்டவள்

இரண்டாம் முடிச்சு வீட்டுக்கு கட்டப்பட்டவள்

மூன்றாம் முடிச்சு கடவுளுக்கு கட்டுப்பட்டவள்

இது எத்தனை பேருக்கு தெரியும்?



வாசன் தன் கையை வாசுகியின் தலையை சுற்றிக்கொண்டு சென்று வகிட்டில் குங்குமத்திலகமிட்டான். மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில் குங்குமத்திலக்கமிடுவது மணமகள் மணமகனுக்கு உரியவள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.



இவ்வாறு ஒவ்வொரு சடங்கும் அழகா இனிதே நிறைவேற்றப்பட்டிதான் அவர்களின் திருமணம் எந்த குறைவில்லாமல் நடந்தேறியது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top