வாங்கி பாத் (கத்தரிக்காய் சாதம்)

Advertisement

Sahi

Well-Known Member
தேவையான பொருட்கள்:

நீள வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம்: 1
கத்தரிக்காய் (நீள வாக்கில் நறுக்கியது): 4
வடித்த சாதம்: 1 கப்
உப்பு: ருசிக்கேற்ப
எண்ணெய்: 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்: 1/4 டீ ஸ்பூன்

வறுத்து அரைக்க:

1. தனியா: 4 டீ ஸ்பூன்
2. கடலைப் பருப்பு: 1 ½ டீ ஸ்பூன்
3. உளுத்தம் பருப்பு: 1 டீ ஸ்பூன்
4. மிளகு: 1/2 டீ ஸ்பூன்
5. சீரகம்: 1 டீ ஸ்பூன்
6. வெந்தயம்: ¼ டீ ஸ்பூன்
7. பட்டை: 1
8. கிராம்பு: 2
9. ஏலக்காய்: 1
10. காய்ந்த மிளகாய்: 5
11. தேங்காய்: 1/2 மூடி
12. பெருங்காயம்: 1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு: 1 டீ ஸ்பூன்
கடலைப் பருப்பு: 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு: 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை: 1 கொத்து

செய்முறை:
வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (1-10) வெறும் வாணலியில் தனித்தனியாக வாசனை வரும் அளவு வறுக்கவும். தேங்காய் துருவலை லேசாக வறுத்தெடுக்கவும். அதனுடன் பெருங்காயம் சேர்த்து ஆறவிடவும்.

ஆறிய கலவையை கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் கத்தரிக்காய் சேர்த்து 10 நிமிடம் எண்ணெயிலேயே வேகவிடவும். வெந்ததும் அரைத்த பொடி, ருசிக்கேற்ப உப்பு மற்றும் சாதம் சேர்த்து கிளறினால் வாங்கி பாத் (கத்தரிக்காய் சாதம்) தயார்.
IMG_20190828_081734.jpg
 
banumathi jayaraman

View attachment 4459
சூப்பர் ரெசிப்பி, சாஹித்யா டியர்
 
naveensri

Well-Known Member
கன்னடம்
தேங்க்ஸ் பானுமா... எங்க பாஷையில் வங்கி னு சொல்லுவோம் கத்திரிக்காய்க்கு, சாதத்துக்கு பாத் சொல்லுவோம்... ஒரு நெடில் கூட வந்ததால கேட்டேன்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top