வம்பு நாட்டான் – 10

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான் – 10

புத்தம் புதுக் காலை வேளை போலும் இயற்கை அத்தனை உற்சாகமாகக் காட்சி அளித்தது. கிராமம் என்பது கடவுளின் சொர்க்கமோ!....

வளர்ந்து வரும் விஞ்ஞானம் மெய் கொண்டு பேசினாலும் மனதில் ஓரத்தில் பசுமையை எண்ணி ஏங்குவது மறுக்கப்படாத உண்மை நாம் இழந்த சொர்கம் அல்லவா அது.

விடிந்து சில மணி நேரங்கள் இருக்கலாம் காய் கரி கடை கமிஷன் மண்டி என்று அந்தச் சந்தை அல்லலோல பட்டது. அதில் ஒரு கமிஷன் தேங்காய் மண்டியில் தான் அமர்ந்திருந்தார் சொக்கன்.

மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்டு அதனை ஒட்டிய சிறு கிராமங்களைப் பூர்விகமாகக் கொண்டு வளர்ந்தவர் தோட்டம் பண்ணை என்று விவசாய குடும்பம்.

அவர் தலைமுறையில் தற்போது நிலை சற்று மாறுபட்டுக் கடையாகச் சந்தையில் உருமாறியது தொழில். குடும்ப நண்பர்கள் அவ்வப்போது கூட்டு தான் வெளியில் வாங்குவதைத் தங்களுக்குள் வாங்கிக் கொள்வார்கள். அது போலத் தான் தேங்காய் லோடு வேண்டி மூக்கன் சொக்கனிடம் வந்தது.

தேங்காய் கணக்கை வரவு நோட்டில் குறித்துக் கொண்டு இருந்தவரை கலைத்தது மூக்கனின் குரல் “என்ன சகல வேலை ரொம்பச் சாஸ்தியா”

“வாக!... வாக!.... சகல ... ஆமாய்யா மாமனார் வூட்டுலையே போச்சு ஒரு வார பொழுது அம்புட்டு வேலை இங்கன சேர்ந்து கிச்சு முத்தரசனும் அங்கனதானே அதேன்”

“எனக்கும் பெண்டு கலந்துடுச்சு சாமி ...சரி நான் வந்த செய்தி என்னனா? நம்பப் பங்காளி பைய வூட்டுக் கண்ணாலம் விருந்துக்கு நம்பக் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ண சொன்னாய்ங்க அதேன் வந்தேன் ஒரு லோடு தேங்கா வேணும் சகல எம்பூட்டுனு சிட்டை கொடு குடுத்து புடுறேன்”

“சொந்ததுக்குள்ள என்ன சகல பார்த்துக்கிடலாம்”

“அது சரி நீ சிட்டை கொடு வெளில கொடுக்குறதை விட இரண்டு ரூபா கமி பண்னு போதும்”

“சரி சகல” என்றவர் லோடு கணக்கை பார்க்க அவர்கள் கடை வாசலில் வந்து இறங்கினர் சடையப்பனும் கருப்பனும் எதார்த்தமாக வண்டியின் சத்தத்தில் திரும்பியவர் வந்தவர்களைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து தான் நின்றார்.

வாய் தானாக மூணு முணுத்தது “அடி ஆத்தி! வில்லங்கம் வினையோட வருதே” சன்னமாக மூக்கன் சொல்ல

அது சொக்கனையும் தீண்ட “என்ன சகல வாய்க்குள்ள பேசுற” என்றவரும் நிமிர்ந்து பார்க்க அவரும் அதிர்ந்து தான் போனார்.

“என்ன மாமா எங்களைப் பார்த்து அப்படி நிக்கீக” என்றதும் தான் இயல்புக்கு வந்தனர்

“அதெல்லாம் இல்ல மச்சான் வாராதவுக வந்து இருக்கீக அதேன் உட்காருக” என்றவர் நாற்காலியை எடுத்து போட இருவரும் அமர்ந்தனர்.

“என்ன செய்தி இம்புட்டுத் துளைவு” இருவரையும் அளந்தவரே கேட்டுவைத்தார் சொக்கன்.

எடுத்த எடுப்பிலே சடையன் “எங்களுக்கு நியாயம் வேணும் மாமா”

அவன் குரல் உயர்த்திச் சொன்ன தினுசில் அதுவும் அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொல்லவும் கருப்பனுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை கடின பட்டு வாய்க்குள் அதனை அதக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

“என்ன சொல்லுறீக மச்சான் செய்தி ஒன்னும் அம்புடல” சொக்கன் சொல்ல

“வூட்டுல இருக்க அம்புட்டு பேரும் சதி செய்றாக என் ஐயா உற்பட”

“இருக்காதுங்களே” இது நமது மூக்கன்

“இல்லங்க மாமா என் தாய் மாமே புதுசா கட்டுன சோடி போலச் சேட்டை ஆனா பாருங்க மூணு வருசத்துக்கு முன்னாடி கண்ணாலம் முடுச்ச நான் நாதி இல்லாம நிக்கேன்”

“அது சரி” இருவரும் ஒரே போல எண்ணி கொண்டு

“பெரியவுக முடிவு எடுப்பாக மச்சான் மாமா பேசிகிட்டு தேன் இருக்காரு வர தைல முடிச்சு புடலாம்னு எண்ணம் இருக்கு மலர் பாப்பா இருக்குது அதுக்கு முன்னாடி அன்னம் கொஞ்சம் பொறுத்துகிடுக அப்புறம் சுக படலாம்” மிகவும் பொறுமையாகச் சொக்கன் எடுத்து சொல்ல

“எல்லாம் சரித்தேன் மாமா அன்னத்துக்கு உங்க அக்கா மவன் சின்னவனை முடிச்சு புடுக மலருக்கு இதோ இருக்கானே கருப்பன் அவனை முடிச்சுப் புடலாம் பிறவு என்ன”

“ஆத்தி!.... ஏத்தத்த பார்த்தியா சகல தங்க சிலை கணக்கா பிள்ளையைப் பெத்து இந்தச் சண்டியர்களுக்குக் கொடுக்கனுமாமே” மெல்லமாகச் சொக்கன் காதை கடிக்க

அதே மெல்லிய குரலில் “யோவ் சகல கவனிச்சியா உம்ம அக்கா மவனும் இவிங்க கூட்டாளி தேன் என்னமா பேசி வச்சு பொண்ணு தூக்குறாய்ங்க பாரு”

“புரியுது சகல எங்க அக்கா கேட்டுச்சு நாந்தேன் யோசனை இல்லனு சொல்லிப்புட்டேன் சடைக்கே கொடுக்கப் பிரியமில்ல அவன் கிட்ட இருந்து என் பொண்ணு தப்புச்சு போச்சேன்னு பார்த்தா அந்த முரட்டு பையலுக்குல கேக்குறான்” அலறிவிட்டார் சொக்கன்.

“என்ன மாமா உங்களுக்குள் பேசிக்கிட்டா என்ன அர்த்தம் நீக தேன் நியாயம் செய்வீங்கன்னு வந்து நிக்கேன்”

“எப்புடி கொத்துவிடுறாய்ங்க பாரு” பல்லை கடித்த சொக்கன் வெளியில் சிரித்துக் கொண்டே “சரித்தேன் மச்சான் அடுத்த வாரம் வாரேன் மாமாகிட்ட பேசி புடலாம்” நழுவ பார்க்க

“அந்த வேலையே வேணாம் மாமா நல்ல செய்திக்கு எதுக்கு அம்புட்டு நாள் கடத்திகிட்டு வாக இப்பவே போலாம்” கருப்பன்

“என்னது!....... என்ன விளையாட்டு மச்சான் ஆரு கடை கன்னி தோட்டம் தோரவெல்லாம் பாக்குறது”

“அதெல்லாம் நம்ப முத்தரசன் பார்த்துக்கிடுவான் அவனைப் பார்த்து செய்தி சொல்லிப்புட்டுதேன் வாரேன்” என்றதும் இருவருக்குமே என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை அனைத்தும் தெளிவாகத் திட்டமிட்டு பண்ணும் இந்த இளவட்டங்களைச் சமாளிக்க முடியவில்லை.

“சரித்தேன் மச்சான் முன்ன போகச் நான் சகல வண்டில வாரேன்” மூக்கன்.

“எதுக்கு ஏழு காரு வெளில முத்து அண்ணே வண்டில நிக்குது வாக” என்றவன் இருவருக்கும் யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் கருப்பன் சொக்கனையும் சடையன் மூக்கனையும் இழுத்து வந்து காரில் தள்ளவும் முத்தரசன் வரவும் சரியாக இருந்தது.

அவனுக்கும் தனது தந்தையையும் சித்தப்பனையும் பார்க்க சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது இருந்தாலும் அதனை அடக்கி இருவருக்கும் விடை கொடுத்தான். மறந்தும் தனது தந்தையைப் பார்க்கவில்லை அவனது செயல் கண்டு பொருமினார் மூக்கன் கூட்டு களவாணிங்க

அவர்களை ஒருவழியாகக் காரில் ஏற்றி அனுப்பிய சடையனும் கருப்பனும் வெற்றி களிப்பில் வண்டியை கிளப்பிக் கொண்டு ஓர் இரு வார்த்தைகள் ரகசியமாக முத்தரசனிடம் பேசி விட்டு விடைபெற்று சென்றனர்.

***

காரில் ராசியப்பன் மற்றும் முத்து அமைதியாக வர ஏக கடுப்பில் வீட்டு மாப்பிள்ளைகள் “என்ன ராசி மச்சான் இது சிறுசுக ஆட்டம் சாஸ்தி யா (அதிகம்) இருக்கு இதுல நீங்களும் கூட்டு”என்றதும் பதறிய ராசி

“அய்யயோ மச்சான் மறந்தும் அவிங்க கூடக் கூட்டு சேர்த்து புடாதீக உங்கள எப்படி கூட்டியாந்தானோ அதே போலதேன் எங்களையும்”

“என்ன மச்சான் சொல்லுறீக” அதிர்ந்து போனார்கள்

“ஒன்னும் சொல்லுறதுக்கில்ல மாமா” என்றவர் நேற்றைய தின வம்பை சொல்ல இருவருக்கும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

“ஆகா எல்லாம் கூட்டு” சொக்கன் யோசனையாகச் சொன்னார்

“ஆமா மாமா அந்தாண்ட கருப்பன் மலர் புள்ள வேணுன்னு நிக்கான் இந்தாண்டா என் தம்பி நங்கை வேணுன்னு நிக்கான் இவனுங்களுக்கு இடையில உங்க அக்கா மவேன் சொடலை அன்னம் வேணுன்னு நிக்கான் இதுக்குச் சிறுசுக அத்தனையும் கூட்டு”

“இம்புட்டு நாள் கண்ணுல எதுவும் படல மச்சான்” மூக்கன் பதறிக் கொண்டு சொல்ல

“அட நீக வேற இந்த இடத்துல தேன் நம்பப் பொழைச்சு கிடக்கோம் இல்லனா பொண்ண தூக்கிட்டு போயி கட்டி இந்நேரத்துக்குப் புள்ள குட்டி ஆகி போயி இருக்கும்” முத்து சொல்ல

சொக்கன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார் முத்துவின் வார்த்தையில் பதறியவர் “மச்சான் பார்த்து செய்தி சொல்லுய்யா அடுத்தடுத்து அதிர்ச்சி தாங்க முடியல”

“மாமா நெசந்தேன் இவிங்கள அடக்க முடியாது மறுவாதியா கட்டி வச்சுப் புடலாம் அதுதேன் நமக்கு நம்ம குடும்பத்துக்கும் நல்லது இல்லனா நாளுக்கு ஒரு சண்டை கட்டுவானுக பொழுதுக்கும் ஒரு பஞ்சாயம் வைப்பாய்ங்க” முத்து சொல்ல

அது போக காடு கடை பார்ப்போமா? வயித்துப் பாடு பார்ப்போமா? வூட்டுல புள்ளைங்களைக் காமந்து பண்ணுவோமோ? சொல்லுக எதுவும் பண்ண வுட மாட்டாய்ங்க பார்த்துக்கிடுக” ராசியப்பனும் அவர் பங்கிற்கு பயம் காட்டினார்.

“ராசி மச்சான் சொல்லுறது சரித்தேன் சகல பேசி முடுச்சு புட்டு சோழிய பார்ப்போம்”

“ஹ்ம்.... முது மகன்கள் தங்களைச் சமாதானம் செய்து கொண்டனர் வேறு வழியும் அவர்களுக்குக் கிடையாதே பாவம்.

****

நடனதேவர் யோசனையாக முத்துராமன் தேவன் அதாவது மூப்பனிடம் அமர்ந்திருந்தார் மனம் குழம்பி தவித்தது தீர்க்ககமாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.

என்னடா!. இது ஊர் பெரியவராக அவர் கையில் எத்தனை த் திருமணங்கள் செய்து வைத்திருப்பார், எத்தனை சண்டைகளைச் சத்தமில்லாமல் முடித்து வைத்திருப்பார்,

எத்தனை இடர்பாடுகளைக் கடந்து வந்திருப்பார் அப்படிப் பட்டவருக்குத் தற்போது உள்ள தலைமுறை தண்ணி காட்டி நின்றது.அவரது கையில் உள்ள காலி காப்பி லோட்டாவை பார்த்த மூப்பன்

“என்ன யோசனை தேவா” என்று கேட்டவாறே அந்த லோட்டாவை வாங்கித் திண்ணையில் வைத்தார்.

“என்ன முடிவுனே தெரியலைங்க பிரச்சனை ஆரம்பத்துல நிக்கேன்”

“என்ன சாமி செய்தி” என்றவரிடம் அவருக்குக் கிடைத்த செய்தியை சொல்ல சிரித்துக் கொண்டார்

“உங்க முடிவு”

“அவுக பெத்தவுகத்தேன் முடிவு சொல்லனும்” நடனதேவர் யோசனை போல் சொல்ல

“நான் உங்க முடிவை கேக்கேன்”

“எனக்குச் சரித்தேன் மூணு பையலுகளும் முரடுத்தேன் ஆனா பாச கார பையலுக கட்டி கொடுத்தா பொண்ணுங்க பொழுச்சு கிடக்கும்”

“இல்லன்டா” கேலியாக மூப்பன் கேட்க அதுவரை யோசனையாகப் பேசிய நடனதேவர் மூப்பன் முகத்தைப் பார்க்க அதில் அவரது கேலி சிரிப்பை கண்டு கொண்டவர்

“இல்லாண்ட தூக்கி புடுவானுக” அவரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

“பிறவு என்ன யோசனை”

“அக்கா ஒத்துக்கிடாது ஐயா!”

“சரித்தேன் கொஞ்சம் நஞ்சமா சேட்டையைக் கொடுத்தாய்ங்க ஓத்த பொம்பளையா தனுச்சு நின்னு பார்த்துச்சு. பெத்த ஆத்தா அப்பனாட்டம் சீர் செஞ்சி ஒவ்வொரு பொண்ணையும் கரையேத்தி வுட்டுச்சு அந்த நன்றி இல்லாம போச்சு பார் அதுங்களுக்கு”

“எனக்கு இம்புட்டு வந்தது தெரியாம சுயநலமா இருந்து புட்டேன்” நடனதேவர் உண்மையாக வருந்தினார் அவருக்கு நல்லம்மாள் பட்ட துன்பம் தெரியாது அவரது உழைப்பு குடும்ப அமைப்பு மட்டுமே தெரியும் என்ன விந்தை இது

“அது சரி புகுந்த வூட்டு செய்தி அது... அதைப் போயி அது சொல்லும்மா சொல்லு உன் பொஞ்சாதிகளும் போக்குவரத்து இல்ல பிறவு எப்புடி ..........”நடனதேவர் முகம் மீண்டும் குழப்பத்தை எதிரொலிக்க

“தேவா அது போக்குல வுடு அவிங்க ஆயி அப்பன் பார்த்துக்கிடுவாக நீ வேடிக்கை பாரு நீ பேசனு ஒரு சமயம் வரும் அப்போ பேசு சமயம் பார்த்து பிள்ளைகளைச் சேர்த்துப்புடு”

“பெரிய மாப்பிள்ளையும் சரி அக்காவும் சரி கண்ணாலத்துக்குச் சம்மதிக்கிறது கல்லுல தேங்கா உரிக்கிற கதைத்தேன்”

“அதுவும் சரித்தேன் சொடலை முரட்டு பையன்... நேத்து கூட அவுக அப்பன் நம்பக் கருப்பன் கோவிலுக்கு வந்தேன்”பார்த்தவன் புலம்பி தீர்த்துப் புட்டேன்

“அதுதேன் பயமே சொடலை முரடு, கருப்பன் ஊமை குசும்பேன் ஆனா இந்தச் சடையன் இது இரண்டும் சேர்ந்த வம்பு காரேன்.

“விதை ஒன்னு போட்டா சொரை வேறா முளைக்கும்” என்றவர் வெடி சிரிப்பு சிரிக்க நடனதேவர் முகத்திலும் சிரிப்பு.

“சரி இவனுகளை விடு உன் மச்சான் என்ன ஆனான்” என்றதும் வாய்கொள்ளா புன்னகை நடனதேவரிடம் அதுவே சொன்னது பதிலை

“போனதை பேசி கிளறதா தேவா அறிவும் அவனும் பேசி தெளியட்டும்”

“சரித்தேன் என் மவ சந்தோஷம் போதும் எனக்கு.....”.
 
Last edited:

Nirmala senthilkumar

“அதுதேன் பயமே சொடலை முரடு, கருப்பன் ஊமை குசும்பேன் ஆனா இந்தச் சடையன் எது இரண்டும் சேர்ந்த வம்பு காரேன்.

“விதை ஒன்னு போட்ட சொரை வேறா முளைக்கும்” என்றவர் வெடி சிரிப்பு சிரிக்க நடனதேவர் முகத்திலும் சிரிப்பு.

“சரி இவனுகளை விடு உன் மச்சான் என்ன ஆனான்” என்றதும் வாய்கொள்ளா புன்னகை நடனதேவரிடம் அதுவே சொன்னது பதிலை

“போனதை பேசி கிளறதா தேவா அறிவும் அவனும் பேசி தெளியட்டும்”

“சரித்தேன் என் மவ சந்தோஷம் போதும் எனக்கு.....”.
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top