வந்தேன் உனக்காக EP-7

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
"குடிபோதையில், அரைமயக்கத்தில், கிடந்தான் ஆதி".

"நான் செபாஸ்டியன், ஆதியின் நண்பன். இவன் என்னை காண தான் இங்கு வந்தான். ஆனால் நான் வருவதற்குள், இப்படி அநியாயத்திற்கு போதை ஏறும் வரை குடித்து விட்டான்", என அவன் கூறி லேசாக தலையில் அடித்துக் கொள்ள.

என்ன செய்வது என்று இருவரும் யோசிக்கையில், "கவலை வேண்டாம், இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கவனமாக செல்லுங்கள்" என்றான் செபாஸ்டியன்.

சில நொடிகள் சிந்தித்துவிட்டு, "ரொம்ப நன்றி செபாஸ்டியன், அவனை பார்த்துக்கொள்ளுங்கள்", என்று கூறி, சனாயாவை அழைத்துச்சென்றான் பிரதாப்.

'இவன் குடிப்பான!!! என்னிடம் இதை பற்றி கூறியதே இல்லையே!!! அப்படியே குடித்தாலும், நான் ஒருத்தி காத்திருக்கிறேன், அவனை நம்பி இவ்வளவு தூரம் வந்துள்ளேன், என்பதை எல்லாம் மறந்து போதை ஏறும் வரை குடித்துவிட்டு, ஆனந்தமாக உறங்குவதா!!!... இதை எப்படிச் சிந்தித்தாலும், நியாயப்படுத்தவே இயலாது'....

'பாவி... இப்படி செய்து விட்டானே, நல்லவேளையாக பிரதாப் என்னுடன் உள்ளார். இனி இவனை நம்பி தனியே வரவே கூடாது', என்று எண்ணினாள் சனாயா.

"இதற்குத்தான் கூறினேன், இனியாவது அவனுடன் தனியே செல்லும் போது, என்னிடம் குறிவிட்டுச் செல்" என்றான் பிரதாப்.

அவள் விழிக்கவும்….

"என்னிடம் என்றால்…. கார்த்திக்….பிரபாவிடம்... அதாவது, எங்களிடம்…", என மாற்றினான்.

அவள் சரியென தலையசைத்து விட்டு… "இனி இப்படி செய்யவே மாட்டேன், நீங்கள் அறிவுரை கூறிய போது, கடும் கோபம் வந்தது. ஆனால் இப்போதுதான் புரிகிறது, அதற்காக எனது ஆதி கெட்டவனாகி விடமாட்டான்" என்று உறுதியாகக் கூறினாள் சனாயா.

"நான் அப்படி கூறவே இல்லையே, காரில் ஏறு கிளம்பலாம்" என்றான், கடிந்த இறுக்கமான குரலிலே.

ஏறியவுடன்... "சரி பிரதாப், உங்களைப் பற்றி கூறுங்கள்" என்றாள்.

'என்னைப்பற்றி, என்ன சொல்வது"...

"உங்கள் படிப்பு, இருக்குமிடம், இவைதான் தான். நான் தெரிந்து கொள்ளலாம் தானே"....

"கட்டாயம் தெரிந்து கொள், ஆனால் இன்றில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, கார்த்திக், பிரபாவோடு வெளியே செல்லும்போது நிறைய பேசலாம்"...

"ஏன் இன்று கால நேரம் ஏதேனும் சரி இல்லையா"...

"எல்லாம் சரியாய் தான் உள்ளது, உன் உடல்நிலையைத் தவிர. உன்னைப் பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு களைப்பாய் உள்ளாய் என்று, அமைதியாக படுத்து உறங்கு. உன் வீடு வந்ததும் எழுப்புகிறேன்" என அக்கறையாய் அவன் கூற,

'இவர் கூறுவதும் சரிதான்', என அமைதியாய் கண் மூடி உறங்கும் வேலையில் மூழ்கினாள்.

இருப்பினும் ஏதோ ஒரு ஓரத்தில், 'இந்த ஆதி ஏன் இப்படி செய்தான், இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்', என்ற எண்ணம், அவளை வருத்தியது.

அவள் உறங்கவும், காரை மெதுவாக ஓட்டிச் சென்றான். அவள் தூக்கம் களையாத வண்ணம், திறமையாய் வாகனத்தை செலுத்திக்கொண்டு, சென்றான் பிரதாப்.

*********

மறுநாள் காலை, கல்லூரிக்குச் செல்ல, தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள் சனாயா.

'இந்த ஆதிக்கு, இன்று பாடம் கற்பிக்க வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால், இப்படி செய்திருப்பான். கொஞ்சம் கூட என்னை பற்றிய கவலை இல்லாமல்... சேச்சே….. என்று நினைத்துக்கொண்டே', தனது மொபைலை எடுத்தாள் சனாயா.

பிரபா விடமிருந்து மெசேஜ் வந்திருந்தது, "இன்று உனக்காக நான் காத்திருக்கிறேன், கல்லூரிக்கு செல்லும் வழியில் என்னையும் அழைத்துச் செல்", என்று அதில் எழுதியிருந்தது.

"வாடி சனா... உன்னை கொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது, ஆதியின் தோழியாக இரு, வேண்டாம் என்று கூறவில்லை. அதற்காக என்னை மறந்துவிடாதே, நேற்று உன்னை காணாமல் எனக்கு அழுகையே வந்து விடும் போல் தோன்றியது", என்று வெடித்தாள் பிரபா.

"சாரி, சாரி, நீங்கள் என்னை தேடுவீர்கள் என்று நான் யோசிக்கவே இல்லை. இனி இவ்வாறு செய்ய மாட்டேன்"...

"செய்தால் அவ்வளவுதான், அடுத்த முறை மன்னிப்புக்கு இடமே இல்லை" என்றாள் பிரபா.

"சரிடி", என வேகமாக தலையாட்டினாள் சனாயா.

கல்லூரிக்குப் போகும் வழி முழுவதும், பிரதாப் கண்ணனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் சனாயா.

அவர் மிகவும் கெட்டிக்காரர் பிரபா, கார்த்திக் அண்ணா வயதுதானே அவருக்கு, ஆனால் அந்த ரிசார்ட்டையே அழகாக பராமரித்து வருகிறார்.

அங்கு வேலை செய்யும் அனைவரும், அவருக்கு எவ்வளவு மரியாதை தருகிறார்கள் தெரியுமா. அது அனைத்துக்கும் மேலாக, நான் மயங்கிய போது அவர்தான் காப்பாற்றினார். மிகவும் நல்லவர். சிறுவயதில் குண்டாக இருப்பார் தானே, ஆனால் இப்போது ஆல் பார்க்க ஹீரோ போல இருக்கிறார்.

"ஆம் சனா, அவர் நிறையவே மாறி விட்டார். இந்த ஞாயிற்றுக்கிழமை, நாம் நால்வரும் தனியே எங்காவது சென்று விட்டு வரலாம், பல வருடங்களுக்கு முன் நாம் நால்வரும் எவ்வளவு ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருப்போம்…. ஞாபகம் உள்ளதா", என்றாள் பிரபா.

"அவரும் கூறினார், ஞாயிரு சந்திக்கலாம் என்று", என சனாயா, ஆர்வமாக கூறிக்கொண்டிருக்க,

அப்போதுதான் கவனித்தாள், கல்லூரியே திருவிழா கோலம் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் போஸ்டர்ஸ்…

சேர்மன் எலக்சன், பிரதாப் கண்ணன் vs மித்ரன், என்று நாலாபக்கமும் ஒட்டி இருந்தது.

"பிரதாப் கண்ணன் என்றால், நமது நண்பர் பிரதாப் தானே பிரபா", என்றாள் சனாயா.

"அவரே தான்"...

"இவர் இங்கேயா படிக்கிறார், என்னிடம் ஏன் கூறவில்லை. உனக்கு இது தெரியும்தானே"...

"தெரியும் சனா, ஆனால் அவர் தான் உன்னிடம் கூற வேண்டாம் என்றார். அவராகவே உன்னிடம் கூற வேண்டும் என்று, நினைத்தாரோ என்னவோ" என அவள் தோளை குழுக்க.

"நேற்று கூட நான் அவரைப் பற்றி வினவியபோது, எதுவுமே கூறவில்லை. சரி இப்போது அதுவா முக்கியம், நமது நண்பர் பிரதாப், இனி நமது கல்லூரியில் படித்தால் மகிழ்ச்சிதானே" என்றாள் சனாயா.

வகுப்புக்குள் நுழைந்து பார்த்தால், பத்து மாணவிகள் ஒன்றாக அமர்ந்து, எதையோ தீவிரமாக ஆராய்ச்சி செய்வது போல் தோன்றியது.

அந்தக் கூட்டத்தில் ஒருத்தி, "இவர்தான் பிரதாப் சாரா", என்று புகைப்படத்தை ஆராய்வது போல, அதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.

"ஆமாம் சங்கீ, இவரேதான்... பார்க்க நன்றாக இருக்கிறார் தானே"...

"ஆமாம்டி, ஆதிதான் நமது கல்லூரி ஹீரோ என்று பேசி வைத்திருந்தோம்... ஆனால் இவர் அவனையே மிஞ்சி விடுவார் போலவே" என்றாள் இன்னொருத்தி.

"அட.... பேர்சனாலிட்டி பற்றிய ஆராய்ச்சி போதும், யாருக்கு வோட் செய்ய போகிறீர்கள் பிரதாப் or மித்ரன்" என ஒரு பெண் கேட்க.

"சந்தேகமே இல்லை, பிரதாப் சார் தான். அந்த மித்ரன் எவ்வளவு அநியாயங்களை செய்கிறான். யாரையும் மதிப்பதே இல்லை, முக்கியமாக பெண்களை. இவன் எல்லாம் சேர்மன் ஆனால், இந்த கல்லூரியை இறைவனாள் கூட காப்பாற்ற இயலாது"...

"நீ சொல்வது சரிதான், ஆனால் பிரதாப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாதே, இவர் அவனைப் போலவே இருந்தால்!! என்ன செய்வது" ...

"இல்லை, இல்லை, அவர் மிகவும் நல்லவர்", என்று பொறுக்கமாட்டாமல், சனா கூறிவிட.

அந்தப் பெண்கள் கூட்டம் அவளை நோக்கியது.

"வா சனா, எப்போது வந்தாய்", என்றாள் ஒருத்தி.

"இப்போதுதான்" என்று, அவள் பதில் கூற கூற…

"உனக்கு எப்படி தெரியும்" என்றாள் மற்றொரு பெண்.

'அவரை எனக்கு தெரியும், என் நண்பர்தான், என்று கூறினால், புதிதாய் ஏதேனும் கதை கட்டி விடுவார்கள், இவர்கள் வாயும் மண்டையும் சும்மா இருக்காதே', என்று சனா அமைதியாக நிற்க,

"அதை உணர்ந்த பிரபா, அவர் எனது மாமா கார்த்திக்கின் நண்பர். அவர்தான் எங்களிடம் கூறினார்" என்றாள்.

தொடரும்…..
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி ஆதித்யா
ஒரு பெண்ணை வெளியே கூப்பிட்டு வந்துவிட்டு இப்படி குடிச்சுட்டு மட்டையாகி விட்டாயே
இவனையெல்லாம் நம்பி வந்தாளே சனா அவளைச் சொல்லணும்
பிரதாப் கண்ணன்தான் சனாயாவுக்கு ஜோடின்னு confirm ஆகிடுச்சு
இவனும் சனா காலேஜில்தான் படிக்கிறானா?
படிச்சுக்கிட்டே எப்படி ரிஸார்ட்டையும் பார்த்துக்கிறான் பிரதாப்?
காலேஜ் எலெக்க்ஷனில் பிரதாப் ஜெயித்து இவனுக்கும் மித்ரனுக்கும் முட்டிக்குமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top