வந்தேன் உனக்காக EP-6

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
குளிர்ந்த காற்றையும், அழகிய மலையையும், பஞ்சுபோன்ற மேகத்தையும், ரசித்துக்கொண்டிருந்த சனாவிற்கு, சட்டென்று தலை சுற்றிக் கொண்டு வந்தது.

இரவு சரியான உரக்கமில்லை, எழுந்து பல மணி நேரம் உண்ணவில்லை, அனைத்திற்கும் மேல் ... இந்த உயரமான மலையும், வளைவு நெளிவான பாதை பயணமும் இணைந்து, மூர்ச்சை அடைந்து விட்டாள் சனாயா.

*****
கண் விழித்து பார்த்த சனாயாவுக்கு, தாம் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை….

அவளை சுற்றி சில பெண்கள் நின்றிருந்தனர், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்திருந்தனர்.

"கவலை வேண்டாம் மேடம்…நீங்கள் பாதுகாப்பான இடத்தில் தான் உள்ளீர்கள்", என்று, ஒரு கிளாஸ் ஜுஸை சனாயாவிடம், ஒரு பெண் கொடுத்தாள்.

'இது என்ன இடம்', என்று சனாயா குழப்பமாய் பார்க்க,

"இது ரிசார்ட்டின் ரிசப்ஷன் அரை மேடம், நீங்கள் பூங்காவில் மயங்கிக் கிடந்தீர்கள். எங்கள் எம்டி தான் உங்களை இங்கு தூக்கி வந்தார்", என்றாள் ஒரு பெண்.

"தூக்கிக் கொண்டு வந்தாரா!!!.... யார் உங்கள் எம்டி", என்றாள் சனாயா.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, அவளுக்கு தான் ஆதியிடம் உணவு வாங்கி வா, என்று கூறியதும். அதன்பின் தலை சுற்றிக் கொண்டு வந்தது, மட்டுமே நினைவில் இருந்தது. வேறு எதுவுமே ஞாபகம் வரவில்லை.

இருப்பினும், பல பெண்கள் அருகில் இருக்க, ஒரு ரிசப்ஷன் அறையில், உள்ள சோபாவில் அமர்ந்திருந்ததாலும்,
அவர்களைத் தவிர இன்னும் பலர் அங்கு இருந்ததாலும்,....

'நாம் பாதுகாப்பாக தான் உள்ளோம். தவறான இடத்தில் வந்து அகப்பட்டுக் கொள்ளவில்லை' என்று உறுதி செய்தாள்.

இந்த உறுதி, படபடத்த அவளது மனதிற்கு ஆறுதலை அளித்தது.

'இருப்பினும் எவரோ ஒருவர், நம்மை தூக்கிக்கொண்டு வந்துள்ளார். யார் என்று வேறு தெரியவில்லையே', என்று எண்ணினாள்.

"எழுந்து விட்டாயா சனா... சாரிமா, நான் உன்னையும் கூட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். தனியே விட்டுவிட்டு சென்றது தவறுதான்", என புலம்பினான் ஆதி.

"நல்லவேளையாக பிரதாப் சார் உன்னை பார்த்தார். இல்லையென்றால்... நீ அங்கேயே மயங்கிக் கிடந்திருப்பாய். நான் உணவு வாங்கிவர அரை மணி நேரம் ஆனது. அவர் மட்டும் இல்லை என்றால்"....

"போதும் ஆதி, எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது. பசிக்கிறது", என்றாள், அவனது நீண்ட பேச்சை நிறுத்தி.

அங்கிருந்த பெண்கள், "ஒரே நிமிடத்தில் எடுத்து வருகிறோம்", என்று சென்றனர்.

"யார் அந்த பிரதாப்" என்றாள் சனாயா.

"அவர் இந்த ரிசார்டின் எம்டி, எனக்கும் ரொம்பவே களைப்பாக உள்ளதால், நம் இருவரையும் அவரே சென்னை அழைத்து செல்வதாக கூறினார். அதற்கு தான் அவருடைய காரை தயார் செய்ய சென்றுள்ளார்"...

"நீ பொறுமையாக சாப்பிடு, உணவருந்திய பின் அவரை சந்திப்போம்" என்றான்.

"எம்டி என்றால், கண்டிப்பாக வயதானவராக தான் இருக்கவேண்டும். அவருடன் சென்னை செல்வது நல்லதுதான்", என்று நினைத்தாள் சனாயா.

சில நொடிகளில், உணவு வந்தது...

உனவை ருசித்த வண்ணம், சிந்திக்க துவங்கினாள்….

'இன்று எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று இந்த மயக்கம் ஏன் தான் வந்ததோ, நாம் ஆதியுடன் சென்றிருக்க வேண்டும்', என நொந்து கொண்டாள்.

'இப்போது, முன்பின் தெரியாத ஒருவருடன், அவருடைய காரில் திரும்பி சொல்வது சரிதானா',… என்று தனது மனதோடு போராடிக் கொண்டிருந்தாள் சனாயா.

திடீரென அருகிலிருந்த பணிப்பெண்கள் அனைவரும், எழுந்து தனியே சென்றனர். ரிசப்ஷன் அறையில் இருந்த அனைத்து பணியாட்களும் எழுந்து நின்றனர்.

"அதோ!!.... அவர் தான் பிரதாப்" என்றான் ஆதி.

கம்பீரமாக நடைபோட்டு, லேசான புன்னகையுடன், தன்னை பார்த்தவாறே வந்த, அந்த வசீகரமான அரடி இளைஞனை பார்த்தாள் சனா….

"இவரா.... இந்த ரிசார்டின் எம்டி, இவ்வளவு இளமையாக உள்ளாரே. நாம் வயதான ஒருவர் வருவார் என்றுதானே நினைத்தோம். இப்போது என்ன செய்வது", என்று புரியாமல் தவித்தாள் சனாயா.

"இவர்தான் பிரதாப் சனா. இவருடன்
தான் நாம் செல்ல போகிறோம். உன்னைஅங்கிருந்து தூக்கிக் கொண்டு வந்தவரும் இவரே", என்றான் ஆதி.

"ஹாய் சார், மிக்க நன்றி" என்றாள் சனா.

"இவரைப் பார்த்தால் நம்மை விட, இரண்டு மூன்று வயது தான் அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது. என்னதான் பார்க்க டீசன்டாக இருந்தாலும், முன்பின் தெரியாத இவருடன் எப்படி செல்வது. இவன் வேறு என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல், பிரதாபுடன் செல்ல சம்மதம் தெரிவிட்டு விட்டான்" என்று நினைத்தாள்.

அவள் நினைத்தது, பிரதாப்பின் காதில் விழுந்ததோ என்னவோ.

அவள் நினைத்து முடிக்கும் முன், "கவலை வேண்டாம் சனாயா, ஆதியின் தந்தையும், என் தந்தையும், பிசினஸ் பார்ட்னர்ஸ். முன் பின் தெரியாதவன் என்று நினைக்க வேண்டாம். தைரியமாகவே வரலாம்", என்றான்.

ஒரு நிமிடம் திகைத்து விட்டு, "அதெல்லாம் ஒன்றுமில்லை பிரதாப், நாம் செல்வோம்", என்றாள் சனா, முயன்று வரவைத்த புன்னகையுடன்.

பயணம் தொடங்கியது. நன்றாகவே சென்றது, குளிர்ந்த காற்று, அழகாய் தூரிக்கொண்டே இருந்த மழைத்துளிகள், எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று செழிப்பாய் இருந்த தேயிலை தோட்டம். இதை ரசித்துக்கொண்டே வந்தாள் சனாயா.

பயணத்தின் நடுவே ஆதி... தன் நண்பன் செபாஸ்டியனை பார்த்து விட்டு வருகிறேன், ஒரு அரை மணி நேரம் ஆகும், என்று கூறிவிட்டு ஒரு டீ எஸ்டேட்குள் நுழைந்தான்.

அவனுக்காக பிரதாப் காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு, சனாயாவை பார்த்தான்.

'இந்த ஆதிக்கு அறிவே இல்லை. மிண்டும் என்னை தனியே விட்டுவிட்டு, எவனோ ஒருவனை காண சென்றுவிட்டான். நமக்கு உதவி செய்ய வந்த பிரதாப் மிகவும் பாவம்தான். அவனுக்காக அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்', என்று எண்ணினாள் சுனாயா.

"முதலில் உன் போனை ஸ்விட்ச் ஆன் செய் சனாயா", என்றான் பிரதாப்.

"சார்ஜ் இல்லை, சாரி பிரதாப்... எங்களால் உங்களுக்கும் வீண் சிரமம்" என்றாள்.

அவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

'தமது போன் ஸ்விட்ச் ஆஃப், ஆன விஷயம் இவருக்கு எப்படி தெரியும், எதற்காக அதை ஆன் பண்ண சொன்னார்', என்று குழம்பிக்கொண்டே, காரைவிட்டு வெளியே இறங்கினால் சனாயா.

அவளை தொடர்ந்து பிரதாப் காரிலிருந்து இறங்கி, அவளை பார்த்து, "உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்", என்றான்.

"சொல்லுங்கள் பிரதாப்"...

"உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன் சனா, வெளியே செல்லும்போது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி விட்டுச் செல்" என்றான்.

"சரி", என்றாள்

"தெரியாமல்தான் கேட்கிறேன், ஆதியை பற்றி என்ன தெரியும் என்று, அவன் அழைத்தவுடன் இவ்வளவு தூரம் துணிந்து வந்தாய்", என்று கடிந்த குரலில், சற்று அதட்டினான் பிரதாப்.

"அவன் என் நண்பன், நீங்கள் யார் என்னிடம் இதையெல்லாம் கேட்க. என்னை பற்றியும், ஆதியை பற்றியும், உங்களுக்கு என்ன தெரியும்", என்றாள் எரிச்சலுடன்.

'யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம், எப்படி இவ்வாறு பேசுகிறார்', என்று எண்ணினாள் அவள்.

"எனக்கு உன்னை பத்து வருடமாக தெரியும், ஆதியுடன் மூன்று வருடம் பழக்கம்", என்றான்.

"என்னை உங்களுக்கு முன்பே தெரியுமா!!!!.... அப்படியா கூறினீர்கள்",என்று திகைத்தாள் சனாயா.

"இதென்ன புதுக்கதை" என மனதில் தோன்ற, அவனது விடையை அறிய ஆவலாய் பார்த்தாள்.

"நான் கார்த்திக்கின் நெருங்கிய நண்பன், உன்னை பற்றி அவன் அடிக்கடி கூறுவது உண்டு, அது இருக்கட்டும்… ஆதி நல்லவனாக இருந்தாலும், நண்பனாகவே இருந்தாலும், கொஞ்சம் பொறுப்பு இல்லாதவன், நீ அவனுடன் பழகி ஒன்றரை மாதம் தான் ஆகிறது, இனி இப்படி செய்யாதே"... என்றான்.

மேலும் தொடர்ந்து, "உனது புகைப்படத்தை, கார்த்திக்கின் போனில் நான் பார்த்துள்ளதால், உன்னை அடையாளம் காண முடிந்தது" என்றான்.

'இதையெல்லாம் கூறுவதற்கு இவர் யார், அண்ணாவின் நண்பர் என்பதால், எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்து விட்டாரா, இந்த ஆதி வேறு என்னை தனியே விட்டுவிட்டு சென்றுவிட்டான், இல்லையென்றால் இதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது', என்று எண்ணினாள் சனா.

அவளது மௌனத்தை, அதிலிருந்த கோபத்தை, உணர்ந்த பிரதாப், "காலையில் இருந்து கார்த்திக், பிரபா இருவரும், உன்னை காணவில்லை, தொடர்பு கொள்ளவும் முடியவில்லை, என்று தவிப்பாய் தவிக்கின்றனர், அதனால்தான் உன் மொபைலை சுவிட்ச் ஆன் செய்ய சொன்னேன்" என்றான்.

"அடடா...அவர்கள் என்னை தேடுவார்கள் என்று யோசிக்கவே இல்லையே" என்று வருத்தமான குரலில் அவள் கூற,

"பரவாயில்லை, கவலை வேண்டாம்... அவர்களிடம், நீ பாதுகாப்பாய் என்னுடன்தான் உள்ளாய்" என்று கூறிவிட்டேன், என்றான்.

சற்றுமுன், பிரதாப் மீது ஏற்பட்ட வெறுப்பு மறந்திராத போதும், மனமார்ந்த நன்றியை தெரிவித்தாள் சனாயா.

"இன்னுமா, உனக்கு என்னை ஞாபகம் வரவில்லை" என்று புன்னகையோடு வினவினான் பிரதாப்.

"நான் தான் உங்களை பார்த்ததே இல்லையே"...

"நன்கு யோசித்து பார் சனா, நீ எங்களுடன் பத்துநாள் இருந்துள்ளாய், சிறுவயதில் உன் பள்ளி விடுமுறையின் போது", என அவன் கூற

"பத்து நாட்களா!!!... என்ன பிரதாப் கூறுகிறீர்கள், பத்து வருடமாக தெரியும் என்கிறீர்கள், பத்து நாட்கள் ஒன்றாக இருந்துள்ளோம் என்கிறீர்கள், எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை" என்றாள்...

"நீ நான்காம் வகுப்பு படிக்கும்போது, கார்த்திக் பிரபா வீட்டிற்கு வந்தாய், அதாவது ஞாபகம் உள்ளதா"..

"கொஞ்சம் உள்ளது என்று சிந்தித்தவள்….ஓஓஓ... கண்ணன், நீங்கள்... உங்கள் பெயர்…. பிரதாப் கண்ணன் தானே…. உங்களை எப்படி மறக்க முடியும், ஆனால் இப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டீர்களே", என உற்சாகமாக, சனா கூறவும்,

"அப்பாடா…. ஒரு வழியே, என்னை கண்டு கொண்டாய் போ", என்று புன்னகைத்தான் பிரதாப்.

ஒருமுறை பள்ளி விடுமுறையின் போது, பிரபா வீட்டிற்கு சனாயா சென்றிருந்தாள், அப்போது பக்கத்து ஊரில் உள்ள தனது நண்பனும், உறவினருமான பிரதாப் வீட்டுக்கு, கார்த்திக் சனாவை அழைத்து சென்றிருந்தான்.

பிரதாப்பின் வீடும், அவனுடைய பெற்றோரும், உறவினரும், பிடித்துவிடவே... விடுமுறை முடியும்வரை, பிரதாப் வீட்டிற்கு, தினமும் சென்று வந்தாள் சனாயா. அந்த பசுமையான நினைவுகள் இன்றும் அவள் மனதில் நன்கு பதிந்து இருந்தது.

"உங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி, அண்ணா, எல்லாம் எப்படி இருக்கிறார்கள்? என்னால் அவர்களை மறக்கவே முடியாது, மிகவும் அன்பான மனிதர்கள், என்னிடம் மிகுந்த பாசத்துடன் நடந்து கொண்டார்கள்", என்றாள் மகிழ்ச்சியாக.

அவன் மீது, ஏற்பட்ட வெறுப்பு எல்லாம் தூரம் சென்று விட்டது.

"எல்லோரும் நலம் சனா, நீ தான் இன்னமும் மாறவே இல்லை, அதே மழலை சிரிப்பு, கலகலப்பான பேச்சு", என்று அவன் கூற,

தன் மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்த சனாயா, அதை வெளிப்படையாகவே பிரதாபிடம் கூறினாள்.

"உங்களை நான் மறந்தே போய்விட்டேன். ஆனால் இப்போது காணும் போது, வார்த்தையால் சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியாக உள்ளது. சிறுவயது நட்பல்லவா", என்றாள்.

"இனி நீ எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பாய்….., அது தான் இப்போது அனைவரும் ஒன்றாக இணைந்து விட்டோமே", என்றான், பிரதாப்.

இப்படியே இருவரும் பேசிக்கொண்டிருக்க,

"இந்த ஆதி எங்கே போனான் பிரதாப், இன்னும் காணவில்லையே", என்ற சனாயா, அவன் சென்ற இடத்தையே நோக்கி வினவினாள்.

சிறிது நேரம் கழித்து, எஸ்டேட் ஆஃபீஸ் சென்று பார்த்தனர்,......

தொடரும்…….
 

Shaloostephen

Active Member
Uuupppp.....ipadi tension pani vitutingalae Dr .sana pathukapa than irruku. Aanalum intha kalathil friends, resort, site seeing ,blaa blaa ellam toooooo much.itharaiyum lethargy serialla di.manasila akku.nice epi dear
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ வினோதா மேடம்
சனாயாவுக்கு இப்போ நான் வேற ஜோடி சேர்த்துட்டேன்
பிரதாப் கண்ணன்தான் சனாவுக்கு ஜோடி சேரணும்
பிரதாப் சொன்ன மாதிரி ஆதித்யா பொறுப்பில்லாதவன்
ஒரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளத் தெரிந்தவனுக்கு அவளை பாதுகாக்க தெரியவில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top