வண்ணங்களின் வசந்தம்-32

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_553263559023580.jpeg

அத்தியாயம்-32

மாதேஷை கடத்தி காட்டு பகுதியில் இருக்க கூடிய ஒரு இடத்திற்கு கொண்டுவந்த திரு அவனை உள்ளே கட்டி வைக்க அங்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன். உள்ளே வந்தவன் கன்னம் வீங்கி நெற்றியில் ரத்தம் வழிய கட்டப்பட்டிருந்த மாதேஷை கண்டு திகைத்து “என்ன மச்சி இப்படி பண்ணிட்ட” என்றான்.

திரு, “என்ன பண்ணுனேன் மச்சி” என்று புரியாமல் கேட்க, அதற்கு அர்ஜுனோ “என்னடா நெத்தியில கன்னத்துல எல்லாம் காயம் இருக்கு” என்று கேட்டான். திருவோ “அடிச்சா காயம் ஆகதான் செய்யும் கடத்திட்டு வர்றதுன்னா காயம் இல்லாமலா இருக்கும். என்னடா லூசு மாதிரி பேசுற” என்றான்.

உடனே மாதேசின் முகத்தை கைகளில் பிடித்த அர்ஜுன் அவன் முகத்தை இருபக்கமும் திருப்பி பார்த்து “இவன் பண்ணுன்ன வேலைக்கு இதோ இந்த கண்ணை ஏதாவது பண்ணி இருக்கலாம்ல அத மிஸ் பண்ணிட்டியேனு சொல்ல வந்தேன்” என்று கூற திருவோ புன்னகைத்தான்.

மாதேஷ் அர்ஜுனை அதிர்ச்சியாக பார்க்க அதை கவனித்தவன் “என்னடா அப்படி பார்க்கிற உன்ன பாத்து பாவப்படுவேன்னு நினைச்சியா.நீ எல்லாம் அந்த அளவுக்கு வொர்த் இல்லை”என்று கூறியவன் “இந்த முழியாம் கண்ணனை ஏதாவது பண்ணனுமே”என்று சுற்றி நோட்டம் விட்டவன் பின் அசால்டாக “இவனுக்கு எதுக்கு வெப்பன் என் கையே வெப்பன்தான்” என்று கூறி அவன் கண்களை குத்தி விட அவன் வலியில் துடித்தான்.

திரு, “என்ன மச்சி சின்ன புள்ள மாதிரி விளையாடிக்கிட்டு இருக்க”.
அர்ஜுன், “ மச்சி இவனுக்கெல்லாம் சிம்பிள் ட்ரீட்மெண்ட் போதும்டா, பெருசாலாம் பிளான் பண்ணி நம்ம அலட்டிக்க கூடாது. கண்ணுல ஒரு குத்து கீழே ஒரு பஞ்சு டோட்டல் மேட்டர் க்ளோஸ்” என்று கூற, அவனை நமுட்டு சிரிப்புடன் பார்த்த திரு “டோட்டல் மேட்டரும் க்ளோசா” என்று கேட்க,

அர்ஜுனும் அவனை பார்த்து கண்ணடித்தவன் “அப்கோர்ஸ் மச்சி எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிதானே ஆகணும்.அது நம்ம கடமை இல்லையா, சார் என்ன சாதாரண ஆளா,மன்மத ராசா ஆச்சே கண்ணுல பட்ட எந்த பொண்ணையும் விட மாட்டாரு” என்று அதுவரை கேலியாக பேசி கொண்டிருந்தவனின் முகம் மாற பல்லை கடித்தபடி “ சின்ன பொண்ணா இருந்தாலும் சரி பெரிய பொண்ணா இருந்தாலும் சரி வயசு வித்யாசம் பார்க்காம கை வைக்கிற இந்த மாதிரி நாய என்னவேணாலும் பண்ணலாம்” என்று கூறியவன் ஆத்திரம் அடங்காமல் அவன் மூக்கில் ஓங்கி குத்தினான்.

திரு, “மச்சி நீ சின்ன வயசுல வர்மக்கலை கத்துக்கிட்டு இருந்தியே,இன்னும் ஞாபகம் இருக்கா அதை ஏன் நீ சார் மேல பிராக்டிஸ் பண்ணி பார்க்க கூடாது” அர்ஜுனா, “ காமிகலாம் மச்சி ஆனா…… டச் விட்டு ரொம்ப நாளாச்சு எங்கேயாவது எசகு பிசகா குத்தி இவன் உயிர் போயிடுச்சுன்னா” என்று கேட்க, “என்னது உயிர் போய்டுமா” என்று பயத்தில் அலறிய மாதேஷ் “தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க உங்களுக்கு என்ன வேணுமோ தரேன்”என்க.

உடனே திரு அர்ஜுனிடம் கண் காட்டியவன் மாதேஷ் அருகில் வந்து “நீ ஒன்னும் பெருசா எங்களுக்கு தர தேவையில்லை என் காலேஜ் ஷேர் உங்ககிட்ட இருக்கு பாத்தியா அதாவது உன்னோட அந்த மானங்கெட்ட கேவலமான டாஸ் டாஸ் அப்பன் கிட்ட இருக்கு பாத்தியா அதை என் பேருக்கு மாத்தி எழுதி குடுக்க சொல்லு அவ்வளவுதான் சிம்பிள்” என்று கூற,

மாதேஷோ “அதெல்லாம் பண்ண முடியாது அது எங்க கைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்துச்சு தெரியுமா, அதுக்கு எவ்வளவு செலவு பண்ணி இருக்கோம் தெரியுமா” என்றான்.

அர்ஜுன், “நாங்க ஒன்னும் சும்மா கேட்கல பாஸ் அதுக்கு தகுந்த பணத்தை கொடுத்தடறோம் ஆனா உங்ககிட்ட இருக்க எல்லாரோட ஷேரும் எங்களுக்கு வேணும், உன்ன மாதிரி ஒரு கேடுகெட்ட பொறுக்கி கிட்டயும் உங்க அப்பன மாதிரி ஒரு ஆள் கிட்டயும் இந்த காலேஜ் இருந்தா அங்க ஒரு ஸ்டுடென்ட் கூட நிம்மதியா படிக்க முடியாது. சோ, நீ என்ன பண்ற உங்க அப்பன்கிட்ட சொல்லி எல்லாத்தையும் உடனே எழுதிக் கொண்டு வந்து தர சொல்ற என்ன சரியா”என்றவன் திருவின் புறம் திரும்பி “மச்சி போன குடு தம்பி நல்லவன் உயிருக்கு பயந்தவன் உடனே அவங்க அப்பாகிட்ட சொல்லி ஷேர்ர மாற்ற சொல்வான் பாரேன்” என்க,

மாதேஷோ “கண்டிப்பா அது மட்டும் நடக்காது எங்க அப்பாவோட மெயின் பிசினஸ் இப்ப இந்த காலேஜ்தான் அதனால முடியாது” என்றான்.

திரு, “மச்சான் இவன் சரிப்பட மாட்டான் நீ உன் வேலையை காட்டு” என்று சொல்ல, அர்ஜுனும் “ஓஓ……. தாராளமா பண்ணலாமே” என்று கூறியவன் தன் விரல்களை மடக்கி அவன் கையில் குத்த அவனுக்கு ஒரு பக்கம் கை அப்படியே இழுத்துக்கொண்டது. அதில் அதிர்ந்த மாதேஷ் உயிருக்கு பயந்து “நான் எங்க அப்பா கிட்ட பேசறேன் போனை குடுங்க, என்னை எதுவும் பண்ணிடாதீங்க” என்று கெஞ்சியவனிடம் போனை திணித்த அர்ஜுன் “உங்க அப்பா கிட்ட பேசு” என்று கூற,

மாதேஷும் உடனடியாக தன்னுடைய மற்றொரு கையால் தந்தைக்கு அழைத்து கதறிக்கொண்டே நடந்த விஷயத்தை கூற அவரோ பயந்து விட்டார்.ஆனாலும் தன்னுடைய நிலையில் இருந்து கீழே இறங்கி வர விரும்பாமல் “நான் போலீஸ் கிட்ட போறேன்” என்று சொல்ல,

அர்ஜுன் திரு இருவரும் சேர்ந்து ஒரு சேர கோரசாக “போ நாங்களும் போலீஸ் கிட்ட தான் போகப்போறோம்.உன் பையனோட மொள்ளமாரித்தனம் அத்தனைக்கும் ஆதாரம் எங்க கிட்ட இருக்கு. அதை எடுத்துக்கிட்டு அடுத்து நாங்க போக போறதே போலீஸ் கிட்ட தான்” என்றனர்.

மாதேஷ் தன் தந்தையிடம் “அப்பா ப்ளீஸ் இந்த ஒரு காலேஜ் போனா நமக்கு பல பிசினஸ்” என்று கதற அவரும் தனக்கு இருக்கும் ஒரே மகனின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் திருவின் கூற்றுக்கு இறங்கி வந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்லூரியின் அனைத்து ஷேர்களையும் திருவின் பெயரில் மாற்றி எழுதியவர் அதை எடுத்து கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் சொன்ன இடத்தில் நின்றவரை கண்ட திரு, “ஆனாலும் உன்னோட மகன் பாசத்தை நினைக்கும் போது கண்ணு வேர்க்குது மிஸ்டர் ஜனா என்ன பொம்பள பொறுக்கியா இல்லாம நல்ல பையனா வளர்த்துருக்கலாம்”என்றவன் அவர் மகனை காட்ட அவனோ ஒரு கை இயங்க முடியாமல் சேரில் அமர வைக்கப்பட்டிருந்தான்.

தன் மகனின் நிலையை கண்டவர் தந்தையாக கண்ணீர் வடித்து “நீங்க சொன்னதைதான் நான் செஞ்சுடனே, என் பையன் கைய சரி பண்ணி கொடுக்க கூடாதா” என்று கேட்க,

திரு, “இவன் எத்தனை பொண்ணுங்கள மானபங்கப்படுத்தி இருக்கான் அதுக்கு இந்த பனிஷ்மென்ட் கரெக்ட்தான்.இவனை போலீஸ்கிட்ட புடிச்சு குடுக்கலைன்னு சந்தோஷப்பட்டுட்டு அமைதியா போங்க” என்று கூற அவரும் கண்ணீரோடு அங்கிருந்து மகனை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்..

அவர்கள் சென்றபின் திரு அர்ஜுனிடம் “மச்சி நிஜமா அந்த கையை சரிபண்ண முடியாதா” என்று கேட்க,அவனோ “யாருக்கு தெரியும் குத்துமதிப்பா ஏதோ ஒரு இடத்தில தட்டுனேன், கை பொட்டுனு போயிருச்சு” என்றான்.

அவனை யோசனையாக பார்த்த திரு “அப்போ அந்த எவிடன்ஸ்” என்று கேட்க, “அது கண்டிப்பா போலீஸ்கிட்ட போகும் மச்சி யூ டோன்ட் வரி” என்று கூற அவனும் தன் நண்பனின் தோள்களில் கையை போட்டு “தேங்க்ஸ் டா” என்க,அவன் வயிற்றில் ஓங்கி குத்திய அர்ஜுன் “இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் மூடிட்டு வா” என்று கூற இருவரும் சிறு புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினர்.

அதன்பின் திரு எக்ஸாம் முடித்த பின் கல்லூரியின் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் தன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினாலும் இடையில் சூர்யாவை தூரத்திலிருந்து பார்ப்பதையும் மறக்கவில்லை.நாட்கள் அதன் போக்கில் செல்ல திரு அர்ஜுன் இருவரின் எக்ஸாமும் முடிந்தது.

எக்ஸாம் முடிந்ததால் அர்ஜூனின் பிரிவால் பூஜா வாட,எதற்கு என்றே தெரியாமல் சூர்யாவின் மனமும் கவலையாக இருந்தது. இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று புரியாமல் சூர்யா குழம்பித் தவித்தவள் அதை தோழிகளிடம் சொல்லவும் விருப்பமில்லாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.

அன்று கல்லூரி மிகவும் பரபரப்பாக இருந்தது எதனால் என்று விழித்துக் கொண்டிருந்த தோழிகள் அருகில் இருக்கும் ஒருவனிடம் என்ன விஷயம் என்று கேட்க,அவனோ “இன்னைக்கு காலேஜோட புது கரஸ்பாண்டன்ட் வராங்க” என்று சொல்லி சென்றான். தோழிகள் ஐவரும் யார் அந்த புது கரஸ்பாண்டன்ட் என்று ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டவர்கள் பின் “சரி எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியதானே போகுது அப்ப பாத்துக்கலாம்” என்று விட்டு அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.

அபி சூர்யா இருவரும் மெடிக்கல் பில்டிங்கிற்கு செல்ல,அப்போது ஒரு உயர்தர கார் அந்த பில்டிங் அருகில் வந்து நின்றது இவர்கள் ஓரமாக நின்று யார் அந்த கரஸ்பாண்டன்ட் என்பது போல் பார்த்திருக்க காரில் இருந்து இறங்கியவனை கண்டு இருவரும் திகைத்து போயினர்.

ஆம், கல்லூரி மாணவன் என்ற தோற்றம் கலைந்து கோட்சர்ட் அணிந்து முடியை ஜெல் வைத்து அடக்கி, டிரிம் செய்யப்பட்ட தாடியும்,கண்ணில் கூலர்சுமாக காலேஜின் பொறுப்பான பணியில் இருப்பதற்கான தோற்றத்துடன் வந்திருந்தான் திருனேஷ்.

அவனை கண்டு இருவரும் அப்படியே நின்றிருக்க அருகில் கேட்ட பேச்சு குரலிலேயே இருக்கும் இடம் உணர்ந்தனர். ஆனால் அந்த பேச்சை கேட்ட சூர்யாவின் மனதோ முதலில் காரணம் அறியாமல் வாடி பின் கோபம் கொண்டது.
அப்படி என்ன பேசினர் என்றால் “டேய் மச்சி திருனேஷ் மாதேஷை கடத்தி அவங்கப்பாவ மிரட்டிதான் இந்த காலேஜ எழுதி வாங்குனாராம் தெரியுமா” என்க மற்றொருவனோ “காலேஜ்ல ரவுடிசம் இருக்க கூடாதுனு சொன்னவங்க ரவுடிக்கிட்ட காலேஜ் இருக்க கூடாதுனு சொல்லலயே அதான் ரவுடி காலேஜ் ஓனர் ஆகிட்டான். நமக்கெதுக்கு இது இன்னும் ஒரு வருஷத்துல படிப்ப முடிச்சுட்டு போயிட்டே இருக்க போறோம் அப்புறம் என்ன வாடா போலாம்”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்று விட்டனர் இதைக் கேட்டு தான் சூர்யாவின் முகம் கோபமானது.
திருனேஷ்பற்றி அறிந்திருந்த அபி சூர்யாவிடம் அவனுக்காக பேச செல்ல, அவளோ அபியை ஒரு பார்வை பார்த்தவள் பின் எதுவும் பேசாமல் வகுப்பை நோக்கி செல்லதுவங்கினாள். அபியும் திருனேஷிடம் என்ன நடந்தது என்பதை முழுவதுமாக பேசி தெரிந்துகொண்டு இவளிடம் பேசலாம் என்று முடிவெடுத்தவளாக அப்போதைக்கு அமைதியானாலும், பூஜாவின் போனிற்கு திருனேஷ் வந்ததையும்,மாணவர்கள் பேசியதையும் சுருக்கமாக கூறி, அர்ஜுனிடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்க சொல்லி ஒரு மெசேஜை தட்டிவிட்டு சென்றாள்.

பூஜாவும் அபியின் மெசேஜை பார்த்த உடனே அர்ஜுனிற்கு கால் செய்து வர சொல்ல அவனும் அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் எதிரில் நின்றான். அவனை முறைத்த பூஜா “என்ன அஜூ இது உன் பிரண்டு ரவுடி ஆகிட்டானா என்ன, கடத்தல் வேலை பிளாக்மெயில் பண்றதுனு எல்லா கெட்ட வேலையும் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு போல” என்க, அவனோ அவளை புரியாமல் பார்த்திருந்தான்.

பூஜா, “சும்மா நடிக்காத அஜூ எனக்கு எல்லாம் தெரியும்.இந்த வாய்ஸ் மெசேஜை கேளு” என்று அபி அனுப்பிய மெசேஜை காட்ட அர்ஜுனின் முகம் கோபத்தில் சிவந்தது.

அர்ஜுன், “நீங்க எல்லாம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.அவன் அப்படிப்பட்டவனானு யோசிக்கமாட்டிங்களா யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிடுவீங்களா, என்ன நடந்ததுனு தெரியாமல் மத்தவங்க சொல்றதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க” என்றவன் மாதேஷின் கேரக்டரையும் அவனுக்கு சப்போர்ட் செய்த அவன் தந்தையின் குணத்தையும் சொன்னவன் “அவங்ககிட்ட காலேஜ் போனுச்சுனா இங்க படிக்கிற பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லாம போய்டும் அதனால மட்டும்தான் திரு காலேஜ எழுதி வாங்கினான்.அதுவும் சும்மா வாங்கல அந்த ஷேர்க்கு எவ்ளோ அமௌன்ட்டோ அதை குடுத்துதான் வாங்கினான்.இது எல்லாம் எதுக்கு பண்ணுனான் அவங்க அப்பா ஆரம்பிச்ச காலேஜ்க்கு கெட்ட பேர் வரக்கூடாதுனுதான் பண்ணுனான்” என்று கூற,

பூஜாவும் அப்போதுதான் உண்மையை புரிந்து கொண்டவள் “அந்த மாதேஷ் அவ்ளோ பொறுக்கியா அஜூ,சாரி அஜூ பேபி அவங்க பேசுனது கேட்டவுடனே கோபம் ஆகிடுச்சு” என்று கொஞ்ச, அப்போதும் அர்ஜுன் முறுக்கி கொண்டு நிற்க,காதலானவனின் கோபத்தை குறைக்கும் வழி அறியாதவளா அவள், உடனே தன் கண்களை நாலா புறமும் சூழலவிட்டவள் யாரும் தங்களை சுற்றி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன் மென் இதழால் அவன் முரட்டு இதழை சிறை செய்ய அவனோ தன்னவளின் இதழ் முத்தத்தில் கிறங்கி நின்றான்.சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து பிரிந்தவள் “இப்போ இந்த டோஸ் போதும்”என்றுவிட்டு அவன் சட்டை காலரை சரி செய்தவாறு “அதிகமா கோபப்பட்டா அவங்களுக்கு ட்வின் பேபியாதான் பிறக்குமாம், நான்தானே பாவம் அதான் சரி இப்போ நல்ல பையனா போய் வேலைய பாரு“ என்றவள் அங்கிருந்து சென்றுவிட,

தன்னவள் முதன் முறை அவளாகவே கொடுத்த முத்தத்தில் திளைத்து இருந்தவன் அவள் சென்ற பின் “இனி எங்க வேலைய பாக்கறது”என்று புலம்பி கொண்டே தான் பொறுப்பேற்று கொண்ட தங்கள் மால் நோக்கி சென்றான்.

மாலை தோழிகள் அனைவரும் சூர்யாவிடம் பேசி திருவின் செயலுக்கான காரணத்தை கூற முயல, அவளோ அவர்கள் சொல்வதை காதில் வாங்காதவளாக “நீங்க என்ன காரணம் சொன்னாலும் அவன் ரவுடிதான் என் கண்ணு முன்னாடிதான் அந்த மாதேஷ கடத்திட்டு போனான் அவனுக்கு சப்போர்ட்பண்ணி என்கிட்ட எதுவும் பேசாதீங்க”என்று பிடிவாத குரலில் சொன்னவள் அதன் பின் வேறு பேச துவங்க, இவள் செயலில் கோபம்கொண்ட தோழிகள் முதலில் அமைதியாக இருந்து தங்கள் கோபத்தை காட்டி பின் அவளின் குணம் அறிந்து “சரி போகப்போக உண்மையை புரிந்து கொள்வாள்” என்று அமைதியாகினர்.

அவர்களிடம் சூர்யா பிடிவாதமாக பேச வேண்டாம் என்று சொன்னாலும் அவள் மனதினுள் ஏனோ ஒரு வெற்றிடம் தோன்றியது உண்மை.

நாட்கள் அதன் போக்கிலேயே செல்ல துவங்கியது.நாட்கள் வாரங்களாகவும் வாரங்கள் மாதங்களாகவும்,மாதங்கள் வருடங்களாகவும் மாறியது. இதற்கிடையில் திருனேஷின் மேற்பார்வையில் காலேஜில் பல மாற்றங்கள் நடைபெற்றது.

பெண்கள் பாதுகாப்புக்கு என்று ஐவர் குழு ஒன்று அமைத்து,பெண் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்கள் மூலம் கலைவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது.மேலும் ஷேர் ஹோல்டர்ஸ் என்று சொல்லிக்கொண்டு ரவுடிசம் செய்து கொண்டிருந்தவர்களை அடக்கி கல்லூரியையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான்.

மாணவர்களின் கோரிக்கைகள் குறைகள் எதையும் நேரடியாக தன் பார்வைக்கு கொண்டு வர தன் ஆபிஸ் அறையின் அருகிலேயே குறை களையும் பெட்டி ஒன்றை வைத்தான் மொத்தத்தில் கல்லூரியை சிறந்த முறையில் நடத்தி கொண்டிருந்தான்.

மாணவனாக இருந்து சூர்யாவிடம் அவன் செய்த சேட்டைகள் அனைத்தையும் அந்த கல்லூரியின் தலைவனாக மாறிய பிறகு ஒதுக்கி வைத்தான். தூரத்தில் இருந்து அவளை பார்ப்பவன் ரவுண்ட்ஸ் செல்லும்போது அவள் எதிரில் வந்தால் கூட கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவான்.

அவனின் நடவடிக்கைகளை கண்டு சூர்யா ஏன் என்று தெரியாமல் மனதுள் வருந்தினாள்.தோழிகளுடன் பேசினாலும் கண்களில் ஏதோ அழைப்புறுதலுடனும் எதையோ இழந்த உணர்வுடன் இருப்பவளை அவர்களது தோழிகள் கண்டு கொண்டாலும் இவளே புரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தனர்.

இதோ அதோ என்று இரண்டு வருடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போனது.பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்த மாணவ பருவம் முடிந்து வாழ்க்கையின் கோர முகத்தை பார்க்க தயாராகினர் தோழிகள்.

வாழ்க்கையின் அடுத்தகட்டத்தில் கால் எடுத்து வைப்பவர்கள் அது கொடுக்கும் கஷ்டத்தில் சுழன்று அடிக்கும்போது தோழிகள் ஒருவரை ஒருவர் கரம் பிடித்து எழுவார்களா இல்லை வீழ்வர்களா என்பதை அடுத்தடுத்த எபில பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top