வண்ணங்களின் வசந்தம் 31

Aadhiraa Ram

Well-Known Member
அத்தியாயம்-31

அடுத்த நாள் காலை வேகமாக கல்லூரிக்கு கிளம்பிய அபி தோழிகளுடன் பேசி சிரித்து கொண்டு இருந்தாலும், மாலை எப்போது வரும் என்று ஆதியுடன் நேரம் கழிக்க போகும் ஆர்வத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை மணியை பார்த்து கொண்டிருந்தாள்.

ஒருவாறு மாலை கல்லூரி முடிய தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வந்தவள் ஆதித்யாவுக்காக காத்திருக்க, அப்போது அந்த வளாகத்திற்குள் நுழைந்தது ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார். அனைவரின் பார்வையும் அந்த காரை நோக்கி திரும்ப, அபி நின்றிருந்த இடத்தின் அருகில் தன் காரை லாவகமாக நிறுத்தியவன், கதவை திறந்து கொண்டு வெளியில் வர,
அங்கிருந்த பல பெண்களின் பார்வை அவன் மீதுதான் இருந்தது.

கல்லூரியின் வாயில் அருகே நின்ற
அபியும் தன்னவனின் அழகை மெய் மறந்து ரசித்துகொண்டிருக்க, அவனோ தன் கூலர்ஸை கழட்டியவன் சுற்றி பார்வையை சுழல விட, தன்னையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த தன்னவளை கண்டுகொண்டான். சிறு புன்னகையோடு அவளை நோக்கி அவன் வர, அவளும் பதிலுக்கு புன்னகைத்தவள் அப்போதுதான் சுற்றி இருந்த மற்ற பெண்கள் அனைவரும் தன்னவனையே பார்த்து ரசித்து கொண்டிருப்பதை கவனித்தாள். அவர்களது பார்வையை கண்டு கடுப்பானவள் “இவனை யார் இவ்வளவு அழகாக பிறக்க சொன்னதோ தெரியல எல்லார் கண்ணும் இவன் மேல தான் இருக்கு” என்று முணு முணுத்து கொண்டே அவன் அருகில் சென்றாள்.
ஆதி அவளை 'வா' அழைத்தவன் மறுபக்கம் வந்து காரின் கதவை திறந்து விட,ஒரு ராணியின் தோரணையில் உள்ளே ஏறி அமர்ந்தவள் அங்கு அவனை ரசித்துக்கொண்டிருந்த அனைவரையும் நக்கலாக பார்த்து விட்டு திரும்பிக் கொள்ள அவனும் மறு பக்கம் சென்று அமர்ந்தவன் காரை இயக்கலானான்.

எங்கு போகிறோம் என்று சொல்லாமல் அவனும், எங்கு செல்கிறோம் என்று கேட்காமல் மற்றவரின் அருகாமையை ரசித்தபடியே வர, அவளும் சற்று நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள் எப்பொழுதும் செல்லும் காபிடே கடையை அவன் தாண்டிய பிறகே எங்கு போகிறோம் என்ற கேள்வி மனதில் எழ அவனிடன் “ஆதி.. எங்க கூட்டிட்டு போறீங்க. காபி ஷாப் இங்க இருக்கே”என்று கூற, அவனோ “உனக்கு வேற சர்ப்ரைஸ் இருக்கு.. நான் ஆல்ரெடி என் மாமனார் கிட்ட நீ வர லேட் ஆகும்னு சொல்லிட்டேன் சோ, நோ பிராப்ளம் பேசாம வா”என்றவன் சற்று தொலைவில் இருந்த ஹார்லி டேவிட்சன் கடைக்கு அழைத்துச் சென்றான்.
அபி ஆச்சர்யமாக அவனை பார்க்க அவனோ அதை கண்டு கொள்ளாமல் உள்ளே அழைத்து சென்று அங்கிருந்த விற்பனையாளரிடம் ஏதோ கூற அவரும் உள்ளே சென்றவர் வரும்போது ஒரு சாவியை கொண்டு வந்து அவளிடம் நீட்ட அவளோ புரியாமல் அவனை பார்த்தாள்.

ஆதி கண்ணசைவில் வாங்கிக்கொள் என்று கூற,குழப்பத்தோடு அதை வாங்கியவளை வெளியில் அழைத்து வந்தவன் அங்கு புதிதாக நின்று கொண்டிருந்த புத்தம் புதிய ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்தின் அருகில் அழைத்து வந்தான். அவள் மேலும் ஆச்சரியமாக அவனையே பார்த்திருக்க, அவளிடம் இருந்த சாவியை வாங்கியவன் பைக்கில் ஏறி, பின்னாடி அவளை அமர சொல்லி சைகை செய்ய, அவளும் சிறு தயக்கத்தோடு பின்னே ஏறி அமர்ந்தாள்.

அபி பைக்கில் ஏறிய மறு நிமிடம் அவர்களது வண்டி காற்றை கிழித்துக் கொண்டு ஈசிஆர் ரோட்டில் செல்ல துவங்கியது.கூந்தல் காற்றில் பார்க்க தன்னவனுடனான பயணத்தை ரசித்தவள் அவன் காதருகில் குனிந்து “என்ன திடீர்னு டூவீலர்” என்று கேட்க அவன் தோளில் இருந்த அவளது கையை எடுத்து தன் இடையில் வைத்தவன் “ஆக்சுவலி எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. அது என்னனா எனக்குனு ஒரு லவ்வர் இல்ல வைஃப் வந்ததுக்கு அப்புறம் அவ கூட லாங் டிரைவ் போகணும்னு,அதுவும் டூவீலர்ல. இவ்வளவு நாள் ஆள் கிடைக்காம இருந்தேன் ஆனா இப்போ தான் நீ இருக்கியே.. அதனாலதான் உடனடியாக ஆர்டர் கொடுத்து வாங்கிட்டேன்” என்று கூற, அவள் மனதில் சந்தோஷ மின்னல் வெட்டி சென்றது.

உடனே அவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவன் முதுகில் சாய்ந்து கொள்ள அவனும் தன் காதலியின் அருகாமையில் மனம் மயங்கி பின் பாதையில் கவனத்தைச் செலுத்த துவங்கினான். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களது வாகனம் ஈசிஆரில் உள்ள தாஜ் ஹோட்டல் வந்து சேர்ந்தது.

அவளோ அவனை புருவம் உயர்த்தி “இங்க எதுக்கு” என்பது போல் பார்க்க, அவனோ சிறு புன்னகையோடு வண்டியை நிறுத்திவிட்டு சாவியை கையில் சுழற்றியபடி “உள்ள வா” என்று கூறியவாறு முன்னே செல்ல, அபியோ “இங்க எதுக்கு போறோம்” என்றாள்.

ஆதி, “இங்க தான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” சொல்லி செல்ல, அவளும் அது என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே அவனோடு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே அழைத்து சென்றவன் அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் ஏதோ பேசிவிட்டு அந்த ஹோட்டலுக்கான தனிப்பட்ட பீச்சுக்கு செல்ல அவளும் அவன் பின்னே நடந்து சென்றாள். கடற்கரை மணலில் தன்னவளுடன் கைகோர்த்துக்கொண்டு நடக்க அந்த அனுபவமே அவனுக்கு புதிதாக இருந்தது.

பளிங்கு போல் மின்னும் கடல், சிலுசிலு காற்று அருகில் உயிராக காதலிக்கும் தன்னவள் அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான அந்த தனிமை இதற்குமேல் அவனுக்கு என்ன வேண்டும் மனமகிழ்வோடு நடந்தவன் கடற்கரை அருகே வந்தவுடன் அவளை அமர்த்தி விட்டு தானும் அருகே அமர்ந்து கடலை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். அபியும் அந்த ஏகாந்த நிலையை மிகவும் விரும்பி அனுபவித்தாள்.

சற்று நேரத்திற்கு பின் ஆதி, “அபி யூ நோ வாட் இப்போதைக்கு இந்த உலகத்துல ரொம்ப ஹேப்பியா இருக்க,ஒரே ஆள் நான்தான். என்னோட லைஃப் ஒரு மிஷின் மாதிரி பிஸ்னஸ் மீட்டிங்னு போய் கிட்டே இருந்தது. நீ எப்ப என் லைஃப்ல வந்தியோ அப்போதிலிருந்து என்னால ஹேப்பினஸ பீல் பண்ண முடியுது. என்னோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் எந்த பொண்ணு கிட்டயும் இவ்வளவு க்ளோசா இருந்ததில்லை.யூ ஆர் த ஒன் ஆப்டர் மை மாம். ஐ ஃபீல் கம்ப்ளீட் நவ்.. வொர்க் வொர்க்னு அதையே பார்த்துகிட்டு இருந்த என்ன நீ மொத்தமா உன் பக்கம் இழுத்துட்ட. தேங்க்ஸ்.. தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்” என்க,

அபி சிறு புன்னகையோடு அவன் கைகளை பற்றிக்கொண்டாள்.அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு பணியாளர் அவன் அருகில் வந்து “சார் ரெடி” என்றுவிட்டு சென்றுவிட, உடனே வேகமாக எழுந்தவன் “கம் லெட்ஸ் கோ” என்று கூற,அவள் “மறுபடியும் எங்கே” என்று கேட்டாள்.

“வா சொல்றேன்” என்றவன் அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல அங்கு அவள் கண்ட காட்சியில் திகைத்து விழி விரித்து நின்றாள்.

ஆம்,அங்கு கேண்டில் லைட் டின்னர்காக ஒரு டேபிள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த டேபிளின் அருகிலேயே ஒரு பெரிய பேனர் போன்ற அமைப்பில் அட்டையில் இதய வடிவம் வரையப்பட்டு ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதன் நடுவில் “வில் யு மேரி மீ” என்ற எழுத்து இருக்க அவள் திகைத்த தோற்றம் மாறாமல் அப்படியே நின்றாள்.

அபி அப்படியே நிற்கவும் அவள் முன் வந்து நின்றவன் “ஜஸ்ட் மேக் மி கம்ப்ளீட்” என்று கூறி தன் கையை நீட்ட அவளோ அப்போதுதான் தன்னிலை உணர்ந்தவள் கண்ணீர் துளிர்விட தாவி அவனை அணைத்துக் கொண்டவள் “வி ஆர் கம்ப்ளீட்” என்று கூற அவனும் புன்னகையோடு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அதன்பின் அவர்களுக்கான நேரம் அழகாகவும் காதலுடனும் சென்றது.

அடுத்த நாள் தோழிகளுடன் வெளியே எண்ணிய மது கணவனிடம் அதைப்பற்றி கேட்க நினைத்தவள், “கரன் இன்னைக்கு ஈவ்னிங் நான் என் பிரண்டுங்களோட வெளியில்
போகட்டுமா” என்று கேட்க, அவனும் “சரி போய்ட்டு வா ஆனா சீக்கிரம் வந்துடு” என்று கூற அவளும் “சரி” என்று சந்தோஷமாக தலையசைத்தவள் மற்ற நால்வரையும் காண சென்று விட்டாள்.

ஏற்கனவே அவர்களை சூர்யாவின் வீட்டிற்கு வர சொல்லவும், மது செல்லும் நேரம் அனைவரும் அங்கு சரியாக வந்திருந்தனர். கடைசியாக வந்தவளை கண்டு முறைத்த பூஜா “எதுக்குடி எல்லாரையும் உடனே வரச் சொன்ன” என்று கேட்க அவளோ அவர்களிடம் சந்தோஷமாக தன் கணவன் தனக்காக செய்த அனைத்தையும் கூற துவங்கினாள்.

தோழிகளும் பிரபாகரனின் செயலில் மகிழ்ந்தவர்கள் “வாவ்.. வி ஆர் ஹேப்பி பார் யூ’ என்று அனைவரும் அவளை அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவள், நேரமாகிவிட்டதால் தன் வீட்டிற்கு கிளம்ப, உள்ளே வந்தவள் அங்கு அமர்ந்திருந்த பிரபாவை கண்டு சிரித்தபடியே “ஹேய்.. கரன்.. வந்துட்டிங்களா” என்றாவாறு அருகில் வர, அவனோ கண்களாலேயே ‘வேண்டாம்’ என்பது போல் சைகை செய்தான் ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத மது “கரன்.. இன்னைக்கு” என்று மேலும் ஏதோ சொல்லவந்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவள் மாமியாரும் அங்கு அமர்ந்து அவளையே முறைத்து கொண்டிருப்பதை.

அவரை பார்த்தவுடன் வாயை மூடி கொண்ட மது திரு திருவென விழித்தவாறு நிற்க,
அவள் மாமியாரோ “என்னது கரனா. . அது என்ன கரன் கிரன்னு.. புருஷன ஒழுங்கா அத்தான்னு கூப்பிட மாட்டியா மரியாதை குடுத்து பேசணும்னே இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரிய மாட்டிக்குது” என்று முணு முணுத்தவர் “எங்க போயிட்டு வர்ற” என்று கேட்க, பிரபாவோ “நான் தான் ஒரு வேலையா வெளிய அனுப்பியிருந்தேன்ம்மா” என்று தாய்க்கு பதில் அளித்தவன் “நீ வா” என்றவாறு மதுவை காப்பாற்றி அழைத்து செல்ல,மதுவும் பெருமூச்சோடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்கள் அறைக்குள் கணவனோடு ஓடிவிட்டாள்.

அறைக்குள் நுழைந்தவுடனே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த மது என்னவென்று அறையை சுற்றி பார்வையை சூழல விட்டவளின் கண்கள் ஓரிடத்தில் நிலை குத்தி நின்றது.

பிரபா அவள் தோளைத் தொட்ட பிறகு தன்னிலை அடைந்தவளின் கண்களில் கண்ணீர் பெருக “இது…..” என்றவள் அந்த அறையின் குறிப்பிட்ட இடத்தை காட்ட அவனும் “ஆமாம்” என்று புன்னகையோடு தலையசைத்தான்.

ஆம் அந்த அறையிலேயே சின்னதாக இடம் ஒதுக்கியவன் அவள் அனைத்து வகையான சமையல்களையும் செய்து பார்க்க அனைத்து வகையான பாத்திரங்களும், மசாலா பொருட்களையும் கொண்ட ஒரு மினி கிட்சன் போல் செட் செய்து வைத்திருந்தான்.அதை கண்டவள் தன் கணவனை அணைத்துக் கொண்டு “தாங்க்ஸ்… இதை நான் எகஸ்பெக்ட பண்ணவே இல்ல.. இதுக்கெல்லாம் நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியல, என்னோட ஒவ்வொரு ஆசையும் நீங்க பார்த்து பார்த்து செய்றீங்க.. யூ ஆர் மேக்கிங் மை ட்ரீம் ட்ரூ” என்று கூற அவள் முகத்தை கைகளில் தாங்கியவன் சிரிப்புடன் “இதே டயலாக்கை எத்தனை தடவைதான் என்னை சொல்ல வைப்பியோ தெரியல, இருந்தாலும் இப்பவும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என் வைப்க்கு நான் செய்யறேன்.. அவளோட சின்ன விருப்பத்தையும் நிறைவேத்தும்போது அவள் முகத்துல இருக்க சந்தோஷத்தை பார்க்கறதுக்காக என்ன வேணா பண்ணலாம்னு தோணும் அதைதான் நான் பண்ணுறேன்” என்றவனின் வார்த்தைகளை கேட்டவள் அவனுள் தொலைந்துதான் போனாள்.

தன் ஒவ்வொரு விருப்பத்தையும் தான் சொல்லாமலேயே அறிந்து நிறைவேற்றுபவனின் மேல் மதுவிற்கு அளவிட முடியாத காதல் பெருகத்தான் செய்தது. அவனையே புதிதாக பார்ப்பது போல் இமைசிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் பிரபாவும் தடுமாறித்தான் போனான். இருந்தாலும் உடனே வேறு புறம் திரும்பி தலை கோதி தன்னைசமாளித்து கொண்டவன் பேச்சை மாற்றும் விதமமாக “நீ அங்க கத்துக்கறது பெருசு இல்ல பிராக்டிகலா செஞ்சும் பார்க்கணும். ஆனா அது நம்ம கிச்சன்ல வாய்ப்பே இல்ல அதனால தான்” என்றவனின் மனதில் ஏற்கனவே நடந்த சம்பவம் நிழற் படமாக ஓடியது.

சில நாட்களுக்கு முன்புதான் மது யூடியூபில் பார்த்து புது வகை உணவை செய்ய செல்ல அவன் தாயோ
'பாரம்பரிய சமையலை தவிர வேறு எதுவும் சமைக்க கூடாது என்றும்,குடும்ப பழக்கவழக்கங்களை மாற்றதே' கோபமாக சொல்லி விட இவளும் அமைதியாக சென்றுவிட்டாள்.. அதை கவனித்துதான் பிரபா இந்த ஏற்பாடு செய்திருந்தான்.

பிரபா அதைப்பற்றி யோசித்து கொண்டிருக்கும் போதே அவனை நெருங்கி வந்த மது தன் கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்து டக்கென்று அவன் இதழோடு தன் இதழை பதித்து விலகியவள் “இனிமே நான் செய்ய போற எல்லா டிஷ்ஷையும் டேஸ்ட் பண்ண போற சோதனை எலி நீங்கதான் இப்போவே சொல்லிட்டேன் அத்து.. அப்புறம் எஸ்கேப் ஆகிட கூடாது” என்று சொன்னவாறு அவன் நெஞ்சில் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

பிரபாவும் புன்னகையோடு தன் சம்மதத்தை சொன்னவன் “அது என்ன இப்போ அத்துனு கூப்பிடற” என்க அவளோ "அதான் அத்தை கரன்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்கல்ல. . அதான் அத்தான் சுருங்கி அத்து ஆயிடுச்சு. நான் அப்படியே கூப்பிடறேன் இல்லைனா பழக்க தோஷத்துல எல்லா இடத்துலயும் கரன்னே வரும்” என்று சொல்ல அவனும் மனைவியை பார்த்து சிரித்தவன் பின் மென்மையாக அணைத்துக் கொண்டான்.

இப்படியே அவர்கள் நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக செல்ல ஆரம்பித்தது. ப்ரீத்தி காதல் வாழ்க்கையை ரசிக்க, பூஜா கவலை இல்லா பட்டாம்பூச்சியாக சுற்றிவர, மது கணவன் அமைத்து கொடுத்த புது வழியில் அதிக நேரத்தை செலவிட்டு எதிர்கால வாழ்க்கைக்கு யாரையும் சாராமல் தனித்து தன் விருப்பப்படி வாழ முழு முயற்சியில் இருந்தவளின் மனதில் காதல் கணவனாக பிரபா ஆழமாக பதிந்து போனான்.

ஆதி அபி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், அவனுக்கு நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருப்பவர்களின் அனுமதியோடு அந்த ஊரை சுற்றி வந்தனர். சூர்யாவோ எப்போதும் போல் திருனேஷை கண்டும் காணாமல் சுற்றி கொண்டிருந்தாள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் ஜனா மற்ற ஷேர் ஹோல்டர்ஸ் அனைவரையும் சந்தித்து பேசி அவர்களின் ஷேரையும் வாங்கிவிட்டதாக திருனேஷ்க்கு தெரியவர, அர்ஜுனுடன் சேர்ந்து அவரை தூக்குவதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்தான். ஜனா திருவைபற்றி தெரிந்ததால் எப்போதும் இல்லாத வகையில் தனக்கு புதிதாக பாடிகார்ட்ஸை பணித்து அவர்களை தன்னுடனேயே வைத்து கொண்டான்.

இதை அறிந்த இருவரும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர்.அதன்படி முதலில் ஜனாவின் மகனை பிடித்து தங்கள் கஸ்டடியில் வைத்து கொள்வது என்றும் அவனை வைத்தே ஜனாவை தங்கள் இடத்திற்கு வர வைப்பது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி மாதேஷ் எங்கு செல்கிறான் என்பதை கவனித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும், அவன் தனியாக ஒரு இடத்திற்கு செல்வதை கவனிக்க, திரு யாரும் அறியாவண்ணம் அவனை கடத்தியவர் “உனக்காக தானே உங்க அப்பன் இவ்வளவு வேலையும் பண்றான்.. உனக்கே இப்படின்னா இன்னும் நல்ல மகனை பெத்திருந்தாலும் உங்க அப்பனை கையில பிடிக்க முடியாது.. சாவுடா சாவு.. பொண்ணுங்கன்னா உனக்கு என்ன கிள்ளுக்கீரையா.. நேத்து ஒரு பொண்ணை பப்க்கு கூட்டி போனியாமே எங்கடா அந்த பொண்ணு.. என்ன பண்ணுனீங்க.. சொல்லுடா சொல்லு.." என்று அவனை சரமாரியாக அடித்தவன், "உன்ன வச்சி பல வேலை செய்ய வேண்டி இருக்கு.. எங்க இடத்துக்கு போலாம் வா” என்றவன் அவன் முகத்தில் மயக்க மருந்தை அடித்தான்.

அவன் மயங்கிய பின் தூக்கி தோளில் போட்டு கொண்டு திரும்ப, அங்கு கைகளைக் கட்டியவாறு அவனையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் சூர்யா.

அவளை அங்கு எதிர்பார்த்திராத திருனேஷ் முதலில் அதிர்ந்தாலும் பின் தன்னை சமாளித்து கொண்டவனாக “என்ன பொண்டாட்டி நான் எங்க போனாலும் என் பின்னாடியே சுத்தறியா” என்று சாதாரணமாக பேச முயல அவனை வெறுப்பாக பார்த்தவள் “நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடா இப்பதான் ஒருத்தன ரத்தம் வர அளவு அடிச்சு கடத்திட்டு போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்க ஆனா என்ன பார்த்தவுடன் சாதாரணமா பேசற நீ எல்லாம்….. “ என்று அவனை திட்டி கொண்டிருந்தாள்.
திருவோ காதை குடைந்தவாறே “இவ வேற நொய் நொய்னு எப்போ பாரு கரெக்ட்டா தப்பான நேரத்திலேயே வர வேண்டியது அப்புறம் என்ன திட்ட வேண்டியது” என்று முணு முணுத்துவிட்டு திரும்பி அவளிடம் “ஒரு நிமிஷம் இங்கயே இரு இப்போ வரேன்”என்று சொல்லி தோளில் இருந்த மாதேஷை தன் காரில் படுக்க வைத்துவிட்டு வந்தான்.

கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவளின் அருகில் வந்தவன் அவளையே பார்த்திருக்க, சூர்யாவோ “ஹேய் உண்மையாவே அவனை கடத்த போறியாடா.. ரவுடி.. ராட்சஷா” என்று திட்ட அவனோ அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

முதலில் அவனை கவனிக்காது திட்டி கொண்டிருந்தவள் பின்னே கவனித்தவளாக “டேய் எதுக்குடா பக்கத்துல வர்ற தள்ளி போடா” என்க, அவனோ முடியாது என்பது போல் தலையசைத்தவன் “அது எப்படி டி பொண்டாட்டி நான் எவனையாவது அடிக்கும்போது கரெக்ட்டா அங்க வந்துடுற.. மாமாவ பாலோ பண்றியா”என்று கேட்டவாறு அவள் கரத்தை பிடிக்க போக, உடனே தன் கையை பின் பக்கமாக இழுத்து கொண்டவள் “டேய் பிராடு யாரு யாருக்குடா மாமா.. வாய ஒடச்சுருவேன் பாத்துக்கோ.. நான் என் தம்பி கூட அவன் பிராஜெக்ட் சம்மந்தமான திங்ஸ் வாங்க வந்தேன் நீ போற இடத்துக்கு ஒன்னும் தேடி தேடி வரல.. மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு.. போடா….” என்று மேலும் திட்ட வர, அவளை மேலும் நெருங்கியவன் “சரி ஓகே எப்படியும் நீ என்னை திட்டதானே வந்துருக்க அப்போ இதுக்கும் சேர்த்து திட்டிக்கோ" என்றவன், மறு நொடி அவள் இதழை அழுத்தமாக சிறைபிடித்திருந்தான்.

சூர்யா அப்படியே திகைத்து விழிக்க சற்று நேரம் கடந்தே அவளில் இருந்து விலகியவன் “ஓகே ஸ்டார்ட் த மியூசிக் இப்போ திட்டு எனர்ஜிய இருக்கு சந்தோஷமா கேக்கறேன்” என்றாவாறு அவள் முகத்தையே விழுங்குவது போல் அவன் பார்த்திருக்க, இவளோ அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு “போடா பிராடு” என்று கத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள். அவனோ சிரிப்புடனே அவள் பின்னால் வந்தவன் “ஹேய் பொண்டாட்டி என்ன திட்டாம போற” என்று கத்த, அவளோ தன்னில் ஏற்பட்ட இனம் புரியா உணர்வை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனாள்.

இனி இவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை போக போக தெரிந்து கொள்ளலாம்.
 
after long time sis...nice update☺
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top