வண்ணங்களின் வசந்தம்-30

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_1228086714286855.jpeg


அத்தியாயம்-30


பூஜா அர்ஜுன் காதல் எப்போதும் போல் செல்ல பூஜாதான் முகம் வாடி சுற்றி கொண்டிருந்தாள். “ஏன்” என்று கேட்ட தோழிகளிடம் “அர்ஜுன் காலேஜ் முடிஞ்சு போய்ட்டா இப்போ மாதிரி மீட்பண்ண முடியாதுல்ல அதான் ஒரே கவலையா இருக்கு” என்று சொல்ல உடனே அவளை கேவலமாக பார்த்தவர்கள் “வேணும்னா உடனே அர்ஜுனை கல்யாணம்பண்ணிக்க சொல்லு அப்போ நீங்க ரெண்டு பேரும் பிரியவே வேண்டாம்” என்று அபி கிண்டலாக சொல்ல,

அதை கண்கள் மின்ன கேட்டு கொண்டிருந்தவள் “வாவ் சூப்பர் ஐடியா அவன் எக்ஸாம் முடிஞ்ச உடனே கல்யாணம் வைக்க சொல்லலாமா” என்று கேட்க, அவளை முறைத்த சூர்யா “அடியே ஏன்டி இப்படி உளறுற, நீ ஒரு போன் பன்னுனா அடுத்த நிமிஷம் அர்ஜுன் இங்க வந்து நிக்க போறான் இதுக்கு எதுக்குடி இவ்ளோ ஃபீல் பண்ணிட்டு இருக்க போடி போ போய் படிக்கிற வேலையை பாரு.நீ படிச்சு முடிச்ச அப்புறம்தான் மேரேஜ்” என்றாள்.

பூஜா,”என்னது படிச்சு முடிக்கிற வரைக்குமா”என்று வருத்தமாக கேட்க,மற்றவர்களும் அவளை கிண்டலாக பார்த்து சிரித்து “ஆமாம்” என்றனர்.

அபி இவர்களின் பேச்சில் கலந்து கொண்டாலும் ஆதியின் மேல் பயங்கர கோபத்தில் இருந்தாள்.ஆம், கோபம்தான் மது திருமணத்தின் போது இருவரும் சந்தித்து கொண்டதுதான்.அதன்பிறகு அவனிடம் இருந்து அபிக்கு ஒரு போனும் இல்லை மெசேஜும் இல்லை‘வேலை வேலை’என்று ஓடிக் கொண்டிருந்தான்.

ஆதி அவளுடன் பேச நினைத்தாலும்,வேறு ஏதாவது ஒரு வேலை வந்துவிட பேச முடியாமலேயே போனது. இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த அபிக்கு அவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாகதான் வந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

பூஜா, “ஆமா ப்ரீத்தி எங்கடி” என்று கேட்க.

அபி, “அந்த கொடுமையை ஏன்டி கேட்கிறே நம்ம குரூப்லயே ஒன்னும் தெரியாத பச்ச புள்ளைன்னு நாம நெனைச்சுக்கிட்டு இருந்தவ, இப்போ ஊர்ல இருக்க எல்லா ஏமாற்று வேலையும் தெரிஞ்சு வச்சிருக்காடி, இன்னைக்கு காலேஜ கட் அடிச்சுட்டு காம்பவுண்டு சுவர் எகிறி குதிச்சு போயி எனக்கு மெசேஜ் பண்றா. ‘என் ஆள் கூட படத்துக்கு போறேன் எனக்காக வெயிட் பண்ணாதீங்கனு” என்றாள் கடுப்பாக.

சூர்யா அதிர்ந்தவளாக “பிரீத்தியாடி காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு போனா,அடிப்பாவி அவளை ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளைனு இல்லடி நான் நெனச்சேன்” என்று சொல்ல மற்ற மூவரும் அவளை கிண்டலாக பார்த்து “நாங்களும் அப்படித்தான் நினைச்சோம்,ஆனா அவ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சாளோ அப்பவே அந்த அந்த பச்ச புள்ளை காணாம போயி ரவுடி புள்ள வெளிய வந்துருச்சு” என்று சொல்ல மதுவோ “ஆனாலும் இந்த வேலைய நம்ம ஊர்ல மொள்ளமாறித்தனம்னு சொல்லுவாங்க நாம ரொம்ப டீசன்ட்ங்கறதால ரவுடி புள்ளன்னு சொல்றோம்”என்றாள்.
பூஜா, “அதை விடுங்கடி இந்நேரம் அந்த அப்பாவி இவகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட்டுட்டு இருக்காரோ,பாவம் அந்த ஜீவன்” என்று சொல்ல தோழிகளும் உச்சுக்கொட்டி ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் இங்கு தியேட்டரில் ப்ரீத்தியை அழைத்து வந்த கிருஷ்ணா அவளுடன் இருக்கும் நேரத்தை சந்தோஷமாக செலவிட்டான்.அவளோ “பாப்கார்ன் வாங்கிவா சிக்கன் ரோல் வாங்கி வா” என்று அனுப்ப, அவனும் காத்திருந்த காதல் கை சேர்ந்த மகிழ்ச்சியில் சலிக்காமல் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து அவளுடனான தனிமையையும் அவள் சாப்பிடும் அழகையும் ரசித்து கொண்டிருந்தான்.

ப்ரீத்தி கிருஷ்ணாவிடம் சொன்னது போல் அவள் படிப்பு முடியும் வரை தெவிட்ட தெவிட்ட காதலிக்க துவங்கினர்.

மாலை கல்லூரி முடிந்த பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்ப தயாராகினர். அப்போது பூஜாவும், மதுவும் அப்படியே நிற்பதை கவனித்த சூர்யா “என்னடி ஆச்சு கிளம்பலாமா” என்று வண்டி நிறுத்தும் இடத்தை நோக்கி சென்றாள்.

மதுவோ “இல்லடி இன்னைக்கு நான் வண்டி எடுத்துட்டு வரல,நீ கவனிக்கலையா ஈவ்னிங் வெளிய போகலாம்னு பிரபா சொன்னாரு அதனால நான் அவருக்கு வெயிட் பண்றேன்” என்று சொல்ல அடுத்ததாக சூர்யாவின் பார்வை பூஜாவிடம் திரும்பியது அவளோ “ஈஈஈஈ….”என்று சிரித்தவள் “இல்லடி ஈவ்னிங் பீச்க்கு போலாம்னு அர்ஜுன் சொன்னான்” என்க,அடுத்து அபியை பார்த்தவள் “என்னம்மா மாம்ஸ் வரேன்னு சொன்னாரா” என்று கேட்க அவளை முறைத்த அபி “என்னடி அவர மட்டும் நீ மாம்ஸ்னு சொல்ற, அண்ணானு சொல்லுடி”என்க,

சூர்யாவோ “முடியாது முடியாது முடியாது மாம்ஸ்தான் சொல்லுவேன்.ஆதி மாம்ஸ் மாம்ஸ் மாம்ஸ்” என்று வெறுப்பேத்த,பல்லை கடித்த அபி “அடியே உன்னை.,…” என்று அவளை அடிக்க வர நாக்கை நீட்டி அவளுக்கு அலவம் காட்டியவள் “என்னடி வர்றியா இல்லையா” என்று கேட்க,

அவளோ “ம்க்கும் அப்படியே வந்துட்டாலும் வானம் இடிஞ்சி கீழ விழுந்திடும். ஏற்கனவே நான் காண்டுல இருக்கேன்.அவருக்கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது” என்று சோகமாக சொன்னவளை பார்த்த மது “உன்னோட அதிரடி அவருக்கு தெரில போல, அதான் சுத்தல்ல விடறாரு” என்றாள்.

அபியும் அவள் சொல்வதைக் கேட்டு “இருக்குமோ” என்று யோசித்தவள் பின் “எவ்ளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோம்மா பண்ணுவோம் பண்ணுவோம்”என்று யோசித்தவளாக ”ஓகே நீங்க உங்க ஆள பாருங்க நாங்க கிளம்பறோம்” என்றுவிட்டு அபியும், சூர்யாவும் வீடு நோக்கி சென்றனர்.

மதுவும், பூஜாவும் மரத்தடியில் அமர்ந்து அவரவர் இணைக்காக காத்திருந்தனர்.சிறிது நேரத்தில் அர்ஜுன் அங்கு வந்துவிட மதுவை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாத பூஜா, அர்ஜுனிடம் “கொஞ்சம் வெய்ட்பண்ணு மதுவோட ஹஸ்பண்ட் வந்தவுடனே நாமும் கிளம்பலாம்” என்றாள்.

மது, “ஹேய் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க கிளம்புங்க இங்க பக்கத்துல வந்துட்டேன்னு மெசேஜ் பண்ணுனாரு அது மட்டும் இல்லாம நம்ம காலேஜ்ல என்ன பயம் நீங்க போங்க”என்க, அவளை முறைத்த பூஜா “நீ எவ்ளோ பெரிய தைரியசாலினு எனக்கு தெரியும் வாய மூடிட்டு உட்காரு, எப்போ போகணும்னு எனக்கு தெரியும்” என்க அதன் பின் மது வாயை திறக்கவில்லை.

சிறிது நேரத்திலேயே பிரபா வந்துவிட அவனுடன் சாம்பிராதாயமாக,ஒரு சில வார்த்தைகள் பேசிய பூஜா அவர்கள் கிளம்பும் சமயம் “ப்ரோ சத்தியம் சத்தியம் மறந்தாறாதீங்க”என்று சொல்லிய பிறகே அர்ஜுனுடன் சென்றாள்.

பிரபா அவளை பார்த்து சிரித்தவன் தலையை மட்டும் அசைத்து விடை பெற்று மதுவிடம் எங்கு செல்கிறோம் என்பதை கூட சொல்லாமல் அழைத்து சென்றான். எங்கு போகிறோம் என்று தெரியாமல் விழித்த மது சிறிது நேரம் பொறுமையாக இருந்தவள் அதன் பின்பு பொறுமையை கைவிட்டவாளாக “எங்கங்க போறோம்” என்று தோண தோணத்து கொண்டே இருந்தாள்.

பிரபா, “போனா உனக்கு தானாவே தெரிஞ்சுட போகுது அதுக்குள்ள என்ன அவசரம்”என்று கூறியவன் அவளை ஒரு ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றான்.மது ஒன்றும் புரியாமல் அவன் பின்னோடு சென்றாள்.

உள்ளே சென்ற பிரபா அங்கிருந்த ஒருவரிடம் கைகுலுக்கி ஏதோ கூற,அவரும் மதுவின் புறம் பார்வையை திருப்பியவர் “சரி” என்று தலையசைத்து பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்க .அவளோ இருவரையும் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த நபருடன் பேசி முடித்தவன் மனைவியை அருகில் வருமாறு கண் அசைக்க, அவர்கள் அருகில் சென்றவளை மென் சிரிப்புடன் பார்த்த பிரபா “இவர் செப் கார்த்திக் இன்னைல இருந்து இவருதான் உனக்கு குக்கிங்கபத்தி டீச் பண்ண போறாரு. இவருகிட்ட எல்லாத்தையும் கத்துட்டு உன்னோட டேலண்ட்ட வளத்துக்கோ,ஒரு ஹோட்டல்ல மேனேஜ் பண்ணறதிலிருந்து குக்கிங் வரைக்கும் எல்லாமே கற்று தருவார் வாரத்துல ரெண்டு நாள்தான் கிளாஸ் அதுவும் ரெண்டு மணி நேரம்தான்”
என்று சொல்ல,

அவன் சொல்வதை கேட்க, கேட்க அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது, அவனையே பார்த்திருந்தவள் மனதில் “தானக்குள் இருக்கும் திறமையை கண்டு அதை வளர்க்க நினைக்கும் கணவனை பெருமையாகவும் காதலுடனும் பார்த்தவள் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உதடுகள் துடிக்க “தேங்க்ஸ்” என்றாள்.

முகம் முழுவதும் பூரிப்புடன் நன்றி சொன்ன தன்னவளை அணைத்துக் கொண்டவன் “என்னோட வைப்க்கு நான் செய்யறதுக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா ” என்றவனின் கேள்வியில்,அவளோ மனம் நெகிழ்ந்து போனாள்.

மாலை வீட்டிற்கு வந்தவுடன் ரொம்ப “தேங்க்ஸ் கரு டியர்”என்று கூற, அவனோ புரியாமல் அவளை பார்த்து “கரு வா” என்க, “ஆம்” என்று தலையாட்டியவள்,பிரபாகரன்ங்கற பேர எல்லாரும் பிரபா கூப்பிடறாங்க, நானும் அது மாதிரி கூப்பிட முடியாதுல்ல அதான் கரன் சுருங்கி கரு டியர் ஆகிடுச்சு” என்று கூறியபடி அவன் அருகில் செல்ல,அவள் மறுபடியும் தன்னை கட்டிப் பிடிக்க தான் வருகிறாள் என்று கண்டு கொண்டவன் “போதும் போதும் நீ தள்ளியே இரு, எப்போ பாரு கட்டிப்பிடிச்சே தேங்க்ஸ் சொல்ற, தேங்க்ஸ்ங்கறத அப்படியே அங்கேயே நின்னு சொன்னால் போதும்.கட்டிப்பிடிச்சுதான் சொல்லனும்னு அவசியம் இல்லை” என்றான்.

மதுவோ முகத்தை சுளித்தவாறு “ரொம்ப பண்ணாதீங்க ஏதோ புருஷன் நமக்கு நல்லது பண்ணி இருக்காரேங்கற சந்தோஷத்துல கட்டிப்பிடிச்சா அதுக்கு போய் இப்படி சொல்றீங்க”என்று முறுக்கிக் கொள்ள அவனோ அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை பார்த்தவாரு “இங்க பாரு மதுமா எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு,ஆனா உன் படிப்பு கெடக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகதான் தள்ளி நிற்கிறேன்.கொஞ்சம் புரிஞ்சுக்கோமா நானும் இருக்க சாதாரண மனுஷன்தான் அதான் நீ பக்கத்துல வந்தாலே டெம்ப்ட் ஆகுது”என்று சொல்ல,

ஒரு நொடி அவன் கண்களையே பார்த்தவள் சட்டென்று அவன் எதிர்பார்க்கா நேரம் தன் இதழ்களை அவன் இதழோடு சேர்க்க அப்படியே அவன் திகைத்து நின்றுவிட்டான். உடனடியாக அவனிடமிருந்து பிரிந்தவள் “இந்த மாதிரி முத்தம் கொடுத்தா எல்லாம் ஒன்னும் படிப்பு கெட்டு போகாது அதனால அப்பப்ப இப்படி கொடுத்து பழகுங்கள் வரலைன்னா சொல்லுங்க நான் மறுபடி இன்னொரு தடவை சொல்லி தரேன்” என்றவள் அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அங்கிருந்து பறந்து விட்டாள்.

அவனும் சிறு புன்னகையோடு தன் மனைவியின் குறும்பை ரசித்தவன் அடுத்து அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இங்கு வீட்டுக்கு வந்த அபி மனதுள் ஆதியை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள். அப்போது உள்ளே வந்த அவளது தந்தை அரவிந்த் மகள் முகத்தை தூக்கி வைத்து உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவள் பக்கத்தில் அமர்ந்தவர் “என்னமா என்ன ஆச்சு ஏன் டல்லா இருக்க” என்று கேட்க, அப்போதுதான் தந்தையை கவனித்தவளாக அவர் தோளில் சாய்ந்து கொண்டவள் “ஒன்னும் இல்லப்பா” என்றாள்.

அவரோ மர்ம சிரிப்புடன் “என்னம்மா மாப்பிள்ள போன் பண்ணலையா” என்று கேட்க, “அப்பா” என்றவள் திகைத்து விழிக்க,மகளின் தலையை செல்லமாக தடவியவர் “எனக்கு தெரியும்மா,பிறந்ததுல இருந்து உன்னை பார்க்கறேன் உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு காரணம் தெரியும்.உன்னோட விருப்பம் தான் எங்களோட விருப்பம்னு தெரியாதாடா,அப்புறம் எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ணிட்டு இருக்க.என்ன பிரச்சனை சொல்லு”என்றார்.

அபி, “தேங்க் யூப்பா” என்றவள் “அவர் சரியான பிராடுப்பா லவ் சொல்ற வரைக்கும் பின்னாடியே சுத்தறது, மிரட்டி வெளிய கூட்டி போறதுனு இருந்தாரு லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் ஒரு போன் இல்ல ஒரு மெசேஜ் இல்ல வேலை வேலைனு ஓடிட்டே இருக்காருப்பா, என்னை கண்டுக்கறதே இல்லை” என்றாள் கோபமாக.

மகள் சொல்வதை கேட்டவர் “அப்படியா இது சரி இல்லையே, சக்ரவர்த்தி சார் பையனை இப்படி பொறுப்பில்லாம வளர்த்திருக்காரே, என்ன பண்ணலாம்”என்று யோசனையாக இருந்தவர் புது ஐடியா கிடைத்த சந்தோஷத்தோடு “இப்படி பண்ணுனா என்னமா” என்று கேட்க,அவளும் ஆர்வமாக தந்தையை பார்த்தவள் “எப்படிப்பா” என்க,
அரவிந்த், “அவர் வீட்டுக்கே மாப்பிள்ளைய அவர் வீட்டுக்கே போய் மீட் பண்ணி, இந்த மாதிரி இந்த மாதிரி மாப்பிள்ளை.ஏன் என் மகளுக்கு இந்த மாதிரி இந்த மாதிரி மீட் பண்ண மாட்டேங்கறீங்க.இந்த மாதிரி இந்த மாதிரி போன் பண்ண மாட்டேங்கறீங்கனு நேரிலேயே பார்த்து பேசிட்டு வந்தா என்ன, நீ என்னம்மா சொல்ற” என்றவர் சொல்லி வாய் மூடுமுன் அவர்கள் காலடியில் விழுந்தது ஒரு கரண்டி வேறு யாருமில்லை அபியின் அம்மாதான்.
பிருந்தா, “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.அவதான் ஏதோ புலம்பிகிட்டு இருக்கானா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருக்கீங்க. முதல் முதல்லா மாப்பிள்ள வீட்டுக்காரங்கதான் இங்க வரனும்.நாம அங்க போக கூடாது. அவரு இங்க வரட்டும் அப்புறம் நீங்க போங்க அதுக்கு முன்னாடி அப்பாவும் பொண்ணும் ஏதாவது பிளான் பண்ணுனீங்கன்னு தெரிஞ்சுது நடக்கறதே வேற”என்று சொல்ல அபியின் முகம் வாடிப்போனது.

மகளின் முக வாட்டத்தை பார்க்க சகிக்காத அரவிந்த் மனைவியிடம் “சரி சரி நாங்க மாப்பிள்ளை வீட்டுக்கு போகல புள்ள கவலையா தெரியுது பக்கத்துல இருக்க பார்க் வரைக்கும் போயிட்டு வரோம்”என்று சொல்ல,

கணவன் சொல்வதை கேட்டு அவர்களை சந்தேகமாக பார்த்தவர் “சீக்கிரம் போயிட்டு வாங்க” என்று விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அபியும் அவள் தந்தையும் வண்டியை எடுத்துக்கொண்டு நேராக ஆதியின் வீட்டிற்குச் செல்ல அங்கு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன் சக்கரவர்த்தி. இவர்களைப் பார்த்தவுடன் முகம் மலர வரவேற்றவர், அவர்களை அமர செய்து காபி கொடுத்து உபசரித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் என்ன விஷயமாக வந்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டிருந்தார்.

அரவிந்தும் ராமச்சந்திரனும் பேசிகொண்டிருந்தாலும் அபியின் கண்கள் ஆதியை தேடி வீடு முழுதும் சுற்றி வந்தது.இதை ராமச்சந்திரன் உணர்ந்து இருந்தாலும் எதுவும் அறியாதவர் போல் அபியின் தந்தையிடம் “என்ன கமிஷனர் சார் என்ன திடீர்னு இந்த பக்கம் வந்து இருக்கீங்க” என்றார்.

அவரோ தன் மீசையை முறுக்கியவரே “உங்க பையன் மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு அதை விசாரிக்கதான் வந்துருக்கேன்” என்று சொல்ல,

உடனே ஆதியின் தந்தை என்னவாக இருக்கும் என்ற யோசனையான முகத்துடன் “என்ன கம்பிளைன் சார்” என்று சொல்ல அவரோ இலகுவான குரலில் “என் பொண்ண லவ் பண்ணு லவ் பண்ணுனு பின்னாடியே சுத்திட்டு லவ்க்கு ஓகே சொன்னா அப்புறம் ஒரு போன் பண்றது இல்ல ஒரு மெசேஜ் பண்றது இல்ல அவ்வளவு ஏன் சுத்தமா கண்டுக்கறதே இல்லனு கம்பிளைன்ட் வந்து இருக்கு” என்று சொல்ல,

இதை கேட்ட ராமச்சந்திரன் கடகடவென சிரித்தவர் “என்ன சார் பண்றது நானும் பல தடவை சொல்லிட்டேன் இவன் கேட்கவே மாட்டேன்ங்கறான் வேலை வேலைனு ஓடிட்டே இருக்கான்.அந்த கம்ப்ளைட்டோட என்னோட கம்ப்ளைனையும் சேர்த்து எழுதி அவனை புடிச்சு உள்ள போட்டு நல்லா கவனிங்க சார் அப்போவாவது திருந்தரானானு பார்க்கலாம்” என்று அவர் மாடியை பார்த்து “ஆதி ஆதி” என்று சத்தமாக கூப்பிட, அவனோ “முக்கியமான வேலை போயிட்டு இருக்குப்பா எதுவா இருந்தாலும் நைட் சாப்பிடும்போது பேசிக்கலாம்” என்றான் அங்கிருந்தாவாறே.

ராமச்சந்திரன்,”பாத்தீங்களா சார் துறையால இங்க வந்து கூட பேச முடியாதாம், அவரு அவ்வளவு பிஸியா இருக்காறாம். நானும் இந்த வீட்ல இருக்கேன்னுதான் பேரு ஆனா என்கிட்ட கூட ரெண்டு வார்த்த நின்னு பேச மாட்டான்” என்று சொல்ல,

கோபமான அபி “மறுபடியும் கூப்பிடுங்க அங்கிள்” என்று பல்லை கடித்தவாறு சொல்ல மீண்டும் அவர் “ஆதி இப்ப நீ வரலைன்னா உன் நிலைமை ரொம்ப கஷ்டமாக போய்டும் ஒழுங்கா கீழ வா” என்றார்.

இதை கேட்ட ஆதி எரிச்சலுடன் “என்னப்பா நீங்க இது எவளோ முக்கியமான வேலை தெரியுமா பாதில விட்டுட்டு வந்தா காண்பியூஸ் ஆகிடும்” என்று முணு முணுத்து கொண்டே வந்தவன் அங்கு அமர்ந்திருந்தவர்களை கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.

ஆதி, “ஹாய் அங்கிள் வாட் எ பிளாசன்ட் சர்ப்ரைஸ் எப்படி இருக்கீங்க எப்போ வந்தீங்க” என்று அபியை கண்டுகொள்ளாமல் அவரிடமே பேசிக்கொண்டிருக்க இங்க அபியோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.

அரவிந்தோ ஆதியின் கேள்விக்கு பதில் சொன்னாலும் “மருமகனே உங்க மேல ஏற்கனவே கம்ப்ளைண்ட் அதிகமா இருக்கு இதுல இங்க வந்த அப்புறமும் அவளைப் பார்க்காமல் பேசாமல் என்னிடமே பேசிட்டு இருக்கீங்களே, உங்க க்ரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுதே” என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் பேசி முடித்த பின்புதான் அபியும் புறம் திரும்பி பார்மலாக பேசுவதுபோல “ஹாய்” என்று சொல்ல ராமச்சந்திரனோ “எப்பா சாமி இது உலக மகா நடிப்புடா” என்று நினைக்க அரவிந்தோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அபியோ அவன் சாம்பிரதாயமாக பேசவும் கடுப்பானவள் “பொறுத்தது போதும் பொங்கி எழு அபி” என்பது போல் கோபமாக எழுந்தவள் அவன் அருகில் நெருங்கி “என்னடா பெரிய இவனா நீ,லவ் பண்றேன் லவ் பன்றேன்னு பின்னாடியே சுத்திட்டு அதுக்கு அப்புறம் ஒரு போன் பண்ணி பேசுனியாவது பேசுனியா அட்லீஸ்ட் ஒரு மெசேஜ்ஜாவது பண்ணுனியா ஒரு குட்மார்னிங் குட் நைட்கூட இல்ல. உனக்கு நாம லவ் பன்றோம்ங்கறதாவது நியாபகம் இருக்கா. நான்தான் உன்ன நினைச்சுட்டே இருக்கேன், ஆனா நீ என் நியாபகமே இல்லாம எப்போ பாரு வேலை வேலைனு போயிட்டு இருக்க அதுக்கு நீ கம்பெனியவே லவ் பண்ணிருக்கலாமே எதுக்கு என் பின்னாடி வந்த” என்று அவனிடம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக கேட்டாள்.

அவளின் கோபத்தில் தன் மேல் அவளுக்கு இருக்கும் கோபத்தை புரிந்து கொண்ட ஆதி “எதுக்கும்மா இவ்ளோ கோபம் திடீர்னு கொஞ்சம் வேலைல மாட்டிக்கிட்டேன் அதான் மெசேஜ் பண்ண முடியல இதுக்காக உன்னை மறந்துட்டேன்னு அர்த்தமா நீ என்னோட உயிர் உன்னை எப்படி நான் மறப்பேன்” என்று அவளை அனைத்தவரே அவன் சமாதானப்படுத்த அவன் அருகாமையில் ஓரளவு சமாதானமானவள் அப்போதுதான் தந்தையின் நினைவு வந்தவளாக அவனைவிட்டு விலகி திரும்ப இவர்கள் இருவரும் பேச ஆராம்பிக்கும்போதே இருவரின் தந்தையும் வெளி நடப்பு செய்திருந்தனர்.

இருவரும் தங்களை மறந்து பேசி கொண்டிருக்க நேரம் ஆவதை உணர்ந்த அபி “ஓகே ஆதி டைம் ஆகுது அம்மாட்ட பார்க்குக்கு போறோம்னுதான் சொல்லிட்டு வந்தோம் நாங்க கிளம்பறோம்” என்றவளை தடுத்தவன் “போகணுமா இங்கயே இருந்துறேன்” என்க, அவளோ அவனை செல்லமாக முறைத்தவள் “ரொம்பதான் ஒன்னு கண்டுக்கறதே இல்லை, அப்படி இல்லனா ஓவர்ரா உருகறது” என்றவள் கிளம்பி வெளியே சென்றாள்.

அவள் செல்வதையே கண்ணில் நிறைந்த காதலுடன் பார்த்திருந்தவன் “ஹேய் அபி நில்லு அப்படியே காபி ஷாப் போய் காபி குடிச்சுட்டு வரலாம்” என்று அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்க நினைத்தவனாக சொல்ல, அவளோ கெத்தாக அவனை பார்த்தவள் “ஹல்லோ என்ன நான் சொன்ன அப்புறம்தான் கூட்டி போகணும்னு தோணுதா இவ்வளவு நாள் கண்டுக்காம இருந்தீங்களா அப்புடியே இருங்க நான் போறேன்” என்றவளின் கரம் பற்றி தடுத்தவன் “ப்ளீஸ் அபி வேலைல மாட்டிக்கிட்டேன்னு சொல்றேன்ல புரிஞ்சுக்கோடா” என்று சொல்ல

அவனுக்கு பாவம் பார்த்து சொல்பவள் போல் சரி சரி நீங்க ரொம்ப கெஞ்சுறதால வர்றேன் ஆனா இன்னைக்கு இல்ல, நாளைக்கு என்ன தேடி வந்து கூட்டி போங்க” என்றாள்.

அவனும் அவள் மனநிலை புரிந்தவனாக “ஓகே நாளைக்கு ஈவினிங் உன்னை அவுட்டிங் கூட்டி போறேன் காலேஜ்லயே வெய்ட் பண்ணு நானே வந்து கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல அபி மகிழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கெத்தாக முகத்தை வைத்துக்கொண்டவள் “ஓகே ஓகே பாக்கலாம் பாய்”என்று விட்டு சென்றாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top