வண்ணங்களின் வசந்தம் -11

Advertisement

சுதிஷா

Well-Known Member
IMG-20201024-WA0022.jpg

அத்தியாயம் -11

மாலை பூஜாவை அவளது அப்பத்தா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, ஆனால் வீட்டிற்குள் வந்தவளோ, அவரை கண்டு கொள்ளாமல் தனது அறைக்கு செல்ல முயன்றாள்,வேகமாக அவள் முன்னே வந்து தடுத்தவர் “அடியே இங்க ஒரு பெரிய மனுஷி குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன், என்ன ஏதுனு கண்டுக்காம நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்” என்று கேட்க அவளோ “கல்லு கிட்ட எல்லாம் எவனும் பேச மாட்டான்னு அர்த்தம்” என்றாள் நக்கலாக.

அவரோ முகத்தை தோள்பட்டையில் இடித்தபடி “இந்த எகத்தாள பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று நொடித்து கொண்டு,“ஆமா காலையில நான் கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள, நீ ஏன் கிளம்பிப் போன” என்று கூற அவளோ “அது உன் புருசன் கட்டி வச்ச காலேஜ் நீ ஆடி அசஞ்சு வர வரைக்கும் காலேஜ் கதவை திறந்து வச்சுட்டு இருப்பாங்க பாரு”என்று கேட்க அவளை மேலும் கீழும் பார்த்து நக்கலாக சிரித்தவர் “என்னது நேரத்துக்கு கிளம்பனுமா. அப்படினா உனக்கு என்னனு தெரியுமா. ஸ்கூலுக்கு போற அப்ப என்னைக்காவது நீ சரியான நேரத்துக்கு கிளம்பி இருக்கிறியா. படாதபாடுபட்டு இல்ல நாங்க உன்ன கிளம்புவோம், இப்ப என்ன புதுசா உனக்கு ஞானோதயம் வந்துடுச்சு” என்று கேட்டார்.

பாட்டியின் பேச்சில் கடுப்பானவளோ, “இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை. என்னை ஏதாவது குறை சொல்லிகிட்டே இருப்பியா, இவ்வளவு நாள் எழுந்துக்கலன்னு திட்டின இன்னைக்கு ஏன் எழுந்தேன்னு திட்டுற என்ன ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கணுமா” என்று கேட்க அவரோ “உன்னை குறை எல்லாம் சொல்லல மொத நாளு சாமி பிரசாதம் வச்சுக்கிட்டு போனா நல்லதுனு நினைச்சேன், அதுதான் சொன்னேன்” என்றவர் அப்பொழுதுதான் அவளது உடையை கவனித்தார் உடனே “என்னடி இது, டொம்ப கூத்தாடி மாதிரி இருக்க இந்த சட்டய போட்டுக்கிட்டா நீ காலேஜுக்கு போன, நாய் தூரத்தில” என்று கேட்க அப்பொழுது அங்கு வந்த அவளது தாய் பார்வதியும் “நல்லா கேளுங்க அத்தை. காலையிலேயே தலபாடா அடிச்சு கிட்டேன்,கேட்டா தானே இந்த கிழிஞ்சு போன பேண்ட்டையும், நஞ்சு போன சட்டையையும் போட்டுட்டு போயிட்டா, பொண்ணா அடக்க ஒடுக்கமா ஒரு சுடிதார் போட்டுட்டு போகணும்னு தோணுதா இவளுக்கு” என்று புலம்ப ஆரம்பிக்க, அவரது மாமியாரும் “அதான பொண்ணு மாதிரியா இருக்கா இவ. ஏன் பாப்பு என்னோட பையன் தான் அவ்வளவு சம்பாதிக்கிறானே, நீ கிழியாத சட்டையா
வாங்கி போட்டா என்ன?”என்று அங்கலாய்த்து கொண்டார்.

இருவரின் பேச்சில் கோபமான பூஜா “கிளவி பார்த்து பேசு, இப்போ இதுதான் ட்ரெண்டு, நான் போட்டுருக்க ஜீன்ஸ் மட்டும் 8000 என்றாள்.”என்ன அம்புட்டா………அடியாத்தி” என்று அவர் வாயில் கை வைத்தபடி நிற்க, அப்போது அங்கு வந்து சேர்ந்தார் அவரின் மகன் ராமச்சந்திரன்.

தாய், மனைவி, மகள் என்று மூவரும் ஒன்றாக ஹாலில் நிற்பதை பார்த்தவர், “இன்னைக்கு என்ன பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு” என்று கேட்டு கொண்டே உள்ளே வந்து, தன் கழுத்தில் இருக்கும் டையை கழட்டியவாறே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

பூஜா “அப்பா” என்று துள்ளி குதித்து அவர் அருகில் சென்று “இங்க பாருங்கப்பா, என்னோட ஜீன்ஸ பாத்து அப்பத்தா கிழிஞ்சு போனது சொல்றாங்க, அம்மாவும் அதுக்கு ஒத்து ஊதறாங்க, என்னன்னு கேளுங்க” என்று சிணுங்கலாக சொல்ல, அப்பத்தாவும் விடாமல் மகனிடம் குற்ற பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார் “டேய் மகனே, உன் பொண்ண பாருடா இதெல்லாம் ஒரு துணினு இத போட்டுட்டு காலேஜ் போயிருக்கா” என்க. அவரோ தாயின் பேச்சில் உண்டான சிரிப்புடன் “அம்மா நம்ம ஆபிஸ்க்கு வந்து பாருங்க, எல்லாம் எப்படி துணி போட்டு வராங்கன்னு தெரியும். அப்ப சொல்லுவீங்க நம்ம பொண்ணு போட்டுட்டு போற டிரெஸ் எவ்வளவோ பரவால்லனு, போடட்டும் விடுங்க” என்று கூற பார்வதியோ “ நீங்க கொடுக்கற இடம் தான் இவ இந்த ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கா” என்று குறைபட்டுக் கொள்ள அவரோ “நீங்க மாமியார்-மருமகள் ஒன்னு சேந்துட்டா என் பொண்ண ஒரு வழி ஆக்காம விட மாட்டீங்களே” என்றார் மனைவியை வம்பிழுக்கும் பொருட்டு, பூஜாவும் அவரோடு சேர்ந்து கொண்டவள் “ஆமா அப்பா எல்லா வீட்டுலயும் மாமியார் மருமகள் சண்டை போடுற மாதிரி இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா எவ்வளவு ஜாலியா இருக்கும் என்று குறைபட்டுக் கொள்ள அவளது அப்பத்தாவோ “உங்க கண்ணே எங்க மேல பட்டுடும் போல, ராத்திரியே எனக்கும் என் மருமகளுக்கு சுத்தி போடணும்” என்னும் போதே தன் தந்தையிடம் இருந்து எழுந்த பூஜா “கிழவி மண்டைய போடுற காலத்துல உனக்கு சுத்தி போடணுமா,இரு இரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ தூங்கும்போது தலைல கல்லை தூக்கி போடறேன்” என்றவள் தனது அறைக்கு ஓடி விட, அவளின் பேச்சை கேட்ட பார்வதியும் அப்பத்தாவும் இது எல்லாம் எங்க திருந்த போகுது” என்று தலையில் அடித்துக் கொண்டே அடுத்த வேலையை கவனிக்கச் சென்று விட்டனர்.

முதல் நாள் அனுபவத்தை பற்றி அனைவரும் அவர்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள அன்றைய நாள் அப்படியே முடிந்தது. நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பிக்க தோழிகள் தங்கள் கல்லூரி காலத்தை சந்தோஷமாக கடத்தி கொண்டு இருந்தனர்.

இப்படிபட்ட ஒரு நாளில்தான் தொலைவில் இருந்தே சூர்யாவை ரசித்து கொண்டு இருந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன் அவள் முன் வந்து நின்றான்.

தோழிகள் அனைவரும் எப்போதும் போல் கல்லூரிக்கு வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வகுப்பு ஆரம்பிக்க நேரம் இருப்பதை உணர்ந்து மரத்தின் அடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போதுதான் சூர்யாவிற்கு தான் ஐடி கார்டை எடுத்து வராதது நினைவு வர தலையிலடித்துக் கொண்டவள் “ஹேய் நான் என்னோட ஐடி கார்ட வண்டிலேயே வெச்சுட்டு வந்துட்டேன், போய் எடுத்துட்டு வந்தர்றேன்” என்று சொல்ல, அபியோ “நானும் கூட வரட்டுமா” என்று கேட்டாள்.

“வேண்டாம்டி நானே போய் வந்துடுறேன், நீங்க இங்கயே இருங்க” என்றுவிட்டு பார்க்கிங் ஏரியா நோக்கி சென்றாள்.

வகுப்பு ஆரம்பித்துவிடும் என்ற அவசரத்தில் வேகமாக வண்டியிலிருந்து ஐடி கார்டை எடுத்துக்கொண்டு திரும்பியவள்,அவளுக்கு வெகு அருகில் நின்று கொண்டு இருந்தவனின் மார்பில் மோதி தடுமாறி விழ போவதை உணர்ந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள அவனின் ஷர்ட்டையே பிடித்து கொண்டாள் “பக்கி எப்புடி நிக்கிறான் பாரு” என்று நினைத்து கொண்டே அவனை திட்ட கோபமாக நிமிர்ந்தவளின் பார்வை அவன் இதழ்களை பார்த்த பின் ரசனையாக மாறியது.

குழந்தைகளினதை போல பிங்க் நிறத்தில் இருக்கும் இதழ்களை பார்த்தவள் “வாவ் என்னா உதடு, என்ன கலரு இவ்ளோ பிங்கியா இருக்குதே தம்மே அடிக்க மாட்டானோ” என்று யோசித்தவளின் பார்வை அவனது நேர்த்தியான நாசி கடந்து தீட்சன்யமான கண்களில் கட்டுண்டு கரைந்துதான் போனது, அவனோ தன்னவளை அருகில் பார்க்க எண்ணி வந்தவன், எதிர்பாரா இந்த தீண்டலில் மெய் மறந்து நின்றிருந்தான்.

எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தனரோ வண்டியை நிறுத்த வந்த ஒருவனின் ஹார்ன் சத்தத்தை கேட்ட பிறகே இருவரும் நடப்பிற்கு வந்தனர்.

சூர்யாவோ “அடியே இப்படியாடி அவனை வெறிச்சு பார்ப்ப” என்று தன்னையே நொந்து கொண்டவள் பின் தனது முகத்தை கெத்தாக வைத்து கொண்டு “ஹலோ இப்படிதான் பின்னாடி வந்து சைலண்ட்டா நிப்பிங்களா, யார் நீங்க, எதுக்கு இங்க நிக்குறீங்க” என்று கேட்க அவனோ தன்னவளின் முதல் ஸ்பரிசத்தில் நிலைகுலைந்து நின்றதால் அவளின் ரசனை பார்வையை கவனிக்க தவறி, கோபமாக பேசுபவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தான்.

தன்னுடைய எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் நின்றிருந்தவனை கண்டு சலித்து கொண்டவளின் பார்வை அவனது வெள்ளை நிற சட்டையில் ஒட்டி இருந்த குங்குமத்தை கண்டு அதிர்ந்துதான் போனாள். உடனே அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் நொடி நேரத்தில் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள். .

சூர்யா ஓடுவதை பார்த்து புன்னகைத்து கொண்டே ,தன்னவளின் ஸ்பரிசம் பட்ட இடத்தில் கை வைக்க போனவன் இன்பமாக அதிர்ந்தான்,ஆம் அங்கு தன்னவளின் குங்குமம் சிறு கீற்றாக இருந்ததை கண்டுதான் இந்த இன்ப அதிர்வு. மீண்டும் தன்னவளை பார்க்கும் ஆவல் அவனுள் ஏற்பட அவள் சென்ற திசையில் இவனும் சென்றான்.

சூர்யா வேகமாக தோழிகள் இருக்கும் இடம் நோக்கி மூச்சு வாங்க ஓடி வர, அவளை பார்த்த மது “ஏன்டி இப்படி ஓடிவர நாய் தொரத்துதா என்ன” என்று கேட்க, அவளை முறைத்து விட்டு, தன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்து நகத்தை கடித்து கொண்டே, கால் பெரு விரலால் கோலம் போட்டுக்கொண்டு தலை குனிந்து நின்றாள்.

தோழியின் செயலை விசித்திரமாக பார்த்த பூஜா “என்ன கருமம்டி இது” என்று கேட்க சூர்யாவோ “இதுக்கு பேர் வெட்கம்டி, நான் வெட்க படறேன்” என்றாள். அபியோ “ஏதே வெட்க படுறியா” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கி “ஆனா ஒன்னுடி காலேஜ்க்கு வந்ததுக்கு அப்புறம்தான் உங்களுக்கு எல்லாம் வெட்கம் வரும்னே எனக்கு தெரியுது, அன்னைக்கு பூஜா, இன்னைக்கு நீ” என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே ப்ரீத்தி “அப்போ அடுத்ததா எனக்கு வெட்கம் வருமா” என்று துள்ளி குதித்து கேட்க மதுவோ அவளிடம் “உனக்கு வெட்கம் வராது பசிதான் வரும்” என்று சொல்ல பூஜாவும் மதுவும் ‘ஹை பை’ அடித்து கொண்டனர்.

அவர்களின் சேட்டையை பார்த்த அபி சூர்யாவிடம் “அடியே நீ தரையை நோண்டி தண்ணி வர வச்சது போதும், நீ வெட்க படற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சுனு சொல்லு” என்று கேட்க சூர்யா பார்க்கிங் ஏரியாவில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் பார்க்கிங் ஏரியால, ஒரு பையன பாத்தேன், செம ஹாண்ட்சமா பாக்கவே எப்படி இருந்தான் தெரியுமா, அவனோட ஒரு பார்வைலயே எல்லாரும் மயங்கிடுவோம்,அதுவும் அவன் லிப்ஸ் இருக்கே எக்ஸ்ட்ராடினரி ஆண்களின் உதட்டையும் ரசிக்க முடியுங்கரத்துக்கு அவன்தான் சிறந்த உதாரணம் என்று அவனைபற்றி கனவுலகத்தில் இருப்பது போல் ரசனையாக சொல்லி கொண்டு இருக்க, அவளின் பேச்சை இடை நிறுத்திய பூஜா “அடி பாவி இதுக்காகதான் தனியா போனியா” என்று கோபமாக கேட்க அவளோ “இன்னும் முடியல இருடி” என்று பூஜாவின் பேச்சை நிறுத்திவிட்டு அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

சூர்யா சொன்னதை கேட்ட மது கோவமாக எழுந்தவள் நேராக பூஜாவிடம் சென்று “அடியே நீ எல்லாம் என்னடி ரவுடி, ஸ்கூல்ல இருந்து பாத்துட்டு இருக்கற பாத்துட்டு மட்டும்தான் இருக்க.இங்க பாரு இவளை கமுக்கமா இருந்துக்கிட்டு நெத்தில இருந்த பொட்டையே டிரான்ஸ்பர் பண்ணிட்டு வந்துட்டா” என்று சொல்ல, பூஜாவோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு “அடியே நானும் ரவுடிதான் இன்னைக்கு பாருங்க என்னோட பர்பாமென்ஸ்ஸ” என்றாள், அபியோ சூர்யாவை “மித்ர துரோகி” என்று சொல்லி திட்ட ஆரம்பிக்க மூவரும் கூட்டணி போட்டு திட்டி கொண்டிருந்தாள்.

அனைவரும் வஞ்சனையின்றி திட்டி கொண்டு இருக்கவும் என்ன செய்வது என்று திரு திருவென விழித்தவள் ப்ரீத்தியை பார்க்க அவளோ இவர்களின் பேச்சுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்னும் வகையில் கையில் இருந்த மிக்ஸரை ரசித்து உண்டு கொண்டிருந்தாள். அவளை முறைத்த சூர்யா “அடியே இவங்க என்ன ரவுண்டு கட்டி கொடும படுத்தறாங்க நீ என்னடானா எனக்கென்னன்னு மிக்சர் தின்னுட்டு இருக்கியா மிக்ஸர் வாயா” என்று மனதுக்குள் திட்டி கொண்டிருந்த, நேரம் மது பேச ஆரம்பித்தாள் “உன்கூட நாங்களும் வந்துருப்போம்ல இப்படி நீ மட்டும் போய் சைட் அடிச்சுட்டு வந்துருக்க” என்று சொல்லி “நா ஆரோ தான….. “ என்று இழுக்கவும் வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

“அப்பாடா தப்பிச்சோம்” என்று நிம்மதி பெரு மூச்சு விட்ட சூர்யா “பெல் அடிச்சுடுச்சு வாங்கடி போலாம் நேரம் ஆகுது” என்று சொல்லி அபியை இழுத்து கொண்டு அவர்கள் பில்டிங் நோக்கி ஓடிவிட்டாள்.

தோழிகளிடம் சூர்யா யாரை பற்றி பேசி கொண்டு இருந்தாளோ அவனே அவள் பேசிய அனைத்தையும் கேட்டு, சந்தோஷத்தில் துள்ளி குதித்து, தன் சட்டையில் ஒட்டி இருந்த குங்குமத்தை தடவி அவள் சென்ற திசையையே வெட்க சிரிப்புடன் பார்த்தவன் பின் தன் வகுப்பை நோக்கி சென்றான்..

அன்றைய நாள் கல்லூரி முடிந்த பின் மாலை அனைவரும் பைக் ஸ்டாண்டில் வந்து குழுமி இருந்தனர்.பூஜா அபி மற்றும் சூர்யாவிடம் “ஆமா நம்ம பிரண்ட்ஸ்ங்க எங்க” என்று கேட்க அவர்களோ “நம்ம பிரண்ட்ஸ்ஸா, அதான் நம்ம எல்லாரும் இங்க இருக்கமே வேற யார கேக்கற” என்று குழம்பியபடி கேட்க அவளோ “அதுதான் நம்ம சீனியர்ஸ்,அவங்க நேத்துல இருந்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே, அவங்கள தான் கேட்கறேன்” என்று கூற இருவருமே அவளை முறைத்துப் பார்த்து “என்னது நம்ம சீனியர்சா ஹலோ மிஸ் பூஜா ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் அவங்க எங்களுக்கு தான் சீனியர்.உனக்கு கிடையாது” என்று கூறினர்.

பூஜாவோ “ஏன்டா உன்னது என்னதுன்னு பிரிச்சு பாக்குற நம்மளோடதுன்னு சொல்லி பழகு” என்க. சூர்யாவோ “அடியே நீ எல்லாம் திருந்தவே மாட்டியா” என்று கேட்க, பூஜாவோ “நான் ஏன் திருந்தனும், நானாவது பரவால்ல எல்லாரும் இருக்கும் போதுதான் சைட் அடிக்கிறேன்.ஆனா நீ தனியா போய் பொட்டையே இடம் மாத்திட்டு வந்துட்ட எங்களுக்கு எல்லாம் அந்த பையன கண்ல கூட நீ காட்டல துரோகி” என்று திட்ட.

சூர்யாவோ வேகமாக தன் பக்கத்தில் இருந்த மற்ற தோழிகளை பார்த்தவள் அவர்கள் யாரும் தங்களை கவனிக்கவில்லை என்று நிம்மதி கொண்டவள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு “ஹேய் அங்க பாரேன் ஒரு பையன் செமையா இருக்கான்” என்று கூற, பூஜாவும் சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை மறந்து “எங்க எங்க” என்று திரும்பிப் பார்த்து தேட ஆரம்பித்தாள்.சூர்யாவோ “அதோ அங்க பாரு” என்று ஏதோ ஒரு பக்கம் கை காட்ட அதே நேரம் ஒரு பையன் அந்த பக்கம் வந்து கொண்டிருந்தான் அதில் ஆர்வமான பூஜா தன் சைட் அடிக்கும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

பூஜாவின் கவனம் அந்த பையனில் பதிந்ததில் ஆசுவாசம் அடைந்த சூர்யா “ஹப்பாடா நல்ல வேல இவ பேச்சை மாத்தி டைவர்ட் பண்ணுனோம், இல்லை மறுபடியும் எல்லோரும் முதல்ல இருந்து ஆரம்பிச்சிருப்பாளுங்க” என்று நிம்மதி அடைந்த அதே நேரம்,சூர்யாவை காலையில் பார்த்த பையன் திரும்பவும் அவளை காணும் ஆவலில் அந்த இடத்திற்கு வந்து அவள் பார்வை படும் இடத்தில் நின்று கொண்டான்.

சூர்யாவோ அவனை கிஞ்சிதமும் கண்டுகொள்ளாமல் தூரத்தில் இருந்த மற்றொரு பையனை பார்த்து சூப்பரா இருக்கான், செம ஹாண்ட்சம் என்று இவனுக்கு கூறிய அதே வார்த்தைகளை பூஜாவின் கவனத்தை திருப்ப அவனுக்கும் கூற, தன்னை கண்டு கொள்ளாமல் இன்னொருவனை அவள் பார்த்தது அவனுக்குள் கோபக் கனலை உண்டாக்க அவளை முறைத்தவாறு அங்கிருந்து அகன்று விட்டான்.

பின் அனைவரும் கிளம்பலாம் என்று தங்களது வண்டியை எடுக்க பூஜாவின் கண்களோ யாரையோ தேடி கொண்டே இருந்தது. ஆனால் அவள் தேடியது கண்களில் சிக்காமல் போக முகம் சுருங்க நின்றிருக்க, அவள் வண்டியில் ஏற வந்த மது “என்னடி ஏன் உன் மூஞ்சி இவ்வளவு டல்லா இருக்கு” என்றாள், அதற்கு பூஜாவோ “ஒன்னும் இல்லடி நீ ஏறு நம்ம போகலாம்” என்று கூற, மது அவளைப் பார்த்து கேலியாக சிரித்து “நீ ஒன்னும் இல்லைன்னு சொல்லும்போதே தெரியுது ஏதோ இருக்குன்னு. சரி சரி பிரண்டா போயிட்ட அதனால உனக்கு ஹெல்ப் பண்றேன் பொழச்சு போ”என்றவள் “நீ தேடுற ஆளு அதோ அந்த மரத்துக்கு பின்னாடி தான் நிக்கிறாங்க” என்று கூற பூஜா அதிர்ந்து “என்னது” என்று கேட்டவள், வேகமாக திரும்பிப் பார்க்க அதுவரை அவளை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் அவள் கண்களில் பட்டான்.

முந்தையநாள் பூஜா தன்னை கண்டு கொள்ளாமல் சென்றதால் கோபம்கொண்ட அர்ஜுன் அன்று அவள் முன் வராமல், மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க அவள் கண்கள் தன்னை தேடுவதை கண்டு உள்ளுக்குள் குதூகலித்து போனான். ஆனால் இப்போது திடீரென்று தன்னைக் கண்டு கொள்வாள் என்று நினைக்காதவன் அப்படியே செய்வதறியாது நின்றான்.ஆனால் பூஜா கண்களிலோ அவனை கண்டுவிட்ட மகிழ்ச்சி தாண்டவமாடியது. உடனே அவனைப் பார்த்து கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்துவிட்டு திரும்ப அங்கு அவளது தோழிகள் நால்வரும் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்து கொண்டிருந்தனர்.அவர்களை கெத்தாக ஒரு பார்வை பார்த்தவள் மதுவிடம் “நானும் ரவுடிதான்” என்று சுடிதாரில் இல்லாத காலரை இழுத்துவிட்டு கொள்ள மற்ற அனைவரும் தலையில் அடித்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்.
அர்ஜுன் பூஜாவின் செயலில் முதலில் திகைத்தாலும் பின் செல்ல கோபத்தோடு “இவ அடங்கவே மாட்டா” என்று முணு முணுத்துவிட்டு புன்னகையுடன் திரும்ப அங்கு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள்.

அவனோமுதலில் அவர்களைக் கண்டு திருதிருவென விழித்தாலும் பின் சுதாரித்து “என்ன எல்லாரும் அப்படி பார்க்குறீங்க” என்று கேட்க அவர்களோ “இல்லை யாரோ ஜஸ்ட் ஜூனியர் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க, இப்போ அது மாதிரி தெரியலையே” என்று கேட்க அவனோ “இப்பவும் அவங்க நமக்கு ஜூனியர் தானே வேற என்ன” என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்க அவன் அருகில் வந்த ரகு மற்றும் கோகுல் “உன்ன பத்தி எங்களுக்கு தெரியும், மொசை பிடிக்கிற நாயே மூஞ்சியை பார்த்தா தெரியாது,அது மாதிரி நீ அந்த பொண்ணை சைட் அடிக்கிறது அப்பட்டமாவே தெரியுது” என்க, அவனோ “கண்டது உளறாம வாங்கடா போலாம்”, என்று சொல்லி அங்கிருந்து நழுவப் பார்க்க அவனை பிடித்து நிறுத்திய இருவரும் “இந்த டகால்டி வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம் உண்மைய சொல்லு” என்று கேட்க. அவனோ “ஜூனியர் மட்டும்தான்” என்று கூறியவன் “இதுக்குமேல ஏதாவது கேட்டிங்க உங்க ரெண்டு பேருக்கும் அசைன்மென்ட் முடிச்சு தரமாட்டேன்” என்று அவர்கள் எதை சொன்னால் அமைதி ஆவார்கள் என்று தெரிந்து சொல்ல அவன் எதிர் பார்த்தது போலவே அவர்களும் அர்ஜுனை மேலும் கீழும் பார்த்தவர்கள் போடா என்றுவிட்டு செல்ல, இவனும் தப்பித்தால் போதும் என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

இவர்கள் கல்லூரி ஆரம்பித்து 6 மாதங்கள் ஆன நிலையில் அவர்களுக்கு முதல் செமஸ்டரில் செய்முறை தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ப்ரீத்தி மற்றும் மதுவிற்கு காலையில் செய்முறை தேர்வு இருந்ததால் அவர்கள் கிளம்பி விட பூஜாவிற்கு மதியம் தேர்வு என்பதால் தனியாக சென்றிருந்தள் தேர்வை சீக்கிரமாக முடித்தவள் வெளியில் ரெக்கார்ட் நோட் வருவதற்காக சற்று தள்ளி இருந்த ஒரு படிக்கட்டில் அமர்ந்து இருந்தாள்.

சற்று நேரம் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பையனை பார்த்து “வாவ் சூப்பரா இருக்கானே,எப்படி இவ்வளவு நாள் நம்ம கண்ணுல படாம போனான்” என்று அவனையே பார்த்து இவள் யோசித்து கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் இவள் அந்த பையனைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு “இங்க பாருங்கட போன வாரம் நான் அவகிட்ட பேச போனேன் என்னமோ கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாதிரி பார்வையிலேயே விலக்கி வச்சா இப்போ அந்த பையன எப்புடி பாக்குறா பாரு, வாங்க மேடத்த கொஞ்சம் கவனிச்சுட்டு வரலாம்” என்று அவள் அருகில் சென்று “என்ன பேபி அந்த பையன பாத்துட்டு இருக்க, ஒரு பொண்ணு இப்புடி பாக்கலாமா” என்று ஒருவன் கேட்க மற்றவனோ “அது எல்லாம் இவங்ககிட்ட கேக்க கூடாதுடா அப்புறம் ஆணும் பெண்ணும் சமம், நீங்க பண்ற எல்லாமே நாங்களும் பண்ணுவோம்னு பெமினிசம் பேச ஆரம்பிச்சுடுவாங்க” என்றான் நக்கலாக அதில் கடுப்பான பூஜா “ஹலோ தேவை இல்லாம பேசாதீங்க.நான் என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன போங்க போய் உங்க வேலைய பாருங்க அதுமட்டும் இல்லாம பாக்கறது ஒன்னும் தப்பு இல்ல” என்று கூற அவர்களோ “பாக்கறது தப்பு இல்லையா, அப்ப நாங்களும் பாக்கறோம்” என்று சொன்னவர்கள், அவள் அருகில் வர அதிர்ந்து போன பூஜா தனக்கு உதவ யாராவது வர மாட்டார்களா என்று சுற்றி முற்றி பார்க்க, அந்த இடத்தில் யாரும் இல்லை, அதில் பயந்தவள் “இங்க பாருங்க……….”என்று பேச போக, அவர்களின் பார்வை சென்ற இடத்தை கண்டு உடல் கூசி போனாள்.

கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட, அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு இருக்க விருப்பாதவள் அவர்களை தள்ளிவிட்டு எழுந்து ஓடிவிட்டாள்.அழுது கொண்டே அவள் வந்து நின்ற இடம் பைக் பார்க்கிங் ஏரியாதான்.அங்கு அப்படியே மடங்கி அமர்ந்தவள் கரங்களால் வாயை மூடி சத்தம் வராமல் தேமி தேமி அழுது கொண்டிருக்க, அவள் தோளை ஒரு கரம் பற்றியது.

வேறு யாரோ வண்டி எடுக்க வந்தவர்கள், தான் அழுவதை பார்த்து வந்துவிட்டார்களோ என்று பதறி, வேகமாக தன் கண்களை துடைத்து முகத்தை சாதரணமாக வைக்க முயன்றவாறு திரும்பி பார்க்க அங்கு அபியும் சூர்யாவும் நின்றிருந்தனர். தோழிகளை பார்த்தவுடன் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க இருவரையும் தாவி அணைத்துக்கொண்டாள்.
பூஜா சாதாரணமாக அழக்கூடியவள் இல்லை. எப்போதும் பட்டாம்பூச்சியாய் சந்தோஷமாக சுற்றி வருபவள், யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் என் வாழ்க்கை என் முடிவு என்று வாழ்பவள், மற்றவர் முன் தன் சோகத்தை கூட காட்ட விரும்பாதவள், இன்று அழவும் தோழிகள் இருவரும் பதறிதான் போயினர்.

முதலில் சுதாரித்த சூர்யா “பூஜா என்ன ஆச்சு, எதுக்காக அழற” என்று கேட்க, அவளோ பதில் சொல்லாமல் அழுதுக்கொண்டே இருந்தாள்.தாங்கள் கேட்டும் பதில் சொல்லாமல் அழும் பூஜாவை பார்த்து கடுப்பான அபி தன்னில் இருந்து அவளை பிரித்து கூர் பார்வையுடன் “என்ன ஆச்சு” என்று அழுத்தமாக கேட்டாள். அவள் கேள்வியே இதற்கு நீ பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்ற பொருளோடு இருக்க ஒருவழியாக தன்னை சமாளித்து கொண்ட பூஜா விம்மியபடியே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அனைத்தையும் சொல்ல தோழிகள் இருவருக்கும் கோபத்தில் முகம் சிவந்து போனது.

பூஜாவின் கையை பிடித்த அபி “என்கூட வா எவன் அப்புடி பேசுனதுனு சொல்லு, அவன இன்னைக்கு உண்டு இல்லைனு ஆக்கிடறேன்” என்றவள், பூஜாவை இழுத்து செல்ல சூர்யாவும் அவர்கள் பின்னே ஓடினாள்.

தோழி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றவள் “யாருன்னு சொல்லு” என்று கேட்க பூஜா தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த மூவரை காண்பித்தாள்.

அபி வேகமாக அவர்கள் அருகில் செல்லும் போதே அந்த மூவரில் ஒருவன் மூக்கில் குத்து விழ இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.யார் அவனை அடித்தது என்று தோழியர் மூவரும் அதிர்ந்து போய் நிற்க, அங்கிருந்த அனைவரையும் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
பிள்ளைகள் காலேஜில் செய்யும் கலாட்டா செம சூப்பரா இருக்கு
அர்ஜுன் வந்து செமத்தியா கொடுக்கிறானே
இவன்தான் ஹீரோவா?
 
Last edited:

சுதிஷா

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
பிள்ளைகள் காலேஜில் செய்யும் கலாட்டா செம சூப்பரா இருக்கு
அர்ஜுன் வந்து செமத்தியா கொடுக்கிறானே
இவன்தான் ஹீரோவா?
என்ன வார்த்தை கேட்டுட்டீங்க பானுமா என்ன வார்த்தை கேட்டுடீங்க நீங்க கேட்ட விஷயம் மட்டும் ப்ரீத்திக்கு தெரிஞ்சுது அப்போ என்னோட ஆளு என்ன தக்காளி தொக்கானு சண்டைக்கு வந்துருவா அவளை உங்களால சமாளிக்க முடியாது பாத்துக்கோங்க உங்க ஸ்னாக்ஸ் எல்லாம் புடுங்கி சாப்பிட்டுருவா, அப்புறம் மது உங்க லஞ்ச் டின்னெர் எல்லாம் காலி பண்ணிடுவா சூர்யா வெட்கப்பட்டே கொலை பண்ணுவா அப்புறம் யாரு ஹா...... :unsure::unsure::unsure::unsure::unsure:அபி அவ நீங்க வைக்கற சட்னிய உங்க மேலயே கொட்டி விட்டிருவா பாத்துக்கோங்க :love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p:p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன வார்த்தை கேட்டுட்டீங்க பானுமா என்ன வார்த்தை கேட்டுடீங்க நீங்க கேட்ட விஷயம் மட்டும் ப்ரீத்திக்கு தெரிஞ்சுது அப்போ என்னோட ஆளு என்ன தக்காளி தொக்கானு சண்டைக்கு வந்துருவா அவளை உங்களால சமாளிக்க முடியாது பாத்துக்கோங்க உங்க ஸ்னாக்ஸ் எல்லாம் புடுங்கி சாப்பிட்டுருவா, அப்புறம் மது உங்க லஞ்ச் டின்னெர் எல்லாம் காலி பண்ணிடுவா சூர்யா வெட்கப்பட்டே கொலை பண்ணுவா அப்புறம் யாரு ஹா...... :unsure::unsure::unsure::unsure::unsure:அபி அவ நீங்க வைக்கற சட்னிய உங்க மேலயே கொட்டி விட்டிருவா பாத்துக்கோங்க :love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p:p:p:p
அச்சோ ரொம்பவேஏஏஏஏஏஏஏஏஏஏ பயமாயிருக்கே, சுதிஷா டியர்
ஹா ஹா ஹா
எதுக்கும் நான் கொஞ்சம் பார்த்தே பேசுறேன்ப்பா
 

சுதிஷா

Well-Known Member
அச்சோ ரொம்பவேஏஏஏஏஏஏஏஏஏஏ பயமாயிருக்கே, சுதிஷா டியர்
ஹா ஹா ஹா
எதுக்கும் நான் கொஞ்சம் பார்த்தே பேசுறேன்ப்பா
இப்போ இருக்க நிலைமைக்கு பூஜா மட்டும்தான் உங்களுக்கு சப்போர்ட் பண்றா அவளையும் ஒரு பப்ஸ் குடுத்து அடக்கிருவாங்க நம்ம ஸ்லீப்பர் செல்ஸ் பாத்துக்கங்க சொல்லிட்டேன் என்ன இருந்தாலும் நீங்க நம்ப பானுமால அதுதான் இந்த முன்னெச்சரிக்கை :p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ இருக்க நிலைமைக்கு பூஜா மட்டும்தான் உங்களுக்கு சப்போர்ட் பண்றா அவளையும் ஒரு பப்ஸ் குடுத்து அடக்கிருவாங்க நம்ம ஸ்லீப்பர் செல்ஸ் பாத்துக்கங்க சொல்லிட்டேன் என்ன இருந்தாலும் நீங்க நம்ப பானுமால அதுதான் இந்த முன்னெச்சரிக்கை :p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cry::cry::cry::p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நெம்ப நெம்ப டேங்க்ஸுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top