வண்ணங்களின் வசந்தம்... 1

Hema Guru

Well-Known Member
வண்ணங்களின் வசந்தம்…..


அத்தியாயம் -1


தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை காலை பரபரப்புடன் எப்போதும் போல் இயங்கி கொண்டிருந்தது.அங்கு இருக்கும் இருபாலரும் படிக்கும் பிரபலமான மற்றும் கண்டிப்பான பள்ளியில்தான் நம் கதையின் நாயகிகள் படித்து கொண்டு இருக்கிறார்கள். (கண்டிப்புக்கு பேர் போன பள்ளியாம் நம்ம நாயகிகள் ஓவர் படிப்சா இருப்பாங்களோ வாங்க போய் பார்ப்போம்)

பிரமாண்டமான அந்த பள்ளி வளாகத்தினுள் நுழையும்போதே தெரிகிறது பள்ளியின் சுத்தமும் கண்டிப்பும்.“பா” வடிவில் சுற்றி உயரமான கட்டிடங்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை தெளிவாக காட்டுகிறது.நாயகிகள் கெத்தான புள்ளைங்கதான் போலா, எங்க அவங்க ச்ச. ….படிக்கற புள்ளைங்க கிளாஸ் இருப்பாங்க வாங்க போய் பார்க்கலாம்.

வகுப்பு நடந்துட்டு இருக்கு நம்ம புள்ளைங்களும் பொறுப்பா படிக்குங்குங்களோ!!!!..... என்ற யோசனையுடன் உள்ளே சென்றால், பாவம் ஒரு வகுப்பறை வாசலில் ஐந்து பிள்ளைகள் முட்டி போட்டு இருக்கிறார்களே யார் அது என்று நெருங்கி போய் பார்த்தால் நம்ம பஞ்சபாண்டவிகள் தான் முட்டி போட்டு இருக்காங்க.

நம்ம கதையோட ஹீரோயின்களை கெத்தா அறிமுகப்படுத்தலாம் என்று பார்த்தாள் இதுங்க பனிஷ்மென்ட் வாங்கி முட்டி போட்டு இருக்குங்க. பனிஷ்மென்ட் வாங்குனாலும் இதுங்கதான் நம்ம கதையோட நாயகிகள்.பாவம் முட்டி போட்டு கால் வலிக்கும்.

பனிஷ்மென்ட் வாங்கியும் அடங்காம ஏதோ பேசுதுங்களே என்னவா இருக்கும். போய் பார்ப்போம்.

அந்த ஐவரில் ஒருத்தி மற்றவளிடம் “ஏய் ஜேபி உன் பார்வையே சரி இல்லையே என்ன பார்த்து கொண்டு இருக்கிறாய்” என்று கேட்டாள்.

ஜேபி என்று அழைக்கப்படும் பூஜா “இல்ல கேபி இந்த பொசிஷன்ல இருந்து பார்த்தா என் ஆள் நல்லா தெரியுறான்.அதான் அவனை பார்த்து கொண்டு இருக்கிறேன்” என்றவள் மேலும் “பிஸியா இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாத” என்றாள்.

ஜேபி சொல்வதை கேட்ட கேஎஸ் என்று அழைக்கப்படும் நம் மதுவந்தி “என்னது அவ மட்டும் தனியா சைட் அடிக்கிறாளா!!” என்று அதிர்ந்து பக்கத்தில் முட்டி போட்டு இருந்த கேபி என்று அழைக்கப்படும் அபியிடம் “அவளை கொஞ்சம் தள்ளி முட்டி போட சொல்லு நாமளும் சைட் அடிக்கலாம்” என்றாள் ஆர்வமாக.

மற்ற மூவரும் தங்களுக்குள் இப்படி பேசிக்கொண்டு இருக்க நான்காவது ஜீவன் வேறு ஏதோ யோசனையில் இருந்தது கடைசியாக முட்டி போட்டு இருந்தவள் மூவரையும் புருவம் சுருங்க ஆராய்ச்சியாக பார்த்து மனதில், “ஹையோ இவளுங்க பேசறதை பார்த்தாள் தேரை இழுத்து தெருவில் விட்டுருவாளுங்க போல இருக்கே” என்று மனதில் அரண்டு நான்காமானவளின் தோளை இடித்து “அந்த மூன்று வில்லங்கமும் என்ன பண்ணுதுன்னு கவனி” என்றாள்.

நாங்கமானவளின் பெயர் ஆர்எம் என்று அழைக்கப்படும் ப்ரீத்தி. அவளோ தீவிர முகபாவத்துடன் பக்கத்தில் இருந்த சூர்யா என்று பெயர் உடைய கேகேவிடம் “நானும் ரொம்ப நேரமா அதைத்தான் நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன் கேண்டீனில் சமோசா போட்டுட்டாங்க” என்றாள் கண்ணில் மின்னலுடன்.

ஆர்எம் சொன்னதைக் கேட்டு கடுப்பான கேகே.”அடியே ஏண்டி இப்புடி படுத்துற அவளுங்க என்ன பன்றாளுங்கன்னு பாருன்னா நீ சமோசா போட்டாச்சுன்னு சொல்ற. திங்கரதுலேயே இருக்காம அவளுங்கள கவனி” என்று சொல்ல அவளோ கேகே சொல்வதை காதில் வாங்காமல் சமோசாவுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள் கனவில்.

ஆர்எம்மின் முகத்தை வைத்தே அவள் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்த கேகே அவளின் கைகளில் லேசாக கிள்ளி சுய உணர்வு வரவைத்தாள்.
“ஆ……..” என்று அலறியவளை கண்டுகொள்ளாமல் “நீ இந்தப் பக்கம் வா” என்றாள்.

கேகே கிள்ளிய கடுப்பில் இருந்த ஆர்எம்மோ “முடியாது, இங்க தான் சமோசா வாசனை நல்லா வருது நான் அங்க வர மாட்டேன் போ” என்று முறுக்கி கொண்டாள்.

கேகேவோ “இவள் கோவப்படற நேரத்தை பாரு” என்று மனதில் புலம்பி கொண்டே ஆர்எம்மிடம் “நோ நோ இங்கதான் நல்லா வாசம் வருது” என்று கூறி அவளை இழுத்து இந்தப்பக்கம் விட்டு அவள் இருந்த இடத்திற்கு முட்டி போட்டே மெதுவாக நகர்ந்து சென்றாள். மூவரும் ஒரே இடத்தை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து புருவ முடிச்சுடன் " என்ன தெரிகிறது " என்று கேட்டுக் கொண்டே இவளும் திரும்பினாள்.
திருப்பியவளுக்கு நெஞ்சு வலி வரும் போல் இருந்தது.”அடிப்பாவிங்களா இந்த வேலையை பார்த்ததற்கு தானே வெளியே முட்டி போட விட்டாங்க இதுல இங்க வந்தும் அதே வேலையை பார்க்குதுங்களே” என்று அவள் திட்டி கொண்டிருக்க அவர்களிடம் பதில் இல்லை.அவர்கள்தான் சைட் அடிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்களே பிறகு எப்படி கேகேயின் புலம்பல் காதில் விழும்.

மூவரையும் பார்த்து மேலும் கடுப்பான கேகே தன் அருகில் இருந்த கேஎஸ்யின் தலையில் நங்கென்று கொட்டி அவளின் கவனத்தை தன் புறம் திருப்பினாள்.

தங்களைவிட பெரிய பையனை பார்த்து சுவாரஸ்யமாக ஜொள்ளுவிட்டு கொண்டு இருக்க அதில் இடையூறு ஏற்படுத்துவது போல் கேகே கொட்டவும் கடுப்பான கேஎஸ் “ஏண்டி என்னை கொட்டுன” என்றாள் ஆசிரியருக்கு கேட்ககூடாது என்று மெதுவான குரலில். அவளுக்கு பதில் சொல்வதற்கு கேகே வாய் திறக்க சரியாக அதே நேரம் அங்கு வந்து நின்றார் அவர்களின் ஆசிரியர்.

கேகேவும், கேஎஸ்வும் பேசுவதை பார்த்துதான் அவர்கள் அருகில் வந்திருந்தார்.இவர்களை பார்த்து முறைத்து கொண்டே “பனிஷ்மென்ட் வாங்கியும் திருந்தவில்லையா நீங்கள்” என்று திட்டி கொண்டு இருக்க அதே நேரம் அந்த வகுப்பு முடிந்ததர்கானா மணி அடித்தது. அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றுவிட்டார் அவர்.

ஆசிரியர் அந்த பக்கம் சென்றவுடன் ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டே “திருந்திட்டாலும்” என்று கூறி “ஹய் பை” அடித்து கொண்டனர்.
கேஎஸ் மீண்டும் “எதற்கு கொட்டினாய்” என்று கேட்க அதற்கு கேகே பதில் சொல்வதற்குள் ஆர்எம்மே “அது பெரிய ரகசியம் பாரு வெளிய வந்தும் அடங்காம சைட் அடிச்சுட்டு இருக்கீங்கன்னுதான் கொட்டிருப்பா இது பெரிய விஷயமா வாங்க கேன்டீன் போலம், லேட்டா போனா சமோசா தீர்ந்துவிடும்” என்று சொல்ல ஐவரும் மற்றதை மறந்து கேன்டீன் விரைந்தனர்.

அவர்கள் கேன்டீன் செல்லட்டும் நாம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலாம் ஆனவள் ஆர்எம் என்று அவர்களால் அழைக்கப்பட்ட ப்ரீத்தி.. தந்தை ஐ ஏ எஸ் ஆபிஸர் மற்றும் தாய் ஒரு பொதுத்துறை வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிகிறார்.. அவர்களுக்கு ஒரே செல்ல பிள்ளை என்பதால் ப்ரீத்திக்கு அவர்களது வீட்டில் செல்லம் அதிகம், பொறுப்பும் அதிகம். இருவரும் வேலைக்கு செல்வதால் தனிமை கூட அவளுக்கு அதிகமாகத்தான் இருந்தது அதனாலேயே எப்பொழுதும் தனது நண்பர்கள் குழுவோடு ஒன்றியே இருப்பாள்.விளையாட்டு குணமாக இருந்தாலும் தனி பெண் என்பதால் பொறுப்பாக இருப்பாள். அவள் முடிவு தெளிவாகவும், சரியாகவும் இருக்கும் என்பதால் பெற்றோர் இருவரும் அவளது எந்த முடிவையும் மனமுவந்தே ஏற்பர். முக்கியமான விஷயம் என்னன்னா மேடம்கு ரொம்ப பிடித்த விஷயம் சாப்பாடு. நிறைய சாப்பிடமாட்டா ஆனா வெரைட்டியா நிறைய சாப்பிட நினைப்பா. அதனாலேயே அவ பிரண்ட்ஸ் ஹோட்டலில் இவள் ஆர்டர் செய்யும் உணவின் பேலன்ஸ் சாப்பிடுவதற்காக கம்மியாக தங்கள் ஆர்டரை கொடுப்பார்கள்.

அடுத்து கே பி என்று அழைக்கப்படும் அபி.. மருத்துவத்தை கனவாக கொண்டு வாழ்பவள் தனது தாயையே தன்னுடைய வழிகாட்டியாக எண்ணுபவள் . ஆம் அவளது தாயும் மருத்துவர். தந்தை ஐ பி எஸ் ஆபிஸர். வீட்டிற்கு ஒரே செல்ல பெண் அவளுக்கு எது வேண்டும் என்றாலும் கொட்டிக்கொடுக்கும் பாசமான தாய் தந்தையர்.அவர்களது சொந்த ஊர் வேறு,வேலை காரணமாக சென்னையில் செட்டில் ஆகிவிட்டனர். சொந்தபந்தங்கள் நிறைய பேர் இருக்க இங்கு தனியாக இருக்கின்றனர். இந்த பொண்ணுதான் இவங்க குரூப்லயே ரொம்ப தைரியம். அதே சமயம் ஆர்வ கோளாறும் கூட. யோசிக்காம எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யும் டைப்.

மூன்றாம் ஆனவள் கேகே என்று அழைக்கப்படும் சூர்யா.. சென்னையில் ஒரு பிரபலமான கார்மெண்ட்ஸ் உரிமையாளரின் பெண்.. தாய் இல்லத்தரசி.. இவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. எதிலும் ஒரு நேர்த்தி இருக்கவேண்டும் என்று என்னும் குணம் உடையவள்.தனது அறை முதல் தனது வீடு வரை அனைத்தையும் நேர்த்தியாகவும் அழகாகவும் பராமரிப்பது அவளுடைய பொழுதுபோக்கு. அதேசமயம் வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள் வைத்து வாழ்பவள்.அவள் கட்டுப்பாடுகள் அனைத்தும் தூள் தூளாகும் ஒரு இடம் என்றால் அது அவளது தோழிகள் குழுதான் எங்கே அவர்கள் இவள் சொன்னால் கேட்டால்தானே இவளும் அவர்களின் குணம் தெரிந்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாள்.அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தவற மாட்டாள். இவளின் சொற்பொழிவை கேட்க வேண்டும் என்ற காரணத்தாலேயே இவள் சொல்வதை உடனே செய்து விடுவார்கள் அவளது தோழிகள்.

அடுத்தவள் மது.. கூட்டுக் குடும்பத்தில் முதல் பெண் பிள்ளையாய் பிறந்தவள். அவளுக்கு நான்கு அண்ணன்கள். அதனாலேயே சின்னத்தம்பி குஷ்பூ போல அவளை பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்தனர் பாதுகாப்பில் மட்டுமில்ல ஆளும் பார்க்க சற்று குஷ்பு போலதான் இருப்பாள். வீட்டுப் பெண்கள் அனைவரும் இல்லத்தரசியாக இருக்க ஆண்கள் ஒன்றாக இணைந்து மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவியுள்ளனர். அதுவும் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு மசாலா நிறுவனம் வெளிநாடு ஏற்றுமதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அம்மணி தங்க கூண்டில் மாட்டி இருக்கும் கிளி.

கடைசியாக ஜேபி என்று அழைக்கப்படும் பூஜா. இவளும் வீட்டிற்கு ஒரே செல்ல பெண்தான். தாய் இல்லத்தரசியாக இருக்க தந்தை பெண்டன்ட் ஐடி சொல்யூஷன் என்று மிகப்பிரபலமான ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இவள் தந்தைக்கு தனக்கு அடுத்து பூஜாவே அவரது நிறுவனத்தை எடுத்து நடத்தவேண்டும் என்ற விருப்பம்.ஆனால் பூஜாவிற்கு அது துணியும் நாட்டமில்லை. வாழ்க்கையை திகட்ட திகட்ட தன் இஷ்டம் போல் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவள். பட்டாம்பூச்சி போல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழவேண்டும் என்ற எண்ணம். சுருங்கச்சொன்னால் ட்ராவல் எக்ஸ்பிளோரர்…

இப்படி ஒவ்வொரு குணம் உள்ள இந்த மணிகளை ஒன்றாக கோர்த்தது நட்பு என்னும் நூலே. பிளே ஸ்கூலில் ஆரம்பித்த இவர்களின் நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சாதாரணமாக பெண்களின் நட்பு திருமணத்திற்கு பிறகு தொடர முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் நட்பை திருமணத்திற்கு பிறகும் காப்பாற்றி கொள்வார்களா என்பதை கதை போக்கில் தெரிந்து கொள்வோம்.

அப்பாடா ஒருவழியா இவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். இருங்க கேன்டீன்ல ஏதோ சத்தமா இருக்கு என்னனு போய் பார்ப்போம்.


அட நம்ம கே எஸ் தான் சமோசாவிற்கு சண்டை போட்டு கொண்டு இருக்கிறாள்.


கேன்டீனில் கேஎஸ்யின் சத்தம்தான் அதிகமாக கேட்டது.
“ஏன் அண்ணா நாங்கள் தான் சமோசா ரெகுலரா வாங்குகிறோம் என்று தெரியும் இல்லையா பின் எதற்காக எங்க பங்கை மத்தவங்க கொடுத்தீங்க “ என்று கேன்டீன்காரருடன் மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள்.

அவரோ இத்துநூண்டு இருக்குதுங்க இதுங்கள சமாளிக்க முடியலையே என்று தனக்குள் புலம்பி கொண்டு “இல்லாம இன்னைக்கு கம்மியாதான் சமோசா போட்டாங்க அதுதான் சீக்கிரம் தீர்ந்துவிட்டது.இனி எப்போதும் தனியாக உங்களுக்கு எடுத்து வைத்துவிடுகிறேன்மா” என்றார். அவர் பதிலில் கே எஸ் அவரை கெத்தாக ஒரு பார்வை பார்த்து " அந்த பயம் இருக்கட்டும் " என்று விட்டு வேறு என்ன வாங்கலாம் என நோட்டம் விட்டவளின் கண்ணில் பட்டது முட்டை போண்டா.

முட்டை போண்டாவை பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊற, அதை கபளீகரம் செய்யும் ஆவல் மனதிற்குள் தோன்றினாலும் அதை முயன்று மறைத்துவிட்டு கேன்டீன் ஓனரிடம் அசட்டையாக இங்க பாருங்க அண்ணா “ இன்று ஒரு நாள் மட்டும் போனா போகுது என்று இந்த முட்டை போண்டாவ எடுத்து போறேன்.நாளையிலிருந்து சமோசா இருக்கணும் இல்ல முட்ட போண்டாவில் முட்டைக்கு பதிலாக கரப்பான்பூச்சி இருக்குனு வதந்திய பரப்பி விட்டுருவோம் " என்று மிரட்டி விட்டு அரண்டு நிற்கும் அவரை கண்டு கொள்ளாமல் கையில் எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு முட்டை போண்டாவை அள்ளி கொண்டு சென்றாள்.

கை கொள்ளா அளவு போண்டாவை எடுத்து செல்லும் கேஎஸ்ஸை பார்த்தவர் மனதில், “இதுங்க செஞ்சாலும் செய்யுங்க, புள்ளைங்கள பெத்துவிட சொன்னா ரவுடிகளை பெத்து விட்டிருக்காங்க” என்று நேரில் திட்ட முடியாமல் மனதில் திட்டி கொண்டார் அவர்களின் பெற்றோரை.

கை கொள்ளா அளவு முட்டை போண்டாவுடன் தன் தோழிகளின் அருகில் சென்று அமர்ந்தாள். தோழிகளுக்கு ஆளுக்கு ஒன்று என்று பிரித்து கொடுத்தவள் மீதி இருக்கும் அனைத்தையும் தனக்கே வைத்து கொண்டாள்.

கே எஸ்ஸின் செயலில் மற்ற நால்வரும் அவளை கொலை வெறியுடன் முறைக்க, அவர்களை கண்டு கொள்ளாமல் தன் பார்வையை சுழற்றியவள் கண்ணில் மின்னலுடனும், குரலில் குதூகலத்துடனும் “ஹே அங்க பாருங்கடி” என்று கத்தி இருந்தாள். முட்டை போண்டாவை மறந்து.

முட்டை போண்டாவை சாப்பிட போன அனைவரும் கேஎஸ்ஸின் சத்தத்தில் அதை சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டு,அவள் பார்வை போன இடத்திற்கு தங்கள் பார்வையையும் திருப்பினர்.அங்கு அவர்களைவிட பெரிய வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் உதட்டில் மெல்லிய சிரிப்புடனும், கண்ணில் மின்னலுடனும் வந்து கொண்டு இருந்தான்.

அவனை பார்த்த உடன் கேபியும் ஜேபியும் மற்றதை மறந்து அவனையே பார்க்க ஆரம்பித்தனர் என்றாள், கேகேவோ “அடியே நீங்க திருந்தவே மாட்டீங்களா” எங்க போனாலும் இவளுங்க அலும்பு தாங்க முடியலையே”என்று கூறி அவர்களை சைட் அடிக்க விடாமல் அவர்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பும் முயற்சியில் இறங்கினாள்.

நால்வரும் இப்படி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தடுத்து கொண்டு குட்டி கலவரத்தில் இறங்கி இருக்க அந்த மாணவனோ இவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டான்.அவன் போன பிறகே கேகேவிற்கு நிம்மதியாக இருந்தது, மூவரையும் பார்த்து முறைத்து கொண்டே “அடியேய் ஏண்டி இப்புடி படுத்துறீங்க ஒழுங்கா அங்க இங்க பார்க்காம வாங்க போண்டா சாப்பிடலாம் மீறி பார்வை எங்காவது திரும்புச்சு கிளாஸ்க்கு இழுத்துட்டு போய்டுவேன் போண்டாவும் கிடையாது ஒன்னும் கிடையாது“ என்று திட்டிவிட்டு திரும்ப அங்கு ஆர்எம்மோ அனைவரின் போண்டாவையும் காலி செய்து இருந்தாள்.

அனைவரும் அவளை முறைக்க ஆர்எம்மோ கூலாக " சாப்பிட வந்தா அந்த வேலையை பார்க்கணும் அதை விட்டுவிட்டு உங்களை யார் சைட் அடிக்க சொன்னது.ஏற்கனவே சமோசா தீர்ந்த கவலையில் இருந்ததினால் எல்லா போண்டாவையும் நானே சாப்பிட்டுவிட்டேன்டி " என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல மற்றவர்கள் அவளை அடிக்க துரத்தினர். இவர்களின் இந்த விளையாட்டை ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்தது ஒரு ஜோடி விழிகள்.

ஒரு வழியாக ஆர்எம்மை பிடித்த அனைவரும் அவளை குமுறு குமுறு என்று குமுறிய பிறகே அமைதி ஆகினர். இந்த கலாட்டவுடனே அவர்களின் அன்றைய பொழுது செல்ல மாலை அனைவரும் தங்களது சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு வந்தனர்.

வண்ணங்கள் தொடரும்....
Nice start. 1 heroin பேர் ஞாபகம் வெச்சுக்கரதே கஷ்டம், இதுல 5 ஹீரோயின், 5 nickname நடத்துங்க, ஒரு flow chart pottudunga, easy ya புரியும்
 

PAPPU PAPPU

Well-Known Member
Nice start. 1 heroin பேர் ஞாபகம் வெச்சுக்கரதே கஷ்டம், இதுல 5 ஹீரோயின், 5 nickname நடத்துங்க, ஒரு flow chart pottudunga, easy ya புரியும்
Adutha adutha epi la ungalukku clear aagidum sis .ok sis thank u:love:
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top