வசந்தம்-8 ஆ

surthi

Well-Known Member
#1
தான் செல்லும் வழியில் கூட்டம் கூடி இருப்பதை கண்டு அங்கு என்ன பிரச்சினை என்று அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒரு இளம் பெண் ரத்தத்தில் மிதப்பதை கண்டு அவளுக்கு வலிக்க தான் செய்தது ஆனால் அதை விட. அப்பெண்ணை சுற்றி வேடிக்கை. பார்த்து கொண்டு இருந்தவர்களை கண்டு வருத்தம் கோபம் ஆங்காரம் எல்லாம் ஒருங்கிணைந்து. வந்தது. பின் நிலை உணர்ந்து தன்னை சமாளித்து கொண்டு அப்பெண்ணிற்கு. உயிர் இருக்கிறதா என்று நாடியை பார்த்தால் அவள் எப்போதோ விண்ணுலகம் அடைந்திருந்தாள் என்ன செய்வது என ஸாகரி. நிமிரும் போது. அங்கு அம்மு மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் ஓடினாள் பின் ஸாகரியே அங்கு இருந்த சூழ்நிலையை கண்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து அடிபட்டு இறந்துகிடந்த அந்த பெண்ணையும். காயத்ரியையும். கொண்டு மருத்துவமனையில் சேர்த்தாள் அதன் பின் என்ன. செய்ய என்று தெரியாமலும் புரியாமலும் அந்த மருத்துவமனை காரிடாரில் போடபட்டிருந்த நீண்ட இருக்கையில் தொய்ந்து அமர்ந்தாள்

அவளின் முகம் தான் அமைதியாக இருந்ததே தவிர மனது கடவுளிடம் சண்டை இட்டு கொண்டிருந்தது

பதி(அவளின் நண்பர் அல்ல லார்டு கணபதி அவர தான் மேடம் இப்படி செல்லமா கூப்பிடுவாங்க) நீ பண்றது. உனக்கே நல்லா இருக்கா என் கூட யார் சொந்தமா பழகினாலும் அவங்கள என்கிட்டேந்து பிரிக்கறதே உன் வேலையா போச்சு முதல்ல என் அம்மா அடுத்து அப்பா அடுத்து. என் தம்பி அடுத்து என் நிகா கடைசியாக இப்போ இந்த அனு அக்காவ பைத்தியமாக்கியாவது உயிரோட விட்டையேன் தான் நான் அவங்கள தள்ளி இருந்து பார்த்து கிட்டே என் வாழ்க்கைய வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஆனா நீ அவங்களையும் என்கிட்டேந்து மொத்தமா என் கண்முன்னாடியே பிரிச்சிட்டையே

இவள் பாதி அவளுடைய பதியிடம் சண்டை இட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த நர்ஸ் அவளிடம் மேம் அவங்க. சொந்தங்களுக்கு சொல்லிட்டேங்களா என்று கேட்ட பிறகு தான் ஸாகரிக்கு இதை ரிஷியிடம் சொல்ல வேண்டும் என்பதும் எப்படி சொல்ல போகிறோம் என்றும் தவித்தாள்

சிறிது நேரம் யோசித்துவிட்டு. ராமிற்கு அழைத்தாள்.

தொலைபேசி அடித்துக்கொண்டு இருந்ததே தவிர ராம் அவ்அழைப்பை ஏற்கவில்லை இவள் இங்கு சோர்த்து போய் போனை வைக்க நினைக்கும் போது. தேன் போல ராமின் ஹலோ என்ற குரல் அவள் காதில் ஒலித்தது அவன் குரலை கேட்டவுடன் அவள் அவனுக்கு எதற்காக அழைத்தாளோ அது மறந்தே போனது.

பின் அவன் சத்தமாக அழைக்கவும் அவள் தன் சுயவினைவிற்கு வந்து நான் ஸாகரி

ஸாகரியா எந்த ஸரி– ராம் (டேய் டேய் ஆனாலும் உனக்கு இந்த லோள்ளு ஜாஸ்தி தான்டா)

அவள் பல்லை கடித்து கொண்டே நான் சீதா ஸாகரி

ஹே சீதை நீயா அதிசயமா இருக்கு நீ எனக்கு போன் பண்ணி இருக்க அதெல்லாம் சரி நீ இப்போ எங்க இருக்க

இவன் இவ்வாறு பேசியதை கேட்டவுடன் அவள் தன் மனதில் அவன் தெளிவாக தான் உள்ளான் நான் தான் அவன் மேல் அன்பை வைத்து விட்டு சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது இருக்கிறேன். என நினைத்து கொண்டு மருத்துவமனையில் இருப்பதை கூறினாள்

ராம் பதறி என்னாச்சு சீதை ஏன் ஹாஸ்பிடலில் இருக்க உனக்கு உடம்பிற்கு ஒன்றும் இல்லையே

அதெல்லாம் இல்லை ராம் நீ...நீ...நீ… உடனே ரிஷிஅ..ண்ணா… கிட்ட போன் கொடு

என்னாச்சு அப்படிங்கறத அந்த ஹிட்லர்ட்ட தான் சொல்லனுமா

அப்படி இல்லை

அப்போ என்கிட்ட சொல்லு என்ன விஷயம்

அது.. அது

ஏய் என்ன இழுத்துகிட்டு இருக்க ஒழுங்கா விஷயத்த சொல்லு மிரட்டினான்

அவளும் ராம் நம்ப அனு அக்காக்கு ஆக்சிடண்டு‌ ஆயிடுச்சு ஹக்........ஹக்.......

என்ன

ஆமாம்

விளையாடாத

நெஜமா ராம்

சரி எந்த ஹஸ்பிட்டல் சீக்கிரம் சொல்லு

………………

நான் உடனே வரேன் அண்ணாவ கூட்டிகிட்டு

சரி

ராம் உடனே ரிஷியிடம் ஓடினான்

அங்கு ரிஷி கண்மூடி அமர்ந்திருந்தான்

ராம் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அண்ணா. அனுவுக்கு ஆக்சிடண்டு சீக்கிரம் வாங்க நாம ஹஸ்பிட்டல் போகலாம்

ஒரு நிமிடம் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை புரிந்தவுடன் ராமின் முகத்தை கூர்ந்து பார்த்தான்

பின் எழுந்து வேகமாக காரை நோக்கி சென்றான் அவன் பின்னே ராமும் ஓடினான் நேராக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான்

அங்கு மருத்துவமனையில் அனு இறந்து விட்டதாக கூறினர் அதை கேட்ட ராம் டாக்டரின் சட்டையை ஆவேசமாக பிடித்தான் ரிஷி தொய்ந்து போய் தன்னுடைய அலட்சியத்தால் தான் எல்லாம் என்று உணர்வின்றி. விழுந்தான் இதை கண்ட ஸாகரி. ராமை அழைத்து காண்பித்தாள் பின் ராம் தான் தன்னையும் தேற்றிக்கொண்டு மற்றவரையும் தேற்றினான்நடக்க வேண்டிய ஈமைகாரியங்கள் நடந்தேறின அம்மு தன் நிலையிலேயே இல்லை பித்து பிடித்தது போல் இருந்தார் அவரை மீட்கவே மிகவும் சிரமபட வேண்டியதாக இருந்தது ரிஷி அதில் இருந்து ஏற்கனவே இருந்ததை விட மூம்மடங்காக ஒரு இறுகிய மனநிலைக்கு சென்றுவிட்டான் ஆனால் அதை அவன் வெளிகாட்டவில்லை. பின் அவன் காதலும் அவனுக்கு கிடைக்கவில்லை. தோழியையும் காப்பாற்றியாய்ற்று என்று நிம்மதி பெருமூச்சு விட்டு நிமிர்வதற்குள் எல்லாம் முடிந்திருந்தது எல்லோரும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தனர் ஆனாலும் யாராலும் அனு இருந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை நாட்கள் ஓடின மாதங்கள் கடந்தனஅனு இறந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது அப்போதுதான் ரிஷிக்கு சிறிதாக சந்தேகம் முளைக்க ஆரம்பித்தது

ஏனென்றால் அது வரை அவன் பாசம் பந்தம் என்ற கட்டுக்குள் இருந்ததால் அவன் மூளை சிந்திக்கும் திறனை இழுந்து இருந்ததோ என்னவோ ஆனால் இப்போது எல்லாம் சரியாகி அவன் மூளை பழையபடி தன் சிந்திக்கும் திறனை பெற்றிருந்ததோ அல்லது விதி திரும்பவும் அவனை வைத்து ஒரு ஆட்டத்தை ஆட நினைத்ததோ அவனுக்கு உண்மைகளை புலப்பட வைத்ததா அல்லது கடவுள் அவனை சோதித்தது போதுமென்று நினைத்தாரோ ஏதோ ஒன்று ரிஷிக்கு அனு உயிரோடு இருப்பது உறுதியானது ரிஷி இதைப்பற்றி யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை .

அதோடு அப்பொழுதே அவனுக்கு உதவிய ஆன்மா இப்பொழுது விட்டு விடவா செய்யும் அதுவும் சரியான காலத்திற்காக காத்திருந்தது அதன்பின் அவனுக்கு அதாவது ரிஷிக்கு கனவுகள் மூலமாக நிறைய விஷயங்களை உணர்த்தியது அதன் மூலமே ரிஷி அனுவை கண்டுபிடித்தான்

(கனவு பத்தி இப்போ சொல்ல படமாட்டாது அது கடைசில தான் ஸாரி….)

இப்பொழுதும் கூட அவனுக்கு தனக்கு கனவுகள் மூலமாக அனு இருக்கும் இடத்தை உணர்த்தியது யார் என்று தெரிந்து கொள்ள ஆசைதான் ஆனால் அதற்கு அவன் எவ்வளவோ முயற்சித்தும் அவனால் முடியவில்லை அதனால் தெரியும் பொழுது தெரியட்டும் என்று விட்டு விட்டான் அதை அவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வே ஆட்டம் கண்டு விடும் என்று அவனுக்கு உணர்த்துபவர் யாரோ.

ரிஷி பழசை நினைத்துக் கொண்டு வரும்போது திடீரென்று சடன் பிரேக் போடப்பட்டது இப்போது ரிஷி தக்கலையில் உள்ளான் திருவனந்தபுரம் வரை பிளைட்டில் ட்ராவல் செய்துவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து காரில் தக்கலைக்கு வந்து கொண்டிருந்தாள் தக்கலை வந்தடைந்து அங்கு தன்னுடைய தொழிற்சாலையை நோக்கி வரும்போது திடீரென்று யாரோ குறுக்கே வந்து விழுந்ததால் அவன் கார் சடன் பிரேக் போடப்பட்டது

யார் என்று பார்க்க க்ரிஷ் கீழே இறங்கவும் ரிஷியும் கீழே இறங்கினான் அப்போது அவன் வண்டியை நோக்கி ஒரு பெண் ஓடி வருவதைக் கண்டான் அவள் நெருங்க நெருங்க அவளை கண்டு அப்படியே அசையாது நின்றான்…..
வசந்தம்பூக்கும்,…………………………………
 
#5
ரிஷியின் காரை நோக்கி
ஓடி வந்த பெண்தான்
அனுவா? இல்லை குறுக்கே
விழுந்தவளா, ஸ்ருதி டியர்?
 
Advertisement

Sponsored

New Episodes