வசந்தம்-8அ

surthi

Well-Known Member
#1
வசந்தம்- 8


2019


நாளை அனுவை காணபோகிறோம் என்ற எண்ணமே ரிஷியை தூங்க விடவில்லை அவனின் நினைவு எல்லாம் அனு காணாமல் சென்றதும் அதன்பின் தான் அனு மேலான தன் காதலை உணர்ந்ததும் தான்.


2016

ரிஷி தான் சுய நினைவில்லாமல் அனுவுடன் கலந்த அந்த நாளுக்கு பின்னர் அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை அதிலும் அனுவின் நிழலை கூட ரிஷியால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அதோடு வேறு எதிலும் கவனமும் செலுத்த முடியாமல் அவன் மனது அவன் செய்த தவறை சுட்டி காட்டி அவனை கொன்றது அப்போது ரிஷிக்கு இன்னொன்றும் நினைவிற்கு வந்தது அம்முவிடம் ஒரு நாள் அனுவை அவள் கழுத்திற்கு கீழ் பார்க்க முடியாது என்றும் அவள் குணமடைந்து தன்னிடம் கேக்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றும் கேட்ட தானா இப்போது அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டது அதுவும் சுய நினைவு இல்லாது இருக்கும் ஒரு பெண்ணிடம் அதை நினைத்து பார்க்கும் போது அவன் மேலேயே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.ரிஷியின் இன்நிலையை பார்த்து அந்த ஆன்மா செய்வதறியாமல் பரிதவித்தது என்றால் விதி அந்த ஆன்மாவை பார்த்து நீ என்னையா வெல்ல நினைத்தாய் விட்டேனா பார் என்று சிரித்தது என்றால் ரிஷியை பார்த்து உன்னிடம் இப்போது தான் விளையாட ஆரம்பித்திருக்கிறேன் அதற்குள் சோர்ந்து விட்டால் எப்படி. உன்னை வைத்தும் உன்னை. சுற்றியும் உனக்காகவும் நான் இன்னும் நிறைய. வைத்திருக்கிறேன் என்று கூறி கைகொட்டி கேலி செய்வது. போல எச்சரிக்கை விடுத்ததை ரிஷியால் எவ்வாறு உணரமுடியும்.இவன் இப்படியே உழன்று கொண்டிருந்ததால் தன்னை சுற்றி நடந்ததை. யோசிக்கவோ நடப்பதை கவனிக்கவோ நடக்க போவதை யூகிக்கவோ இல்லை இவன் இப்படி இருக்க வேண்டும் என்பது தான் விதியின் எண்ணமும் கூடவோஇவனின் இந்த நிலை விதிக்கு மட்டும் சாதகமாகவில்லை சதி செய்பவருகளுக்கும் சாதகமாகியது அதனால் தான் அனுவை அவர்களால் வெகு சுலபமாக கடத்த முடிந்ததுரிஷி சுயநினைவின்றி அனுவுடன் கலந்த அந்தநாளில் இருந்து இருவாரம் கழித்து அம்முவிற்கு அன்று காலையில் இருந்தே வலது கண் துடித்து கொண்டிருந்தது அதோடு மனமும் ஒரு நிலையில் இல்லை எதோ தவறு நடக்கபோவதாக அவர் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது அதற்கு அவர் எப்போதும் செய்வது போல இப்போதும் கடவுளையே சரணடைந்தார்பின் அவர் பூஜையை எல்லாம் முடித்து அமர்ந்த போது அவரை செண்பாம்மா அவ்வீட்டின் தலைலம சமையல்காரர் அவ்வீட்டிற்கு அவரது 12. வயதில் வந்தார்

காயத்ரிம்மா இன்றைக்கு அனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனுமே போகலையா மா.

ஆமாம் செண்பாமா நான் மறந்தே போய் விட்டேன் நல்ல வேளை நீங்கள் நினைவு படுத்தினீர்கள் இல்லையெனில் ரிஷியின் கோபத்திற்கு யார் பதில் சொல்வது என் கூறி தன் செல்லை எடுத்து ரிஷிக்கு அழைத்தார் அம்மு

ரிஷியின் அறையில் ரிஷியை காணாவே எதோ போல இருந்தது முன்பே ரிஷியிடம் நெருங்குவது கஷ்டமான ஒன்று இப்போது அது அறவே முடியாத காரியமாயிற்று காரணம் வேறோன்றும். இல்லை இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனுக்கும் அனுவிற்கும் நடந்தது தான் அனு என்னமோ சாதாரணமாக தான் இருந்தாள் ஆனால் அவள் அவ்வாறு. இருப்பதே ரிஷியை இன்னும் இன்னும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியதுஇந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் அலுவலகத்தில் கண்ணில் படுவோரை எல்லாம் கடித்து குதறாத குறை தான் எல்லோரும் ரிஷியின் பெயரைக் கேட்டாலே அலறி அடித்து கொண்டு அதற்கு எதிர் திசையில் ஓடினர் ஆனால் இதிலும் மாட்டிக்கொண்டு முழி பிதுங்க நின்றது எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம் ராம் தான்பா எல்லாரும் கைதட்டுங்க

(ஏய்ஏய்ய… கத்து குட்டி மாட்டி விட்டதும் இல்லாம எதையும் தாங்கும் இதயம் டயலாக் வேறையா வந்தேன் வெச்சுக்க நடக்கிறதே வேற ஆமா ஏற்கனவே நீ பண்ண வேலை எல்லாம் போதாத என்அண்ணன் அதான் அந்த பொறுமையின் சிகரத்த கோமால தள்ளிட்ட சரி அவர் இல்லனா என்ன அந்த சித் இருக்கானேனு பாத்தா அவனையும் வேற வேல கொடுத்து அனுப்பிட்ட. சரி அவன் தான் இல்லனா பரவாயில்லை இந்த க்ரிஷ் வைச்சு சமாளிக்கலாம் பாத்தா அவனையும் ஒட விட்டுட்ட. இப்போ எல்லாத்திலையும் மாட்டிட்டு. முழிக்கறது நான் தான் ஒழுங்கு மாரியாதைக்கு வந்து காப்பாத்தல நீ இருக்கிற இடத்துக்கே வந்து உன்ன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் பாத்துக்க

மன்னிச்சு மன்னிச்சு அண்ணா கொஞ்சம் பொறுத்துக்கோங்க எல்லாத்தையும் சரி பண்ணறேன் ப்ளீஸ் ………)

ரிஷியின் அறையில் மேஜை மேல் இருந்த தொலைபேசி நானும் இருக்கிறேன் என்று காட்டுவது போல அலறியது ஆனால் ரிஷி தான் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை

அவனின் மனதில் எல்லாம் தன்னைப்பற்றிய வெறுப்பு மட்டுமே. இவன் தன்னைப் பற்றிய சுய சிந்தனையால். தன் உயிர் தன்னை விட்டு. சிறிது நேரத்தில் பிரிய போகிறது என்பதை உணராமல் இருந்தான். இவன் இவ்வாறு இல்லாமல் கொஞ்சம் விழிப்போடு இருந்திருந்தால். பின்னர் நடக்க போவதை தடுத்திருக்கலாமோ

இங்கோ அம்மு இரண்டு மூன்று தடவை ரிஷி தொலைபேசிக்கு முயன்றுவிட்டு அவன் எடுக்கவில்லை என்றவுடன். அவன். ஏதாவது மீட்டிங்கில் இருக்க வேண்டும் என்று நினைத்து தானே அனுவை மருத்துவமனை அழைத்து செல்ல முடிவெடுத்து அனுவின் அறை நோக்கி சென்றார்

அனுவின் அறையை பார்த்தவர்க்கு இன்று அனுவை கிளப்புவது அவ்வளவு சுலபமில்லை என்பது புரிந்தது பின் அவளிடம் போராடி அவளை ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றார்

இதை பார்த்த விதி இனி அனுவை. யாரால். காப்பாற்ற. முடியும் எனக் கூறி கை கொட்டி கொக்கலித்து சிரித்தது

ஆம் விதி முடிவு. செய்துவிட்டது. கலகத்தை உண்டு பண்ண சாதாரணமாக நாரதர் கலகம் நன்மையில் முடியும் ஆனால் இங்கு. விதியின் கலகம் நன்மையில் முடியுமா?அம்மு. அனுவை. மருத்துவமனை அழைத்து செல்லும் வரை எல்லாம் சரியாக தான். இருந்தது ஆனால் மருத்துவமனையில் செக்கப் முடிந்து அனுவை கூட்டிக்கொண்டு. அம்மு. வெளியே வந்தார் அப்போது அனு வேடிக்கை பார்த்துக் கொண்டே வர அவள் கண்ணில் பட்டது அந்த பலுன்கள். அதை சிறு குழந்தை போல அந்த பலூன்களை நோக்கி போக முயற்சிக்கும் போது. அனுவின் கையை. பிடித்துக். கொண்டிருந்த அம்மு அசைவை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தார் அனுவும். அங்கிருந்து நகர முடியாததால் அம்மு தன்னைப் பார்த்ததும். அவரிடம் பலூனை கை காட்டினாள் அனு கை காட்டிய இடத்தில் அம்மு பார்ப்பதற்குள் பலூன் விற்பவர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அதனால் அம்மு பார்த்த போது யாரும் ஏதும் இல்லாததால். அனு விளையாட்டாக ஏதாவது கூறி இருப்பாள் என நினைத்து அனு அங்க யாரும் இல்லை வா நாம வீட்டுக்கு போகலாம் சரியா

ஆனால் அவளா விடுவாள் அவள் பிடிவாதமாக. நின்றாள் பின் அவளை என்னென்னமோ சொல்லி சமாளித்து காரில் ஏற்றினார் அவளும் அப்பொழுதைக்கு சமாதனம் ஆனாள் பின் சிறிது தூரம் சென்ற பின் தான் அம்முவிற்கு அனுவுக்குத் தேவையான மருந்துகள் சில வாங்க வேண்டும் என்பது ஞாபகம் வந்தது அதனால் வண்டி ஓட்டி இடம் ஒரு மருந்தக வாசலில் வண்டியை நிறுத்த கூறினார்

கார் மருந்து கடை வாசலில் நின்றவுடன் அம்மு அனுவிடம் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு அதாவது காரை விட்டு இறங்க கூடாது என்று கண்டித்து விட்டு கார் ஓட்டி இடமும் பத்திரமாக என்னை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு இறங்கி கடைக்குச் சென்றார்

ஆனால் அன்று மட்டும் காயத்ரி அனுவை‌. மருந்துகடை உள்ளே. அழைத்து சென்றிருந்தால். பின் நடந்த அசம்பாவிதங்களை ஏதோ ஒருவகையில். தடுத்திருக்கலாம் ‌ஆமாம் இந்த. நேரத்தில் தான் அனு கடத்தபட்டாள் அதுவும் கடத்தப்பட்டாள் என்று யாரும் அறியாத வாரும் உணராத வாரும் ஒரு இடத்தில் உலகத்தின் பார்வையில். இறந்தவளாக காண்பிக்கபட்ட. அதே நேரத்தில். இன்னொரு இடத்தில். இதை உண்மை ஆக்குவதற்காக. மனித உருவில். இருந்த. எம் தூதர்களாள் காரில் மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டால்

ஆனால் தூக்கி செல்பவர்களுக்கு தெரியாது. அவளுக்கு எமன் தாங்கள் இல்லை அவள் தான் தங்களுக்கு எமன் என்று

அம்மு மருந்து கடையில் இருந்து வெளியே வந்து பார்த்த போது அங்கு காரில் யாரையும் காணவில்லை. கார் டிரைவரையும். காணவில்லை அனுவையும் காணவில்லை இருவரையும் தேட அம்மு நிமிர்ந்து கண்ணை சுழட்டவும். எதிர் திசையில் எதோ. கூட்டமாக. இருந்தது என்னவென்று சென்று பார்த்தார் அங்கு ஒரு பெண் முகம் முழுவதும் ரத்தத்தில் குளித்திருக்க ப்லஸ் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருக்க அப்பெண்ணை பார்த்ததும் அம்முவின் காலுக்கடியில். பூமி நழுவியது உலகம் தட்டாமாலை. சுற்றியது அவர் அங்கே மயங்கி விழுந்தார்

அப்போது எதேச்சையாக நைட். ஷிப்ட். முடிந்தாலும் அடுத்த ஷிப்ட் டாக்டர் தான் வரும் வரை பார்த்து கொள்ள சொல்லி கேட்டதால் இவ்வளவு நேரம் இருந்து அந்த டாக்டர் வந்த உடனே வேலை முடித்து. கொண்டு அப்போது தான் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள் சீதாஸாகரி ஜனநிகாவின். தோழி
 
Advertisement

Sponsored