ராதையின் கண்ணன் இவன்-6

Saroja

Well-Known Member
#14
ராதிகா தெளிவு தன்னம்பிக்கை
தைரியம் பகட்டு இல்லாத பேச்சு
அருமையான பதிவு
 
Hema Guru

Well-Known Member
#17
வகுப்புகள் முடிந்ததும் நேற்றைக்கு போலவே இன்றும் பொன்னிற மேனியன் இவளின் கார் வரை வந்து, முத்து அண்ணாவிடம் பேசிவிட்டு செல்ல கார் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு சென்றதும் நேற்று மாதிரி கூடத்தில் இவளுக்காக தெய்வா காற்றிருக்க, "எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், நீங்க பிரீ அஹ" என அனுமதி கேட்க, அவளின் கேள்வியில் அகம் மலர்ந்தாலும், உரிமையாக கேட்காமல் அனுமதி கேட்டதில் சிறுது சுணக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அவளுக்கான உரிமையை தர மறந்தது, மறுத்தது இவர்கள் தான் என்பது ஏனோ அந்த நேரம் உரைக்கவில்லை.

"பேசலாம் ராதிகா"

"உங்க வீட்டுக்காரர் அப்புறம் உங்க பொண்ணு எப்போ வருவாங்க, அவங்களும் இருந்தா நல்லா இருக்கும்", இப்போது தான் அவரின் மண்டையில் மணிஅடிக்க என்ன பிரச்னையோ என்ன எண்ணத்தோடு,

"என்னமா, என்ன பிரச்சனை" என பதட்டப்பட, என் கேள்விக்கு இது பதில் இல்லையே எனில் விதமாய் பார்க்க, அவளின் பார்வையில் தெய்வாவின் வாய் தானாக "அவரு எப்பவும் வர பத்து மணி ஆகும், நா வேணும்னா அவரை சீக்கிரமா பாப்பா வர நேரத்துக்கு வர சொல்றேன், பாப்பா ஏழு மணிக்கு வருவா" என்றவாறே அவள் முகம் பார்க்க,

"காலேஜ் ஐந்து மணிக்கு முடியும், ஏழு மணி வரைக்கும் வெளிய வேலை, என்ன பண்ற எங்க போறான்னு பாருங்க, தோணுச்சு சொன்னேன், ரைட் அது உங்க பிராப்ளேம், சரி எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு, அப்போ அவங்களும் வந்ததும் பேசுவோம்" என்றவாறே தன் அறைக்கு சென்றாள்.

அறைக்கு வந்த கையோடு கிறிஸ்கு, அழைப்பை எடுக்க சில நிமிடங்களில் அந்த பக்கம் அழைப்பு ஏற்க பட உற்சாகமாக பேச வாயை திறக்கும் முன்னரே அந்த பக்க கிறிஸ் பொறிய ஆரம்பித்தான்.

"ஹலோ டாலி, நீ நல்ல தானே இருக்க ,ஒன்னும் பிரச்சனை இல்லையே, இவ்ளோ காலையில் கால் பண்ணி இருக்க" என அந்த பக்கம் படபடக்க, நேரத்தை பார்க்காமல் அழைப்பெடுத்த தன் முட்டாள் தனத்தை நொந்தவாறே,

"ரிலாக்ஸ், ரிலாக்ஸ் நா நல்ல இருக்கேன், உன் கிட்ட ஆஃபீஸ் விஷயமா பேசணும், அதுக்கு தான் போன் பண்ணேன், நீ பிரீயா, இப்போ பேசலாமா"

"ஓ சரி,சரிடா சொல்லு, என்னோட டாலிக்கு இல்லாத நேரமா, என்ன பேசணும் "

"அது நாம அந்த டூல் யூஸ் பண்றோம் இல்ல, அதுக்கு நாம பார்க்கிற முக்கியமான வேலை தவிர மற்ற சின்ன, சின்ன வேலை பார்க்க வெளிய கொடுக்குறோம் தானே அதுக்கு நாம எவ்ளோ பே பண்றோம்"

"அது வந்து.. இரு ஒரு நிமிஷம் நா பார்த்து சொல்றேன், அது சில மில்லியன் வரை ஆகும் டா, ஏன் என்ன ஆச்சு"

"இல்ல இங்க காலேஜ்ல என்னோட பிரின்ட் நேத்து சொன்னனே ராகவ், அவன் கம்பனி இந்த டூல் தான் ஒர்க் பண்றாங்க, நாம ஏன் அந்த ஒர்க் எல்லாம் அவங்க கிட்ட கொடுக்க கூடாது"

"அப்படி கொடுக்குறதுனால" என தனக்கு அவள் சொல்ல வருவது புரிந்தாலும் அவளே சொல்லட்டும் எனும் விதமாக இழுக்க,ராதிகாவும் எந்த தயக்கமும் இன்றி "இப்போ நாம ஒரு கம்பெனிக்கு கொடுக்குறோம், அவங்க அந்த ஒர்க் அஹ இந்தியால இருக்க வேற கம்பெனிக்கு கம்மியான காசுக்கு அதே வேலைய கொடுத்து, நிறைய லாபம் பார்க்குறாங்க, நாம நடுவுல இருக்க இந்த கம்பெனியை கட் பண்ணோம்னா, நமக்கும், இந்தியால இருக்கு கம்பனினு ரெண்டு பேருக்குமே நல்ல லாபம் தானே, கண்டிப்பா நமக்கு சில மில்லியன் மிச்சம் ஆகும்" என முடிக்க,

"வெல் செட் டாலி"

"நான் ராகவ் கிட்ட கேட்டு டீடெயில்ஸ் வாங்கி தரேன், நீ அவன் கிட்டயும் ஒரு தடவ பேசு, மேற்கொண்டு என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம்னு பேசி முடிவு பண்ணும்போம், அப்படியே அப்பா கிட்ட கேளு, இந்தியால ஒர்க் கொடுக்க என்ன போர்மலிட்டிஸ்னு சரியா "

"சரி டாலி, அவ்ளோதானே, எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு, நான் போகட்டுமா"

"அச்சோ, இத கேட்கும் போதே சொன்னா என்ன, நாம அப்புறமா கூட பேசி இருக்கலாம், இல்ல"

"உனக்கு முன்னாடி ஏதும் முக்கியம் இல்ல, இப்போ வேணாலும் சொல்லு மீட்டிங் கேன்சல் பண்றேன்"

"ஐய்யா, தெய்வமே நா ஒன்னுமே சொல்லல, நான் தான் பேசி முடிச்சிட்டனே, போங்க போய் மீட்டிங் அஹ பாருங்க"

"ஆர் யூ சூயர்"

"எஸ், எஸ், பாய், குட் டே"

"பாய் டா"

பிறகு வழக்கம் போல் கிறிஸ் அனுப்பி இருந்த வேலை சம்பந்தமான மின்னஞ்சல் இவளின் நேரத்தை திருடி கொள்ள, மணியை பார்க்க அது ஏழு ஆகி சில நிமிடங்கள் கடந்து இருக்க, இப்போ கீழே போன சரியா இருக்கும் அவங்க ரெண்டு பேரும் வந்து இருப்பாங்க.

தெய்வா, சண்முகம், அவர்களின் சீமாந்த புத்திரி ஸ்வேதா கூடத்தில் அமர்ந்து ஏதோ பேசி கொண்டு இருக்க, இறங்கி வந்த இவளை எதிர்ப்பார்க்க வில்லை என்பது அந்த இருவரின் மாறிய முகபாவத்திலே தெரிய, ஆக நா பேச போறேன்னு சொல்லாம தான் இவங்கள இங்க உட்கார வச்சி இருக்காங்க போலவே.

நடு கூடத்திற்கு வந்த ராதிகா, தில்லைக்கு அழைத்து, கை பேசியை எல்லாரும் கேட்கும் விதாமக மாற்றி தில்லையிடம் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தாள். அவளின் செய்கையை குழப்பதுடன் பார்த்துக்கொண்டு இருந்த அப்பா, பெண் இருவரும் அவளின் உரையாடலை செவி மடுக்க தயராயினர்.

"ஹலோ தில்லை"

"சொல்லுங்க தாயி"

"எனக்கு ஒரு விஷயம் சொல்லு, உன்னோட பொண்ணு இருக்காங்க இல்ல தெய்வானை இல்லம், அது யாரு பேர்ல இருக்கு"

"ஏன் தாயி, நம்ப சிவா பேருல தான் இருக்கு"

"ஓ, சரி அப்புறம் நா இங்க உன்னோட பொண்ணு வீட்டுல தங்க பணம் கொடுக்க சொன்னேன் இல்ல, எவ்ளோ கொடுத்த தில்லை" (இந்த கேள்வியில் தெய்வா வெடுக்கென நிமிர்ந்து சண்முகத்தை பார்க்க, அவர் கவனமாக அவரின் பார்வையை தவிர்க்க)

"அது மாசம் 10ஆயிரம்னு சண்முகம் கிட்ட பேசி அவங்க அக்கோண்ட்ல போட்டுட்டேன் தாயி"

"சும்மா தெரிஞ்சிக்கலாமேனு கேட்டேன் தில்லை, சிவாவ கேட்டதா சொல்லு, நா நைட் பேசுறேன் சரியா"

"சரி தாயி" (என்ன பிரச்சனைனு தெரியலையே, இந்த புள்ள பாசமா பேசுனா மட்டும் தானே அடங்கும், இவங்க என்னத்த பண்ணி புள்ளைய சீண்டி விட்டு இருக்காங்கன்னு தெரியலையே, இந்த புள்ளையும் அப்பா, அம்மான்னு ஒரு வாழ்க்கை வாழும்னு நா நினைக்குறது எல்லாம் வெறும் கனவாவே போய்டுமா இறைவா)

"தில்லை சொன்னத எல்லாரும் கேட்டு இருப்பிங்கன்னு நினைக்குறேன், இந்த வீடு சிவா பேருல தான் இருக்கு, இங்க இருக்க எனக்கு எல்ல உரிமையும் இருக்கு, அதே நேரம் என்னோட உரிமை உறவு எல்லாமே அவங்க ரெண்டு பேரோட தான், வேற வழி இல்லாம தான், நா இங்க தங்கி இருக்கேன், வேண்டாம்ணு தூக்கி எரிஞ்சவங்களையே திரும்பி போய் ஒட்டிக்கிற பழக்கம் எனக்கு இல்லை, என்ன தில்லையும், சிவாவும் அப்படி வளர்க்கவும் இல்ல, என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு இது ஹாஸ்டல் மாதிரி தான், உங்க எந்த உரிமையும் நா எடுத்துக்க போறதும் இல்ல, யாரோட உரிமையை பறிக்க போறதும் இல்ல, அண்ட் நீ, நேத்து நானா உன்னை தேடி உன்னோட ரூம்க்கு வந்து பேசுனேன், என்ன தேடி என்னோட ரூம்க்கு வந்தது நீ, உன்னை நா ஏதோ சீண்டுறேன் உங்க அப்பா கிட்ட சொன்ன போல, நாம பேசுனது எல்லாத்தையும் உன்னோட பாசமான அப்பா கிட்ட அப்படியே சொல்ல வேண்டியது தானே, எதுக்காக என் கிட்ட சண்டை போட்டனு, நல்ல பெற்றோர்னா தன்னோட குழந்தை வந்து ஒருத்தவங்களை பற்றி குறை சொன்னா முதல நீ என்ன பண்ணனு கேட்கணும், அப்போ தான் குழந்தைக்கு நம்ப தப்பு பண்ண அப்பா,அம்மா திட்டுவாங்கன்னு பயம் இருக்கும், பட் இதை உங்ககிட்ட ஏதிர் பார்க்க முடியாது தான், அது உங்க விசயம், என்ன பேசுனாலும் அமைதியா போவேன்னு எதிர் பார்க்காதிங்க, என் கிட்ட வீசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் கண்டிப்பா பதில் சொல்லணும், ஏன்னா நா தில்லையோட பேத்தி மைண்ட் இட்"

குரல் உயர்த்தாமல் அழுத்தமாக ராதிகா பேசிவிட்டு செல்ல அனைவருக்கும் என்ன நடந்தது என்று புரியவே சில நிமிடங்கள் எடுத்தன, ஒருவாறு வீசி சென்ற சூறாவளியில் இருந்து மீண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலமை,

தெய்வா "ஏங்க இப்படி பண்ணிங்க, அவ இங்க தங்க போய் காசு வாங்கி இருக்கிங்களே, அவ நம்ப பொண்ணுங்க, உங்களால உங்களுக்காக தானே இவ்ளோ நாள அவளை தள்ளி வச்சேன், இல்ல நாம தள்ளி வைக்கல அவ தான் நம்மளை தள்ளி வச்சி இருக்கா, தில்லையோட பேத்தியாம், சண்முகம் தெய்வா பொண்ணு இல்லையாம், நீங்க தர மறுத்த அங்கீகாரம் அவளே வேண்டாம்ணு சொல்லிட்டாலே, அவ மனசு அளவுல நம்மளை விட்டு எவ்ளோ தூரத்துல இருக்கானு எவ்ளோ அழகா சொல்லிட்டா, இப்போ நீங்க பண்ணி வச்சி இருக்க வேலைக்கு, நம்மளோட மூத்த பொண்ணு நமக்கு இல்லாமலே போய்டுவா போலவே ஆண்டவா, நா என்ன பண்ணுவேன்" என அந்த கணத்தின் கணம் தங்க முடியாமல் கண்ணீர் சிந்தியாவரே தன் அறைக்கு செல்ல,

சண்முகமோ " இந்த பொண்ணு வீட்டிற்கு வந்து ரெண்டு நாளா ஒரே பொண்ணா வளர்ந்த ஸ்வேதா மனசு அளவுல இதை ஏற்றுக்கொள்ள முடியாம தவிக்குறா, இதுல நேத்து ஸ்வேதா ராதிகா என்ன ரொம்ப மோசமா திட்டிட்டான்னு அழுதது பொறுக்கமா தானே மிரட்டுனோம், மிரட்டுனா இனிமே ஸ்வேதா வம்புக்கு போக மாட்டான்னு பார்த்த இந்த பொண்ணு ஸ்வேதா தான் அவளை போய் பார்த்தா சொல்லுது, இதுல நீங்க எல்லாம் நல்ல அப்பாவான்னு வேற கேட்டுக்குது, வேற என்னமோ நடந்து இருக்கு ஆனா என்ன நடந்தாலும் என்னோட பொண்ண அனுசரிச்சு தான் இங்க இருக்கணும், இதை தெளிவா அந்த பொண்ணுகிட்ட சொல்லணும், (என்னாது மறுபடியும் போய் ராதிகா கிட்ட பேச போறியா, உனக்கு சனி ஈஸ்வர பகவான் தலைல உட்கார்ந்து கதகளி ஆடும் போது யாரு என்ன பண்ண முடியும், மறுபடியும் போய் ராதிகா கிட்ட பேசி வாங்கி கட்டணும்னு இருந்தா அதை மாற்றவா முடியும் சொல்லுங்க, விதி வலியது….)காசு விசயத்தை வேற தெய்வா முன்னாடி போட்டு உடச்சிட்டா, இப்போ அவள வேற சமாளிக்கணும், இதுல சமாளிக்க என்ன இருக்கு, அது நம்ப பொண்ணு இல்லைங்க போது ஒரு உதவியா தங்க வச்சி இருக்கோம்,அதுனால காசு வாங்குனதுல என்ன தப்பு, தெய்வா கிடா பேசுனா புரிஞ்சிக்கும் " என்றவாறே தெய்வானையை பின் தொடர்ந்து அறைக்கு செல்ல,

ஸ்வேதா "நல்ல வேலை நம்ப சண்ட போட்ட உண்மையான காரணத்தை சொல்லல, என்ன தான் பாசமான அப்பானாலும், தன்னோட பொண்ணு ஒரு பையன் பின்னாடி சுத்தி சுத்தி காதல் பண்றதை எப்படி ஏத்துக்குவாங்க, "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்பது போல் அதுவும் அந்த பையனுக்கு தன் மேல் ஏதும் எண்ணம் இல்லை எனும் போது, இன்னைக்கு தப்பிச்சிட்டேன் இவ கிட்ட இருந்து, எதுக்கும் கொஞ்சம் கேர்புல் அஹ இருக்கணும், தில்லையோட பேத்தியாம், அவ அப்படியே இருக்கட்டும், நான் மட்டும் இவங்க பொண்ணா இருந்துட்டு போறேன்"

இவர்களை பற்றி கவலை படாமல், பேசியதோடு தன் வேலை முடிந்தது என்பது போல் அறைக்கு சென்ற ராதிகா, தில்லைக்கு அழைத்து, இங்கு நடந்த கலவரங்களை மேலோட்டமாக சொல்ல, இதில் தான் செய்வதற்கு ஏதும் இல்லை என்பதோடு, விதைத்தை அவர்கள் அறுவடை செய்து தான் ஆக வேண்டும் என்பதால் அமைதியானார் தில்லை.ராதிகாவின் பேச்சில் மற்ற இருவரும் உறக்கத்தை தொலைக்க ராதிகாவோ இன்றேனும் நித்திரா தேவியை சீக்கிரமாக துரத்திபிடிக்கும் ஆசையில்.……


இவன் ராதையின் கண்ணன்………
தூக்கமும் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes