ராதையின் கண்ணன் இவன்-18

Advertisement

E.Ruthra

Well-Known Member
பொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும் சென்று கிறிஸ்யை அமெரிக்காவிற்கு வழி அனுப்பி வைத்தனர். நாட்கள் அதன் போக்கில் நடைபோட பரீட்சைகள், வகுப்புகள், சின்ன சின்ன சண்டைகள், சமாதனங்கள் என பொன்னிற மேனியனும், கார்மேகமும் தங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துகொண்டு இருந்தனர்.

எப்பவும் போல வகுப்பு முடியவும் வீட்டிற்கு செல்ல அனைவரும் கிளம்பவும், பொன்னிற மேனியனுடன் வெளியேற கார்மேகம் தயாராகவும், அவர்கள் வகுப்பில் உள்ள ஒரு பெண், தயக்கத்துடன் வந்து,

"ராதிகா ஒரு நிமிஷம் வெய்ட் பண்றியா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என வார்த்தைகளை இவளிடமும் பார்வையை பொன்னிற மேனியனிடமும் வைத்து சொல்ல, அவனோ அந்த பெண்ணை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல், தான் வெளியில் இருப்பதாக அவனின் கார்மேகத்திடம் கண் ஜாடை காட்டிவிட்டு வெளியே செல்ல, அந்த பெண்ணின் புறம் திரும்பிய ராதிகா, அவளின் பார்வையில் உண்டான கடுகடுப்புடனே, அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் பொருட்டு அழுத்தமாக,

"சொல்லுங்க" என,

"நீயும் ஆர்.கேவும் லவ் பண்றதா எல்லாரும் நினைக்குறாங்க, ஒரு பெண்ணும், பையனும் பிரின்ட் அஹ இருக்கவே கூடாதா, இன்னும் அந்த காலம் மாதிரியே இருக்காங்க, ஆனா எனக்கு தெரியும் நீங்க ரெண்டு பேரும் வெறும் பிரின்ட்ஸ் தான்னு"

"இதை எல்லாம் இப்போ எதுக்கு என்கிட்ட சொல்றிங்க" என முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கேள்வி கேட்டாலும் மனதுக்குள் "ஆமா இவளுக்கு ரொம்ப தெரியும், வந்துட்டா பெருசா பேச" நொடித்து கொண்டாள்.

"அது வந்து, எனக்கு ஆர்.கேவை பிடிச்சி இருக்கு, நான் ஆர்.கேவை லவ் பண்றேன், நீ சொன்னா ஆர்.கே கேட்பாங்க, என்ன பத்தி கொஞ்சம் எடுத்து சொல்றியா ராதிகா" என கேட்க, உள்ளுக்குள் கோவம் கழன்றாலும், வெளியில் ஒரு அழுத்தமான சிரிப்புடன்,

"உங்களை பத்தி பேச போய், நானே ராகியை சாரி, சாரி ஆர்.கேவை கரெக்ட் பண்ணிட்டா என்ன பண்ணுவிங்க, அதுனால எதா இருந்தாலும் நீங்களே நேரா பேசுங்க" என,யாரு எந்த விதத்தில் சுருக்கி கூப்பிட்டாலும் முகத்தில் அடித்த மாதிரி, "ஜஸ்ட் கால் மீ ஆர்.கே" என சொல்லும் அவனை தான் இந்த பெண் "ராகி" என அழைக்கிறாளா, என யோசிக்கும் போதே "நானே கரெக்ட் பண்ணிட்டா என்ன பண்ணுவன்னு" கேட்க அதிர்ந்த அவள் முகத்தை பார்க்க, ராதிகாவோ அவளின் முக மாற்றத்திலே சிறு திருப்தியுடன் வெளியே சென்றாள்.

எதுமே பேசாமல் அமைதியாய் தனக்காக காத்திருந்த பொன்னிற மேனியனிடன் சேர்ந்து கொள்ள, இருவரும் நடக்க ஆரம்பித்தனர். "என்ன இவ கோவமா இருக்குற மாதிரி இருக்கே, அப்படி என்ன விசயம் பேசினா அந்த பொண்ணு" என யோசனையோடு அவனின் கார்மேகத்தின் முகத்தை ஆராய, அவளோ திடிரென்று கோவமாக,

"என்ன பார்த்தா எப்படி இருக்கு" என கேட்க, "இப்போ எதுக்கு இப்படி கேட்குறா, இதுக்கு நான் என்னனு நான் பதில் சொல்ல" என இவன் குழப்பத்துடன் அவளை பார்க்க, அவளோ இவன் பதிலை எதிர்பார்த்ததாகவே தெரியவில்லை, தன்பாட்டில் தொடர்ந்து,

"போஸ்ட் பாக்ஸ் மாதிரி இருக்கா, இல்ல "இவ்விடம் காதலுக்கு தூது போகப்படும்னு" போர்ட் மாட்டி உட்கார்ந்து இருக்கேனா, எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்டவே வந்து, நான் ஆர்.கேவை லவ் பண்றேன், நீ என்ன பத்தி அவர் கிட்ட சொல்லுன்னு சொல்லுவா" என கோபத்தில் கொதிக்க, இப்போது தான் அவளின் கோவத்தின் காரணத்தை அறிந்த பொன்னிற மேனியனுக்கு இப்பவும் குழப்பம் தான், "இப்போ அந்த பொண்ணு என்ன லவ் பண்றேன்னு சொன்னதுக்கு கோவப்படுறாளா, இல்ல இவளை தூது போக சொன்னதுக்கு கோவப்படுறாளா" என யோசனையோடு அவளை பார்த்து,

"அதை எதுக்கு அந்த பொண்ணு உன்கிட்ட வந்து சொல்லுது, என்கிட்ட தானே சொல்லணும்" நிஜமாவே புரியாமல் கேட்க,

"ஏன்னா நீ நா சொன்ன சொல் மீற மாட்டியாம், எது சொன்னாலும் அப்படியே கேட்பியாம், அதான் என்கிட்ட சிபாரிசு" என அதுக்கும் அவனை ஒரு கடி கடிக்க,

"சரி அந்த பொண்ணு சொன்னதுக்கு நீ என்ன சொன்ன" இவளின் பதிலை அறியும் ஆவல் அப்பட்டமாய் தெரிய கேட்டான் பொன்னிற மேனியன்,

"ஹ்ம்ம் சொன்னாங்க சுரைக்காய்கு உப்பு இல்லைனு, உனக்காக பேச போய் நானே கரெக்ட் பண்ணிட்டா என்ன பண்ணுவ, அதனால நீயே நேரா பேசிக்கோன்னு சொல்லிட்டேன்" என சொல்ல, பொன்னிற மேனியனோ சீரியஸாக

"இதுக்கு மேல கரெக்ட் பண்ண என்ன இருக்கு, அதான் ஏற்கனவே பண்ணிட்டியே" என,

"என்னது", வேண்டுமென்றே அவன் கூறியது காதில் விழாத பாவனையில் கேட்க,

"இனிமே யாராவது வந்து உன் கிட்ட இப்படி சொன்னா, நா சொல்ற மாதிரி சொல்லு என்ன" என தன் நடையை நிறுத்தி, பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் பாவனையில் சொல்ல,

"என்னனு சொல்லனும்" அவனை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக கேட்க, அவளின் விழியோடு விழி நோக்கி,

"ஒரு பொண்ணு பார்த்த முதல் நாள்ல இருந்து அவனை ரொம்ப தொல்லை பண்றாளாம், அவன் கூட அது வெறும் ஈர்ப்பு பழகுனா போய்டும்னு நினைச்சானாம், ஆனா அந்த ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி அவனையும் மீறி காதலா மாறி ரொம்ப நாளா ஆகுதாம், அந்த பொண்ணோட குணம், அழகு, அழுத்தம், அறிவுனு இது தான்னு குறிப்பிட்டு சொல்ல முடியாமா எல்லாமே அவனை அந்த பொண்ண நோக்கி இழுத்ததுல மொத்தமா விழுந்துட்டானாம், இனி எப்பவும் எழுந்துகிற ஐடியாவே இல்லையாம், வாழும் வாழ்க்கை முழுவதுக்கும் அந்த பொண்ணு தான் வேணுமாம்,அவன் எப்போதுமே இந்த ராதாவோடு கண்ணன் தானாம், அப்படின்னு சொல்லு என்ன" என மயக்கும் குரலில் கூற, இத்தனை நாள் அவனின் ஒவ்வொரு செயலிலும் இவள் மீதான காதல் வெளிப்படும் என்றாலும், இதுவரை மனதால் மட்டுமே உணரப்பட்ட இன்று அவளவளின் வாய்மொழியாய் அவனின் காதல் பகிரப்பட எங்கும் காதல் வாசம் வீச உலகமே அவன் ஒருவனோடு முடிவது போல, இந்த கணத்தையும், அவனையும் அப்படியே தன்னுள் சேமித்து வைப்பவள் போல தன் குவளை கண்களை இன்னும் விரித்து அவனை அவனின் கார்மேகம் தன் நயனங்களில் நிரப்பி கொள்ள, கன்னங்களோ நாவல் பழ நிறத்தில். அவளின் பதில் மொழி அறிய விழைந்த அவளவளின் அவனே,

"என்ன சொல்றியா" என கேட்க,

"ஹ்ம்ம்ம்" என காதோடு இருக்கும் அந்த குட்டி கம்மல் அசைய அவள் தலை அசைத்து, கவிதையாய் தன் சம்மதத்தை தெரிவிக்க, உலகை வென்றுவிட்ட பரபரப்பு உடல் முழுதும் பரவ,

"யாகூ" என துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியை ஆர்ப்பாட்டமாக வெளிப்படுத்தியவன், இவள் என்ன என்று உணரும், ஏதோ நியாபகம் வந்தவனாக மீண்டும் தங்கள் வகுப்பறையை நோக்கி ஓடி இருந்தான் பொன்னிற மேனியன். அப்போது தான் இருவரும் இவ்ளோ நேரம் வழியிலே நின்று பேசியது உரைக்க, ஒரு சிரிப்புடன் இவர்கள் வழக்கமாக உட்காரும் மரத்தடியை நோக்கி சென்றாள்.

அவன் பேரை தவிர அவனை பற்றி எதுமே தெரியாது, ஏனோ தெரிந்துகொள்ளவும் இதுவரை தோன்றவில்லை. முதல் நாள் அவன் தன்னை அறிமுகம் படுத்திக்கொள்ளும் போது அவன் கண்களில் இருந்த இன்னதென்று கூற முடியாத அந்த உணர்வு இவளையும் ஆட்கொண்டது நிஜம். இல்லை என்றால் தில்லை, சிவா, கிறிஸ் தவிர வேற யாரோடும் இயல்பாக பழகாத இவள் அவனிடம் வெகு சாதாரணமாக கேலி, கிண்டல் என உரிமையாய் பழகி இருக்க முடியுமா, கார் ரிப்பேர் அன்று இவன் வந்ததும் இதுவரை கிறிஸ் இடமும் தில்லையிடமும் மட்டுமே இவள் உணர்ந்த
பாதுகாப்பு உணர்வை அவனிடமும் உணர்ந்தாளே, அன்றும் இவன் கோவம் இவளை பாதித்ததே, யாரிடமும் விளக்கம் சொல்லாதவளை சொல்ல வைத்ததே, கிறிஸ் க்கும் இவனை பிடிக்க வேண்டுமே என இறைவனிடம் முறையிட வைத்ததே, ரெண்டு பேரும் நல்ல பிரின்ட் ஆன போது வந்த பாரம் விலகிய உணர்வு, அன்றைக்கு இவன் ஏதோ சண்டையில் சட்டை கசங்கி வந்த போது அவனுக்காக இவள் தவித்த தவிப்பு, இன்று அந்த பொண்ணு வந்து இவனை காதலிக்கிறேன் எனும் போது இவளுக்கு வலித்ததே, அழுத்தம் எனும் திரையினால் இவள் எதையும் வெளிக்காட்ட வில்லை என்றாலும், "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்பதற்கு ஏற்ப இவள் அறிவாளே தன் மனதின் போக்கை.

ஏனோ ஒரு தயக்கம் அந்த உணர்வுக்கு காதல் என பெயர் சூட்ட, ராகி எப்போதாவது அப்படி பேசினாலும், ஒன்று கவனிக்காத மாதிரி கடந்துவிடுவாள் இல்லையா அப்படியே பேச்சின் போக்கையே மாற்றிவிடுவாள், ஆனால் இன்று அவன் சொல்லும் போது கேட்க இனித்ததே என தன் மனதின் விசித்திர போக்கை எண்ணி சிரிக்க ஒரு வழியாக வந்து சேர்ந்தான் பொன்னிற மேனியன் ஒரு விரிந்த புன்னகையுடன்.

"எதுக்கு மறுபடியும் கிளாஸ்க்கு போன, ஏதாவாது மறந்துட்டு வந்துட்டியா என்ன"

"ஹ்ம்ம் இல்ல" இன்னும் அதே புன்னகை மாறாமல் பதில் அளிக்க,

"அப்புறம் என்ன"

"அது அந்த பொண்ணு கிட்ட பேச போனேன்"

"அந்த பெண்ணு கிட்ட என்ன பேசுன ராகி"குழப்பத்துடன் கேட்க,

"அந்த பொண்ண போய் பார்த்து,"ரொம்ப தாங்க்ஸ், நானே ராதா கிட்ட எப்படி லவ் அஹ சொல்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன், நீங்க சொன்ன விசயத்தை அவ சொன்னதும் நானும் என்னோட காதல் அவ கிட்ட சொல்லிட்டேன், தாங்க்ஸ்ங்க" அப்படின்னு சொல்லிட்டு வந்தேன்"

"அடப்பாவி ஏன்டா இப்படி பண்ண, பாவம் அந்த பொண்ணு"

"நா யார லவ் பண்றேன்னு சொல்லிட்டேன், இனிமே அந்த பொண்ணு தேவை இல்லாம ஏதும் யோசிக்காது இல்ல அதான்"

"ஹ்ம்ம் அதுவும் சரி தான், சரி டைம் ஆச்சி கிளம்பலாமா"

இன்னும் விரிந்த புன்னகையுடனே இருந்த பொன்னிற மேனியன் கார் வரை வந்து விடைகொடுக்க ஒரு தலைஅசைப்புடன் விடை பெற்றாள் பொன்னிற மேனியனின் கார்மேகம்.

விடுதிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மீண்டும் அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். அவனின் கார்மேகத்துடன் கழித்த இத்தனை நாட்களில் காதலை சொல்ல இவனுக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை, இவன் சொல்ல நினைத்து பேச்சை ஆரம்பிக்கும் போது எல்லாம் அவள் பேச்சை மாற்ற ஏனோ அந்த பேச்சை அவள் தவிற்கிறாள் என்பது புரிய காரணம் தெரியாமல் அவளை கட்டாயப்படுத்தி காதலை சொல்ல மனம் வர வில்லை. இவன் மனம் அவளுக்கு தெரியும் என்பதிலும் இவனுக்கு துளியும் சந்தேகம் இல்லை, இவனை அவளுக்கு பிடிக்கும் என்பதும் தெரியும், அதனால் தான் அவனும் அமைதி காத்தான். ஆனால் இன்று அந்த பெண்ணின் இவன் மீதான காதலை இவனின் கார்மேகம் சொல்லும் போது அவளின் கோவத்தின் ஊடே தெரிந்த அந்த வலி இவனை தாக்க தன் மனதை மடை திறந்த வெள்ளம் போல் சொல்லி விட்டான். அவனின் கார்மேகத்தை நினைக்க, நினைக்க மனம் முழுதும் மகிழ்ச்சியில் சிறகடிக்க, இந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவித்தான். தன் மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள மனம் பரபரக்க தன் ராஜமாதாவிற்கு அழைத்தான்.

"சொல்லுடா" என, எந்த முகஉரையும் இல்லாமல் நேரடியாக,

"அம்மா, உங்க மருமக ஓக்கே சொல்லிட்டாமா" என ஆர்பரிக்க,

"கண்ணா என்னடா இந்த நேரத்துல தூங்கி இருக்க, உடம்பு எதும் சரி இல்லையா" என கண அக்கறையாய் பாசமாக கேட்க,

"ராஜமாதா, நான் என்ன சொல்றேன் நீங்க என்ன கேட்குறீங்க", இன்னும் சிரிப்பின் மிச்சங்கள் அவனின் குரலில்,

"இல்லடா, என் மருமகள் ஓக்கே சொல்லிட்டானு சொன்னியே, அதான் எதும் கனவு கண்டியோனு கேட்டேன்"

"என்ன காமெடியா எனக்கு சிரிப்பே வரல, நெஸ்ட் டைம் இன்னும் கொஞ்சம் பெட்டர் அஹ டிரை பண்ணுங்க"

"என்னடா அப்போ நிஜமா தான் சொல்றியா, என் மருமக சரின்னு சொல்லிட்டாளா, என்னால நம்ப முடியலையே, எனக்கு லைட் அஹ நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குடா, என் சின்ன இதயம் இந்த மாதிரி அதிர்ச்சி எல்லாம் தாங்காதுடா" என நடிகர் திலகத்தை விட அதிகமாக நடிக்க, ஏனோ இன்று எல்லாமே வண்ணமயமாக இருக்க, அவனின் ராஜமாதா அடாவடியில் கூட கோவம் வர மறுக்க சிரிப்புடனே,

"ரொம்ப நடிக்காதிங்க ராஜமாதா, அப்படி என்ன உங்களால நம்ப முடியாத விஷயத்தை நா சொல்லிட்டேன்"

"உன் ஸ்பீட் தான் எனக்கு தெரியுமே, நீயா போய் என் மருமக கிட்ட சொல்ற லச்சனம் தான் இவ்ளோ நாள்ல நல்லா தெரிஞ்சிதே, உன் திறமைக்கு உங்க காலேஜ் முடிஞ்சதும் நானே அவங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கி தான் உன் கல்யாணத்தை நடத்தனும்னு நினைச்சேன்" என நொடித்துக்கொள்ள,

"என் லெவெல் தெரியாம பேசுறீங்க ராஜமாதா"

"ஆமா ஆமா இவரு பெரிய அப்பாடக்கரு,போடா போடா பொடிபையா" என அவர் பேசியதை கணக்கில் கொள்ளாமல், பொன்னிற மேனியன் உள்ளார்ந்து,

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா" என உணர்ந்து சொல்ல,

"என் பையனுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும், இதே மாதிரி எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும் கண்ணா" என நெகிழ்வுடன் சொல்ல, அவருடன் இன்னும் சிறிது நேரம் சலசலத்து விட்டு பல வண்ண கனவுகளுடன் தன் விடுதியை நோக்கி நடையில் துள்ளலுடன் கிளம்பினான் பொன்னிற மேனியன்.

இவன் ராதையின் கண்ணன்……………….
 

banumathi jayaraman

Well-Known Member
அந்தப் பெண் ராதிகாவுக்கு பெரிய
ஹெல்ப் செஞ்சிருக்கிறாள்
இல்லாட்டிப் போனா பொன்னிற மேனியனிடம் அவனுடைய கார்மேகம் அவளுடைய லவ்வை இப்போதைக்கு சொல்லியிருக்க மாட்டாள்
ஆனாலும் எங்கள் ராகவ்வை நீங்க
ரொம்பவே டேமேஜ் பண்ணுறீங்க இதெல்லாம் அநியாயம், ராஜமாதா ராஜேஸ்வரி

"சொல்லிட்டாளே அவள் காதலை
சொல்லும் போதே சுகம் தாளலை......."

அதெல்லாம் சரி இவங்களோட லவ்வைத் தெரிஞ்ச அந்த கோணவாயி கோகிலா ஸ்வேதா சும்மா இருப்பாளா?
அருமைப் பொண்ணு கண்ணைக்
கசக்கினா அந்த கூமுட்டை அப்பன்
சண்முகம் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பானா?
ஹ்ம்ம்...........எப்படியும் ராகவ், கிறிஸ்
இரண்டு பேர்கிட்டயும் சண்முகம் செம மாத்து வாங்கப் போறான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top